08-03-2005, 01:32 AM
திறப்பு விழா புகழ் த்ரிஷா...?
"தேவுடா... தேவுடா... ஏழுமலை தேவுடா...' என்று விசிலடித்தபடி சந்தோஷம் பொங்க எதிரே வந்து அமர்ந்தார் மிஸ்டர் க்ளீன்.
""அரே! மிஸ்டர் க்ளீன் தேவுடா! சத்யராஜ் நடிக்கும் "தேவுடா...' படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறதே படித்தீரா...?''
""படிச்சேன்... படிச்சேன்... ''என்று தலையாட்டியவர், "வேல் வேல்' படத்தின் பூஜைக்கு வந்திருந்தார் சத்யராஜ். அவர்கிட்ட இதப்பத்திக் கேட்டேன்... "தேவுடா' படம் போலிச் சாமியார்களை தோலுரித்துக் காட்டும் படமே தவிர, தலைவர்களையோ, மதங்களையோ கிண்டல் செய்யும் படமில்லைன்னு சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார்...
அப்போது அருகில் நின்ற டைரக்டர் ஷிவ்ராஜை காண்பித்து "இதப் பாருங்க... பார்ட்டி விபூதி, குங்குமம், சந்தனம்னு கலக்கலா பொட்டு வச்சிருக்குது... தயாரிப்பாளரோ முருகன் கோயிலுக்குப் போகாம தினமும் ஆபீசுக்கு வர்றதில்லை. இப்படி இருக்கும்போது நான் எப்படி... அப்படிக் கேலி பண்ண முடியும்...? தேவுடா, யாரையும் கோபிக்க வைக்காத ஜாலியான படம்'னு சொன்னார்...''
""அப்படியா...!'' என்று கேட்டுவிட்டு க்ளீன் நெற்றியைப் பார்த்தோம். அவரும் குங்குமம், சந்தனம் வைத்திருந்தார்.
""நீரும் கோவிலுக்குத்தான் போயிட்டு வர்றீரா?'' என்றோம்.
அசட்டுச் சிரிப்பு சிரித்தார். ""நண்பருடைய கல்யாணத்துக்கு போயிட்டு நேரே உம்மை பார்க்க வந்தேன்... அதான் சந்தோஷமாய்ப் பாடினேன்... சென்னையில மழை பெய்ய ஆரம்பிச்சிட்டுது'' என்று சொல்லியவர் தனது கைப் பையில் குடை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்.
""குடைக்குள் மழை'' பற்றி தகவல் சொல்லப் போகிறீரா'' என்று கேட்டுவிட!
""பழசைக் கிளர்றது க்ளீனுக்கு பிடிக்காத விஷயம்'' என செல்லக் கோபம் காட்டினார்.
""ஆட்டோகிராஃப்' படத்துக்கு டைரக்ஷனுக்காக மத்திய அரசு விருது கொடுக்கும்னு எதிர்பார்த்தேன்னு சேரன் சொல்லியிருந்தாரே...?''
""அது அவரது ஆதங்கமுங்க...! அதிலென்ன தப்பு இருக்கு...? "பிதாமகன்' படத்துக்கு விருது கிடைச்சப்பகூட பாலா இதைத்தான் சொன்னாரு. இதில ஒண்ணும் ஆச்சர்யம் இல்லையே? டைரக்ஷனுக்காக கிடைக்கும்னு எதிர்பார்க்கிறதில தப்பில்லையே...?''
""அது சரி... கோபிகாவுக்கு "ஆட்டோகிராஃப்' படம் வெளியானபோது இருந்த மவுசு இப்ப குறைந்துவிட்டது என்று கேள்விப்பட்டேனே...'' என்று இழுத்தோம்.
""அதெல்லாம் சும்மா அம்மணிக்கு மவுசு கூடிக்கிட்டுத்தான் இருக்கு... அவருக்கு கைவசம் நெறைய ஆஃபர்! கால்ஷீட் பிரச்சனையில்லாம "டேட்ஸ்' கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காங்க. "கனா கண்டேன்' ரிலீசுக்குப் பிறகு "பொன்னியின் செல்வன்', "தொட்டி ஜெயா' படங்கள்லாம் வரப்போகுது. கேரளாவிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இந்த நிலையில் முப்பது நாற்பதுன்னு போட்டி போட்டுக்கிட்டு சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்க. அப்புறம் எப்படி மவுசு குறைஞ்சதுன்னு சொல்ல முடியும்...?''
""பிரியசகி' படத்தை டைரக்ட் செய்த அதியமான், தனக்குப் பழக்கமுள்ள மும்பை ஃபைனான்சியரை அழைச்சிட்டு வந்து தமிழ் இண்டஸ்ட்ரிக்கு உதவி செய்தாராமே? இதனால அவருக்கு நல்ல கமிஷன் கிடைக்குதாமே? டைரக்டர்கள்கூட இப்படி சைடு இன்கம் பார்க்க முடியுமா..?''
