05-22-2005, 11:52 PM
<img src='http://img97.echo.cx/img97/4219/nadiya14157cf.jpg' border='0' alt='user posted image'>
எம்.குமரனில் இளமையான அம்மாவாக வந்துபோன நதியாவுக்கு அஜீத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
"நதியா நதியா நைல் நதியா' என்று ஒரு காலத்தில் இளசுகளை அலைய விட்டு ரகளை செய்த நதியா இப்போது இளமையான அம்மா நடிகையாகி விட்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் அவர் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். இது கோடம்பாக்கத்தில் இரண்டாம் வரிசை கதாநாயகிகள் வாங்கும் சம்பளமாகும்.
காஸ்டிலியான அம்மா நடிகையானாலும், பழைய அழகு நதியா சேச்சியிடம் இன்னும் அப்படியே மிஞ்சிக் கிடக்கிறது. கூடவே அதே பழைய பந்தாவும் போகாமல் அப்படியே இருக்கிறது.
"எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' க்குப் பிறகு அவரைத் தேடி பல படங்கள் வந்தாலும், நதியாவின் பந்தா பிளஸ் அலப்பறை காரணமாக தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள்.
அம்மா கேரக்டரில் தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. அப்படியே அம்மா கேரக்டரில் நான் நடிக்க வேண்டுமென்றால் அது ரொம்ப முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும், ஹீரோயின் அளவுக்கு நானும் பேசப்பட வேண்டும்,
ஹீரோயினுக்கு சமமாக எனக்கும் சம்பளம் தர வேண்டும் என்று நதியா போட்ட "10 கமாண்ட்மெண்ட்ஸை" கேட்ட தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடத் தொடங்கினர்.
இதனால் படம் ஏதும் இல்லாமல் ஒரு மூலையில் உட்காரும் நிலைக்குத் தள்ளப்பட்டார் நதியா. இது மட்டுமா?
இப்படியே விட்டால் மறுபடியும் தமிழ் ரசிகர்கள் நம்மை மறந்து போய் விடுவார்கள் என்று நினைத்தாரோ, என்னவோ அவசரம் அவசரமாக இரண்டு படங்களை மட்டும் குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.
இப்போது நதியாவைத் தேடி ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம். அஜீத் நடிக்கும் காட்பாதர் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை அணுகியுள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
காட்பாதர் படத்தில் அஜீத் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் அப்பா வேடத்தில் வரும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை ரவிக்குமார் அணுகியுள்ளார். இதுகுறித்து யோசித்து கூறுவதாக சொல்லி அனுப்பியுள்ளாராம் நதியா.
நிச்சயம் இந்த ரோலில் நடித்தே ஆக வேண்டும் என்று நதியாவிடம் தனிப்பட்ட முறையிலும் போனில் கேட்டுக் கொண்டாராம் அஜீத் சேட்டன். எனவே நிச்சயம் காட்பாதரில் நதியா நடிப்பார் என்கிறது யூனிட் வட்டாரம்.
நன்றி தற்ஸ் தமிழ்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி