Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
#61
எங்கள் சமூகத்தில் இருக்கும் முட்டாள் தனங்களை களைய முயற்ச்சி செய்யுங்கள் அதை விடுத்த தேவையில்லாமல் மதங்களை குறை சொல்லாதீர்கள். எதுவுமே உண்மையில்லை என்பத உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனால்....நீங்கள் ஒன்றை இப்போது எமதுக்கு புரியவைத்துள்ளீர்கள் அதாவது இந்து சமயம் வளர்வதில் எங்களுகிடையே இருக்கும் சில தீய சக்திகளுக்கு இஸ்டமில்லை. 10000 டொலரும் நல்ல வேலைவாய்ப்பும் வீடு வளவும் கோட்டும் சூட்டும் கொடுக்கும் யேகோவாவின் சட்சிகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்காது தடைகளின்றி இருக்கக விடுவது இந்து மதம். உங்களுக்கோ அல்லது மேலுள்ள தொடர் கட்டுரையை எழுதியவருக்கோ சமயம் என்பதின் அர்த்தம் புரியவில்லை. நீங்கள் சொன்ன கருத்துக்கள் மேலுள்ள கட்டுரையாளரின் கற்ப்பனையே தவிர வேறெதுவும் இல்லை. அப்படி தான் அவர் உதாரணம் காட்டிய கதைகளும் இவரைப்போன்ற வககிர புத்தி படைத்தவர்களால் இந்து சமயத்தின் பெயரில் பல புனைகதைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை பிரித்துப்பாக்க முடியாதவன் எல்லாம் ஒரு ஆய்வாளர்....எழுத்தாளர்...பெயர் வரவேண்டும் என்பதற்காக கட்டுரை எழுதக்மூடாது. ஒருவன் ஒரு கருத்தை எழுதினாள். அதனால் அவனது சமூகம் பயனடைய வேண்டும் ஒரு விநாடி அவன் அக்கரத்துப்பற்றி சிந்திப்பானாயின் அது கருத்தெழுதியவனுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் நீங்களும் நீங்கள் பிரதி செய்து போட்ட கட்டுரை எழுத்தாளரும் உங்கள் பெயர்கள் மெலெழவேண்டும் என்று தான் சிந்திக்கின்றீர்கள். அதை விடுத்து ஆக்க பூர்வமான கருத்துக்களை தந்தால் என்ன? இந்து சமயத்தில் எத்தனை நல்ல விடையங்கள் இருக்கிறது? அவற்றை பற்றி நீங்கள் ஏன் ஆராயக்கூடாது? ஒரு விமர்சகன் தனது விமர்சனத்தில் முதலில் நல்ல விடையங்கள் பற்றி ஆராயவேண்டும் அது தான் விமர்சனம். வெறும் தீய விடையங்களை பற்றி ஆராய்வத அவரின் வக்கிரப் புத்தியே அன்றி விமர்சனம் அல்ல.
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
#62
பார்ப்பண்ர்களின் கொடுமைகளை தான் கிரிபா எழுதுகிறார். ஈழத்தமிழர்களின் மதம் சைவசமயம்மே. இப் பார்பண்ர்கள்தான் இந்து சமயத்துடன் இனைத்துவிட்டார்கள். இவ் பார்பண்ர்களின் கொடுமை தாங்காமல்தான் புத்தர் இவர்களை திருவத்தற்காக பல உவமைகளை கூறினார்.
#63
அன்னம் போல நாமும்
பாலை எடுத்து
நீரை ஒதுக்கலாமே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..


#64
நிலவன்...

மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம்

இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களைத்தானே இங்கே இணைத்திருக்கிறார்கள். புதிதாய் எதைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்கிறீர்கள்?

தூயா...
பால் எப்பிடியிருக்கும் நீர் எப்பிடியிருக்கும் என்று தெரியாதவர்களுக்கு நாம் இரண்டுக்குமான வேறுபாட்டை தெளியவைக்கவேண்டுந்தானே. அப்போதுதான் தமக்குத் தேவையானதை தேர்ந்தெடுப்பார்கள்.


