Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் இலகுவாய் முன்னேற
#1
<span style='font-size:30pt;line-height:100%'>புலத்தில் இலகுவாய் முன்னேற சில வழிகள்</span>


நேற்று சோழியனோடை(அதுதான் ஓடிக்கொண்டிருப்பாரே அவர்தான்)கதைச்சு கொண்டிருக்கேக்கை என்னை கேட்டார் சாத்திரி அய்யா உழைச்சு களைச்சு போனன் சுலபமா உழைக்காமல் ஏதும் வழி சொல்லுங்கோ எண்டு. ஆனால் அவருக்கு மட்டும் சொன்னால் அவர் தனிய முன்னேறிடுவார் ஆனா சாத்திரிக்கு பரந்த மனசு பாருங்கோ அதனாலை எல்லாருக்கும் சொல்லுறன்.

ஆலோசனை 1

உங்களுக்கு கஸ்ரம் வந்தால் என்ன செய்வீர்கள் பொதுவாக எல்லாரும் கடவுளை வேண்டுவார்கள் கடவுளே காசு தா என்று அதே கடவுளையே முலதனமா போட்டு நீங்கள் வாழ்வில் முன்னேறலாமே

அதற்கு நீங்கள்: செய்ய வேண்டியது நீங்கள் வசிக்கும் நாட்டில் உங்கள் நகரத்ததில் ஒரு கோயில் கட்ட வேண்டும் அதற்கு நகர சபையிடமும் கலாச்சார அமைச்சிடமும் எங்கள் மக்கள் எமது கடவுளை கும்பிட முடியாமல் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் அவர்களது கலாச்சாரம் அழிகிறது அதனால் குற்ற செயல்கள் அதிகரிக்கிறது அவர்களை நல்வழிப்படுத்தஒரு கோயில் கட்ட இடம் வேண்டுமென்று கூறி இலவசமாகவே அல்லது குறைந்த வாடைகைக்கோ ஒரு இடத்தை வாங்குங்கள் (பிரான்ஸ் போன்ற கோயில் கட்ட அனுமதியில்லாத நாடுகளில் ஒருகட்டடத்தை எடுக்கலாம்)

இடம்சரி அடுத்தது கட்டடம் கட்ட பணம் வேண்டுமே வழி. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுங்கள்.
இதோவிரைவில் வெளிவருகிறது (இது நல்லாயில்லை) உங்கள் வினை தீர்க்க ஊரில் ஒரு ஆலயம் வேண்டாமா(எல்லாரும் பாவம் செய்தவைதானே)எனவே ஆலய நிதி வள்ளல்களே வாரி வழங்குங்கள். ஆயிரம் யுரோக்கு மேல் நன்கொடை தருபவர்களின் பெயர் கோயில் சுவர் கற்களில் பொறிக்கப்படும் எண்டு போடுங்கோ அப்பதான் எல்லாரும் ஆயிரத்துக்கு மேலை தருவினம்.

ஆனால் பெயர் எல்லாம் பொறிச்சு மினக்கடாதையுங்கோ செலவாகும். காசு தந்தவர் பெயர் எங்கையெண்டு கேட்டா கல்லிலை பொறிச்சிருக்கு மேலை சீமெந்து புசியிருக்கு எண்டு சொல்லுங்கோ அவர் என்ன சுரண்டியா பாக்க போறார்.

அடுத்ததா சிலையும் அய்யரும் வேணும் அதுக்கு இந்தியா போக வேணும். இந்தியா கன்னியா குமரியிலை சிலையள் மலிவா வாங்கலாம். எங்கடையாக்கள் அதிகம் கும்பிடுற பிள்ளையார். அம்மன்.முருகன். முக்கியமா நவகிரகங்கள்.ஏணெண்டா அப்பதான் என்னை மாதிரி சாத்திரியள் சொல்லிவிடுவினம் பிள்ளை உனக்கு சனி செவ்வாய் தோசம் எண்டு.அவை சுத்த வசதியா இருக்கு மல்லோ

சிலைகள் கொண்டு வரும்போது முடிந்தால் கொஞ்சம் தூளையும் சிலைகளிற்கை மதை;து அடைத்து எடுத்து வரலாம் தப்பிவந்தால் நீங்கள் அதிஸ்ரசாலி பிடிபட்டால் கடவுள் உங்களை கை விட்டிட்டார் எண்டு அர்த்தம் கம்பி எண்ணலாம்.

