08-04-2005, 12:39 PM
யாழ்ப்பாணம் இணுவிலில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டும் இன்னுமொருவர் காயமடைந்துள்ளார்.
இணுவில் சந்தியில் அமைந்துள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்றிருந்த இரு இராணுவத்தினருக்கு பாதுகாப்புக்கென வந்த நான்கு படையினர் அலங்கரிப்பு நிலையத்திற்கு முன்பாக காவலுக்கு நின்றார்கள்.
இவ்வேளையில் வெளியே நின்ற இராணுவத்தினர் ஒருவர் சிகையலங்கரிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.
இதன் போது பொதுமகன் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொதுமகன் காயமடைந்துள்ளார்.
கொல்லப்பட்டவர் கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் சாந்தரூபன் என்றும், காயமடைந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லோகதாஸ் என்றும் அறியப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் அவ்விடத்தை விட்டு தப்பியோடி விட்டனர்.
இச்சூட்டுச் சம்பவத்தையடுத்து மக்கள் இராணுவத்தினருக்கு எதிராக இணுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி காங்கேசன்துறை வீதியில் போக்குவரத்தையும் மறித்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியும் தடியடிப் பிரயோகங்களையும் மேற்கொண்டு மக்களை கலைக்க முயற்சித்தனர்.
எனினும் மக்கள் வீதிமறியல் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தியதாக அறியவருகின்றது. தற்போது அங்கு பெருமளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் பதற்ற நிலை அங்கு காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.
puthinam

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>