10-16-2003, 01:39 PM
இந்த செய்த பீபீசி தளத்தில் கண்டேன. சுருக்கமாக தமிழில் சொல்வதானானல் சமாதானம் வந்தும் மக்களின் பட்டினி கொடுமை இன்னமும் தீரவில்லை. குறிப்பாக சிறுவர்களின் நிலைமை இதை வாசிக்கும் போது வேதனையாக இரக்கிறது. இந்த செய்தியை நான் இற்கு கொண்டுவந்ததன் முக்கிய நோக்கம். அண்மையில் நான் கண்டு வேதனைப்பட்ட ஒரு உண்மை! அது ஒரு பேத்டேபாட்டி, பையனுக்கு ஒரு வயசு. நான் அங்கு விருந்தாளி அல்ல, எனது நண்பர் வெளி நாட்டிலிருந்து விசேடமாக அங்கு அழைக்கப்படிருந்தார். அவரை சந்திக்க பாட்டி முடியும் நேரம் மண்டபத்திற்கு சென்றேன். இரவு 10மணி பாட்டி முடிந்து ஆட்டம் வப்பெற்ற நேரம். உ;னை பார்த்தால் மேசை முழுவம் சப்பாட்டு எச்ச சொச்சம். ஒரு மேசை முழுவதும் வித வித குடிவகை. இன்னொரு மேசையில் மிஞ்சிய சாப்பாடு (அது இன்னுமெரு 50 பேர் சாப்பிட முடியும்) அரைவாசி பாத்திரத்தை நிறைத்தபடி சாப்பிட்ட மிச்ச சொச்சம் (அதை சேர்த்தால் இன்னுமொரு 50பேர் சாப்பிட முடியும்). கிட்டத்தட்ட 400பேர்வரை வந்தனராம். ஆரைவாசிப்பேர் சாப்பிட்டு முடிந்ததும் பேய்விட்டனர். மெதுவாக என் நண்பரிடம் அந்த பாட்டி செலவுகளை துருவி துருவி கேட்க, பக்கத்தில் நின்ற ஒருவர் அவர் பாட்டி நடாத்pயவரின் கடையில் வேலை செய்பவர். அவர் கூறிய தகவல் என் தலையை விறைக்க வைத்தது. மண்டபத்திற்கு 650 பவுன்ஸ் மண்டபத்தை அலங்கரிக்க 400 பவுன்ஸ் (முழுவதும் புூக்களால் அலங்கரிப்பு) சாப்பாடு தண்ணிக்கு 4500பவுன்ஸ், விடியோ படப்படிப்பக்கு 850பவுனஸ் மற்ற இதர செலவுகள் 1000 பவுன்ஸ் (உடை, கேக் மந்திரவாதி, பாட்டி பைகள்) நேரடி பாட்டுக்கசசேரி குழுவுக்கு 700 பவுன்ஸ். இத்தனைக்கும் பேர்த்டே கொண்டாடிய பிள்ளை ஒரு வயது என்பதால் ஒரே அழுகை. அதை தாய் தகப்பன் பேத்தி கையிலை விட்டுவிட்டு ஒரே ஓடித்திரிந்த படி, படமெடுக்க மட்டும் பிள்ளையை வாங்கி அதை ஆக்கினை பண்ணி கமராவை பாக்க வைச்சினம். பிள்ளைக்கு இரவே காய்ச்சல் வேறை. மொத்த செலவு கிட்டத்தட்ட 7000பவுண்ஸ் எனக்கு தலை சுத்து இன்னமும் தீரவில்லை!

