Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகள் படைப்பு
#41
நேற்றுத்தான் நாமங்கே...
நேற்றுத்தான் நாமங்கே நெஞ்சுநிறை ஆசையோடு
போற்றிப் பாதுகாத்த பொன் மண்ணைப் பார்க்கவென்று
வேற்று முகங்கடந்து வெறிச்சோடும் தெருக்கடந்து
காற்றின் முகங்கூட கருகி மறைந்திருக்கும்
மாற்றம் பலகொண்டு மகிழ்விழந்து குலைந்திருக்கும்
ஏற்றங் கொண்டிருந்த எம்மண்ணுக் கேகியதில்
சீற்றம் பொங்கிச் சிதைந்து மனமழியத்
தோற்றம் இழிந்த சொந்த மண் கண்டு சொல்-
தொலைந்தோம்.


அன்றொருநாள் அழகான தார்வீதி தானோட
தென்னையிளங் கன்றெல்லாம் தலையாட்டி விடைகூற
என்றும் ஒளியிழக்கா இயற்கை அழகுகளைத்
தென்றல் தழுவத் திசையெங்கும் குளிர்த்திவிட
முற்றத்தில் முழதாக மண்விளைவு கண்ணிறைக்க
கன்றுக்கூட்டங்களும் காமதேனுப் பசுக்களுமாய்
வென்று கொடி நாட்டும் விளைச்சல் வயல் காட்டியதே
இன்றிதெல்லாம் தின்றபோர் சென்றொழிந்து போனதம்மா
சேர்ந்தோம்.


குந்தி இருப்பதும் குறிப்புத் தொலைந்ததென்று
வந்த நடைசுருக்கி வழிகூர்ந்து பார்ப்பதும்
மந்திக் கணங்கள் மரம் விட்டுத் தாவுதல் போல
வெந்த மனம்மாறி வீதிவழி நடப்பதுவும்
இந்த நிலையின்று எமக்கேனென ஏங்குவதும்
நிந்திக்க யாரென்று நிதம் நம்மை நோக்குவதும்
சொந்தமாய்த் தென்மராட்சி கொண்டோர் சோகமடா
அந்தரந்தான். ஆனாலும அனாலும அனுபவித தே ஆகவேணும நடந்தோம்.


தட்டியெழுப்பித் தலைகொஞ்சம் தான்கொண்டு
கொட்டம் அடித்த யுத்தமதில் குலைந்தழுது
பெட்டி ஒன்றிரண்டு பிடித்த உயிர் கையோடு
எட்டி வைத்த காலதிலே எழுந்தோடி மீண்டுவர
மட்டுப் பாடான உழைப்புள்ளும் மனம்வைத்துக்
கட்டி முடித்த மனை குறுங்கல்லாய்க் காலடியில்
தட்டித் தானழிந்த சேதியதைச் சொல்லிவிட
முட்டிப் பெருகி முழநிலமும் நனையக் கண்ணீர்
வடித்தோம்.


கூடிச் சிறுகொடியே கொம்பரெங்கும் புூச்சுமந்து
ஆடி அசைந்து மண்ணை அழகாக்கத் துடிக்கையிலே
பாடித் திரிந்த மண்ணும் பாழடைந்து போனதென்று
வாடிப் போய்ச் சோர்ந்து வேறிடத்தில் வாழ்ந்திருக்க
ஓடிப்போவோமா? இல்லை எங்கள் மண்ணை
மூடிச் சூழ்ந்துவந்த இழப்பெல்லாம் மீட்பமென்று
நாடி வந்து நாமெல்லாம் நன்றே சோh ந்துழைத்து
தேடியொரு பொற்றகாலம் திசை புகழச் செய்யோமோ
செய்வோம்.
ச.சாரங்கா
Reply
#42
நீ யேன் அழுகிறாய் அதற்கு?
கடலிழுத்துச் செல்லும் எனக்காகக் கலங்காதே.
துயரேதுமின்றி நதிநீரிறங்கி நீராடு நீ.
முற்றவரின் துயருக்கெல்லாம்
அழுவதே வழக்கென்றிருந்தால்
கண்ணீரில் முக்குளித்திருகுமே உலகு.
எனக்காக நீயும்
உனக்காக நானும் அழுவதெனில்
சுந்தோஸ மெங்கே தலைவிரிக்கப்போகிறது
அழுவதை நிறுத்தி
துயரிற்றிருக்கத் துணிக
நான் கடல்மீண்டு வருவனெனும் கனவிலிருக்காதே.
என்னைத் துடைத்தெறிந்து விட்டு
எழுது புதுப் பாடல்.
இந்தா மூச்சுச் திணறத் தொடங்கிறது.
வாழ்வின் இறுதிக் கணத்தின் வதை சூழ்கிறது
எனினும் வாழ்ந்த உலகெண்ணிச் சிரிப்பு வருகிறது.
பொய்புூசிய மனிதருள்ளும்
நீயிருந்தாய் மெய்யாடை தரித்து.
வசந்தம் தொலைத்த ஒற்றைமரமாய்
இருந்த என்னில் படர்ந்தாய் கொடியாய்.
எத்தனை பசிய மரங்களிருந்தன பக்கத்தில்
அத்தனையும் எறிந்துவிட்டு
பற்றிப் படர என்ன கண்டாய் என்னில்?
அடி பைத்தியக்காரி
இப்போதும் பின்தொடர்ந்து வந்து
ஏன் கையசைக்கிறாய் கரையில் நின்று?
அலையழிக்கும் மணல் எழுத்தாய்
என்னை அழித்துவிட்டுப் போ.
ஊருக்குள் புகுந்துகொள்.
உலகறியா எம் உறவை எரித்துவிட்டு
மனதில் என் நினைவு அகற்றி
நிர்மலியாக இருப்பாய் நீ
என்மீது வைத்த அன்பு உண்மையானால்.
மாலிகா
Reply
#43
விடிவிளக்குகள்
எத்தனை முகங்கள்
எத்தனை உறவுகள்
எத்தனை கனவுகள்
எல்லாம் ஒரே
இலட்சியத்திற்காய்,
மின்னலென ஒளிர்ந்த - இந்த
மின்மினிகளால் இரவுகள்
மட்டுமல்ல- இன்னல்களும் அடிமை
மண்ணுங் கூட
விடுதலைகாணும்,
விடிவிளக்காய்
விண்ணகம் சென்ற மாவீரர்களால்
விடிவு கிட்டும்,
ஈழம் மலரும்.

