Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உயர்நிலை பொலிஸ் அதிகாரியைக் காணவில்லை!
பயங்கரவாதத் தடுப்புக் குற்றப்பிரிவின் உயர்நிலை அதிகாரியான திரு.ரி. ஜெயரத்தினம் என்பவரைக் காணவில்லையென இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் உயர்நிலை அதிகாரியும் மேற்படி பிரிவில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான திரு.ரி.ஜெயரத்தினம் என்பவரை கடந்த புதன்கிழமை இரவிலிருந்து காணவில்லையெனத் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யுத்தகாலத்தில் கொழும்பு மாநகரை மையமாகக் கொண்டு செயற்பட்ட இவ்வதிகாரிää கொழும்பில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பி;டத்தக்கது.
இவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத போதும்ää இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரியவருகிறது.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார் புளொட் இளைஞன் மீது மனைவி சந்தேகம்
கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயரட்ணம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1999 ஆம் ஆண்டின் பின்னர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால் இவர் பொலிஸ் திணைக்களத்தில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் பிரபலமாகியிருந்தார்.
பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொழும்பு ஹைலெவல் வீதியிலுள்ள பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் இவர், பம்பலப்பிட்டி கள நடவடிக்கை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக கடமையாற்றி வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவு, நண்பர்கள் இருவரின் அழைப்பின் பேரில் குடும்பத்தினருடன் கல்கிசை ஹோட்டலுக்கு இரவு உணவருந்தச் சென்ற இவர், அது முடிவடைந்ததும் நள்ளிரவு 11.45 மணியளவில் குடும்பத்தினரை வாகனமொன்றில் அனுப்பி விட்டு பம்பலப்பிட்டியிலுள்ள தனது பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மறு நாள் காலை இவரது மனைவி, இவருடன் அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஜெயரட்ணம் அங்கு வராதது தெரிய வந்தது.
இதையடுத்து இவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகித்த பொலிஸார் உடனடியாக உஷாரடைந்த நாடு முழுவதிலுமுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.
இதுபற்றி ஜெயரட்ணத்தின் மனைவி கூறுகையில்,
மனோ என்ற புளொட் உறுப்பினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், வவுனியாவிலுள்ள காணி ஒன்று தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியதையடுத்து எமக்கு பழக்கம் ஏற்பட்டது.
புளொட் முகாமிலிருந்த அவர், பின்னர் அந்தக் காணி அலுவலை முடித்துத் தந்த பின்னர் அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். எனது கணவருடனும் பின்னர் இவர் நண்பரானார்.
தொலைபேசி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இவர் எமது வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் அடிக்கடி வருவார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு வந்த இவர், லண்டனிலிருந்து நண்பரொருவர் வந்துள்ளதாகவும் அவருக்கு தான் அன்றிரவு இரவு உணவு விருந்தளிப்பதாகவும் அதற்கு எங்களைக் குடும்பத்துடன் வருமாறும் வற்புறுத்தி அழைத்தார்.
பாதுகாப்பு காரணத்தால் வெளியே எங்கும் செல்லாத எனது கணவன், இந்த விருந்துக்குச் செல்ல இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மனோவுடன் வந்திருந்தவர் மீது எனக்கு சிறிது சந்தேகமிருந்ததால் இதனை நான் பெரிதாக விரும்பவில்லை.
எனினும், கணவரின் வற்புறுத்தலால் பிள்ளைகளுடன் இரவு 8 மணியளவில் சென்றோம். நள்ளிரவு 11.45 மணியளவில் விருந்து முடிந்ததும் எம்மை வாடகை வாகனமொன்றில் வீட்டுக்கு அனுப்பியதுடன், தான் பம்பலப்பிட்டி அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி மனோவுடனும் அவருடன் வந்தவருடனும் சென்று விட்டார்.
