10-17-2003, 12:47 PM
மனவேதனைப்படுகிறேன். அங்கு மட்டுமல்ல மொஹமட் ஏன் தமிழீழத்திலும் கூட இந்த அவல நிலையை கண்டவன் நான். பக்கத்து வீடு பசித்திருக்க கொண்டாட்டங்கள் நடத்தி ஊருக்கு தமது பணச் செருக்கை வெளிக் காட்டுகின்றார்கள். எத்தனையோ பள்ளிச்சிறுவர்கள் படிக்க பள்ளிக் கூடம் போகவோ பசிக்கு ஒரு வேளை வயிராறவோ உண்ண உணவில்லாமல் தவிக்கின்றார்கள். ஆனால் அதற்காக பொங்குதமிழில் ஏதோ இரண்டோருவர் உருப்படியாகத் தெரிந்தாரேன எல்லோரையும் அந்த கண்களாளே பார்ப்பது என்ன நியாயம். வன்னியில் எத்தனையோ செஞ்சொலைகளும் நந்தவனங்களும் ஆனாதைக் குழந்தைகளை பாராமரிக்கின்ற இல்லங்கள். உண்டு. விடுமுறைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த சனம் தெற்கிலே உல்லாசபயணமும் கோயில்களுக்கு சுற்றுபயணமும் மேற் கொண்டு இலட்சங்கள செலவழிப்பவர்கள் இவைகளை கடைக்கண்ணாலும் பார்ப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கின்றதா என்று இவர்களுக்க தெரியுமோ தெரியாது. ஏன் புனர் வாழ்வுக் கென்று என்று பணம் வாங்கி கோவில்களுக்கு வெள்ளை யடித்து தமது மேன்மையான பெயரை தேர் முட்டிகளில் எழுதி வைத்திருப்பவர்களும் கவனிக்கவில்லை. வன்னி வீதிக்கு வரி அறவிடுவதற்கு தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியவர்கள் அது எதற்கு என்று கிஞ்சித்தாவது யோசித்திருப்பார்களா என்றால் அதுவுமில்லை. இவர்களை எப்படித் திருத்த இவர்கள் எப்போது திருந்துவார்கள்? அதற்காக அனைவரையும் ஒன்றாக ஒரு தராசுத் தட்டினில் வைத்து எடைபோடாதீhகள். அவலம் விரைவில் தீரும். தீர வேண்டும்.
விழிகளில் இரத்தக்கண்ணீருடன்
சீலன்
விழிகளில் இரத்தக்கண்ணீருடன்
சீலன்
seelan