இரோமியல
Reply
#44
காரிருள் விலகிட சூரியன் உதித்தது.
வாடிய புூக்களின் முகங்களும்
மலர்ந்து சிரித்தன.
பட்சிகள் யாவும் உயரப் பறந்து
சிறகுகள் அசைத்திட,
பார் அனைத்துமே
புதுமையிலுறைந்து மகிழ்ந்து வியந்தது.
தமிழர் யாவர்க்கும்
வாழ்வு பிறந்ததென வானம் சொன்னது.
புூவுலக தென்றல் வந்து எம்மேனி தொட்டது.
கூடு பிரிந்த குருவிகள் புகுந்திட
வாசல் கதவும் தானாய் திறந்ததுலு}
பாதை யாவும் புதிய புூக்கள் மலர்ந்திட
அனைத்து தேசமும் வியந்து பார்த்தது.
விடிவின் செய்திகேட்டு
உலக தேசமே உண்மையைச் சொன்னது.
விடிவின் மகிழ்வில் மனங்கள் நிறைந்திட,
நாளைய பொழுதிலும் சூரியன் உதிக்குமாலு}
என எண்ணம் சுமந்துமே வாழ்வு நீண்டது?
ம.அருள்ஜோண்சன
Reply
#45
இம்முறையும் ...........


இம்முறையும்
உன்மீதான மறுதலிப்பு அற்றுப்போக
சிறைக் கதவுூடே
வெளியே வந்தாய்.
ஓயாது நீளும் நம் துயருக்கும்
உனக்கான கொடூரத்துக்கும் முடிவாய்
நீதிமன்றின் ஆணை ஒலித்தது.
நண்பனே!
நீ வெளியே வந்தாய்
கம்பி வரிகளைவிட்டு நிரந்தரமாகவே.
இன்று சூரியன்
அதிகம் பிரகாசித்தொளிர்ந்தது.
இனிய பறவையின் கானத்தில்
எம் காதுகள் நிரம்பின.
துப்பாக்கி முனையில் நீ
கொழுவுண்டு போகப்பட்டபோது
அவர்களுக்கான காலமாயிருந்தது.
எம் ஆர்ப்பரிப்புக்கள், அமைதிகள்
எவையும் செயலற்று
காற்று வெளியில் வரைந்த கோடுகளாயின.
இப்போது,
நமக்கான காலமெனில்
மறுபடியும் சிறைக்கதவுக@டே
வேறும் பலர் வரக்கூடுமா?