சிலை சரி அடுத்தது அய்யர் இதிலை சரியான கவனமா இருக்க வேணும் அய்யருக்கு மந்திரம் தெரியுதோ இல்லையோ அவருக்கு அதிகவெளியுலக விபரம் தெரியாத அப்பாவியாக இருப்பது உங்களிற்கு நல்லது. ஏணெ;டா அவர் இங்கை வந்து இடம் பிடிபட பிறகு உங்களிற்கு போட்டியா தானே தனிய கோயில் கட்டதொடங்கிடுவார்.

அய்யருக்கு இந்திய காசில் ஒருதொகையை பேசி மாதா மாதம் இந்தியாவில் அவரது வங்கியில் போட ஒழுங்கு பண்ணுங்கள் அத்துடன் இங்கு தங்குமிட வசதி உணவு இலவசம் எண்டு சொல்லுங்கோ கோயில்லை இருக்கிறதை சாப்பிட்டிட்டு அங்கேயே ஒரு கரையிலை படுக்க விடலாம்.

அய்யரை இங்கு கொண்டு வந்ததும் முதலில் அவரின் கடவு சீட்டை பறித்து நீங்கள் வைத்து கொள்ளுங்கள் உங்களிற்கு நல்லம். ஏணெண்டால் அய்யர் மேலதிக உழைப்பிற்காய் திருமணவீடு துடக்கு கழிவு எண்டு வெளியிலை விடேக்கை வெளியாக்களின்ரை ஆலோசனை கேட்டு தான் சிலோன் காரன் எண்டு சொல்லி அசுல் அடிச்சு தனிய உழைக்கபோயிடுவார் பிறகு நீங்கள் இன்னொரு அய்யரை தேடி இந்தியா போய் வீண் செலவு.


கோயிலில் சிலைகளை பதிக்கும் போது இலகுவாய் நகர்த்த கூடிய மாதிரி வைக்கவும் அப்பதான் மேலதிகமாக சனி ஞாயிறு நாட்களில் அவைகளை கழட்டி ஒரு ழூலையில் போட்டுவிட்டு இடவசதியுடனான மண்டபமாக்கி கோயிலை பிறந்தநாள் திருமண நாளிற்கு வாடைகைக்கு விடலாம்.


இப்ப ஊர் காசிலை கோயிலும் கட்டி அய்யரும் வந்தாச்சு இனியென்ன உங்கள் காட்டில் சீ வீட்டில் பணமழைதான்.

எல்லாத்துக்கும் மேலாக தேர் இழுக்க அனுமதியும் எடுத்தீட்டீங்களண்டா நீங்கள் தான் கடவுள்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#2
அடுத்த யோசனை விரைவில் வரும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#3
ஜயா சாட்றீ இருண்டு கிடந்த இந்த டன்னின்ர வாழ்க்கையில பரா லைட்டை அடிச்சு வழி காட்டி கையில வேற எம்9ஐ குடுத்து விட்டுட்டியள்.. எனி நம்ம வழி.. அஹஹஹஹ் சிறைச்சாலை வழி... Idea :evil: :evilSadடக்கிளசை கூட்டத்தோட மாட்டிவிடுறதுக்கெண்டே ஒரு மார்க்கமா அலையுறாங்களப்பா) :twisted: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
sathiri Wrote:அடுத்த யோசனை விரைவில் வரும்

þ¾¢Ä ´ñÎ ÁðÎõ ±ýÉìÌ ÒâÔР¡ú ¸ÇòÐìÌ
Á¢ñÎõ ͽ¡Á¢ Å¡Õõ §À¡Ä þÕìÌ :? :? :?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
<span style='font-size:25pt;line-height:100%'>ஆலோசனை இரண்டு</span>

முதல் கோயில் திறக்க ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க சொன்னனான் அல்லோ அந்த ஊடகதுறையையும் உங்கள் வியாபாரத்திற்காக பயன் படுத்தலாம். அதில் பத்திரிகை என்பது இணையங்களின் வரவால் அதிக லாபம் இல்லாமல் படுத்து கொண்டு போகிறது எனவே அடுத்த தெரிவு வானொலி தொடங்கலாம்.

