10-16-2003, 01:02 PM
தணிக்கை Wrote:“ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” எனும் தலைப்பில் சென்ற 13.10.2003 திகதியன்று எமது அமைச்சரின் பெருந்தன்மையை சீண்டிப்பார்க்கும் செய்தியொன்று தமிழ் பத்திரிகையொன்றில் வெளிவந்திருந்தது :-
இச் செய்தி குறித்து அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் :
சென்ற 12.10.2003ஆம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் வைபவத்தின் போது அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ. அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் எந்தவொரு பத்திரிகையையோ அல்லது பத்திரிகை நிறுவனத்தையோ அல்லது பத்திரிகை நிறுவன நிர்வாகியையோ பெயர் குறிப்பிடாது அமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்புக்கொண்டு சில செய்திகளை வெளியிடுவதாகவே குறிப்பிட்டிருந்தன.
இலங்கைத் திருநாட்டில் எத்தனையோ பத்திரிகை நிறுவனங்களும், பத்திரிகை நிறுவன நிர்வாகிகளும் இருக்க உதயன் பத்திரிகை மட்டும் தொப்பி தனது தலைக்கே பொருந்தும் என்ற hPதியில் சென்ற மாதம் 13.10.2003ஆம் திகதியிட்ட உதயன் பத்திரிகை மூலமாக செய்தி வெளியிட்டிருப்பதாவது கௌரவ அமைச்சர் மகேஸ்வரன், பா.உ., அவர்கள் அன்றையதினம் தனது உரையின்போது குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட பகைமைக்காக தமது செய்தி ஊடகங்களை பாவிப்பது உதயன், மற்றும் சுடர் ஒளி ஆகிய ஊடகங்கள்தான் என்பதை தாமாகவே ஒப்புக்கொண்டுள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.
இதற்கு ஒரு அத்தாட்சிதான் சென்ற 13.10.2003ஆம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியான “ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன் உதயன் மீது அபாண்டாமான குற்றச்சாட்டு” என்ற தலைப்பிலான அச்செய்தியாகும். இவ்வுூடகம் இதனு}டாக தனது சுயரூபத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :
1. இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் அங்கம் வகிக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் உதயன், சுடர் ஒளி பத்திரிகை இணைந்துகொள்ளாததுடன் அதன் பத்திரிகையாளர்களையும் ஒன்றியத்தில் இணைய விடாது வலியுறுத்துவதாக உதயன், சுடர் ஒளி பத்திரிகையில் பணிபுரிபவர்களே எமக்கு தெரிவித்துள்ளார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையினையே அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்களின் விபரங்கள் அமைச்சர் அவர்களிடம் உள்ளது என்பதுடன் அவர்களின் நலன்கருதி அவர்களுக்களித்த வாக்குறுதிக்கமைவாகத்தான் அவற்றின் இரகசியத்தன்மையை அமைச்சர் பேணியுள்ளார்.
13.10.2003 செய்தியில் உதயனில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள் என தெரிவித்திருப்பது நீதி தவறாது, நடுநிலையாக, பக்கசார்பின்றி எவ்வளவோ சிரமத்தின் மத்தியில் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பத்திரிகையாளர்கள் எவருமே சுயாதீன நிலையில் செயல்படவில்லை என குற்றம் சாட்டி அவர்களை அவமதிப்பதாக அமைகின்றது. ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இணையாத உதயன் - சுடர் ஒளி பத்திரிகைகயே சுயாதீனமானவை ஏனையவை சுயாதீனமற்று செயல்படுவதாக கூறமுனைவது கண்டிக்கத்தக்கதுடன் ஏனைய ஊடகங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைகின்றதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் அவர்கள் ஆலயச் சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையுூறாக வாகன பவனி வந்தார் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கௌரவ அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன், பா.உ., அவர்கள்தான் பக்தர்களுக்கு இடையுூறாக வாகனப் பவனி வந்தார் என்பதை தங்களால் நிரூபிக்க முடியுமா? அமைச்சர் அவ்வாறு வாகன பவனி வரவில்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களின் ஒரே ஒரு ஆதீன குருமகாசன்னிதானம் நன்கு அறிவார் அவர் மட்டுமல்ல யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் அனைத்து இந்து சமயத்தவர்களும் நன்கு அறிவார்கள் என்பதுடன் இத்திரிவுபடுத்தப்பட்ட ஆராயாமல் வெளியிடப்பட்ட செய்தி குறித்து விசனமும் அடைந்திருந்தால் எனவே தாங்கள் வெளியிட்ட செய்தியை தங்களால் நிரூபிக்க முடியுமா?
3. யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட கைதடி சைவ சிறுவர் இல்ல செயலாளரை இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள சுவாமிகளுடன் ஒப்பு எழுதியமை இந்து நெஞ்சங்கள் அனைவருமே அறிவார்கள். இப்போது அதனை அவ்வாறு செய்தி வெளியிடவில்லை என மறுப்பது முழுப் புூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும் என்பதுடன் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமிகளிடம் நிர்வாகி ஆசிபெறும் படம் கௌரவ அமைச்சரிடம் உள்ளது என்பதுடன் பத்திரிகை நிர்வாகமும், நிறுவனமும் விட்ட தவறுக்கு நிர்வாகியின் குடும்பத்தினரை இழுப்பது மனித நாகாPகமற்ற செயல் என்பதால் அதனை ஏனைய ஊடகங்களில் பிரசுரிப்பதும் அநாகரிகமானது என்பதாலும் அமைச்சர் மகேஸ்வரன் இவ்விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி அமைதியாய் இருந்தார். மேலும் தன்னிடம் உள்ள படத்தினை கௌரவ அமைச்சர் அவர்கள் சமயப் பெரியார் அல்லது பொதுவான ஒருவரிடம் கையளிக்க தயாராக உள்ளதுடன் அவரிடம் அப்படத்தை பார்வையிட்டு தங்களது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.
இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு அரும்பாடுபட்டு உழைத்துவரும் ஊடகவியலாளர்கள் பங்குகொண்டுள்ள அமைப்புத்தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதனுடைய செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது. அச்சங்கத்தினை விமர்சிக்கும் யோக்கியம் உதயன் - சுடரொளிக்கு கிடையாது. உதயன் - சுடரொளியின் ஊடகவியலாளர்கள் மேற்படி சங்கத்தில் அங்கத்துவும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் தான் கௌரவ அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
வலம்புரி, சூரியகாந்தி போன்ற பத்திரிகை நிறுவனங்களுக்கு தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் அறிவதோடு தனிப்பட்ட பகைமையை தனிப்பட்ட hPதியில் எதிர்கொள்ள கௌரவ அமைச்சர் தயாராக உள்ளார் என்பதுடன் உங்கள் பாணியில் பதிலடியை எதிர்பார்த்தால் அதே பாணியில் பதில் தர தயாராக உள்ளதுடன் அரசியல் செல்வாக்கால் கௌரவ அமைச்சரின் வர்த்தக வழியில் குறுக்கீடு செய்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அதே பாணியில் இன்று அரசியல் hPதியில் பதிலடி கொடுப்பதை தாங்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் விரைவில் கௌரவ அமைச்சர் அவர்களும் பத்திரிகை வெளியிட உள்ளார் என்பதுடன் அதன்மூலம் தேவையற்றதும் திரிபுபடுத்தப்பட்ட விசமத்தனமானதுமான செய்திகளை வெளியிடும் உதயன் - சுடரொளி மற்றும் தினமுரசு போன்றவற்றுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளார் என்பதையும் இவ்வறிக்கையை எவ்வித வெட்டுமறைப்புமின்றி, இருட்டடிப்பின்றி வெளியிட முடியுமா? என்பதையும் இப்போது விடப்பட்டவை சிறிய கணைகள் மட்டுமே! விரும்பினால் நாகாஸ்திரங்கள் விட தயங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
15.10.2003
“உதயனை மிரட்டிப் பார்க்கிறார் அமைச்சர் தி. மகேஸ்வரன்
என்ற செய்திக்கான மறுப்பறிக்கை”
உதயன் பத்திரிகை நிறுவனமே!
முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தில்லுமுல்லுப் பதில்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
1. 12ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கூட்டத்தில் யான் பேசிய பேச்சை முழுமையாக வெளியிட திராணியுண்டா? அவ்வாறு நேற்றையதினம் யான் அனுப்பிய பதிலை முழுiயாக பிரசுரிக்க திராணியுண்டா? வெட்டியும் சிதைத்தும் வெளியிட்டது ஏன்? திராணியிருந்தால் முழுமையாக வெளியிடலாமே!
2. உதயன், சுடரொளி பத்திரிகைகள் பிரசுரிக்கும் செய்திகளில் நிருபர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்வது ஏன்? அவ்வாறு வெளியிட்டால் நிருபர்களுக்கு வெளியுலகில் மதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலா?
3. சுடரொளி நிறுவனம் ஆரம்பித்தது முதல் இன்றுவரை சம்பளம் கிடைக்காமல் விலகியவர்களின் பட்டியலை வெளியிட முடியுமா? தற்பொழுதுள்ள ஊழியர்களின் சம்பள அளவுகளை பகிரங்கப்படுத்த முடியுமா?
4. யாழ். இந்துக் கல்லு}ரி பழைய மாணவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளில் பெரும் தில்லு முல்லென எங்கும் பேச்சு அடிபடுகிறதே! இத்தில்லுமுல்லுகளுக்கு யார் பொறுப்பாளி? கணக்குகளை இன்னமும் பகிரங்கப்படுத்தாதது ஏன்? பகிரங்கப்படுத்த முடியுமா? யாழ்ப்பாணத்தின் புகழ்புூத்த முன்னனிப் பாடசாலையொன்றை நீதிமன்றத்துக்கு இழுத்தது யாழ்ப்பாண கல்வி வளர்ச்சிக்கு இழைத்த பெரும் துரோகமல்லவா! இதற்கு யார் பொறுப்பு?
5. யாழ்ப்பாணத்தின் சப்றா நிறுவனத்தை மீண்டும் ஆரம்பிக்கும் திராணியுண்டா? உதயன் நிறுவனம், பாட்டா நிறுவனம், அருண் ஸ்போட்ஸ், அருண் பிரின்டர்ஸ், ஈகிள் பாதுகாப்பு சேவை ஆகியன சப்றா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தானே உண்மை. இதனை மூடி மறைப்பதன் மர்மம் என்ன?
6. 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உதயன் பத்திரிகை அச்சிடப்படும் அச்சு இயந்திரத்தினால் 16இலட்சம் ரூபா பெறுமதியான தேர்தல் சுவரொட்டிகளை ஈ.பி.டி.பி. கட்சியினருக்காக அடித்துக் கொடுத்ததை மறுக்க முடியுமா? இத்தகைய ஒரு செயலை தமிழ் ஊடகங்கள் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படும் ஏதாவது ஒரு பத்திரிகை ஊடகம் செய்துள்ளதா? உதயன் நிறுவனத்தினரின் அத்தகைய செயலை வியாபாரம் என்பதா? அல்லது பத்திரிகை தர்மம் என்பதா?
7. சுவாமி பிரேமானந்தாவின் படத்துக்கு வணக்கம் செலுத்துவதை இணையத் தளத்தில் பாத்திருப்பின் பிலிம் சுருளும் தேவைதானா? தேவையென்றால் தரத் தயார். இதற்கு மேல் வீடியோப் பிரதியும் தருவதற்கு ஆயத்தம்.
இவ் அறிக்கையினையும் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையினையும் முழுமையாக பிரசுரிக்க முடியாதபட்சத்தில் இணையத்தள மூலமாக உதயன் நிறுவனத்தாரின் தில்லு முல்லுகள் யாவற்றையும் உலகம் முழுக்க பரவச் செய்ய வேண்டிவரும்.
தணிக்கை Wrote:தணிக்கை Wrote:யாழ்/yarl Wrote:உதயன்.
<img src='http://www.oslovoice.com/Tamiln4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.oslovoice.com/Tamiln5.jpg' border='0' alt='user posted image'>