மறுநாள் காலை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே அவர், முதல் நாள் மாலை வெளியே சென்ற பின்னர் மீண்டும் அங்கு வராதது தெரியவந்தது.
அதேநேரம், மனோவுடனும் தொடர்பும் இல்லாது போய் விட்டது. அவர்தான் எனது கணவனை வேறு ஆட்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்க வேண்டுமென்றார்.
இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உட்பட படையினரும் பொலிஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இலங்கை கொழும்பில் பயங்கரவாதத் தடுப்பு உளவுத் துறையில் பணியாற்றி வந்த அதிகாரி ரி. ஜெயரட்ணம் அவர்களைக் கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த செய்திகள் பற்றி இலங்கை பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ பேசிய போது - பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருடன் இரவு உணவுக்குப் போன அவர் திரும்பி வரவில்லை என்றும், இந்த விஷயம் தொடர்பாக சர்வதேச உதவிகளும் நாடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
ஜெயரட்ணத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும். எந்த ஒரு குழு மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ தாங்கள் இப்போது சந்தேகம் கொள்ளவில்லை என்றும், வழக்கம் போல திறந்த கண்ணோட்டத்துடன் அனைத்தையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
from BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://www.rsf.org/IMAGES/english/menu/menu_english_r2_c2_f2.gif' border='0' alt='user posted image'>
Norway
<b>Oslo-resident Tamil journalist victim of death threats and harassment</b>
<img src='http://www.rsf.org/IMG/jpg/norway1.jpg' border='0' alt='user posted image'>
Sethurupan Nadarajah
Reporters Without Borders is very concerned about incitement to murder and other threats against independent Tamil journalist Sethurupan Nadarajah, who is living in Norway.
Fearing for his own and his wife's safety, the journalist appealed to the worldwide press freedom organisation for help and it has been able to confirm both the truth and the gravity of his claims.
The Tamil journalist has for the past six months been the target of death threats posted on several Danish-based websites hosted in the United States, including nerupu as well as receiving threats directly.
Reporters Without Borders has written to the Norwegian minister for Justice and the Police, Odd Einar Dorum, calling for the journalist to be given police protection and for a full investigation into the origin of the telephone and electronic threats against him
The organisation also urged the Danish interior minister Lars Lokke Rasmussen to work to pinpoint the precise origin of the threats.
The website carries a photomontage of Sethurupan with the caption : "Tamil terrorist. Mr Sethu collects money for the journalist Nadesan but uses it for his family. Watch out for this individual".
Sethurupan received an email in Tamil on 25 April 2005 from the address tamil3rdview@ yahoo.co.uk, with the message : "We have been collecting information about you. We will soon act against you. We have also informed the LTTE [Tamil Tigers]. You are a very dangerous individual for our liberation struggle. We live in Norway and we are going to eliminate you." The IP address of the computer from which the message was sent has been identified as : 81.191.153.244. It is apparently an Oslo address.
In another worrying incident on 20 April, a Tamil speaker phoned the journalist and threatened his wife, a Sri Lankan nurse who has taken Norwegian nationality, saying : "Where is your wife ? We are going to rape and kill her because she is a prostitute."
These death threats were recently relayed by London-based Tamil and pro-Karuna station TBC Radio and on another website nitharsanam.net, also based in Denmark and with the same host server, the American company GoDaddy.
Tamil groups who are pro-Karuna - the LTTE rebel chief who broke with the Tamil Tigers - are believed to be behind the death threats. They accuse Sethurupan of belonging to the LTTE and of writing articles in English and Tamil about their activities in Sri Lanka and abroad. In fact, the Tamil journalist is known to be independent and in 2001 he was threatened by LTTE supporters. He is an active member of the Sri Lanka Tamil Media Alliance (SLTMA) for which he is foreign affairs representative. He currently contributes to a Tamil radio station based in London, runs several websites, including Oslo Voice, and sends regular articles to the media in Sri Lanka.
http://www.rsf.org/article.php3?id_article=13372
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இராணுவத்தினரின் ஆட்லறித்தளத்தில் பாரிய வெடிச்சத்தங்கள்!
