10-17-2003, 12:16 PM
ஒன்றிணையும் ஐரோப்பாவைவிட அசுர வேகத்தில் மாறிவரும் சீனாதான் இன்றைய தேதிக்கு அமெரிக்காவுக்கு கலக்கத்தைக் கொடுத்துவருகிறது என்பது என்னவோ உண்மைதான். தனது உலக ஆதிக்கக் கோட்பாடுகளுக்கு ஆயுத பொருளாதார மற்றும் வியாபார ரீதில் என சகல வழிகளிலும் இடையூறாக அமையப்போவது சீனாதான் என அமெரிக்க உளவு ஸதாபனங்கள் கூறுவதாக அறியமுடிகிறது. கீரைக்கடைக்கும் ஒரு எதிர்கடை என்பது தேவைதானே. மாறுபட்ட அரசியல் பார்வைகள் கொண்ட ஐரோப்பிய நாடுகளைவிட ஒரே அரசியல் கொள்கையுடன் நிற்கும் சீனா போன்றதொரு மாற்று வல்லரசே இன்றைய காலகட்டத்தில் உலகுக்குத் தேவை. சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பின் வல்லரசுகளிடையே காணப்படும் சமனிலையற்ற தன்மையைப்போக்க சீனாவின் வளர்ச்சியென்பது அவசியமானதே

