Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் இலகுவாய் முன்னேற
#7
<span style='font-size:25pt;line-height:100%'>அடுத்த ஆலோசனை சாத்திரம்</span>


நீங்கள் முதலிரண்டு வியாபார விடயமாக இந்தியாவிற்கு அடிக்கடி போய் வரவேண்டியதாக இருக்கும் எனவே இந்தியாவிற்கு போகும்போது மத்திய சென்னை எக்மோர்பகுதி வீதிகளிலோ அல்லது ஏதாவது கோயில்களின் பக்கத்திலும் பாருங்கள் தங்கள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் மற்றவர்களின் எதிர்காலத்தை கையை பார்த்து சொல்லி கொண்டு பல சாத்திரிகள் இருப்பார்கள்.

அவர்கள் கருணாநிதி கமலகாசன் ரஜனிகாந் விஜயகாந் போன்ற தமிழ்நாட்டின் முக்கியமானவர்களிற்கு தாங்கள் கைரேகை சாத்திரம் பார்ப்பதுபோல சில படங்கள் தயார்செய்து ஒரு பட அல்பமும் வைத்திருப்பார்கள். அவர்களில் நல்ல திறமையுள்ள ஒருவருடன் பேரம்பேசுங்கள்.

புலத்திலுள்ள தமிழர் எல்லாம் தங்கள் எதிர்காலம் தெரியாமல் சரியான கஸ்ர படுகிறார்கள் எனவே புலத்தில் வந்து அவர்களிற்கு சாத்திரம் பாக்கவேண்டும் அதில் வருகிற தொகை பணத்தில் சாத்திரிக்கு 20 வீதம் உங்களிற்கு 80 ஏனெண்டா நீங்கள் அவருக்கு வாற போற செலவு சாப்பாடெல்லாம்.

இப்ப சாத்திரிக்கு கடவுசீட்டெல்லாம் எடுத்து புலத்திற்கு கொண்டு வந்தாச்சு. அத்துடன் முடிந்தஅளவுக்கு அங்கையிருந்து அச்சரகூடுகளையும் சில பித்தளை தகடுகளையும் எடுத்து வரவும். அவரை தமிழர்கள் அதிகம் பழகும்இடங்களில் ஒரு கோயிலிலோ அல்லது வியாபார நிறுவனமொன்றிலோ சிறிய இடம் ஒன்றை ஒதுக்கி முலதனமாக ஒருமேசை இரண்டு கதிரை மட்டுமே போட்டால் போதும்.

சாத்திரியிடம்ஏற்கனே உள்ள கிராபிக் படங்களுடன் மேலதிகமாக திரிசா கோபிகா சினேகா மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களிற்கும் அவர் சாத்திரம் பாக்கிற மாதிரி சிலபடங்களை நீங்களே தயார் பண்ணி ஒரு அல்பம் செய்து சாத்திரியிட்டை குடுங்கோ(அதை பாக்கசிலபேர் வருவினம்)(நதியான்ரை படமும் போடவேணும் எனக்காக)வேணுமெண்டால் புஸ் ரொனி பிளேயரின்ரை படங்களையும் சேருங்கோ

அடுத்ததாக விளம்பரம செய்யவேணுமல்லோ அது ஒண்டும் கஸ்ரமான காரியமல்லஇரண்டு முண்று தமிழர்களிடம் இந்தியாவிலையிருந்து திறமான சாத்திரியொருவர் வந்திருக்கிறார் அவலர் சொல்லுறதெல்லாம் நடக்குதாம் எண்டு சொல்லிவிடுங்கோ உந்த இணையம் பத்திரிகை வானொலியெல்லாத்தையும் விட உப்பிடியான செய்தி வாய்முலம் விரைவாக பரவும்


மீதியை சாத்திரியாரே பாத்து கொள்ளுவார் ஆளுக்கு ஒரு தோசம் சொல்லி பரிகாரம் எண்டு அச்சர கூட்டுக்கை உங்களிற்கு எது வசதியோ மண்ணோ சாம்பலோ அடைஞ்சு அதுவும் நீங்கள் இங்கை பொருட்கள் வாங்கேக்கை வருட உத்தரவாதம் தாற மாதிரி ஒருவரு உத்தரவாதத்திற்கு இவ்வளவு பணம் 5 வருடத்திற்கு இவ்வளவு பணம் எண்டு விலை ஏறிகொண்டே போகும்.சல பேருக்கு பித்தளை தகட்டிலை அ . ஆ. இ .எழுதி அதை ஒவ்வொரு நாளும் கும்பிட சொல்லி குடுக்கலாம் அதற்கு தனியான விலை.

இப்படியே அவரை அய்ரோப்பா கனடா எண்டு ஒரு சுற்று பயணம் கொண்டு திரிஞ்சு(ஏணெண்டா எல்லா இடமம் ஏமாந்தவை இருக்கினமல்லோ)சுருட்டிகொண்டு சாத்திரியை ஊருக்கு அனுப்பிவிடுங்கோ சாத்திரிக்கும் நாடு பாத்தமாதிரி பிறகு சாத்திரிக்கு இந்தியாவிலையும் நல்ல உழைப்பு கூடிடும் காரணம் அவர் இங்கை எடுத்த படங்களை காட்டி உலகத்திற்கே நான்தான் சாத்திரம் பாத்தனான் எண்டு தொழிலை டெவலப் பண்ணிடுவார்.

தொடரும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by sathiri - 08-01-2005, 04:19 PM
[No subject] - by Danklas - 08-01-2005, 05:26 PM
[No subject] - by வினித் - 08-01-2005, 05:30 PM
[No subject] - by sathiri - 08-02-2005, 03:40 PM
[No subject] - by Eswar - 08-02-2005, 05:06 PM
[No subject] - by sathiri - 08-04-2005, 03:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)