ஜ யாழ். நிருபர் ஸ ஜ வியாழக்கிழமைää 05 மே 2005ää 15:50 ஈழம் ஸ
யாழ்ப்பாணம் தனங்கிளப்பு சிறீலங்கா இராணுவத்தினரின் ஆட்டிலறி தளத்தில் நேற்று முற்பகல் பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டதாக அப்பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்காää
ஆயுதக் களஞ்சியத்தில் வெடி விபத்தொன்று ஏற்பட்டதாகவும்ää இதில் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவமானது தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்று வெலிஓயா இராணுவ தலைமையகப் பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்து பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார
www.puthinam.com
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
பெண்ணின் வயிற்றுக்குள் 5 அடி நீள பன்டேஜ் விசாரணை நடத்துமாறு அமைச்சர் பணிப்பு
முப்பத்தேழு வயது பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து ஐந்து அடி நீளமான பன்டேஜ் துணி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடி விசாரண நடத்துமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சம்பிக விஜேரத்ன மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தம்புள்ள தலகிரியாகவைச் சேர்ந்த செனவிலதா என்ற பெண்மணி ஒரு சில வாரங்களுக்கு முன் தம்புள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளார். வைத்தியசாலையிலிருந்து வீடு சென்ற பின் தினமும் வயிற்று வலி ஏற்படவே அவர் பரிசோதனைக்காக மாத்தளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை அரச வைத்தியசாலை டாக்டர்கள் இப்பெண்ணை பரிசோதனை செய்த போது வயிற்றுக்குள் பன்டேஜ் துணி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். தம்புள்ள அரச வைத்தியசாலை டாக்டர்கள் பெண்ணின் கர்ப்பைப்பையை அகற்றி விட்டு மீண்டும் தைக்கும் போது பன்டேஜ் துணியை வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை அரச வைத்தியசாலை டாக்டர்கள் இப்பெண்ணை மீண்டும் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி பன்டேஜ் துணியை அப்புறப்படுத்தியுள்ளனர். இப்பெண் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் உடனடியாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சம்பிக விஜேரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர் இது விடயமாக விசாரணை செய்து பூரண அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
சிவராம் படுகொலை தொடர்பாக சர்வதேச
தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
[size=18]மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மிலேச்சத்தனமான தாக்குதல்;;: ஒருவர் பலி பலர் படுகாயம்
மட்டக்களப்பு சந்திவெளியில் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் 25க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை சந்திவெளிப்பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைத்த காவலரணை அகற்றும்படி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் டுபட்டனர்.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பிரசன்னமாகி இருந்த அவ்வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி படையினர் மிலேச்சத்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பாவி பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 60 வயதுடைய வயோதிபராவார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கேள்வியுற்று அவ்விடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவ்வேளை எஎஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பியை நோக்கியும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர் சடுதியாக நிலத்தில் வீழ்ந்து படுத்ததால் அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருக்கின்றார்.
சங்கதி..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
சம்பவம் நடந்த இடத்தில் நின்றுவிட்டு எதுவும் தெரியாதென கைவிரிப்பதா?
கண்காணிப்புக்குழு கூறியதற்கு தமிழ்க்கூட்டமைப்பு கண்டனம்
மட்டக்களப்பு சந்திவெளிச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாதென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறியுள்ளதைஇ மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
சந்திவெளியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய இராணுவ சோதனை நிலையத்தை அகற்றக் கோரி திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கூட்டமைப்பு எம்.பி.க்களில் நால்வரும் கண்காணிப்புக் குழுவின் மாவட்ட தலைவரும் அங்கிருந்தனர்.