""அதியமான் திறமையான படைப்பாளி. சினிமாவுக்கு ஆரம்பத்துல செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பலர் நிதி உதவி செஞ்சாங்க. அப்போ இண்டஸ்ட்ரி ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்வாங்க. எண்பதுக்குப் பிறகு மத்தவங்களும், ஃபைனான்ஸ் செய்ய வந்தாங்க. மார்க்கெட் நிலவரம் தெரியாம எல்லோருக்கும் உதவி செஞ்சு சிக்கிக்கிட்டாங்க.
சிலபேர் சாமர்த்தியமா இருந்து தானும் பிழைச்சு, மத்தவங்களையும் பிழைக்க வைச்சிக்கிட்டு இருக்காங்க. இப்போ என்.ஆர்.ஐ. பார்ட்டிகளே ஃபைனான்ஸ் செய்ய வரும் போது மும்பைக்காரங்க வந்தா என்ன? எப்படியோ, தமிழ் சினிமா செழிக்க உரம் போடறவங்க வரட்டுமே? அத யார் செஞ்சா என்ன? இதக் கூட கமிஷன் கிமிஷன்னு சொல்லி அசிங்கப்படுத்துறாங்களே?'' என்றார்.
பிறகு, ""டபுள் ஸ்ட்ராங்கா டீ போட்டுக் கொண்டாங்க! அப்பத்தான் மீதிக் கதை'' என்றார் க்ளீன்.
""சினிமாவில் கோடி கோடியாக கொட்டிப் படமெடுத்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை, இப்போது புறநகரில் ஒரு சிறு ஹோட்டலை சொந்தமாகத் துவங்கி, தானே பரிமாறி கஸ்டமரை உபசரித்து அசத்துகிறாராமே''
""ஆமாம். எம்.ஜி.ஆர். நகரில் ஹோட்டல் வைத்திருக்கிறார். அவர் நல்ல உழைப்பாளி. முதலில் உதவி இயக்குனராக இருந்து, தயாரிப்பு நிர்வாகியாக உயர்ந்து பட அதிபரானவர். ""என்னம்மா கண்ணு', "லூட்டி', "விவரமான ஆளு', "லவ்லி', "பிதாமகன்' படங்களைச் சொந்தமாக தயாரித்ததோடு, ரஜினியின் "பாபா' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.அவரது எளிமை அனைவரையும் வியக்க வைக்கிறது.'' என்றார் க்ளீன்.
""நல்லது. அடுத்த சப்ஜெக்டுக்கு வாங்க. நகைக்கடை, துணிக்கடை, மளிகைக் கடை என எந்தக் கடையைத் திறந்து வைக்க அழைத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார் த்ரிஷா' என்று என் நண்பர் சொன்னாரே... இது உண்மையா மிஸ்டர் க்ளீன்?''.
க்ளீன், "ஹா... ஹா...' என்று சிரித்தார். ""த்ரிஷா ஃபேன்டா விளம்பர படத்தில் நடித்தபோது அவர்கிட்டேயே இதைக் கேட்டேன்... அவருக்கு நிறைய இன்விடேஷன் வருது... எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு நடிக்க முடியவில்லை... செலக்டீவாக ஒண்ணு ரெண்டு பண்றாங்க... அதே மாதிரி திறப்பு விழாவுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள நேரமில்லைன்னு சொன்னாங்க. த்ரிஷா மாடலாக இருந்தபோது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு விளம்பர படம் மிஸ் ஆனபோது அந்த புரொட்யூசரை கோபித்துக் கொண்டதோடு, தானே அதைக் கேட்டு நடித்துக் கொடுத்தவர்.
இப்போது பிஸியானபோது அந்த விளம்பரப் பட தயாரிப்பாளர் பலமுறை அணுகி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் எனக் கேட்டும், நேரமில்லாமல் நடிக்கவில்லை என்று என்னிடம் வருத்தமாகக் கூறினார். நிலமை இப்படி இருக்க அப்படி ஒரு தகவல் என்றதும் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது...'' என்றார்.
""நட்பு நடிகையின் சகோதரி குடும்பத்தில் பிரச்னை வந்துவிட்டதால் அவர் ரொம்ப மனம் உடைந்துவிட்டாராமே!''
""அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். பிறகு விசாரித்த போது அப்படியெல்லாம் இல்லை. இப்பவே வீட்டுக்கு வாங்க நானும், என் கணவருமா சேர்ந்து பேட்டி தருகிறோம்' என்றார் நட்பு நடிகையின் அக்கா!'' என்று சொல்லியவாறு கிளம்பினார் மிஸ்டர் க்ளீன்.

<b> .. .. !!</b>