Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விண்ணியல் விநோதங்கள்...
சரி சரி குருவி அண்ணா...நான் நினைச்சன் நீங்க விஞ்ஞானியாக்கும் என்று.....:wink:
" "
" "

Reply
நன்றி குருவிகளே
[b][size=18]
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41316000/jpg/_41316891_moontree.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41319000/jpg/_41319529_guideplaque_nasa203.jpg' border='0' alt='user posted image'>

தற்போதும் அமெரிக்காவில் உயிர் வாழும் சந்திர மரங்கள்...!

யூலைத் திங்கள் 20ம் நாள் 1969ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கியமான விண்ணியல் சாதனை நிகழ்ந்த நாள்..! அன்றுதான் அமெரிக்க விண்வெளிவீரர்களான <b>Neil A. Armstrong</b>, Commander; <b>Edwin E. Aldrin</b>, Lunar Module Pilot; <b>Michael Collins</b>, Command Module Pilot, ஆகியோர் முதன்முதலில் சந்திரனில் கால்பதித்த நாள்...! அதுவரை அபூர்வமாக தெய்வமாக உவமையாக விளங்கிய சந்திரன் அன்றிருந்து தான் ஆராய்ச்சிக்குரியதானது...!

அதன் பின்னர் மேலும் 5 பயணங்கள் அப்பலோ விண்ணோடம் மூலம் சந்திரனுக்கு நடத்தப்பட்டுள்ளன...! அதில் அப்பலோ 14 என்ற விண்ணோடம் மூலம் பெப்ரவரித் திங்கள் 5ம் நாள் 1971ம் ஆண்டு சந்திரனை நோக்கிப் பயணித்த விண்வெளி வீரர்களில் ஒருவரான <b>Stuart A. Roosa</b>, Command Module Pilot, தனது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட காலுறை அளவுப் பைக்குள் தனக்குப் பிடித்தமானதும் அமெரிக்க வனத்துறை மற்றும் தாவரப் பிறப்புரிமையியல் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு உட்பட்டதுமான மரத்தின் விதைகளை எடுத்துச் சென்று அதைச் சந்திரனில் வெளிப்படுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்துள்ளார்...!

அந்த விதைகள் முளைத்து வந்த வழித்தோன்றல்கள்...மாற்றங்கள் ஏதும் இன்றி இன்றும் சந்திர மரங்களாக (Moon Trees) உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றன அத்துடன் அவை ஞாபகார்த்தமாக வளர்க்கப்பட்டும் வருகின்றன...!

இந்த சந்திர மரங்கள் பற்றி இன்றுதான் எமக்கு அறியக் கிடைத்தது...உங்களுக்கு எப்படி...??!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41319000/jpg/_41319549_roosa_nasa203.jpg' border='0' alt='user posted image'>

மர விதைகளை சந்திரனுக்கு எடுத்துச் சென்ற விண்வெளி வீரர் <b>Stuart Roosa</b>

மேலதிக தகவல்களுக்கும் இணைப்புக்களுக்கும் செய்தி ஆதாரத்துக்கும்... http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
டிஸ்கவரி'யில் என்ன கோளாறு? விடை தெரியாமல் தவிக்கிறது நாசா

<img src='http://www.dinamani.com/Images/July05/19dnasa.jpg' border='0' alt='user posted image'>
<b><i>அமெரிக்காவின் கேப் கனவராலில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் (இடமிருந்து) டிஸ்கவரி விண்வெளி ஓட திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ், துணை இயக்குநர் வேய்ன் ஹேல்.</i></b>

ஹூஸ்டன், ஜூலை 20: டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் என்னவிதமான கோளாறுகள் ஏற்பட்டதால், அதை ஏவும் பணி தோல்வியடைந்தது என்பதற்கான விடையை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் இன்னமும் முழுமையாக கண்டறிய முடியவில்லை.