எனினும்இ இந்தச் சம்பவம் பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் சம்பவம் நடைபெற்றபோது தாங்கள் எவரும் அவ்விடத்தில் இருக்கவில்லை என்பது போல் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அவர்களது இந்தக் கூற்றையே கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன்இ மோசமான சம்பவமொன்று பற்றி கண்காணிப்புக் குழுவினர் பொறுபற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற போது கண்காணிப்புக் குழுவினரும் அங்கு நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இந்தச் சம்பவத்தை இராணுவப் பேச்சாளர் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக கூற முற்படுவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்
தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
சிங்களக் காடையரால் தமிழ் புனர்வாழ்வுக் கழக உறுப்பினரின் காது துண்டிப்பு
திருமலை மாவட்டம் மரத்தடி சந்திப் பகுதியில் வைத்து சிங்களக் கடையர்களைக் கொண்ட கும்பலினால் தமிழர் புனர்வாழ்வுக் கழக அங்கத்தவர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
திருமலையில் புதிதாக புத்தர் சிலை நிர்மானிக்கப்பட்டதன் பின்பு உருவான ஒரு முறுகல் நிலையின் வெளிப்பாடகவே இந்த காதறுப்புச் சம்பவமும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற்து.
மட்டக்களப்பு சந்தைப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவம் ஒன்றில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பலி உறுப்பினனாகிய மோகன் என்ற ஆறுமுகம் முருகுப்பிள்ளை கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.15 அளவில் நடை பொற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்; மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை நவரட்னம் எனப்படும் இவர் சந்தையில் பொருட்;கள் கொள்வனவு செய்து கொண்டிருந்த போதே துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகியுள்ளார்
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் இனம்காணப்படவில்லை
என்றும் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர
சங்கதி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 70
Threads: 1
Joined: May 2005
Reputation:
0
கொலைசெய்தவர்களின் அடையாளம் இனம் காணப்படவில்லை. காதுவெட்டியவர்கள் இனம்காணப்பட்டுள்ளனரா? உறுதியாகத் தெரியவில்லை. அறிந்து எழுதுங்கள்.
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் அரசியற் செயலகம் மீது தேசவிரோதிகள் தாக்குதல்: இரு போராளிகள் படுகாயம்
லங்கா அதிரடிப் படையின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை மாவட்டம் வீரமுனையில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியற்துறை அலுவலம் மீது ஸ்ரீலங்காப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இரு போராளிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை நான்கு மணியளவில் இரு உந்துருளிகளில் வந்த தேசவிரோதிகள் குறிப்பிட்ட அரசியல் அலுவலகத்தின் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது யுகாந்தன்ää ஏகாந்தன ஆகிய போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இவர்கள் சம்பாந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிந்திக் கிடைக்கும் தகவல்களின் படி இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
வீரமுனை அரசியற்துறை அலுவலகத்தை அண்மித்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஈபிடிபி தேச விரோதிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் அண்மைக் காலமாக அடிக்கடி உந்துருளிகளில் காணப்பட்டதாக பொதுமக்களின் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
இதேவேளை இன்றைய தாக்குதலை நடாத்திய தேசவிரோதிகள் காரைதீவுப் பகுதியிலிருந்து வந்து தாக்குதலை நடாத்தி விட்டு மீண்டும் அப்பகுதிக்கே தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சங்கதி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பெரியகல்லாறு அரசியல்துறை அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த வயோதிபப் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்டவர் 75 வயதுடைய சின்னத்தம்பி - அன்னப்பிள்ளை என்ற வயோதிபராவார்.
இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாதோர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் அங்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
ஈழநாதம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/May/29/f-5.jpg' border='0' alt='user posted image'>
புலிகளின் பகுதிக்கு அடுத்த தடவை செல்வேன் - கல்முனையில் கிளின்டன் தெரிவிப்பு
வட, கிழக்கில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணைந்து முன்னெடுப்பதற்கான உத்தேச `பொதுக்கட்டமைப்பு' ஏற்பாட்டுக்கு தனது முழுமையான ஆதரவை இலங்கையின் உள்ளூர்த் தலைவர்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த விரும்பியதாக தெரிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கடல்கோள் புனர்நிர்மாணத்திற்கான ஐ.நா.வின் விசேட தூதுவருமான பில் கிளின்டன், அடுத்த தடவை இலங்கைக்கு வருகை தரும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று பார்வையிடவிருப்பதாக தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாட்டிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த கிளின்டன் நேற்றுச் சனிக்கிழமை கல்முனைக்குச் சென்று கடல்கோளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உள்ளூர் தலைவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த விரும்புவதாக கிளின்டன் தெரிவித்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு ஏன் விஜயம் செய்யவில்லையென கிளின்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், `நான் மீண்டும் வருவதற்கு உத்தேசித்திருக்கிறேன். அடுத்த தடவை அங்கு (புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி) செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். இத்தடவை ஒரே ஒரு சந்திப்புக்கு மட்டுமே நேரம் கிடைத்திருக்கிறது. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், பௌத்தர்களை நான் சந்திக்க விரும்பினேன்.
இந்த நோக்கம் நிறைவேறியிருப்பதாக கருதுகிறேன். ஏனெனில், சகல சமூகங்களினதும் பிரதிநிதிகளையும் சந்திக்க முடிந்தது' என்று கிளின்டன் குறிப்பிட்டிருக்கிறார்.
மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க பொதுக்கட்டமைப்பு முக்கியமானதொன்று என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடல்கோள் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையிலிருந்து 100 - 200 மீற்றர் எல்லைக்குள் வசித்தோருக்கு வேறு இடங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து அக்கறை காட்டிய கிளின்டன், இந்தத் திட்டம் எல்லா வேளைகளிலும் நடைமுறை சாத்தியமானதாக அமையாது என்றும் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலமான வீடுகளை அமைத்தலே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்றும் சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது கிளின்டன் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு செல்லும் கிளின்டன், பின்னர் அங்கிருந்து இந்தோனேசியாவின் அசே மாகாணத்துக்கு செல்வார். அசேயில் 2,28,000 பேர் கடல்கோளால் பலியாகியுள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலிகளின் தளபதிகளின் `ஹெலி' பயணத்திற்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
கிழக்கிலிருந்து வன்னிக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், அங்கிருந்து மீண்டும் கிழக்கே செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புலிகளின் திருமலை மாவட்ட தளபதி கேணல் சொர்ணம் சம்பூருக்கும் கிளிநொச்சியிலிருந்து புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கரடியனாறுக்கும் செல்வதற்கே ஹெலிகொப்டரை வழங்க பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
திருகோணமலையிலிருந்து கடந்த 2 ஆம் திகதி கேணல் சொர்ணம் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உட்பட ஐவர் ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி சென்றிருந்தனர்.
இவர்களே சம்பூர் திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கேட்டபோது அதனை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது.
இது போன்று, இம் மாத முற்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குச் சென்ற கேணல் பானுவும் மற்றும் உறுப்பினர்களும் எதிர்வரும் 2 ஆம் திகதி கரடியனாறு திரும்புவதற்கு ஹெலிகொப்டர் வசதி கோரப்பட்டது. எனினும் அதுவும் பாதுகாப்பு அமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் வன்னியிலிருந்து தரை வழியாக மட்டக்களப்பிற்கு புலிகளின் அணியொன்று இராணுவப் பாதுகாப்புடன் சென்று திரும்புவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதனையும் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
இதற்கான கோரிக்கைகள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக விடுக்கப்பட்டிருந்தது.