வானொலி தொடங்க உங்கள் வீட்டு அறையே போதும். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து கையில் உள்ளது மிச்சம் கடன் எண்டு வாங்கி ஒரு வானொலியை ஆரம்பியுங்கோ. அதற்கு முதலில் அறிவிப்பாளர்கள் தேவை குறைந்த பட்சம் ஒரு பெண் அறிவிப்பாளர் ஒரு ஆண் அறிவிப்பாளர் தேவை .

அறிவிப்பாளர் தெரிவின்போது பொண் அறிவிப்பாளருக்கு தமிழில் வணக்கம் மற்றும் நன்றி இரண்டும் வடிவா சொல்ல தெரிஞ்சா போதும் மற்றபடி அவர் விரும்பிய மொழியில் கதை;த்து விட்டு போகட்டும் மற்றது உங்களிற்கு பின்னர் தொலை காட்சி சேவை தொடங்கிற எண்ணம் இருந்தா அந்த பெண் அளகாக இருந்தால் நல்லது(உங்களிற்கும்)அதைவிட அவர் எப்பவும் தலைவிரி கோலமாக இருக்கவேண்டும்.

ஆண் அறிவிப்பாளருக்கு கொஞ்சம் குரல் வளம் நன்றாகவும் எல்லாரையும் சகோதரர் சகோதரி என்று அறுக்கதெரிஞ்சிருக்க வேண்டும். மற்றபடி அறிவிப்பாளர்களிற்கு நிறைய திரைப்பட நடிக நடிகையரின் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்ததாக வானொலி தொடங்கியாச்சு அதில் அதிக நேர நிகழ்ச்சியாக நேயர்விருப்ப நிகழ்ச்சிகளையே நடத்துங்கள் அப்பதான் பல பேரின்ரை தொடர்புகள் பழக்கங்கள் கிடைக்கும். ஒருமணி நேர நேயர் நிகழ்ச்சியில் 55 நிமிடம் ஒருநேயரிடம் அவர் ஊர் பெயர் சொந்தகாரரின்ரை விபரம் பக்கத்து வீட்டு காரரின்ரை விபரம் என அறுத்துவிட்டு கடைசி 5 நிமிடம் அவர் விரும்பிய பாடலை ஒலிபரப்புங்கள்.செய்திகளிற்கு பஞ்சமில்லைதானே இணையங்களிலை வாறதை அப்பிடியே பாத்து படிக்கலாம்

இப்போ உங்களிற்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்திருப்பார்கள். உடனே அங்கத்தவர்கள் கூடிவிட்டதால் நிர்வாக வசதிக்காக அவர்களை உங்கள் வானொலியில் அங்கத்துவராக சேரும்படி கேழுங்கள் ஆனால் மாதா மாதம் அங்கத்துவ பணம் 100 யுரோக்கள் அங்கத்துவராக சேராதவர்கள் தெலைபேசியில் தங்கள் அபிமான அறிவிப்பாளருடன் அறுக்கமுடியாது எண்டு ஒரு குண்டையும் தூக்கி போடுங்கள்.உடN ரசிகர்கள் பதறியடித்து கொண்டு அங்கத்தவராக இணைவார்கள்

இப்போது ஓரளவுக்கு உங்களிற்கு பணம்புரள ஆரம்பித்தாலும் பெரிய ஒருதொகை கிடைத்தால் தானே வேறு ஏதாவது தொழிலிலும் முதலீடு செய்யலாம் எனவே திடீரென ஒருநாள் உங்கள் அறிவிப்பாளர்களிற்கு ஓய்வு கொடுத்து விட்டு நீங்களும் வானொலியை நிப்பாட்டிபோட்டு வீட்டிலை பேசாமல் படுங்கோ.

