08-03-2005, 09:52 PM
<b>கனடாவில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான பிரான்ஸ் ஏர்பஸ் விமானம் </b>
<img src='http://msnbcmedia.msn.com/j/msnbc/Components/Photos/041014/041014_canada_plane_crash_hlg12p.hlarge.jpg' border='0' alt='user posted image'>
டொரண்டோ,
பிரான்சுக்கு சொந்தமான ஏர்பஸ் விமானம் பாரிஸ் நகரில் இருந்து கனடா நாட்டின் டொரண்டோ நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 297 பயணிகளும் 12 சிப்பந்திகளுமாக 309 பேர் இருந்தனர்.
புதன் கிழமை அதிகாலை அந்த விமானம் டொரண்டோ விமான நிலையத்தில் தரை இறங்க முயன்ற போது வானிலை மிகமோசமாக இருந்தது. பலத்த காற்றும் வீசியது.
இதனால் விமானம் தடுமாறியது.ஓடுபாதையை விட்டு விலகி ஓடியது . இந்த நிலையில் மின்னல் தாக்கியதால் அந்த விமானத்தில் தீ பிடித்துக் கொண்டது இறக்கைகளில் பிடித்த தீ மளமளவென்று பரவி விமானத்தின் இதர பகுதிகளுக்கும் பரவியது. விமானம் தரையில் முட்டி மோதி நிற்பதற்கு முன்பே விமானத்தின் அவசர கார் கதவு திறக்கப்பட்டது.
அந்தக் கதவு வழியாக பயணிகள் கீழே குதித்து ஓடினர். விமானியும் சிப்பந்திகளும் கீழே குதித்து தப்பி விட்டனர்.
சிறிது நேரத்தில் விமானம் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது. பயணிகளும் சிப்பந்திகளும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டதால் யாரும் உயிர் இழக்கவில்லை.
ஆனால் ஏராளமான பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பஸ்களில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
விமானம் தீ பிடித்து எரிந்ததில் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
விமானம் விபத்துக்குள்ளான 50 வினாடிகளில் மீட்புப் பணியினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்