கடந்த ஜூலை 13-ல் எரிபொருள் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக டிஸ்கவரியை ஏவும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறுகளைக் கண்டறிந்து, தீர்வு காணும் பணியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஜூலை 26-ம் தேதி வரை டிஸ்கவரியை ஏவும் வாய்ப்பு இல்லை எனவும் நாசா கூறியுள்ளது. இம்மாத இறுதிக்குள் டிஸ்கவரியை ஏவுவது கடினமான விஷயம்தான் என்றாலும் கூட, எப்பாடுபட்டாவது டிஸ்கவரியை விரைவில் விண்வெளியில் ஏவுவதற்காக நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

""பிரச்சினைகளைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது குழுவில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள். பிரச்சினையை எப்படியும் சரி செய்துவிடுவோம் என நம்புகிறோம். மேலும் ஜூலை 31-க்குள் டிஸ்கவரி ஏவப்பட்டுவிடும் எனவும் நம்புகிறோம்'' என டிஸ்கவரி திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ் தெரிவித்தார். எரிபொருள் சென்சாரைத் தவிர வேறு பிரச்சினைகளும் எழுந்துள்ளனவா என ஒரு விஞ்ஞானியிடம் கேட்டதற்கு, அவ்வப்போது சிறிய பிரச்சினைகளும் உருவாகின்றன எனப் பதில் அளித்தார்.

திணமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நன்றி..
[b][size=18]
Reply
நன்றிகள் குருவி அண்ணா மதன் அண்ணா....அது சரி குருவி அண்ணா..அது என்ன சந்திர மரங்கள்? சந்திர விதைகள்? என்ன விதைகளை அந்த atmosphere க்கு expose பண்ணிவிட்டு இங்கு மரங்களை நட்டார்களா? :wink::
" "
" "

Reply
[quote=Malalai]நன்றிகள் குருவி அண்ணா மதன் அண்ணா....அது சரி குருவி அண்ணா..அது என்ன சந்திர மரங்கள்? சந்திர விதைகள்? என்ன விதைகளை அந்த atmosphere க்கு expose பண்ணிவிட்டு இங்கு மரங்களை நட்டார்களா?

ஆமாம் தங்கையே...அதையே தான் செய்தார்கள்...! எல்லோருக்கும் விளங்கத்தக்க வகையில் எளிமையாகச் சொல்லி இருக்கம் அந்தச் செய்தியில்...விரிவாகக் கதைக்கவில்லை..!

உங்கள் நல்லதொரு வினவல் வெளிப்பட்டிருக்கு...இப்படியான கருத்துக்களை தொடர்ந்து முன்வையுங்கள்...வெறும் நன்றிகளோடு நிறுத்தாமல்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41326000/jpg/_41326553_engin_ap_203.jpg' border='0' alt='user posted image'>

நாசாப் பொறியியலாளர்கள்..!

நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (26-07-2005) அன்று ஐ எஸ் எஸ் நோக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது...!


<b>Discovery given new launch date</b>

The US space agency has set Tuesday at 1039 EDT (1539 BST) as its new launch opportunity for the shuttle Discovery. (bbc.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி டிஸ்கவரியில் சந்தர்பம் கிடைத்தால் பார்க்கலாம்
[b][size=18]
Reply
டிஸ்கவரி விண்கலன் விண்ணில் ஏவப்பட்டது

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/sci_nat_enl_1122406987/img/1.jpg' border='0' alt='user posted image'>

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொலம்பியா விண்கலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவால் ஏவப்படும் முதலாவது விண்கலமான டிஸ்கவரி, இன்று புளோரிடாவின் கேப் கனவரல் என்னும் இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