உங்கள் ரசிகர்கள் உலகநாடெங்குமிருந்த வேலை சமையல் சாப்பாடு எல்லாத்தையும் விட்டிட்டு என்னநடந்தது எண்டு தெரியாமல் பதறிப்போய் கவலையுடன் உங்களிற்கு மற்றும் தெரிந்தவரிற்கொல்லாம் தொலைபேசியடித்து கவலையுடன் இருக்கும்போது மறுநாள் நீங்கள் உங்கள் குரலை கொஞ்சம் சோகமாக மாற்றி பாரதிராஜா ஸ்ரைலிலை

என்இனிய தமிழ் மக்களே உங்களிற்காய் உளசுத்தியுடன் நான் நடாத்திய வானொலி சேவை சில நாசகார சக்திகளாலும் மற்றும் பண தடடுபாடு காரணமாகவும் இடைநிறுத்தபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எண்டு அவிட்டு விடுங்கோ.


காசு வேணுமெண்டு கேக்காதையுங்கோ பிறகு பாருங்கோ ஒரே தெலைபேசி அழைப்புத்தான் உணர்ச்சிவசப்பட்ட உங்கள் ரசிக ரசிகைகள் தன்பிள்ளையின் எதிர்காலத்திற்காய் வங்கியில் சேமித்த பணம் மற்றும் தன்ரை சம்பளத்திலை பாதி என் தன்ரை வாகனத்தை வித்தெண்டு ரசிகர்களும்

ஒருபடி மேலை போய் தன் கணவனிற்கே தெரியாமல் தனது காப்பு சங்கிலியெண்டும் ஏன் தாலிகொடியையே கழட்டிதரும் ரசிகைகளும்.உங்களிற்கு கூரையை பிச்சு கொண்டு பணம் கொட்டும்.இப்படியே பணம் சேர்க்கும் நிகழ்ச்சியை ஒரு இரண்டு நாளைக்கு நடத்திப்போட்டு எல்லாத்தையும் அடிச்சு சாத்திப்போட்டு உங்கள் தெலைபேசிகளையும் நிறுத்திவிட்ட நீங்கள் எஸ்கேப் ஆகலாம்

<span style='font-size:30pt;line-height:100%'>அடுத்த ஆலோசனை விரைவில்</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#6
சாத்திரி நீங்க ஏற்கனவே பாவிச்ச ஐடியாவா சொல்லாமல் புதுசா ஏதாவது சொல்லக்கூடாதோ.

!
Reply
#7
<span style='font-size:25pt;line-height:100%'>அடுத்த ஆலோசனை சாத்திரம்</span>


நீங்கள் முதலிரண்டு வியாபார விடயமாக இந்தியாவிற்கு அடிக்கடி போய் வரவேண்டியதாக இருக்கும் எனவே இந்தியாவிற்கு போகும்போது மத்திய சென்னை எக்மோர்பகுதி வீதிகளிலோ அல்லது ஏதாவது கோயில்களின் பக்கத்திலும் பாருங்கள் தங்கள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் மற்றவர்களின் எதிர்காலத்தை கையை பார்த்து சொல்லி கொண்டு பல சாத்திரிகள் இருப்பார்கள்.

அவர்கள் கருணாநிதி கமலகாசன் ரஜனிகாந் விஜயகாந் போன்ற தமிழ்நாட்டின் முக்கியமானவர்களிற்கு தாங்கள் கைரேகை சாத்திரம் பார்ப்பதுபோல சில படங்கள் தயார்செய்து ஒரு பட அல்பமும் வைத்திருப்பார்கள். அவர்களில் நல்ல திறமையுள்ள ஒருவருடன் பேரம்பேசுங்கள்.