ஞாபகன்
Reply
#46
ஆரவாரமும்
ஆரோகராச் சத்தமும்
கூவியழைத்த வியாபாரக் குரல்களும்
ஓய்ந்துபோக
வேலவன் வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது.
சனநரல் வடிந்த நல்லூர்த் தெருக்களில்
மீண்டும் சுகம் வரத் தொடங்கிவிட்டது.
காற்றில் எழுவதும், குந்துவதுமாக
கடலை சுற்றிய கடதாசிகள் சில.
ஓருவரற்று உறைந்திருக்கும் வீதிகள்
எத்தனை அழகு.
இன்னும் அகற்றப்படாமல்
"இங்கே துப்புங்கள்" வாளிகள்.
மனிதவெட்கையற்ற வெளிகளே
ரம்யமானவை.
எவரும் வரமாட்டார்களா என்னிடம் என்பதாய்
தேர்முட்டிப்படிகள் பெருமூச்செறிகின்றன.
தினமும் வெளிவீதியுலாவிய அசதியில்
வள்ளி வலிதாளாமல் பள்ளியறையில்.
தந்தையைக் காணாதிருந்த தவிப்படங்க
தெய்வானை இந்திரலோகம் போய்விட்டாள்.
முருகன் இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான்
மயிலேறி போனான் காலையில்
கோயில் திரும்பவில்லை இன்னும்.
ஆலயத் கதவில் புூட்டு.
குருக்கள் வீட்டில் அன்ரனா திருப்பப்படுகிறது
பொதிகைக்காக.
மேற்கு வீதியில் முத்துவிநாயகரும்
ஈசானமூலையில் மனோன்மணியம்மனும்தான் பாவம்
இனி எவர் வந்து தேடுவர் இவர்களை.
பாதாளக்கிணற்றில் சாகஜம் புரிந்தோர்
பலகைகளைக் கழற்றிக்கொண்டு
போயிருப்பர் வல்லிபுரக் கோயிலுக்கு.
பாம்புக்காரன் எங்கு போயிருப்பான்?
திருவிழா என்றாலே களியாட்டம் என்றாயிற்று
எல்லோரும் ஊமையராகி
உண்டியலிலேயே கவனமாயிருக்கின்றனர்.
பிரசங்கக்காரர்களுக்கு பொன்னாடை கிடைத்திருக்கும்
தடவியடியிருப்பர் சந்தோஸத்தில்.
புூனூல் மார்பில் துலங்க
ஓரு பிராமணன் கொத்துரொட்டி கொத்தினானே
அவன் புரட்சிக்காரன்.
தலைவணங்கலாம் அந்தத் தகுதிக்கு.
உடல் வருத்தி உழைத்த பணம் நிலைக்கும்.
புூஜை செய்வதிலும் இது பெரிய தொழில்.
திலீபனின் நினைவுத்தூபியிருந்த இடமத்தில்
சிதிலமாகிய கற்கள் மீதாயினும்
யாரேனும் புூக்கள் வைத்திருப்பார்களா?
இடித்தவனை விடுங்கள்
தூபித்துண்டங்கள்மீது ஏறியிருந்தவர்களை
ஏன்ன செய்யலாம்?
இம்முறை நல்லபடியாக நடந்து முடிந்ததாம்
நல்லூர்த் திருவிழா.
கிழடொன்று கூறிச் சென்றதைக் கேட்க
சிரிப்பு வந்தது.
புதுவை இரத்தினதுரை
Reply
#47
புூஜைக்கு முன்பே
உதய காலப் புூஜைகள்
தொடங்க
ஆயத்த மணிகள் சப்திக்கின்றன.
காற்றில்,
மங்கள வாத்தியங்களின் இசைவெள்ளம்
சப்தஸ்வரங்கள் உடைபடாமல்
பிரவகிக்கின்றன.
வேதங்கள் ஓதுவார் கருப்பக்கிருகத்துள்;
புஸ்பாஞ்சலியோடு
தீபாராதனைகளும் நிகழ
வானை முட்டும் பிரார்த்தனை ஒலிகள் பரவ}
பக்திப் பரவசமாயிற்று


சந்நிதி வாசலில்;
கொடிக்கம்பமருகில்
எருக்கலம் புூக்களும், பட்டிப் புூக்களும்
தட்டுகளில் ஏந்திய படிக்கு
ஒரு கூட்டம் சன்னதம் கொள்கிறதா?
றோஜாப் புூக்கள் மிதிபட.