டிஸ்கவரி விண்ணில் எழுந்து சென்ற போது அதனைப் பல விண் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்; நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த விண்கலத்தில் உள்ள 7 விஞ்ஞானிகளும் தற்போது அதனை விண் சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் திட்டமிட்டபடி சர்வதேச விண் ஆய்வு கூடத்துடன் இன்னும் இரு நாட்களில் அவர்கள் இணையவுள்ளனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரு வாரங்கள் தாமதமான டிஸ்கவரி நிதானமாக ஏவப்பட்டது குறித்து அங்கு ஒரு ஆறுதல் காணப்பட்டதாக அங்குள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நன்றி மதன்
[b][size=18]
Reply
அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி கடந்த 26-ந்தேதி விண்வெளியில் ஏவப்பட்டது. அதில் 7 விஞ்ஞானிகள் உள்ளனர். விண்வெளியில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 7-ந்தேதி தரை இறங்க திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கிடையே டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது சேதம் அடைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓடம் மேலே சென்றபோது அதன் எரிபொருள் டேங் மேலே வெப்பத்தை தாங்குவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஓடு உடைந்து கீழே விழுந்துள்ளது. இது 24 அங்குலத்தில் இருந்து 33 அங்குலம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல இன்னொரு பகுதியில் 6 அங்குல அளவுக்கு ஓடு பெயர்ந்து கீழே விழுந்து இருக்கிறது.

இதனால் விண்வெளி ஓடம் தரை இறங்கும்போது ஆபத்து ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 2003-ம் ஆண்டு கொலம்பியா ஓடத்தில் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டுத்தான் விபத்தில் சிக்கியது. அதே மாதிரி நிலைமை டிஸ்கவரி ஓடத்துக்கும் ஏற்பட்டு விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

ஓடத்தில் எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டு பிடிப்பதற்காக போராட் கை மூலம் ஓடத்தில் இருந்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

இருந்தாலும் சேதம் பற்றி முழுமையாக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இதற்கிடையே டிஸ்கவரி விண்கலம் இன்று விண்ணில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண் வெளி நிலையத்துக்கு செல் கிறது. டிஸ்கவரி பயணத் திட்டத்தில் விண்வெளி நிலையத் துக்கும் செல்வதும் ஒன்றாக சேர்க்கப்பட்டிருந்தது. விண் வெளி நிலையத்துக்கு தேவையான சில பொருட்களையும் டிஸ்கவரி ஓடம் எடுத்து சென்றது.

பயண திட்டப்படி இன்று சர்வதேச விண்வெளி நிலை யத்திற்கு ஓடம் செல்கிறது. அங்கு சென்றதும் ஓடத்தை நிறுத்தி முழுமையாக சோதனை நடத்துகிறார்கள். பின்னர் சேதம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் ஓடுகளை ஒட்டி பழுது சரி செய்யப்படும்.

ஒருவேளை பழுதை சரி செய்ய முடியாவிட்டால் டிஸ்கவரி ஓடம் கைவிடப்படும். ஓடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் அனைவரும் விண்வெளி நிலையத்துக்கு சென்று அங்கே தங்கி இருப்பார்கள்.

அவர்களை வேறு ஒரு விண்கலத்தை அனுப்பி மீட்டு வருவார்கள். இதற்காக அமெரிக்காவின் இன்னொரு விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதை அனுப்பி மீட்டுவர சில நாட்கள் வரை காத்து இருக்க வேண்டியது இருக்கும்.

டிஸ்கவரி பழுது சரி செய்யப்பட்டால் மட்டுமே அதை தொடர்ந்து இயக்குவார்கள் மற்ற பயண திட்டங்கள் கைவிடப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.

இதற்கிடையே டிஸ்கவரி சுற்றுப்பயணம் முடிந்ததும் வருகிற செப்டம்பர் மாதம் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் விஞ்ஞானிகளை ஏற்றிக் கொண்டு விண்வெளிக்கு செல்வதாக இருந்தது. ஆனால் இந்த பயணம் தள்ளி வைக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.