புலத்திலுள்ள தமிழர் எல்லாம் தங்கள் எதிர்காலம் தெரியாமல் சரியான கஸ்ர படுகிறார்கள் எனவே புலத்தில் வந்து அவர்களிற்கு சாத்திரம் பாக்கவேண்டும் அதில் வருகிற தொகை பணத்தில் சாத்திரிக்கு 20 வீதம் உங்களிற்கு 80 ஏனெண்டா நீங்கள் அவருக்கு வாற போற செலவு சாப்பாடெல்லாம்.

இப்ப சாத்திரிக்கு கடவுசீட்டெல்லாம் எடுத்து புலத்திற்கு கொண்டு வந்தாச்சு. அத்துடன் முடிந்தஅளவுக்கு அங்கையிருந்து அச்சரகூடுகளையும் சில பித்தளை தகடுகளையும் எடுத்து வரவும். அவரை தமிழர்கள் அதிகம் பழகும்இடங்களில் ஒரு கோயிலிலோ அல்லது வியாபார நிறுவனமொன்றிலோ சிறிய இடம் ஒன்றை ஒதுக்கி முலதனமாக ஒருமேசை இரண்டு கதிரை மட்டுமே போட்டால் போதும்.

சாத்திரியிடம்ஏற்கனே உள்ள கிராபிக் படங்களுடன் மேலதிகமாக திரிசா கோபிகா சினேகா மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களிற்கும் அவர் சாத்திரம் பாக்கிற மாதிரி சிலபடங்களை நீங்களே தயார் பண்ணி ஒரு அல்பம் செய்து சாத்திரியிட்டை குடுங்கோ(அதை பாக்கசிலபேர் வருவினம்)(நதியான்ரை படமும் போடவேணும் எனக்காக)வேணுமெண்டால் புஸ் ரொனி பிளேயரின்ரை படங்களையும் சேருங்கோ

அடுத்ததாக விளம்பரம செய்யவேணுமல்லோ அது ஒண்டும் கஸ்ரமான காரியமல்லஇரண்டு முண்று தமிழர்களிடம் இந்தியாவிலையிருந்து திறமான சாத்திரியொருவர் வந்திருக்கிறார் அவலர் சொல்லுறதெல்லாம் நடக்குதாம் எண்டு சொல்லிவிடுங்கோ உந்த இணையம் பத்திரிகை வானொலியெல்லாத்தையும் விட உப்பிடியான செய்தி வாய்முலம் விரைவாக பரவும்


மீதியை சாத்திரியாரே பாத்து கொள்ளுவார் ஆளுக்கு ஒரு தோசம் சொல்லி பரிகாரம் எண்டு அச்சர கூட்டுக்கை உங்களிற்கு எது வசதியோ மண்ணோ சாம்பலோ அடைஞ்சு அதுவும் நீங்கள் இங்கை பொருட்கள் வாங்கேக்கை வருட உத்தரவாதம் தாற மாதிரி ஒருவரு உத்தரவாதத்திற்கு இவ்வளவு பணம் 5 வருடத்திற்கு இவ்வளவு பணம் எண்டு விலை ஏறிகொண்டே போகும்.சல பேருக்கு பித்தளை தகட்டிலை அ . ஆ. இ .எழுதி அதை ஒவ்வொரு நாளும் கும்பிட சொல்லி குடுக்கலாம் அதற்கு தனியான விலை.

இப்படியே அவரை அய்ரோப்பா கனடா எண்டு ஒரு சுற்று பயணம் கொண்டு திரிஞ்சு(ஏணெண்டா எல்லா இடமம் ஏமாந்தவை இருக்கினமல்லோ)சுருட்டிகொண்டு சாத்திரியை ஊருக்கு அனுப்பிவிடுங்கோ சாத்திரிக்கும் நாடு பாத்தமாதிரி பிறகு சாத்திரிக்கு இந்தியாவிலையும் நல்ல உழைப்பு கூடிடும் காரணம் அவர் இங்கை எடுத்த படங்களை காட்டி உலகத்திற்கே நான்தான் சாத்திரம் பாத்தனான் எண்டு தொழிலை டெவலப் பண்ணிடுவார்.

தொடரும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)