08-04-2005, 09:56 PM
narathar Wrote:நரிக்கும் ,திராட்சைக்கும் ,விமானத் தொழில்னுட்பத்துக்கும் என்ன சம்பந்தம், நீங்க சொன்ன பழமொழிக்கும் மேற்கோள் காட்டினதுக்கும் பொருந்துற மாதிரி எனக்குப் படேல்ல, இல்ல லோயரல்லோ இதுக்குள்ள எதாவது லோ பொயின்ட் இருக்கும் எண்டு தான் கேட்டன் , அப்ப சொன்ன உங்களுக்கும் விளங்கேல்ல , எட சின்னக்குட்டி அம்மான் உங்களுக்காவது விளங்கிச்சுதோ ?உந்த லோ பொயின்ற் எண்டோணை தான் ஞாபகம் வருதூ ஜீஜீ லோயர்.கோட்டிலை வென்ற வழக்கின்ரை கதை.. ஒருமுறை இந்தியாவிலிருந்து வல்வெட்டித்துறைக்கு வள்ளத்தின் நங்கூரத்திலை தங்கத்தை செய்து கடத்தி வரைக்கை நேவி பிடிச்சு போட்டான்...கோர்ட்டிலை வழக்கு.எதிரிக்காக ஜீஜீ வாதாடுறரா...ஜீஜீ யட்ஜை பார்த்துக்கேட்டார் நங்கூரம் இந்த உலோகத்தால் செய்யணுமோ என்று சட்டத்திலை சொல்லியிருக்கோ..யட்ஜ் இல்லையென்றார்...யட்ஜ்க்கு சொன்னார் அவருக்கு வசதியிருக்கு தங்கத்திலை நஙகூரத்தை செய்து போட்டிருக்கார் என்றார்.பேந்தென்ன கேஸ் காலி...அப்படி லோ பொயின்ரை பிடிக்கோணும் பிள்ளை நித்திலா..அதை விட்டுட்டு நரி திராட்சைபழம் என்றால் கார்ட்டூன் படம் தான் காட்டலாம்.