வன்னிவாசன
Reply
#48
படுவான் கரைக்கு
காடு தேனிக்கு
வயல் மீண்டும்
நீராடும் பெண்கள் தழுவ
பாடிப் பறிந்தோடும் நீருக்கு
மான் வற்றல் காயும் முற்றமோ
பாட்டி மடி தொற்றி
பண்டைக் கதைகள்
மகிழும் மதளைகட்கு
கோடிப் புறம்
கடந்து செல்வோர்
தாம் என்றோ தென்கிழக்கில் கேட்ட
கவி நினைந்து புன்னகைக்க
தலைமறையும் காதலற்கு
அதிகாலை பாற்கோலம் கீறி
பசு நடந்த தெருவோ
முன்னர் அரங்கத்தில்
அரிச்சுனனே நாண
வில்லசைத்த பாட்டன் வியக்க
வடமோடிக் கூத்தோடு
துள்ளல் நடையில்
திரிகின்ற விடலைகட்கு
யாரும் துணியாத
என் தாய் மண்ணின் நெடுங்கதவாம்
வாகரையின் வெண்மணலோ
அடம்பன் கொடி பரப்பும்
மரகத மணிகளின் மேல்
பவளம் பறிக்க
ஓடும் சிறாருக்கு
இந்த அமைதியின் எல்லாப் புகழும்
வடமுனையக் கடந்து சென்று
வன்னியிலே மயிர் பிடுங்க
வந்தோர் தலை பிடுங்கி
கல்லான உன் மாவீரக் குழந்தைகட்கும்
நாளையோ
அகதி முகாம்களிலே
மீண்டும் உறுகாமம் காண..
ஏங்கிக் கிடப்பவரை உசுப்பும்
''மன்னிப்பீர்
இன்னும் தயக்கமேன்
இது உங்களதும் தாய்மண்
கேளாமல் வாருங்கள்''
என்கின்ற மந்திரச் சொல்
மனசு நிறைய
வைத்திருக்கும் நாயகர்க்கு
காவியமோ
எல்லா நெருப்பும் அணைத்து
சாம்பரிலே புத்துயிர்க்கும்
என் படுவான் கரை தாய்க்கு.

வ.ஐ.ச. ஜெயபாலன்
Reply
#49
அகதி என்ற
பெயா கொண்டு
அவதியுற்ற வாழக்கையினை
நாம் மறவோம்
மூட்டை முடிச்சுகளை
முதுகுதனில் சுமந்து கொண்டு
ஓட்டை மனத்துடனே
ஊரை விட்டு ஓடியதை
நாம மறவோம்


வீடு விட்டு நாமோட
நான் வளா த்த நாய்க்குட்டி
நான் வருவேன் என்று சொல்லி
ஓடிவந்த வேளையிலே
ஊர்தி ஒன்றில் மோதுண்டு
உடல் சிதறி மாண்டதையும்
நாம் உறவ}ழந்து தவித்ததையும்
நாம் மறவோம்


கொலைக்கருவி
வானத தில் வட்டமிட
எம் உறவோh
புூமிதனை முத்தமிட்ட வாழ்க்கைதனை
நாம் மறவோம்...
ஏவி விட்ட எறிகணைகள்
கூவி வந்து வெடித்ததையும்
எம் சுற்றம் உடல் சிதறி
மாண்டதையும்
நாம் மறவோம்...
பசியினாலேயே நாம் வாடி
நாலா}சிக் கஞ்சி காய்ச்சி
நாற்பது போ குடித்ததை
வீதியோர மரத்தடியில்
நுளம்பு குத்த படுத்ததையும்
நாம் மறவோம்


ஊh}ழந்து உறவிழந்து
உயிh காக்க வேண்டுமென்று
இருமாத குழந்தைதனை
ஏந்தி வந்தாள் தமிழன்னை
உணவில்லை என்பதனால்
மார்பு பால் சுரக்க மறுத்ததையும்
பாலனுயிர் பறந்ததையும்
அன்னை வீதியிலே
விம்மி வீழ்ந்ததையும்
நாம் மறவோம்


மகிழ்வோம் நாம்வாழ
நிலையான வீதியோடு
நாம் ஊh போக வேண்டும்
மக்கள் வாழ்வில் நாளெல்லாம்
இன்பத் தேரோடிச்
சிறக்க வேண்டும்


மா. பகீரதன
Reply
#50
2ம் லெப். மாலதி
(பேதுறு சகாயசீலி)
மன்னார்
நாற் சுவரே உலகெமன
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.


பாரம் சுமக்கவல்ல
படைத்தது; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி,


'ஈழம்' தவிh ந்தெந்த
இன்பமும் யாம் வேண்டோமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
புூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே-நீ
காட்டிச் சென்ற தெவ வழி,
கடைசி வரை நாமும் அவ்வழி!
Reply
#51
இலையுதிர் நினைவுகள்

சூரிய கிரணங்கள் தணல்
துண்டுகளாகி
புவிமேனியில் வீழ்ந்து கொண்டிருக்கும்
நடுப்பகல்,
என் நிழலும் ஒடுங்கி
அடிச்சுவடுகளுள் புதையுண்டது
என் மனம் போல.


நான் புரண்டெழுந்த மணல் மேடுகள்
எh}ந்தும் புதைந்தும்..
மண்துரவுகள் தூh ந்து முனகலோடு..
என் சுவாசக் காற்று மூக்கை அh}க்கும்
நெடியோடு,
தலைகளறுந்த தென்னந்தோப புக்கள்
உரசி
என் முகத்தில் மோதிச் சிதறிற்று
நெஞ்சில் வலி ஆழவேரோடியது.