விண்வெளி ஓடத்தில் ஏன் இதுபோன்ற சேதம் ஏற்படுகிறது என்பதை முழுமையாக கண்டறிந்து அதை எப்படி நீக்கலாம் என்பதை கண்டு பிடித்த பிறகே இனி விண்வெளி பயணம் இருக்கும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் டிஸ்கவரி விண்கலம் இணைந்தது . அங்கு டிஸ்கவரி விண்வெளி வீரர்களின் தலைவரான ஈலின் கோலின்ஸ்இ ஆராய்ச்சி நிலையத்துக்கும் ஓடத்துக்கும் இணைப்பு ஏற்படுத்துவார். அதன் மூலம்இ ஓடத்தில் உள்ள விண்வெளி வீரர்கள்இ ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்கின்றனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
அமெரிக்கா நேற்று முன்தினம் வெற்றிகரமாக செலுத்திய "டிஸ்கவரி' விண்வெளி ஓடம்இ பூமிக்கு திரும்பும் போது கொலம்பியாவைப் போல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓடம் ஏவப்பட்ட போதுஇ அதிலிருந்து இரண்டு பாகங்கள் கழன்று விழுந்துள்ளன. கண்காணிப்பு கேமிராவிலும்இ ரேடாரிலும் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன.
பூமியில் இருந்து 352 கிலோ மீட்டருக்கு அப்பால் விண்வெளியில் "சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்' அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிரந்தரமாக இதில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காஇ ரஷ்யா உட்பட 16 நாடுகள்இ இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிலையத்தில் செய்யும் சோதனைக்கு அவ்வப்போது தேவைப்படும் கருவிகள்இ விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்கள்இ விண்வெளி ஓடம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. அமெரிக்காஇ ரஷ்யாவிடம் மட்டுமேஇ விண்வெளி ஓடங்களை அனுப்பும் வசதி உள்ளன. திட்டத்தில் பங்கேற்றுள்ள மற்ற நாடுகளிடம் இது இல்லை. செலவை மட்டுமே பகிர்ந்துக் கொள்கின்றன.
கடந்த 2003ம் ஆண்டுஇ இந்நிலையத்துக்கு "கொலம்பியா' விண்வெளி ஓடத்தை அமெரிக்கா அனுப்பியது. 16 நாட்கள் அங்கு தங்கியிருந்த கொலம்பியாஇ பிப்ரவரி முதல் தேதிஇ பூமிக்கு திரும்பும் போது வெடித்துச் சிதறியது. அதில்இ பயணம் செய்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பலியாயினர். விண்வெளி ஆராய்ச்சியில் கொடிக்கட்டி பறக்கும் அமெரிக்காவுக்குஇ இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் (நாசா) ஆராய்ந்தனர். அதில்இ அதிர்ச்சித் தகவல் வெளியானது. பூமியில் இருந்து கொலம்பியா புறப்பட்ட போதுஇ அதன் மூக்குப் பகுதியில் இருந்து பெரிய பாகம் ஒன்று கழன்று விழுந்தது. ஓடத்தின் இறக்கை மீது அது விழுந்துஇ வெப்பத்தை தாங்கும் தகடுகளை சிதைத்தது. "நாசா' விஞ்ஞானிகள் அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால்இ ஓடம் வெடித்துச் சிதற கடைசியில் அதுவே காரணமாகி விட்டது. இச்சம்பவத்துக்குப் பின்இ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு ஓடத்தை அமெரிக்கா அனுப்பவில்லை. இரண்டரை ஆண்டு இடை வெளிக்குப் பின்இ ஏழு விண்வெளி வீரர்களுடன் "டிஸ்கவரி' விண்வெளி ஓடத்தை நேற்று முன்தினம் வெற்றிகரமாக செலுத்தியது. கடந்த 13ம் தேதியே இதை ஏவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏவப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்இ ஓடத்தின் எரிபொருள் கண்காணிப்புக் கருவியில் கோளாறு ஏற்பட்டதால்இ ஏவும் திட்டம் கைவிடப்பட்டது.
"டிஸ்கவரி'யை வெற்றிகரமாக செலுத்திய மகிழ்ச்சியில் இருந்த நாசா விஞ்ஞானிகளுக்கு நேற்று பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கொலம்பியாவின் விபத்துக்கு காரணமான அதேபோன்ற கோளாறுஇ டிஸ்கவரியிலும் ஏற்பட்டுள்ளது. டிஸ்கவரி ஏவப்பட்ட போதுஇ பல்வேறு கோணங்களில் அதை படம் பிடிக்க 112 கேமராக்கள் அமைக்கப்பட்டன.ரேடார்களும் பயன்படுத்தப்பட்டன.
