06-21-2003, 09:45 AM
இது அவநம்பிக்கையல்ல
பட்ட வலிகளை ஆற்றுப்படுத்த
வருகின்றன புதிய மருந்துகள்.
கானலையே கண்முன் கண்டவர்க்குக்
குளிர்ந்த நீர்ச்சுனையில்
நின்றாடும் குதூகலம் பிறக்கின்றது.
கல்லும் முள்ளும்
பள்ளமும் திட்டியுமாய்
ஓடிக் களைத்துச்
செத்தபின் கூடச்
சாகவிடா மனிதரின்
முயற்சியால் ஓடித்திரியும்
ஊர்திகளுக்கும்
புதிய அணிகலன்கள் புூட்டப்பட்டுள்ளன.
மகிழ்ச்சிதான் இல்லையென்றில்லை
ஆறிய காயம் வடுவாகிப்போயுள்ளது
எவ வகைச் சிகிச்சைகளாலும்
குணப்படுத்த முடியாதபடி
ஆழப்பதிந்துள்ளது அடையாளம்
படத்துள் சிரிக்கும்
போராளித் தங்கைக்கும்
ஒரு காலை இழந்து
மரக்காலணிந்துள்ள
ஒன்றுவிட்ட தம்பிக்கும்
எல்லைக்குப் போய்
மீண்டு வராத பெரியப்பாவிற்கும்
நிரப்பீடு எது?
இழந்து வந்த என்னூர் திரும்பலாம்.
இடிந்த வீட்டைத்
திருத்தியும் கட்டலாம்
சிதைந்த என் மனதை
சிதறிப்போன உறவுகளை
கழிந்த துயர்மிகு வாழ்வை
யார் சுகப்படுத்துவார்?
துயரம் என்னோடு மட்டும்
முடியட்டும்.
ஈடாடிப்போன வாழ்வும்
நம்பிக்கெட்ட மடைத்தனமும்
என் சந்ததிக்கினி வேண்டாம்.
நம்பிக்கையுள்ள காற்றை மட்டுமே
எனது பிள்ளை சுவாசிக்கட்டும்
எங்கள் கால்களால்
மட்டுமே நாம் நடப்போம்.
எமது மனச்சான்றின்படி....
அம்புலி
பட்ட வலிகளை ஆற்றுப்படுத்த
வருகின்றன புதிய மருந்துகள்.
கானலையே கண்முன் கண்டவர்க்குக்
குளிர்ந்த நீர்ச்சுனையில்
நின்றாடும் குதூகலம் பிறக்கின்றது.
கல்லும் முள்ளும்
பள்ளமும் திட்டியுமாய்
ஓடிக் களைத்துச்
செத்தபின் கூடச்
சாகவிடா மனிதரின்
முயற்சியால் ஓடித்திரியும்
ஊர்திகளுக்கும்
புதிய அணிகலன்கள் புூட்டப்பட்டுள்ளன.
மகிழ்ச்சிதான் இல்லையென்றில்லை
ஆறிய காயம் வடுவாகிப்போயுள்ளது
எவ வகைச் சிகிச்சைகளாலும்
குணப்படுத்த முடியாதபடி
ஆழப்பதிந்துள்ளது அடையாளம்
படத்துள் சிரிக்கும்
போராளித் தங்கைக்கும்
ஒரு காலை இழந்து
மரக்காலணிந்துள்ள
ஒன்றுவிட்ட தம்பிக்கும்
எல்லைக்குப் போய்
மீண்டு வராத பெரியப்பாவிற்கும்
நிரப்பீடு எது?
இழந்து வந்த என்னூர் திரும்பலாம்.
இடிந்த வீட்டைத்
திருத்தியும் கட்டலாம்
சிதைந்த என் மனதை
சிதறிப்போன உறவுகளை
கழிந்த துயர்மிகு வாழ்வை
யார் சுகப்படுத்துவார்?
துயரம் என்னோடு மட்டும்
முடியட்டும்.
ஈடாடிப்போன வாழ்வும்
நம்பிக்கெட்ட மடைத்தனமும்
என் சந்ததிக்கினி வேண்டாம்.
நம்பிக்கையுள்ள காற்றை மட்டுமே
எனது பிள்ளை சுவாசிக்கட்டும்
எங்கள் கால்களால்
மட்டுமே நாம் நடப்போம்.
எமது மனச்சான்றின்படி....
அம்புலி