என் பிh}ய கிராமமே!
உனது சோபிதங்கள் எங்கு போயின
நான் சிறகு விh}த்த பாவிய காற்றே
நீ எங்கு தான் தொலைந்தனயோ
உன்னுடன் கதைகள பல பேசி
போய் வருவேனே
அதே கல்லு வீதி நீதானா..?


உடைந்த கரும்பலகைகள் இருண்டிருந்தன
எழுத்துக்கள் இல்லாமல்


உனது மக்களை இரட்சித்து ஆசீh வதிக்கும்
பாh பரா மாதாவே!
உமது திருச்சொரூபத்தில் தூசுகளின் படிவுலு}
படை கொண ட முருகா உன்தாழ்களில்
அh ச்சனைப் புூக கள் இல்லையே!
சந்நிதி வீதி இப்படியா இருக்க வேண்டும்.


தூசுகளை ஒத்தி எடுக்க
நான் மீண்டும் வருவேன் மலா கொண்டு,
அதுவரை பெருமூச்சுக்களை மட்டும்
விட்டுவிட்டு.
Reply
#52
காற்றின் மடி


காற்று ஓங்கி அறைந்து சென்றது
என் செவிப்பறை மீது
என் காலத்தையும், கனவுகளையும்
சிதைத்த படி


என் மௌனமான காலத்தையும்,
கனவுகளையும்
சில நொடிப் பொழுதுகளில்
கதைத்துச் செல்லும் அந்தக் காற்றின்
விகாரம பற்றி சொன்னேன்
எவரும் நம்பவில்லை


காற்றின் மென்மையினை தாம்
உணா ந்தவா கள் என்றும்
அதன் சுகந்தத்தில் தாம் வாழ்பவா கள்
என்றும்
திரும்பத், திரும்ப சொல்லி,
உயா வாக தம்மைப்பாவனை
செய்துகொண டிருந தாh கள்
காற்றின் விகாரத்தைச்
சொல்லிக் கொள்வதில்
பலன் இல்லை
மென மையான காற்றுக்கும், சூறாவளிக்கும்
வேறுபாடு அறியாதவா களாய்
அவர்கள் இருந்தார்கள்.


பின்னொரு நாளில்
அவா கள் வீட்டு முற்றத்து மலா கள்
சிதைந து கிடக்கக் கண்டதாகவும்
அவா களது தோட்டத்தில்
காற்றின் புன்னகை
நாறி மணப்பதாகவும் புலம்பினாh கள்.
அவா கள் தமது சந்தேகங்களை
காற்றின் மீதில் கொண்டுள்ளதாகவும்
அறிவித்தாh கள்.
நான் எனது காலத்தையும்,
கனவுகளையும்
விகாரமான காற்றின் பிடியில் இருந்து
விலக்கிக் கொண்டு
நீண்டதூரம் பயணித்து விட்டேன்.


அவர்கள் காற்றின் பிடிக்குள்
சிக்கிக் கொண்டிருந தாh கள்
அவா கள் தோட்டத்து மலா கள்
தினமும்
சிதைந்து கருகிக் கொண்டிருந்தன
அவா கள் விகாரமான
காற்றின் பிடியிலிருந்து
விடுபட முடியாது
தவித்துக் கொண்டிருந்தார்கள்
Reply
#53
தூரிகை முகம்


தூரிகையில் வழிகின்ற
ஒரு துளிமையில்
ஒளிh கிறது ஓவியம்


ஓவியங்களின் புனைவுகளில்
நகையரும்பும் காலங்கள்
ஒளிh கின்றன.


கண்ணீரும் கம்பலையுமாக
அழுது வடிகின்றதாக


அச்சம் கொண்டு மிரள்வதாக
வேதனையில் உழல்வதாக


உணா வைப் பிழிவதாக
உருக்குலைந்து கிடப்பதாக


மௌனத்தில் காதல பேசுவதாக
கலவியில் கூடுவதாக


உயிh கரைந்து ஒழுகுவதுபோல
மொழியில் வன்மம் தொனிப்பதுபோல


மந்திர உச்சாடனம் செய்வதாக
வாழ்வு அவலத்தில் கழிவதாக


காலமொன்றின் அகாலம்
உயிh கருக்கொள்வதாக
உலகம் அழிவுற்ற நிலையில்
ஆன்மா அலைந்து திh}வதாக


அதிகாh}கள்
புலன் விசாரணைகளில்
தலையைப் பிய்த்துக் கொள்வதாக


என்னவோ
ஏதோ வெனப் புh}யாமல்
நெஞ்சை உருக்குபவையாக


இன்னும் கணக்கிட வியலா
சங்கேத மொழிகள் போலெல்லாம்
ஒளிh கின்றன ஓவியங்கள்.
Reply
#54
அவர்களுக்காக...... வருந்துகிறோம்

குருவிகளே
நீங்கள் சிறகசைக்கப் போன
வானமே வலையாக
மாறியபோது
உங்கள் வாழ்க்கை இருண்டு கொண்டது.
இருந்த வெளிச்சமும்
வெளியேறிக் கொள்கிறது.