கேமராக்களிலும்இ ரேடார்களிலும் பதிவான காட்சிகளை விஞ்ஞானிகள் பார்த்த போதுஇ டிஸ்கவரி புறப்பட்ட போது அதிலிருந்து இரண்டு பாகங்கள் கழன்று விழுவது தெரிந்தது. டிஸ்கவரியின் மூக்குப் பகுதியில் இருந்து 3.8 அங்குலம் நீளமுடைய ஒரு பாகம் கழன்று விழுந்துள்ளது. வலது மூக்குப் பகுதியில்இ ஓடம் தரையிறங்கும் போது பயன்படுத்தக் கூடிய "லேண்டிங் கியர்' உள்ளது. அங்கிருந்துஇ இந்த பாகம் கழன்றுள்ளது. சூட்கேஸ் அளவுள்ள மற்றொரு பெரிய பாகம்இ ஓடத்தின் வெளிப்புற எரிபொருள் கலத்தில் இருந்து கழன்று விழுந்துள்ளது. இக்காட்சி ரேடாரில் பதிவாகியுள்ளது.
டிஸ்கவரியில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்கு நேற்று முன்தினம் இரவு இத்தகவல் தெரிவிக்கப் பட்டது. ஹூஸ்டனில்இ "ஜான்சன் விண்வெளி ஆராய்ச்சி மையம்' உள்ளது. இதன் விஞ்ஞானி ஜூலி பெயட்டி கூறுகையில்இ ""டிஸ்கவரி விண்வெளி வீரர்கள் படுக்கைக்கு செல்லும் முன்இ பாகங்கள் கழன்று விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகங்கள் விழுந்ததால்இ ஓடத்தின் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட வில்லை. ஏவப்படும் போது ஓடத்தில் ஏற்படும் சேதங்களை ஆராய்ந்து சீர் செய்யஇ ஓடத்தில் நுõறடி நீள ரோபோ கரம் அமைக்கப்பட்டுள்ளது. ஓடத்தின் இறக்கை மற்றும் மூக்குப் பகுதிகள் வரை சென்று இது பரிசோதிக்கும். இந்த ரோபோ கரத்தின் முனையில் லேசர் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனஇ'' என்றார்.
""கழன்று விழுந்த பாகங்களால் டிஸ்கவரியில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியஇ கேமராக்களிலும்இ ரேடாரிலும் பதிவாகியுள்ள காட்சிகளை அங்குலம் அங்குலமாக விஞ்ஞானிகள் அலசி வருகின்றனர் ஓடம் சேதம் அடைந்துள்ளதாஇ ஓடத்தில் உள்ள வீரர்கள் அதை சீர் செய்ய முயற்சிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுவார்களா என்பது ஞாயிற்றுக்கிழமை தான் தெரியும்இ'' என்று டிஸ்கவரி ஓடத்தின் நிர்வாகி ஜான் ஷேனன் கூறினார்.
ரோபோ கரத்தை இயக்க ஆயத்தம்
ஹூஸ்டன்: டிஸ்கவரியில் அமைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தை இயக்கஇ அதில் உள்ள விண்வெளி வீரர்கள் நேற்று ஆயத்தம் செய்தனர்.
கொலம்பியா விபத்துக்குப் பின்இ விண்வெளி ஓடத்தின் பாதுகாப்பில் நாசா விஞ்ஞானிகள் பெரும் கவனம் செலுத்தியுள்ளனர். பூமியில் இருந்து ஓடத்தை செலுத்தும் போது பெரும் அதிர்ச்சி ஏற்படும். அதனால்இ ஓடத்தில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறியஇ புதிய பாதுகாப்பு முறையை விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். அதில் ஒன்று தான்இ நுõறடி வரை நீளக் கூடிய "ரோபோ கரம்!' ஓடத்தின் அனைத்துப் பகுதிகள் வரையும் இது நீண்டுச் சென்று இது பரிசோதிக்கும். டிஸ்கவரி ஏவப்பட்ட போது கழன்று விழுந்த இரண்டு பாகங்கள்இ ஓடத்தின் இறக்கை அல்லது இதர முக்கியப் பகுதிகளில் விழுந்து சேதம் ஏற்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை கண்டறியஇ ரோபோ கரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணியை டிஸ்கவரியில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் நேற்று செய்தனர். மடக்கி வைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நீட்டினர். இறக்கைஇ மூக்கு உட்பட ஓடத்தின் முக்கிய பகுதிகளை இது ஆராய உள்ளது.
தயார்நிலையில் அட்லாண்டிஸ்
ஹூஸ்டன்: கழன்று விழுந்த பாகங்களால் டிஸ்கவரிக்கு ஆபத்து ஏற்படும் என்றால்இ "அட்லாண்டிஸ்' விண்வெளி ஓடத்தை அனுப்பி விண்வெளி வீரர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.
அமெரிக்காஇ புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அட்லாண்டிஸ் ஓடம் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏவுவதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாசா விஞ்ஞானிகள் செய்துள்ளனர். டிஸ்கவரியை ஏவும் முன்பேஇ இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.
டிஸ்கவரி பூமிக்கு திரும்பும் போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தால்இ அதில் உள்ள ஏழு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று காத்திருப்பார்கள். அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் சென்று பூமிக்கு அவர்களை அழைத்து வரும்.
இன்று நெருங்குகிறது டிஸ்கவரி
ஹூஸ்டன்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே டிஸ்கவரி இன்று செல்கிறது.
நேற்றைய நிலவரப்படிஇ சர்வதேச விண்வெளி ஆõõய்ச்சி நிலையத்தில் இருந்து ஒன்பதாயிரத்து 600 கிலோ மீட்டர் தொலைவில் டிஸ்கவரி விண்வெளி ஓடம் இருந்தது. ஆராய்ச்சி நிலையம் அருகே இன்று அது செல்கிறது. நிலையத்தின் மேல்இ 183 மீட்டர் தொலைவில் டிஸ்கவரி நிறுத்தப்படும். தொடர்ந்துஇ டிஸ்கவரி விண்வெளி வீரர்களின் தலைவரான ஈலின் கோலின்ஸ்இ ஆராய்ச்சி நிலையத்துக்கும் ஓடத்துக்கும் இணைப்பு ஏற்படுத்துவார். அதன் மூலம்இ ஓடத்தில் உள்ள விண்வெளி வீரர்கள்இ ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்கின்றனர்.
ஆராய்ச்சி நிலையத்தில் தற்போதுஇ செர்ஜி கிரிகலேவ்இ ஜான் பிலிப்ஸ் என்ற இரண்டு விண்வெளி வீரர்கள் உள்ளனர். டிஸ்கவரியின் அடிப்பகுதியை அவர்கள் புகைப்படம் எடுப்பர். ஓடத்தின் அடி பாகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை.
டிஸ்கவரியில் உள்ள ஸ்டீவ் ராபின்சன்இ ஜப்பான் விண்வெளி வீரர் சோய்ச்சி நகுச்சியும்இ விண்வெளியில் மூன்று முறை நடக்க உள்ளனர். அதற்கான உடைகளை நேற்று அவர்கள் பரிசோதித்து தயார் நிலையில் வைத்தனர்.
அப்பாடா... ரஷ்யா நிம்மதி
மாஸ்கோ: டிஸ்கவரி விண்வெளி ஓடம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதால்இ ரஷ்யா நிம்மதி அடைந்துள்ளது.
கொலம்பியா விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானப் பின்இ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையான பொருட்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரஷ்யா அனுப்பி வந்தது.சோயுஸ் விண்வெளி ஓடம் மூலம்இ விண்வெளி வீரர்களையும் அனுப்பியது. இதன் மூலம் சென்ற அமெரிக்கஇ ரஷ்ய விண்வெளி வீரர்கள்இ கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் ஆராய்ச்சிக் கருவிகளை சோயுஸ் சரக்கு விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வந்தது. இதனால்இ ரஷ்யாவுக்கு பெரும் செலவு ஏற்பட்டது. டிஸ்கவரியை அமெரிக்கா அனுப்பியது மூலம்இ இந்த செலவில் இருந்து ரஷ்யா தப்பியுள்ளது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
எப்படியோ விண்வெளி வீரர்கள் காப்பாற்றப்பட்டால் போதும்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அதற்க்காக தான் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருகின்றன. நாசாவை பொருத்தவரை அந்த வீரர்களையும் ஒடத்தையும் தரைக்கு பத்திறமாக கொன்டுவந்து சேர்ப்பதை ஒரு சவாலாக எடுத்து செயற்பட்டுகொன்டு இருக்கின்றனர்.தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொழில் நுட்பத்தை; அவர்கள் இந்த ஒடத்திலே புகுத்தி இருக்கின்றனர் மொத்தத்தில் எதிர்கால வின்வெளி பயணங்களும் ஆராச்சிகளும் இந்த வீரர்களின் பாதுகாப்பான தரைஇறக்கத்கை பொறுத்தே இருக்கின்றது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
இல்ல ரஷ்சிய உதவியைத்தான் அமெரிக்க நாசா பெற வேண்டி வரும்...! :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி ..


இக்கருத்து விண்ணியல் விநோதத்துடன் இணைக்கப் படுக்கிறது.
[b][size=18]
Reply
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துடன் டிஸ்கவரி இணைந்தது
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41352000/jpg/_41352637_aboard_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'><i>டிஸ்கவரியில் சென்றவர்கள்</i>

அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.

டிஸ்கவரி புறப்பட்ட போது, அதிலிருந்து கழன்று விழுந்த சில துண்டுகள் பற்றிய அபாயம் இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதால், எதிர்கால விண் ஓடப்பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நாசா அறிவித்த பின்னர் டிஸ்கவரியின் இணைப்பு நடந்தது.

டிஸ்கவரி ஓடம் விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணையுமுன்னதாக ஓடத்தின் பின் பகுதியில் சேதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்காக, அதனைப் படம் பிடிக்க ஏதுவாக அது விண்வெளியில் குத்துக் கரணம் ஒன்றைச் செய்தது.</span>

BBC
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41358000/jpg/_41358683_ub203.jpg' border='0' alt='user posted image'>

ஞாயிற்றுத் தொகுதியின் 10வது கோள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் விட்டமுடைய இந்த கோள் சூரியனிலிருந்து 9 பில்லியன் மைல்களிற்கு அப்பால் இருப்பதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2003ம் ஆண்டு இது கண்டு பிடிக்கப்பட்டாலும் தற்போதே இதனை ஒரு கோள் என வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பாறைகளையும், பனியையும் கொண்டுள்ள இந்த கோள் ஞயிற்றுத் தொகுதியின் மிகச் சிறிய கோளான புளுட்டோவை விட இது ஒன்றரை மடங்கு பெரியதாகும் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2003 UB313 என்ற குறியீட்டுப் பெயருடன் தற்போது அழைக்கப்பட்டு வரும் இந்த கோள் பற்றிய தரவுகளும், கோளிற்குரிய பெயரும் இதனைக் கண்டு பிடித்த வானியலாளர்களால் அனைத்துலக வானியல் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தரவுகளை அனைத்துலக வானியல் சங்கம் உறுதிப்படுத்தினால் மாத்திரமே இது ஞாயிற்றுத் தொகுதியின் 10வது கோள் என ஏற்றுக் கொள்ளப்படும்.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41360000/gif/_41360177_planet2003_ub313.gif' border='0' alt='user posted image'>

நன்றி சங்கதி.கொம்.

மேலதிக தகவல் இங்கு.. http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)