Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கண்ணனெங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம்
வெண்ணையுண்ட கண்ணனான்
மண்ணையுண்ட கண்ணனாம்.
குளலினாலே மாடுகள்......
வசி இதுக்கங்காலை ஒருக்கா பாடிவிடும்.
:::: . ( - )::::
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
எனக்கு பகிடியெண்டா சரியா பிடிக்கும் நேற்றும் உப்பிடித்தான் ஊர்வம்பு ஒண்டும் கிடைக்கேல்லை அதாலை இணையத்திலை கவுண்டமணி செந்திலின்ரை பகிடியை பாத்து கொண்டிருந்தனான்.அப்ப யெர்மனியிலையிருந்து என்ரை நண்பனொருன் தொலைபேசியெடுத்து கேட்டான் சாத்திரி என்ன செய்யிறாய் எண்டு.நானும் டேய் கவுண்டமணி செந்திலின்ரை பகிடி பாத்துகொண்டிருக்கிறன் எண்டு சொல்ல அவன் சொன்னான் டேய் சாத்திரி உதைவிட நல்ல பகிடியொண்டு போகுது உந்த தங்கடை வானொலியை தாங்களே அடிச்சுடைச்ச வானொலிகாரர் காசு சேர்க்கினம் கேட்டுபார் இப்ப நான் இருக்கிற சிற்றி காரர் கொஞ்சப்பேர் வருவினம் போய் கேள் எண்டான். அவன் சொன்ன மாதிரி அந்த இடத்துகாரர் சிலபேர் வந்திச்சினம் அதிலை ஒருத்தர் 3 தரம்வேறு வேறு பெயரிலைவந்து கதைச்சு காசு தாறனெண்டார்.அவர் எத்தினை தரம் எந்தபெயரிலை வந்தாலும் குழந்தை பிள்ளையும்கண்டுபிடிக்கும் அவர்தான் பல பெயரிலை வாறார்: எண்டு. இன்னொருவர் பாவம் வயசான காலத்திலை வானெலியிலை உசாரா கதைக்க வேணுமெண்டதுக்காகவே ஒரு போத்தில் வாங்கி அடிச்சு போட்டு சவால் விட்டுகொண்டிருந்தார்.பாவம்அவருக்கு முறியவெளிக்கிட சரியான தலையிடியாம்.தண்ணிக்கு ஒரு செலவு தலையிடிவந்து அதுக்கு மருந்துக்கு ஒரு செலவு உணர்ச்சிவசப்பட்டு அந்த வானெலிக்கு மாதாமாதம் 20 யுரோ தாறனெண்டு சொல்லி போட்டார் அது ஒரு செலவு. அது சரி எல்லாம் இருக்கட்டும் தமிழிற்கு ழ அழகு எண்டுவினம் அந்த வானொலி நடத்திறவரிட்டை யாராவது சொல்லுங்கோ ல ள ழ சொல்லி பழக சொல்லி பேற வழிக்கு புண்ணியமா போகும்<img src='http://img252.echo.cx/img252/4885/365613so.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஜோவ்வ் சாத்திரி என்ன லொள்ளா நம்மட அந்த வானொலியை பற்றி கதைக்க எவருக்கு அறுகதை இல்லை.. அவங்கள் யாரு அவங்கள் காகங்கள் மாதிரி சீ பினிக்ஸ் பறவைகள் மாதிரி மீண்டும் மீண்டும் சாம்பலில இருந்து எழுந்து பறப்பாங்கள்.. அந்த வானொலியின்ர காரக்ரைறையே புரிஞ்சிக்கமாட்டீங்கள் என்றீங்களேப்பா... மற்றய வானொலிக்காரங்கள் அதைப்பார்த்து பழகோனும்ம்.. அந்த அறிவிப்பாளர் அதுதான் ராமராஜன் குரலைகேட்டீங்கள் எண்டால் தெரியும்.. அப்படி ஒரு குரல் தேன் வடியும்,, என்னமாதிரி தமிழை அறுத்துறூத்து கதைக்கிறான்.. ஏன் அவனுடைய வீட்டுக்காரிண்ட குரல் ஆஹா ஒஹோ..கனீர் கனீர் எண்டு செம்பில மாபிளை உருட்டி விட்டமாதிரி ஒரு சத்தம்.. அந்த குரல்களைக்கேக்கிக்கெண்டே வீட்டில ஹோம் சினிமா செற் வேண்டி வைச்சிருக்கிறன்.. (சிலவேளைகளில் பக்கத்துவீட்டுக்காரன் வந்துகேட்பான் என்ன யாரும் மண்டையபோட்டுட்டினமோ ஏன் உப்பிடி றோடியோவில அழுறாங்கள் எண்டு அதுவேற )ரோடியோ அறிவிப்பாளர் ஆகோனுமெண்டதற்காண்டியே அந்த றோவால் சீ இறைவனால் படைக்கப்பட்ட ஜீவனுகள்.. உதையேன் அந்த ரேடியோவில வந்து கதைக்கிற நேயர்கள் இருக்கிறாங்களே அப்பப்பபா.. என்ன ஒரு அடக்கம் என்ன ஒரு பணிவு,, கதையில ஒரு மிடுக்கு ஒரு தெளிவு (ஆனால் ஒண்டு என்ன கதைக்கிறானுக எதற்க்காக கதைக்கிறானுக எண்டு ஒரு இள..வையும் புரிஞ்சுகொள்ளமுடியாது).. :? :| <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அதைவிட அவங்கட செய்தி அறிக்கைகளை கேட்கமுன்னர் ஒரு பெரிய அண்டா பாத்திரத்தை எடுத்து பக்கத்தில வைச்சுட்டு கேளுங்க.. ஏன் சொல்லுறன் எண்டால் அவங்கட செய்தியை கேட்கும் போது கண்ணால கண்ணீர் பாயும்.. (பிறகு வீடு எல்லாம் தண்ணீரை போடும் அதற்க்குத்தான் அந்த பாத்திரம்)
அந்த வானொலியோட போட்டி போடுறதுக்கு இந்த உலக்த்தில ஒரே ஒரு வானொலிதான் இருக்கு அதுதான் கிழிஞ்சவீணை..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
தம்பி டங் அவையின்ரை குரலுக்கே கன சனத்துக்கு காச்சல் வராத குறை அதுக்கை வேறை தொலைக்காட்சி சேவை வேறை தொடங்க போறாங்களாம் அதிலை உவங்கடை முகத்தை வேறை காட்டி தொலைக்க போறாங்கள் .அதைவிட கருத்தை கருத்தால் வெல்லுங்கள் வன்முறை வேண்டாம் என்று வாய்கிழிய கத்தி கொண்டே அந்த அறிவிப்பாளர்களும்சரி அதிலை கலந்து கொள்கிறவையும்சரி என்ன செந்தமிழ் அதை கேக்கேக்கை தேன்வந்து பாயுது காதிலை(தேவையானஆக்கள் வந்து வழிச்சு கொண்டு போங்கோ) :mrgreen:
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
ஐரோப்பியாவில் தேனெல்லாம் டுப்ளிக்கேற் சாத்திரி. உங்களுக்கு அந்த வானொலியாலைதான் சாத்திரத்தொழில் பட்டுப்போச்சாமெண்டு கேள்வி உண்மையா ? :?
:::: . ( - )::::
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
மார்க்கசின் மருமகன் மாவோவின் மச்சான் மாற்று கருத்து தோழர்களிற்கு கிடைத்த மாசற்ற மாணிக்கம் ஆயிரம் பகை வரினும் அஞ்சா நெஞ்சன். என்ன சாத்திரிக்கு ஏதும் மண்ழடை பிழையோ எண்டு யோசிக்காதையுங்கோ.ஒரு 7 மாதத்திற்கு முதல் கார்த்திகை 2004 பாரிசிலை உந்த மாற்று கருத்துகாரர் எண்டு கூறிக்கொண்டு திரிந்த ஒரு முக்கியமானவர் அகால மரணமடைந்து விட்டார் இந்த வசனமெல்லாம் இவரைபற்றி மாற்றுகருத்து தோளர்களின் இணைய தளங்களிலும் மற்றும் கனடாவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையிலும்படிச்சதுபத்திரிகையிலும்படிச்சதுஇப்பிடியெல்லாம் அள்ளி விட்டு கொண்டிருந்தார்கள்.ஆனால் எவருமே இவரின் அவல வாழ்வை உண்மையான உள்மன குமுறலை எழுதவில்லை. நான் கொஞ்சம் எழுதலாமென நினைத்து இவரை பற்றிய மேலதிக விபரங்களிற்காய் பாரிசில் இவருடன் நீண்ட காலம் வேலை பார்த்த இவரைப்பற்றி நன்கு அறிந்த எனக்கு தெரிந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு எனது நோக்கத்தை சொல்லி விபரம் கேட்டேன். அதற்கு அந்த நண்பர்: சொன்னார் இறந்த மனிதனைபற்றி இனி எழுதுவது நாகரீகமல்ல என்று.ஒருமனிதன் வாழும் போது நாகரீகமாக வாழ்ந்துமறைந்திருந்தால் அவரைப்பற்றி அனாகரீகமாக எழுதுவது நாகரீகமல்ல.வாழும்போது தன்வயிற்றுபிழைப்பிற்காய் சொந்த இனத்தின் உழைப்பையே விற்று பிழைத்த மனிதனை பற்றி எழுதுவதில் எந்த தவறும் என்க்கு தெரியவில்லை.ஏனெனில் இறப்பு மட்டும் ஒரு மனிதனை புனிதனாக்கி விடுவதில்லை மரணத்தால் மட்டும் ஒருவன் மகாத்மாஆகிவிடுவதில்லை.அப்படிப்பார்த்தால் எம் வரலாற்றில் அல்பிரட் துரையப்பாமுதல் புளொட் மோகன்வரை புனிதர்களாகி விடுவார்கள்எம்மின வரலாற்றில் எப்படி தியாகமும் வீரமும் பேசப்பட்டு கொண்டிருக்குமோ அதே போல் துரோகமும் காட்டி கொடுப்பும் பேசபட்டு கொண்டேயிருக்கும்.அந்த துரோக வரிசையில் இவரும் இணைந்து கொள்கிறார். இவரைப்பற்றி எனது நண்பன் எழுதிய கடிதத்தை அப்படியே கீழே இணைத்து விடுகிறேன்
<img src='http://img162.echo.cx/img162/886/365616ak.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அன்பின் நண்பன் ****** ற்குஉமா பற்றிய விபரங்கள் கேட்டிருந்தாய் எனக்கு இவரைப்பற்றிய ஆரம்பகால விபரங்கள் தெரியாவிட்டாலும்இங்கு பாரீசில் நானும் இவரும் st lazarஎன்னுமிடத்தில் உள்ள விடுதியென்றில்உமா வரவேற்பாளராகவும் நான் அங்கு அறைகள் சுத்திகரிப்பாளராகவும் நீண்ட காலம் வேலை செய்துள்ளோம்.அதனால் நான் இவரை இங்கு நன்கறிந்துள்ளேன்உமாவிற்கு ஆங்கிலம் பிரெஞ்சு இரண்டிலும் நல்லபுலமையிருந்தது(என்னை தான் உனக்கு தெரியுமே)அவர் எப்போதும்மார்க்சீயம் கம்யுனிச சமவுடைமை பற்றி எழுதிகொண்டும் கதைத்து கொண்டும் இருப்பார் ஆனால் உயர்வர்க்கத்து கனவான்களை போல உடுத்துவது மட்டுமின்றிசெயலும் தனிப்பட்ட போக்கும் முளுக்க முளுக்க முதலாளித்துவ எஜமானிய போக்கே அவரிடமிருந்தது.
நான் வேலைக்கு போன புதிதில் ஒருநாள் தெரியாத்தனமா ஊரைபற்றி கதைக்கேக்கை அங்கு நடக்கும் போராட்டம் பற்றியும் கதை வந்திட்டுது.அப்ப அவர் சொன்னார் தாங்கள் எல்லாம் பழைய போராளியள் தாங்கள் தான் ஈழ விடுதலை போரையே தொடக்கி வைத்தவர்கள் என்று. அப்ப நான் அவரிடம் கேட்டேன் அப்ப ஏனண்ணை இடையிலை விட்டனீங்கள் எண்டு.அப்ப அவர் சொன்னார் அதுதான் புலியள் தங்களை போராட விடேல்லையாம் இல்லாட்டி இப்ப தனிஈழம் கண்டிருப்பமெண்டார். அப்ப நானும் அப்பாவியா கேட்டன் ஏனண்ணை புலியள் தடைசெய்ய முதல் நீங்கள் கிளிநொச்சியும் காரைநகரும் அடிச்சதை நாங்கள் பாத்தனாங்கள் தானேயெண்டு. அவருக்கு வந்ததே கோபம் சும்மா காம் அடிச்சா மட்டுஆம் போராட்டம் இல்லை எண்டு தொடங்கி கனக்க கதைச்சா வேவையாலை நிப்பாட்டி கலைச்சு போடுவன் எண்டு என்னை கிழி கிழியெண்டு மனுசன் கிழிச்சு போட்டுது.அண்டைக்கு பிறகு நானும் எதுக்கு வேலை செய்யிற இடத்திலை வம்பு எண்டு அவரோடை வேலை விசயத்தை தவிர வேறு எதுவும் நான் கதைக்கிறேல்லை.
அவரிட்டை மாற்று கருத்து காரர் எண்டு சிலர் வந்து போவினம்.அவர் களிலை முக்கியமாக ******இவர் பாரீசில் ஒருகொலை தொடர்பாக பிரெஞ்சு போலிசால் தேடப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னும் சிலர் அவர்கள் பொயரை தவிர்த்து விடுகிறேன்.அதைவிடஇவர் பாரிசிலை பலருக்கு விசா செய்துதாறன் எண்டும் அவரகளிற்கு அகதி அனுமதிபத்திரம் நிரப்புதல் எண்டும் சம்பாதிச்சு கொண்டிருந்தார்.அதைவிட விசா செய்ய எண்டு பலர் இவரிட்டை காசை குடுத்து ஏமாந்து நிண்டது தனிக்கதை. அவையள் தேடிவந்தா பொலிசுக்கு போன்பண்ண போறன் எண்டு மனிசன் வெருட்டி கலைச்சு போடும் பாவம் விசா இல்லாததுகள் பயத்திலை ஒண்டும் செய்யேலாமல் போடுங்கள்.நான் சனிக்கிழைமைகளில் வேலை முடிய வழமையா பாரிசிலை தமிழ் கடையள் அதிமுள்ள லா சப்பல் (உனக்கு தெரிந்த இடம்தானே)எண்ட இடத்திற்கு போய் ஒரு சிலோன் ஸ்ரவுட்டும் கொத்து ரொட்டியும் சாப்பிடபோவது வழமை.
சில நேரங்களில் உமாவும் என்னுடன் வருவார். அவர் விரும்பி குடிப்பது ஜின் என்னும் வகைமதுவே. அன்றும் ஒரு சனிக்கிழைமை வழைமை போல நான் வேலை முடிஞ்சு வெளிக்கிட தம்பி லா சப்பலுக்கே நானும் வாறனெண்டார். நானும் அவற்றை காரிலையே வளமையா போற தமிழற்ரை உணவகத்திற்கு போனோம்.வழமை போல நான் எனக்கு ஒரு ஸ்ரவுட் அவருக்கு ஜின் சொல்லி விட்டு குடிக்க தொடங்கினோம். அண்டைக்கு மனிசன் வழைமையை விட அதிகமா விறு விறுவெண்டு குடிக்க தொடங்கிட்டுது. கொஞசம் ஏறதொடங்க என்ன வாழ்கை என்ன மனிசர் எண்டு சம்பந்தமில்லாமல் என்னவோ எல்லாம் கதைக்க தொடங்க நான் கேட்டன் ஏணண்ணை உங்கடை ஆக்களாலை ஏதும் பிரச்சனையே இல்லையெண்டார்
அப்ப உந்த விசாக்கு காசு தநத ஆக்களாலை ..........அதெல்லாம் சின்ன பிரச்சனை நான்சமாளிப்பன் எண்டார் அப்ப சமாளிக்க முடியாத அளவுக்கு என்ன பெரிய பிரச்சனையெண்டு கேட்டன். அதுக்கிடையிலை பக்கத்து மேசையிலையிருந்த ஒரு 17 18 வயது மதிக்க தக்க ஒருபெடியன் அவரை அண்ணை நீங்கள்தான் உமாவே நான் கேக்கிறனெண்டு குறை நினையாதெங்கோ நான் சின்னனிலை இங்கை வந்து வளர்ந்தனான். எனக்கு அப்பா அம்மா சொல்லியும் மற்றது செய்தியள்ளை படிச்சும் தான் எங்கடை பிரச்சனை தெரியும்.அப்படிப்பட்ட எனக்கே எங்கடை இனம் போராட வேணும் ஒரு தீர்வு கிடைக்க வேணும் எண்டொரு உணர்விருக்கு. ஆனால் நீங்கள் பெரியாக்கள் எங்கடையாக்களின்ரை துன்பங்களை நேரிலை கண்ட ஆக்கள் நீங்களே இப்பிடி எங்கடை போராட்டத்தை கொச்சை படுத்திறதும் இல்லாமல் அதை பற்றி எழுதி வித்து சம்பாதிச்சு கொண்டிருக்கிறியள் எண்டு கேக்க.மனுசன் உடைனை தூசணத்தாலை பேசியபடி கையிலை போத்திலை தூக்கி கொண்டு அடிக்க போக நான் பாஞ்சு கட்டி பிடிச்சுஒருமாதிரி வெளியிலை கொண்டுவந்து காரிரை ஏத்தி போட்டன். இல்லாட்டி அண்டைக்கு அவங்கள் 4 5 இளம் பெடியள் நிண்டவங்கள் அவரையும் கூட போன குற்றத்திற்கு என்னையும் சேத்து பிரிச்சிருப்பாங்கள்
.சரி விசயத்திற்கு வருவம்.காரிலை ஏறி போய் கொண்டிருக்கேக்கை ஒருஇடத்திலை நிப்பாட்டி ஒரு போத்தல் ஜின்னும் கலக்க சுவெப்ஸ் வாங்கிகொண்டு ஒரு ஒதுக்கு புறமான இடத்திலை காரை நிப்பாட்டி போட்டுகாருக்கை இருந்து 2 பிளாஸ்ரிக் கப்பிலை ஜின்னை ஊத்தியபடி சொன்னார் நீமறிச்சு போட்டாய் இல்லாட்டி நான் 2 போட்டிருப்பன் அவங்களிற்கு என்று சொல்ல. சரியண்ணை அதைவிடுங்கோ பிரச்சனையை சொல்லுங்கோ எண்டன் . அவர் நிமிர்ந்து தலையை தடவியவாறே குடும்பத்திலை சரியான பிரச்சனை அதுதான் என்ன செய்யிறதெண்டு தொரியேல்லை இதைவெளியிலை தெரிஞசா எனக்கிருக்கிற கௌரவம் மரியாதை எல்லாம் போடும் நான் இதை போய் என்னை சுத்தி நிக்கிறசினேதங்களிட்டை கூட சொல்லேலாது வெளியிலை தெரிஞ்சா குடும்பத்தை திருத்தேலாதவர் ஊரை திருத்த வந்திட்டான் என்டு சனம் காறித்துப்பும் எண்டு கண்கள்கலங்கிய வாறே சொன்னார்.
எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்லை அவரைபாத்து அண்னை உங்கடை தனிப்பட்ட பிரச்சனை விரும்பினா கூறுங்கோ எண்டன்.கையிலிருந்த ஜின்னை ஒருமடக்கில் குடித்து விட்டு என்னை பாத்து சொன்னார் என்ரை மனிசிக்கும் இன்னொரு ஆளுக்கும் தொடர்பு என்னாலை கண்டிக்கவும் முடியவில்லை பாத்து கொண்டிருக்கவும் முடியவில்லை எண்டு முகத்தை பொத்தியபடி கூறினார் என்னால் நம்ப முடியவில்லை அவரது மனைவியை எனக்கு தெரியும் அதைவிட தோளுக்கு மேலை வளர்ந்த ஒரு மகன் வேறை இருக்கு.சிறிது மௌத்திற்கு பிறகு சொன்னன்.அண்ணை உங்கடைn நிலைமை விளங்கிது.ஒரு வளிதான் எனக்கு தெரியிது சொல்லுறன் விரும்பினால் செய்யுங்கோ பேசாமல் குடும்பத்தோடை எங்கையாவது வேறை நாட்டிற்கு போங்கோ சில நேரம் இடமாற்றம் வாழ்க்கையிலையும் ஒருமாற்றத்தை கொண்டுவரும் எண்டு சொல்ல.அதைதான் நானும் யோசிச்சிருக்கிறன் கனடா போகலாஇம் எண்டு யோசனை இருக்கு இங்கை என்ரை சகோதரங்களும் இருக்கிற படியா அவையெல்லாரும் சேந்து சொல்லேக்கை மனிசிவருமெண்டு நினைக்கிறன்.பிறகு அங்கை போய் யோசிப்பம் என்று விடை பெற்று போனவர் 2 வாரங்களில் எல்லாம் ஒழுங்கு பண்ணி குடும்பத்தோடை கனடா போய்விட்டார்.
அதற்கு பிறகு சுமார் 3 வருடங்களாக அவரது செய்திகள் யாராவது சொல்வார்கள் எனக்கும் அவருக்கும் நேரடி தொடர்புகள் அற்று போய்விட்டது. திடீரெண்டு ஒருநாள் போனவருசம் எனக்கு தொலைபேசியெடுத்து டேய் நான் பாரிசிலை நிக்கிறன் நேரமிருந்தா வா எண்டார் நானும் சுகம் விசாரித்து விட்டு அப்ப அண்ணை மனிசி பிள்ளையள் எபிடிசுகமோ எண்டன் வா நேரை பேசலாம் ஆனா வழமையா போற இடத்துக்கு வேண்டாம் வேறையெங்கையாவது போவமெண்டார். நானும்போனன் பொய் ஆளை பாத்தா எனக்கு அதிர்ச்சி வழமையாக நல்லா சவரம் செய்து வெள்ளை காரன் போலை வெளிக்கிட்ட திரிஞ்சவராஇவர்?? பாத்தால் அலங்கோலமா ஏற்கனவே குடித்திருந்தார். தன்ரை கதையை சொன்னார் எது நடக்ககூடாது எண்டு நினைச்சு கனடாக்கு ஒடினனோ அது அங்கை நடந்திட்டுது மனிசி தன்னைவிட பாதி வயது காரனோடை ஓடிட்டாள்.இனியெல்லாம் முடிஞ்சுது எண்டார் நான் அப்ப அவரை பாத்து சொன்னன் அண்ணை இது எங்கடை இனத்தின்ரை சாபம்.
இனியாவது யோசிச்சு நடவுங்கோ எண்டன். அபபோது தான் அவரிடமிருந்து உண்மையான வார்த்தைகள் வந்தது தம்பி பிழைப்புகாகவும் புகளுக்காகவும்நாடகத்திலை போட்டது போலை ராசா வேசம்நான் போட்டிருக்கிறது நான் வீர வசனம் பேசுமட்டும் தான் என்னை சுத்தி நிக்கிற கூட்டம் கைதட்டும் மேடையை விட்டு கீழை இறங்கினா நான் போட்டிருக்கிற ராசான்ரை உடுப்பு வாடைகைக்கே என்னட்டை காசு இல்லை. இது பழகிபோட்டுது இனியென்னாலை வேசத்தை கலைக்க ஏலாது கலைக்கவும் விட மாட்டார்கள்.அதன்பின்னர் சிலநாட்களின் பின்னர் அவர் மாரடைப்பில் இறந்ததாக அறிந்து மரண வீட்டிற்கு போனேன். எனக்கு தெரிந்த ஒருவர் இறந்து விட்டார் என்று கவலைப்படுவதா? அல்லது ஒரு(தன்) இனத்தின் விடுதலை போரை கொச்சைபடுத்தி கொண்டிருந்தர் இறந்து விட்டார் என்று மகிழ்வதா என்று எனக்கு தெரிய வில்லை.ஆனாலும் இறுதியில் தன்தவறை உணர்ந்திருந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே
அன்புடன் [img]******
<img src='http://img60.echo.cx/img60/4659/365612fz.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
இவரை மாதிரித்தான் பாருங்கோ அண்மையிலை மாக்சியம் கதைச்சு கொண்டு திரிஞ்ச மாற்று கருத்து வாதியும்(அப்பிடி அவை சொல்லுகினம்) மண்டையை போட்டவர் அவருக்கு யாழ் களத்திலையும் சிலபேர் அஞ்சலி செலுத்தியிருந்தவை அவருக்கும் உப்பிடித்தான் போற நேரத்திலை சுடலை ஞானம் வந்தது. அடுத்ததா அவற்ரை மாற்று கருத்தையும் பாப்பம்
<img src='http://img41.echo.cx/img41/7959/365613my.gif' border='0' alt='user posted image'>
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
:::: . ( - )::::
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
இப்படியெல்லாம் ஆக்கள் உண்மையில இருக்கினமா சாத்திரி அண்ணா இவையை எல்லாம் :oops: :evil: :evil:
. .
.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
சாத்ஸ் நீங்கள் இங்கு எழுதுவது எல்லாம் உண்மைச்
சம்பவங்களா? :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
என்ர பேருக்கேற்ற கேள்வி கேக்கிறன் குறைநெக்காதேங்கோ...
பரிஸ்சில தண்ணி அடிச்சுப்போட்டு கார் ஓடுறது வழமையோ? முதல் சாப்பிற் இடத்தில இரண்டுபேரும் கொஞ்சம் அடிச்சிருக்கினம்... பிற காருக்க இருந்து பிளாஸ்டிக்கப்பில ஓட்டுனர் கப்பொண்டடிக்கிறார் :roll:
பொலிஸ் சோதிக்க மாட்டானோ? அதுவும் வெள்ளி சனியிலை கொஞ்சம் ஆலேட்டா எல்லா இடமும் திரியிறவங்கள்?
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
பாரிஸ் மட்டுமல்ல பிரான்ஸ் முளுவதும் மது போதையில் கார் ஓட்டுபவர்களால் வருடத்திற்கு சுமார் 8 ஆயிரம் விபத்துக்கள் நடக்கின்றது. இதில் மரணமடைபவர்கள் தொகை 4 ல் இருந்து 6 ஆயிரம்பேர்வரை என்கிறது பிரெஞ்சு போக்கு வரத்து பிரிவு காவல் துறை. இப்பொழுது சட்டங்களை கடுமையாக்கியிருக்கிறார்கள்.மது போதையில் காரோட்டினால் ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதலும் அபராதமும் உண்டு. இருந்தாலும் :mrgreen:சில குறுக்காலை போனதுகள் இருக்கத்தானே செய்யும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>ஐரோப்பாவில் விரைவில் இன்னொரு வானொலி பொறுத்திருந்து பார்ப்போம் பிழைப்பிற்கு விடுதலை பாட்டு போடுகிறார்களா??இல்லை எதிர் பாட்டு பாடுகிறார்களா?</span>