குற்றமில்லா நீங்கள்
குற்றவாளிகளால் தாக்கப்படுகிறீர்கள்.
விசாரணை
தூரத்தில் தெரியும்
துரும்பாகி விடுகிறது.


விடுதலைத் திகதி
கலண்டா}ல் இருந்து
கழன்று விழுகிறது.


இளமைப் பறவை
இரும்புக் கம்பிகளுக்குள்
சிறகு உதிர்க்கிறது.


கூடப்பிறந்த குற்றத்திற்காக
கனவுகளை உறவுகள்
சுவீகாரித்துக் கொள்கின்றன.


உண்பதே உடம்பில்
ஒட்டாத போதும்
விடுதலைக்காக அதனையும்
விடுவித்துக் கொள்கிறீர்கள்.
ஆனால்,
விடுதலை வானம்தான்
புலப்படாமல் போய்விடுகிறது.

த.டே.கிஸ்காட
Reply
#55
எழுக
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறுமுல்லைக் காடதிர.
கூவும் குயிற்பாட்டெம் குடிமனையிற் கேட்டிடணும்.
தூவும் மழைச்சாரல்
சுடு நிலத்தில் வீழ்ந்திடணும்.
தவித்த வாயடங்கத் தண்ணீர் பெருகிடணும்.
அவித்த கிழங்குண்டு
அந்தரித்த உயிர்களுக்கு
விதித்த தீர்ப்பதனை விலக்கிச் சுகம் தருக.
நதியில் இறங்கிடணும் நம் கால்கள்
இற்றை வரை
கொதித்த உடலமெலாம் குளிரும் நிலை வரணும்
வாசலெங்கும் கோர வல்லூறின் எச்சங்கள்.
வீசும் காற்றினிலும் வெடிமருந்தின் உச்சமணம்.
சாவின் மணம் போதும்
சாக்காட்டின் புூமத்தம்
புூவின் மணம் போதும்
புது வசந்தம் வீசட்டும்.
இரந்திரந்து எல்லா இரவற் திண்ணையிலும்
உறங்கியதும்
பட்ட உத்தரிப்பும் போதுமடி.
கரம் தொழுதோம் எங்கள் கண்ணீருக்கென்ன பதில்?
வரம் தருவாய் அழுத வாசலினி விளங்கட்டும்.
விண்ணைக் கிழித்துந்தன் விழிதிறந்து
எமைப் பார்த்துப்
புன்னகையை நல்காய் பெருமாட்டி.
கையிலுள்ள
உடுக்கினொலியிந்த உலகேழும் ஆர்ப்பரிக்க
மிடுக்கோடுனது சிறு மெட்டியொலி கேட்டிடணும்.
கண்டி நெடுஞ்சாலைக் கரையெங்கும்
புூமலர்ந்து
வண்டூதும் பாடல் வரணும்.
ஊர்புகுமெம்
தேர்களிலே உந்தன் திருமுகமே இலங்கிடணும்.
நீர்தெளித்து வைத்த நிறைகுடங்கள் யாவினிலும்
நெற்றித் திலகம் நிலைத்திடணும்.
வன்னியிலே
பெற்ற வரங்களுடன் போகுமெம் பிள்ளைகளின்
வெள்ளைப் புரவிகளால் வீதியெலாம் ஜொலிப்புறுக.
கள்ளி, சிறுநெருஞ்சிக் காட்டிடையே தீயெழுக.
மீண்டும் துளிர்த்தெங்கள்
முல்லை வனம் புூச்சொரிக.
தோண்டும் குழியிருந்து
சுனை நீர் பெருகிடுக.
இடையில் கடல் கடந்து இடம் பெயர்ந்தோம்
இன்றோ பார்
தடைகள் உடைத்தெங்கள் தார் வீதி மீளுகிறோம்.
ஆறு வருடமதாய்லு}
அடை காத்து
அடை காத்து
வீறுடைய குஞ்சுகளை வெளியே வரச் செய்தோம்.
சூரியனின் சூடில் சூல் கொண்ட மலையினிக்
காரிருட்டு மேகம் கவியாது.
விடுதலையின்
வேரினிலே எந்த விச எறும்பும் கடியாது.
மீன்பாடும் வாவி மிளிரும்
இரணை மடு
வான் பாயும், கோண வரை மீது முகிலிறங்கும்.
பாலாவி நீர் கொண்டு பாடும்.
கீரிமலை
ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.
வன்னிமண் தன்னை வணங்குகிறோம்.
இத்தனை நாள்
கண்ணின் இமையாகிக் காத்தாள்
அவள் முலையில்
பாலருந்திப் பெற்ற பலத்தால் நிமிர்ந்துள்ளோம்.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
ஆவி கலங்குமெமை ஆதரிக்க நீ வருக.
தேவி எழுக
இந்தச் சிறு முல்லைக் காடதிர.
புதுவை இரத்தினதுரை
Reply
#56
கேணல் சங்கர்

