08-03-2005, 12:13 PM
உண்மையில் நான் கூட விமானத்தின் விபத்துப் படங்களைப் பார்த்து ஒருவரும் தப்பியிருக்க மாட்டார்கள் என பயந்து விட்டேன். ஆனால் இறை அருளால் 43 பேர் மட்டும் காயத்துடன் எல்லோரும் தப்பியுள்ளார்கள். தற்ஸ்தமிழ் செய்தியில் விமானம் தரையிறங்கும் போது மின்னல் தாக்கியதாலேயே நிலைகுலைந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக செயற்பட்டு காப்பாற்றிய படையினருக்கும் எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி.