#65
நிலவன்...

மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம் முட்டாள்கள் மூட
நம்பிக்கை பற்றி போசுவது பொலுள்ளது உங்கள் பேச்சு!
இந்து சமயம் சொன்ன நல்ல வழிகளில் நீங்கள் நடக்கிறீர்களா? இல்லை என்பதே அனைவரினது பதிலாக இருக்கும் ஏனெனில் மதத்தை நாங்கள் மதமாகவே பார்க்கிறோம். மனித வாழ்வுக்குரிய அரிய பல தத்துவங்களை ஆலோசனைகளை இந்து சமயம் தந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? சத்தியாமாய் நான் இந்து சமயத்தில் முட்டாள்த்தனமான விடையங்கள் இல்லை என்று கூற வில்லை. இருக்கிறது. ஆனால் நீங்களும் எங்கள் சமூகமும் பார்க்கும் இந்து மதம் வேறு. உங்களுக:கு தொந்ததெல்லாம் அழுக்குகள் நினைந்த குட்டை ஆனால் தெளிவான நீரொடைகள் குளங்கள் கடல்கள் பல இந்து சமயத்தில் இருப்பதை நீங்கள் அறிய முயலவில்லை. அதை விடுத்து அது அப்படி ஒரு காழ்புணர்வை நீங்கள் இந்து சமயத்தின் மீது கொட்டி தீர்க்கிறீர்கள். தமிழரது பண்பாடு பாரம்பரயம் ஏன் இலக்கிய சுவடுகள் எல்லாவற்றையும் காத்து இன்று உங்களுக்கு தந்தது இந்த இநது சமயம் என்பது உங்களுக:கு தெரியாதா? சில நேரம் தெரியமாமல் இருக்கலாம் அதனால் தான் சொன்னேன் இந்து சமயம் என்ன நல்ல விடையங்களை சொல்கிறதோ அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
#66
சரி முட்டாள்களாகவே இருக்கிறோம். ஆனால் எதற்கு நீங்கள் கோவப்படுகிறீர்கள்? இந்து மதம் கோவத்தை அடக்க இந்துமதம் கற்றுத்தரவில்லையா? சரி. அதைவிடுவோம்.

இந்துமதம் சொன்ன நல்ல வழிகளில் நடக்கிறீர்களா என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்டீர்களா அல்லது பொதுவாக கேட்டீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்துமதம் சொன்ன நல்ல வழிப்படி மக்கள் நடக்கிறார்களா என்பது தானே பிரச்சினை. இந்து மதத்தில் குறைபாடுகள் உள்ளதை ஒத்துக்கொள்கின் நீங்கள், அந்தக் குறைபாடுகளையும் முட்டாள்தனங்களைளயும் தான் மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள்தானே?

தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மொழியையும் இந்து சமயம் காத்துநின்றது என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. மாறாக தமிழரின் பண்பபாட்டைச் சிதைத்தும் பாரம்பர்யத்தை ஒழித்தும் மொழிமீது ஆதிக்கம் செலுத்தியும் தான் வந்துள்ளது. தமிழரைத் தன்நிலை உணராது ஆதிக்கப் பிடிக்குள் வைத்திருந்துள்ளது, வைத்துள்ளது. போலி மாயைக்குள் சிக்குண்டு சிந்திக்கவிடாமல் முடக்குகிறது.

இந்துசமயம் சொன்ன வழியில் தான் நாம் நடக்கவேண்டும் என்பதில்லை. நமக்கும் நமது சமூக முன்னேற்றத்திற்கும் எது சரியானதாக பயனுள்ளதாக அமைகிறதோ அதன்படி நடந்தால் போதுமானது.

மதத்தினால் மனிதனை மிருகமாக்கவே முடிந்துள்ளது!
மனிதனை மனிதனாக வாழவைக்க முடியவில்லை.
மானுடவிடுதலை என்பது மதமெனும் போலி மாயைக்குள்ளிருந்து விடுபடும்பொழுதே சாத்தியமாகிறது.

இன்றைய தென்னிந்தியப் போலித் தமிழ்ச் சினிமா போன்றதுதான் மதம். அல்லது உங்கள் கருத்துப்படியே மக்கள் பார்வைக்குப்படுகின்ற மதம். தென்னிந்தியப் போலிச் சினிமா எப்படி Heroism தனை மையமாகக் கொண்டுள்ளதோ அதேபோன்றுதான் இந்துமதத்தின் கடவுளர்கள். எப்படி தனிமனித வழிபாடுகளையும் இரசிகர் மன்றங்களையும் தென்னிந்திய சினிமாக் குப்பை உருவாக்குகிறதோ அதையே தான் இந்துமதமும் செய்கிறது. கீழ்மட்ட இரசிகர்களின் வியர்வைத்துளிகளில் நடிகர்கள் எப்படி குளிர்காய்கிறார்களோ அதேபோன்றுதான் இந்துமதக் கோவில்களும் கடவுள்களும். தென்னிந்தியசினிமா ஈழத்தமிழர் போராட்டத்தை எப்படிக் கொச்சைப்படுத்துகிறதோ அதையே தான் இந்துமதம் சூத்திரர்கள் என்கிற பெயரில் மக்களைக் கொச்சைப்படுத்தியது. படுத்துகிறது.

மனிதனை நல்வழிப்படுத்துகிற மதமாயின் அது Heroism(கடவுள்) இல்லாத மதமாக இருக்கவேண்டும். எந்த சமூகக்கோட்பாடும் தனிமனித வழிபாட்டை மையமாக வைத்து பிறக்கவும் கூடாது, காண்பிக்கப்படவும் கூடாது. ஒரு நல்ல சமூகக் கோட்பாடு என்பது சமூகத்தோடு சமூகமாக சமூகத்தின் வியர்வைத்துளியாக சமூகத்துள்ளிருந்து பிறக்கவேண்டும்.


#67
மதம் சொன்னதின் படி நடந்தால் பிரச்சினைகள் இல்லை இளைஞன்!
எம்மை பொன்ற மனிதர்கள் மதத்தை மாற்றி அதாவது மதம் எதை சொல்லியnதோ அதை மாற்றி தமக்கு எப்படி வருமானம் வரும் என்று பார்த்து மதத்தின் வழிபாட்டு முறையையும் தன்மையையும் மாற்றி விட்டார்கள். நீங்கள் தமிழரது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை இந்து மதம் காப்பற்ற வில்லை என்றால்?.... அது நீங்கள் இன்னும் தமிழ் ஒழுங்காக படிக்வில்லை என்று பெருள். இருக்கலாம் நீங்கள் புலத்தில் வளருபவர் என்பதால்....! மதத்தையும் சினமாவையும் உரு பார்வையில் நீங்கள் பார்க்கிறீர்கள்..! மதம் என்று வந்தது சினமா எகன உருவானது? நேற்று உருவான உங்கள் ஹீரோசியத்தை உங்களால் அடக்க முடியவில்லை.. ஆமா அது என்ன தென்னிந்துpய
ஈழத்தமிழர்கள் அவர்களின் படங்களை பார்க்கவில்லையா? ஈழத்தமிழர்கள் தானே இந்தியாவிற்கு வெளியே படங்களை விநியோகிக்கின்றனர். அவர்களை நீங்கள் தடுக்கலாமே! சும்மா கதைக்க வெண்டும் என்பதற்காக கதைக்'க கூடாது இந்து சமயத்தில் சிலை வழிபாடு இருக்கிறதே தவிர குறிப்பிட்ட நபரையோ உதாரணமாக கிறிஸ்தவர்கள் பொலவோ முஸ்லீம்கள் போலவோ இந்து சமயம் ஒருரை கடவுளாக கொண்ட மதமல்ல. துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வார்ததையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன? இறைவனுக்கு வடிவம் இல்லை அதை தானே! உங்களை உங்கள் அம்மத ஒர பெயரிலும் அப்பா ஒர பெயரிலும் அண்ணா ஒரு பேயரிலும் உறவினர்கள் ஒரு பெயரிலும் அழைக்கலாம் அப்படி அழைத்தால் அது உங்கள் தவறா? கீதை படித்ததுண்டா? ஒரு மறை படித்துப்பாருங்கள். அதை தந்தது இந்து மதமா? என்று சிலநேரம் நீங்கள் கேட்பீர்கள்....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
#68
பார்பணர்களின் வினோதமான கொள்கைகளாப் பற்றிதான் ஆய்வு. இவ் கொடுமைக்கார்களின் தத்துவங்களை விமர்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை. மூட நம்பிக்கைகளின் சிகரம்தான் சமயம். இவ் மூட நம்பிக்களை உடைத்தெறிந்து தன்நம்மிக்கை கொண்டு புதிய மனிதர்களாக மாறுங்கள்.
#69
தீபாவளியாக கொண்டாடும் நரகாசுரனை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாக பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத்தளத்தில் புணர்ந்து நரகாசுரனை பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்த பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணை புணர்வது என்ற வடிவில் பூமியை புணர்வதாக கதை உள்ளது. ஆணாதிக்க கண்ணோட்டம், மீட்கப்படுவது எப்போதும் பெண் மீட்பவர் எப்போது ஆண், மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஓரே பொதுக் கண்ணோட்த்தில் காணப்படுகின்றது. இது இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.
<b> . .</b>
#70
தூயா Wrote:அன்னம் போல நாமும்
பாலை எடுத்து
நீரை ஒதுக்கலாமே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

தங்கையே பால் என்றாலே திரவம்...நீர்தானே அதிகம்...அதையும் பிரிச்சிட்டால் அன்னம் எதை உண்பது... எப்படி உண்பது....அதனால்தான் அது உலகில் இன்று அழிந்த இனமாகி விட்டது...! வைப்பதைப் பாலாக வைத்துவிட்டால்...அவசியமற்ற பிரிப்புக்கள் ஏன்...அவதிகள் ஏன்...அழிவுகள் ஏன்....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#71
விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?
<b> . .</b>
#72
எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும்.


சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓடவைக்கின்றது. சிவனுக்கு காமம் ஏற்பட மோகினியை கட்டிப்பிடிக்க அவள் தப்பிஒடினாளாம். அதை மாதா பாகவத புராணம் பெண்யானையை காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியை சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம்; ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்ற போதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதை சகித்து வழிபடுவது கேவலமானது. பெண்கள் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.


கடவுள்களின் (பிரமா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்பு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரமா, விஷ்ண, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்கமுயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரண பெண்கள் ஆணாதிக்க கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்த கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மத பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணாமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.


மகளுடன் உறவு கொண்ட பிரமன். பிரமன் தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளை தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகள் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதை தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.


கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்க காமமே. இந்திரனுக்கு ஆதரவுhக நிரபதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பிராகு சபித்தைப் பார்ப்போம். "ஓ! விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக் கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோகுணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!"148 என்று பார்ப்பன ஆணாதிக்க சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாகின்றது.
<b> . .</b>
#73
இரண்டு தடவைகள் என்னுடைய கருத்துக்களை எழுதி இணைத்தேன் இணைக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு நீண்ட கருத்துக்களை பொறுமையாக எழுதி சேர்க்கும்போது மீண்டும் உள் நுழைய அனுமதிச்சொல் கேட்டு என்னுடைய கருத்துக்களை இணைக்கவிடாமல் போய்விட்டது. என்னை எழுதவிடாமல் ஏதாவது செய்கின்றார்களா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#74
முப்பத்து முக்கோடி தேவர்களின் குரு நாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9 அத் 20 இல் நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதை தேவி பாகவத புராணம் விளக்குகின்றது. இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கு இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.


தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனத்தை வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல் கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அஹல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதுக்கு இந்தியாவில் இந்த மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.


பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான். இந்துமதம் ஆண்களுக்கு கூறும் போதனை, பெண்களை கடத்திச் சென்று ஆணாதிக்க சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.


சாதி கடந்த வசிஸ்தரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையை சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதார புருடன் ராமச்சந்திரபிரபுவின் குரு வசிஸ்தர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்.


விஸ்வாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விஸ்சுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்த சகுந்தலா துஸ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாக கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.


கண்ட இடத்தில காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்திரகாண்டம் சர்கா 55 இல் மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிஸ்தரும்.


மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிப்பயலுக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியை பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவரை 'ஸ்ரஸ்ய ஸரங்கி' என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.


விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிர தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவாத புராணம் (6,26,36) இல் தேவர்களின் ஆலோசகரும், கிரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோஸிபருமான நாரதர் சஞ்சய மன்னனை பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாக பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்க தேவைகளை பிறப்பின் தொடர்ச்சி, எனக்காக பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதை கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்களுடாக அம்பலப்படுத்துகின்றன.


குருவுக்கு போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக்குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்;.


வேத வியாசர் தனக்கு தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிபாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.
<b> . .</b>
#75
Quote:இரண்டு தடவைகள் என்னுடைய கருத்துக்களை எழுதி இணைத்தேன் இணைக் முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு நீண்ட கருத்துக்களை பொறுமையாக எழுதி சேர்க்கும்போது மீண்டும் உள் நுழைய அனுமதிச்சொல் கேட்டு என்னுடைய கருத்துக்களை இணைக்கவிடாமல் போய்விட்டது. என்னை எழுதவிடாமல் ஏதாவது செய்கின்றார்களா?
_________________
உள் நுழைந்த பின்னர் நீண்ட நேரம் எதுவும் செய்யாமல் சாளரம் இருந்தால் மீண்டும் நுழையக்கேட்பது வழமை பாதுகாப்பு காரணமாய் இருக்கலாம். அதிகமாக எழுதும் போது நேர்ட் பாட் பாவித்து எழுதியபின்னர் வெட்டி ஒட்டுவது தான் சிறந்தது. இந்த பிரச்சனை பலநேரம் எமக்கும் நடந்திருக்கு அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#76
லட்சுமியின் கற்புரிமையம், பெண்ணின் ஆணாதிக்க சந்தேகங்களையும் தேவி பாகவத புராணம் தெளிவாக நிர்வாணமாக்கின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, லட்சுமி விஸ்ணுவை திருமணம் செய்ய முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனை பார்க்க வந்த போது, இந்திரன் ஆணாதிக்க காமத்தில் லட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஸ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, லட்சுமி சந்தேகப்பட்டு, 'உமது சிரம் துண்டிக்கப்படட்டும்'148 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலகட்ட சமூத்தை புரிந்து கொள்ள இது உதவுகின்றது.


சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-58) வெளிக்கொண்டுவருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"148 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.


விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்க தீர்வுகளும். கலைவாணியும், சரஸ்வதியும் என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"148 என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.


மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்க காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரச பெண்ணை கற்பழித்தால், அந்த பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்த கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள் தனத்தை மெச்சத்தான் வேண்டும்.


கணவனை பிரிந்து வாழ இட்ட சாபம். சிவரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒரு நாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க 'நீ யாராட கேட்பதற்கு எனக் கேட்க' இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணத் தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவை பூமியில் பிறக்க வைத்து, மனைவியை பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்க பாலியல் நெருக்கடிகளை சகித்து வாழவும், அடங்கிவாழ கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்க தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.
<b> . .</b>
#77
இளைஞன் Wrote:நீங்கள் சொன்ன விடயத்தை உள்வாங்கியதால் தான் பதில் எழுதினேன் வியாசன். மற்றும்படி நீங்கள் "ஏன் கிறிஸ்தவமதத்தை பற்றி சொல்லவில்லை" என்று கேட்டதற்கான பதில் தான் அது. கிருபன் இந்து மதத்தில் உள்ள சீர்கேடுகளைத்தானே இங்கிணைக்கிறார். அவர் அதனால் இன்னொரு மதத்தை உயர்த்துகிறார் என்று ஏன் கருதுகிறீர்கள்? சமுதாய முரண்பாடுகளைக் கையிலெடுப்பவர்களெல்லோரும் சிறந்த எழுத்தாளர்கள் என்று யார் சொன்னார்கள்?

பெரியார் ஊருக்கு உபதேசம் செய்தாரே தனக்கு செய்யேலயோ என்பது வேறு விடயம். அவர் சொன்ன கருத்துக்களில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்தால் சரிதானே? அதற்காக அவர் சொன்னது எல்லாவற்றையும் பின்பற்றவேண்டுமோ ஏற்றுக்கொள்ளவேண்டுமோ என்பதல்ல எனது கருத்து. பெரியாரும் மணியம்மையாரும் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தார்களா? இல்லைத்தானே?

இரமனை நல்லவன் என்று நீங்கள் கருதினால் தமிழ் மன்னன் இரவணனை என்ன சொல்வது? கெட்டவனா? ஏன் இரவணனை கெட்டவனாகக் காண்பிப்பதற்காக இராமன் கதாபாத்திரம் சிறந்ததாகப் புனையப்பட்டிருக்கலாந்தானே? தீயவர்கள் தான் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூறமுடியும்? தம்மைத் தட்டிக்கேட்டவர்களைத் தண்டித்துவிட்டு அவர்களைத் தீயவர்களாக சமூகத்திற்கு காண்பிக்கப் பழிசுமத்தியிருக்கலாந்தானே? இன்றும் கூட நிகழ்கிறதுதானே? எனவே புராணங்கள் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் உருவாக்கப்பட்டன என்பது அர்த்தமில்லாத வாதமாகவே நான் கருதுகிறேன்.

நிச்சயமாக உங்கள் கருத்தை நீங்கள் எழுதுங்கள் வியாசன்.

குளக்காட்டன்... கிருபனின் கருத்துக்கள் "பெரியாரின் சிந்தனைகள் பகுதி 3" இல் இருந்தே இங்கு தரப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்த மூன்றாவது பகுதியே ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு பகுதிகள் உள்ளன. கடவுள் பற்றிய கருத்துக்கள் மட்டுமல்லாமல், பெண்விடுதலை, சாதிய அமைப்புகள், பொதுவுடமை போன்று பலவிதமான சிந்தனைகள் சார்ந்த அவருடைய கருத்துக்கள், பத்திரிகைக் கட்டுரைகள், உரைகள் போன்ற அடங்கியுள்ளன.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#78
இராமனின் குற்ற பிறப்பு சரி பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியை (சீதையை) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தம் சமூகத்தின் இழிந்த தண்டைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப்படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.


மகளைக் (சரஸ்வதியை) கற்பழித்த பிரமன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரமன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாக சரஸ்வதியை கல்விக்காக பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரமன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஒடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டு துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரமனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரிவைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரமனை உயிர்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரமனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி சரஸ்வதி பிரமனின் பேர்த்தியான நிலையில் பிரமனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்த குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியை பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்ப்ழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றி புகழ்ந்து வழிகாட்டுகின்றது.


பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த ஆணாதிக்க காமுகன் சிவன் இந்துகளின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்து புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாக பிச்சை போடும்படி கேட்டு, சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்க காமமாகும்;."149 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிர காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியை போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?. இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ. உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்க போக்கு சிவன் தந்தையல்லவா! இதனால் தான் இந்து ராஐ;சியம் உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ!


வள்ளியம்மையின் பிறப்பு மிருகபுணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையை பெற்றார். இந்த கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா! இவை ஆணாதிக்க வக்கிர புத்தியல்லவா!


விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்கு செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?
<b> . .</b>
#79
இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவ சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமத புராண இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்துகொள்ள இந்த வக்கிரங்களே எமக்கு போதுமானவை.
<b> . .</b>
#80
[size=14]<b>இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.</b>

மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.

இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.

இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.
<b> . .</b>


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)