அனாமதேயமாய் எம்
ஆத்மாக்களில். இரும்புக்
கோட்டையின் இதயக்கூடழிந்து
தோழனேலு}!
அஞ்சிப்பகையரசு
ஆடிப்போனது - உன்
அக்கினிப் பிளம்பதிலே


வெடியாகி - நீ அடையாளமின்றி
வித்தாகிப் போனாய் - நாம்
விழியேந்தி உன் வரவை
விரும்பி நின்றோம்
'நீ வரவில்லை'


நாளையைத்தேடி நாங்கள் நாடுநாடாய் ஓடுகையில்
நீயோ இன்றைத்தேடி
அவலத்தை எம்
ஆயுளாக்கிய பேயழித்து
அமைதியாய்.


என்ன அதிசயம் எப்படி இதுவெல்லாம்.
உயிர் விறைக்க
உன் வீரம்?
எப்படி இதுவெல்லாம்.


தினம் உன்னுள் குமுறிய எரிமலையை - உன்தோழர்கள் சொன்னபோது
நீ தீயோடு உருகித் தற்கொடையின்
இமயத்தில் தலைநிமிர்ந்து
தோழனே! தாயகக்காற்றோடு - நீ
தணலாகிப்போனாய்


கல்லறை - நீ
கேட்கவில்லை
கண்ணீரஞ்சலியும்
கேட்கவில்லை
வரலாற்றில் ஓர் இடம்
இல்லை
உனக்காகவென்று - நீ எதையுமே கேட்கவில்லை


உன் இதயத்துடிப் பெங்கும்
விடியலின் ராகமே
தந்திமீட்டிக் கொண்டிருந்தது
அதுதான் - நீ
எம் ஆத்மாக்களில்
அமைதியாய்
உச்சரிக்கப்படுகின்றாய்


வெளிவரும் ஒரு நாள்விழுதே உன் நாமம்
அதுவரை நாம்
அமைதியாயிருப்போம்
அன்புத்தோழனே!
அதுவரை நாம்
அமைதியாய் இருப்போம்.
சாந்தி ரமேஸ் வவுனியன்
Reply
#57
காலநீழ்ப்பில் அந்தகார இருட்டீன் வெளிச்சங்கள்
அடிக்கடி.
அந்த வீடுகளின் ஒளியை
இருள்
தின்று கொண்டிருந்தது.
வானத்து நட்சத்திரங்கள்
வானரக்கனுக்கு பயந்து
ஒளிந்து கொண்டன.
பேயறைகிற
ஒவ்வொரு தினத்திலும்
ஒவ்வொரு வீட்டுச்
செடிகளும் கொடிகளும்
கருகி விடுகின்றன.
முற்றத்து மல்லிகைகள்
முகாரி இராகத்திற்கு
அபிநயத்துக் கொண்டிருந்தது.
பேயல் செபுூலின்,
எவருமே சகிக்க மாட்டாத
எவருமே சமரசமில்லாத
கதறலினால்
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
தத்தம் காவற் தெய்வங்களுக்கு
அழைப்பு விடும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு.
செபுூலின்
சீடர்களுடைய
அழைப்பு வரும்.
இறைவனின் பாதாரவிந்தங்களுக்கு


