10-16-2003, 01:52 PM
சில மாதங்களுக்கு முன் எனது நணபர் கனடாவில் தனது பிள்ளையின் 1வது பிற்நத நாளை கொண்டாடினார். அவருக்கு இதுகளில் அவ்வளவு பிடிப்பில்லை. உப்பிடி ஆரும் வைத்தால் ஆக்களை ஒரு பிட பிடிப்பார், ஆனால் அவரே ஒரு சிறு மண்டபம் எடுத்து காட் அடிச்சு வைச்சது எல்லாருக்கும் ஒரு குழப்பம். ஆனால் காட்டிலை அவர் வருபவர்கள் தயவு செய்து அன்பளிப்புகள் கொண்டுவர வேண்டாம் காசா கொண்டு வாங்கோ எண்டது இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. பேர்த்டே பாட்டிக்கு கிட்டத்தட்ட 150 பேர் வரை வந்தனராம். மொத்தமாக 4000 டொலர் சேர்ந்ததாம். செலவு தள்ளி ஒரு 2000 டொலர் லாபம். சாப்பாடு கூட தனக்கு தெரிஞ்சவையிட்டை சொல்லி வுpரன் செலவில்லாமல் செய்து போட்டார். பாட்டி முடியிற தறுவாயிலை மனிசன் எல்லாரையும் ஒரு தடவை நிக்ச் சொல்லி போட்டு ஒர வயது வந்த முதியவரை மேடைக்கு வரச்செல்லி அவரை பேச சொல்லியிருக்கிறார். அந்த வயது வந்தவர் கிழக்கு மாகாணத்தில் தனிப்பட்ட முறையில் சில அனாதை குழந்தைகளை பராமரிப்பவர். அவருக்கு அன்று சேர்ந்த காசை அனைவரினம் சார்பாக அந்த அன்பர் கொடுத்தபோது அனைவரும் வாயடைத்து நின்றனர். நண்பர் பின்னர் சொன்னார் நான் கனபேற்றை பட்டியலை குடுத்தனான் அது வீண்போக கூடாது என்டதாலையும் தன்றை சம்சாரத்தை திருப்தி படுத்த வேண்டும் என்ட ஒரு நோக்கத்திற்காவே இப்படி செய்தேன் என்றார். இப்படி நாம் அனைவரும் சிந்தித்தால் தாயகத்தில் பட்டினியை ஓரளவு இல்லாமல் செய்ய முடியாதா? ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவுதான்!