சென்று வ}ட்டதாக
பெயரளவில்
கண்ணீர்ப்புூக்கள் காணிக்கையாக்கப்படும்.
கனத்துப் போன
மனச் சுமைகளுடன்
வானரக்கன் பற்றிய
திகில் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
இரவுகள்
சொல்லிப்போன செய்திகள்
நிஜத்தை விட
அலங்கோலமாகிப் போனது.
கால நீழ்ப்பு
அவர்களுக்கென்றானதாயிற்று.
செபுூலின் கோட்டையின்
இஞ்சி இடுக்கெல்லாம்
மின்மினி புூச்சிகள்
புகுந்து கொண்டன.
எவருமே
ஊகிக்க முடியாத
அந்தக் கணத்தில்
அது நிகழ்ந்து முடிந்திருந்தது.
இருளை
அந்தகார இருட்டின் வெளிச்சங்கள்
வீங்க ஆரம்பித்திருந்தன.
புூபாள ஒலி
இசைத்துக் கொண்டிருந்தது.
யாத்திரிகள்
Reply
#58
தேவதைக் காலத்தின் மரணம்
தேவதைக் காலத்தின் மரணம்
யாருடைய வேண்டுதல்களுமற்று
யன்னல்களை உதைத்துச் சென்றது
எல்லையற்ற காற்று.
நிலா ஒளியில் பாதி மினுமினுப்புடனிருந்த
அருவிகளின் பாடல்களும்
எவரும் எடுத்தெறியாமலேயே
காணாமற் போயின.
நீ பேசவில்லை:
மௌனம் இருளாய் சொற்களை
மூடியிருந்தது.
உனது உதடுகளில்
ஆயிரம் இதழ்களும் வற்றிய
புன்னகையிருந்தது.
(நான் நினைக்கிறேன் எனது உதடுகளிலும் இதே புன்னகையையே....நீ கண்டிருக்கவும் கூடும்)


வார்த்தைகளால் எப்போதுமே நிறைந்திருக்கும்
இந்த அறையை ஒரு மோகினி
சபித்துப் போனாள் என்பதை
நான் நம்பவில்லை.
சாத்தான் தனது சாவறையும் கைகளால்
எம்மை தடவிச் சென்றிருக்கலாமென
எவரேனும் சொல்லிடவும் கூடும்.


எதுவுமேயில்லை
தேவதைகள் செத்துப்போயின
எங்கள் மனங்களுக்குள்.
நானும் நீயும் செய்யவேண்டியதெல்லாம்
எங்கள் மனங்களுக்குள் செத்துப்போன
தேவதைகளை எழுப்ப வேண்டும்.
வறண்ட மௌனத்தின் ஆழத்தினுள்
கிழிந்து கிடக்கும் சொற்களில்
ஒன்றையாவது
அர்த்த ஒலியுடன் பேசவேண்டும்.
நிச்சயமாக
நீயும் நானுமாக.
Reply
#59
இரவு தின்னப்போகும் உனக்கான இரங்கல் பாடல்


குளிர் கால இரவில்
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இரவு உன்னை வருடிக்கொள்கிறது
என நினைத்து
ஒரு சூரியனை
எதிர்பார்த்து காத்திருக்காத நீ
தூங்கிக் கொண்டிருக்கிறாய்
இருளோடு
எப்போதிருந்து வசிக்கத்தொடங்கினாய்?
அதன் புதிர் ஆழத்துள் புதைந்திருக்கும்
வசீகர வர்ணங்களின்
மூச்சொலி
ஒரு ஓவியமாகுமென நீ நம்புகிறாயா?
நீ சொல்லக்கூடும்
இரவு அமைதியானதென
நான் சொல்கிறேன்
இரவு
சப்தங்கள் எல்லாவற்றையும் தின றுவிட்டு
காத்திருக்கிறது உனது குரல்வளை அருகில்
எனக்குத் தெரியும்
இரவின் கரிய நிறத்துள்
எந்தப் புள்ளியுமற்று
முடிந்துபோகப் போகிறது உனது வாழ்வு


நான் கவலை கொள்வதெல்லாம்:
இரவிடம் கொடிய அலகுகள்
உள்ளன என்பதை
உனக்கு நம்பவைப்பது பற்றியே.
சித்தாநதன்;
Reply
#60
டிகின்ற பொழுதெல்லாம் சோகத்தில்
அழகிய நட்சத்திரங்களை - வட்ட
வான் நிலாவை - இலை
விளிம்புகளில் வடிகின்ற பனித்துளியை
எல்லாம் இல்லாமல் செய்து - தன்
வெப்பத்தால் மனிதனை வாட்ட நினைக்கின்ற
இந்த சூரியனை விரும்பவா அல்லது வெறுக்கவா
பாருங்கள்
இந்த விடிகாலையை
புூத்துக் குலுங்க காத்திருக்கின்ற - அந்த
புூவின் மொட்டு இதழ்களை விரியச்செய்கின்றது
கூடுகளில் செல்ல மொழி பேசும் அந்த
குருவிக் கூட்டங்களின் சங்கீதத்திலும்
ஓய்வுக்காக வீடுகளில் உறங்கும் - அந்த
உழைப்பாளியின் இன்று பகலும்
வேலை செய்தால் ஐம்பது நு}றை
சந்தோசத்தையும்
வெள்ளை உடைகளில் கூட்டம்
கூட்டமாக பாடசாலை போகின்ற
மாணவர்களையும் - ஆகா
எது அருமை பகலா இரவா
ஏதாவது ஒரு காலை எனக்காக
இரண்டும் ஒன்றாக சங்கமிக்கின்ற
ஒரு காலை விடியாதா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)