இதே நேரம் ஐரோப்பாவிலிருந்து கொழும்புக்கு திரும்பும் இரு புலி உறுப்பினர்களை ஓமந்தை சோதனை நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஓமந்தையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்த்தனர்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/05/20050531152858vavuniabudha203a.jpg' border='0' alt='user posted image'>
சர்ச்சைக்குரிய ஓமந்தைப் புத்தர் சிலை
வவுனியா ஓமந்தை பிள்ளையார் கோவில் காணியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எழுந்துள்ள நிலைமையை நேரில் கண்டறிவதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அங்கு விஜயம் செய்து பொதுமக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக அந்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
ஆலயக் காணியின் உறுதிப்பத்திரத்தைத் தரவேண்டும் என்று படையினர் ஆலய குருக்களிடம் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவர் ஊரைவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று விட்டதாகவும் ஓமந்தைவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு பரம்பரைகளாக அந்த ஆலயத்தைப் பராமரித்து, பூஜை வழிபாடுகளை நடத்தி வந்த குடும்பத்தைச் சேர்ந்த குருக்களே அச்சம் காரணமாக ஊரைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக் கோவில் காணியில் புத்தர் சிலையை நிறுவியதுடன், இங்கு புராதன பௌத்த ஆலயம் இருந்ததாகக் காட்டும் வகையில் அறிவித்தல் பலகை ஒன்றை படையினர் வைத்துள்ளதாகவும் ஊர்வாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
புத்தர் சிலையை வைத்திருப்பதன் காரணமாக தமது வழிபாடுகளை உரிய முறையில் செய்ய முடியாமல் இருப்பதுடன், அங்குள்ள மக்கள் மத்தியில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று வந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையக அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.
இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
இதற்கிடையில் யாழ். சாவகச்சேரி கச்சாய் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு சிறுமி உட்பட மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்டிருந்த கிணறு ஒன்றைத் துப்புரவு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருளைப் பரீட்சித்துப் பார்த்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்; 22 வயதுடைய கந்தசாமி காண்டீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; யாழ் மாவட்ட பதில் நீதவான் எம்.திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன், இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
kuruvikal Wrote:பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புத்தர் மனிசனைப் போட்டு படுத்திறாரா அல்லது மனிசன்
புத்தரை போட்டு படுத்திறானா? :roll:
பாவம் அந்தாள் அரசனாக அரண்மனையில் வாழ விரும்பாமல்
மரத்துக்கு கீழ போய் நிம்மதியா குந்தி இருந்தார்.
இவர்கள் அவரை கொண்டுபோய் நடுரோட்டில வைச்சிருக்கினம்.
பத்தாததுக்கு இராணுவ பாதுகாப்பு முள்ளுக்கம்பி பாதுகாப்பு பெற்றோல் கான் :evil:
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி :!: :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
kuruvikal Wrote:பாவம் புத்தர்...மனிசனைப் போட்டு படுத்திறபாடு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி மனுசன் புத்தரைப் போட்டு படுத்திற பாடு எண்டு நொல்ல வேணும் அந்த மனுசன் நிம்மதியா இருந்துச்சு இப்ப தனக்கு கிட்ட எப்ப குண்டு வெடிக்கும் எண்டு பயத்திலை எல்லோ இருக்கிறார்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வவுனியாவில் தாக்கப்பட்டது தமது ஒலிபரப்பு நிலையம் அல்ல என்று சன் தொலைக்காட்சி கூறுகிறது
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/06/20050602152328suntvattack.jpg' border='0' alt='user posted image'>
<b>வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையம்</b>
இலங்கையில் வவுனியாவில் நேற்று குண்டு வீசித் தாக்கப்பட்ட மறு ஒலிபரப்பு நிறுவனம் தங்களுக்கு சொந்தமானது அல்ல என்று சென்னையில் இருந்து இயங்கும் சன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு நிலையத்தின் மீது நேற்று இரவு 1.45 மணியளவில் இனந்தெரியாதவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் அந்த நிலையம் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அந்த நிறுவனத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும், இலங்கையில் தமக்கு மறுஒளிபரப்பு நிலையமோ, ஒளிபரப்புக்க் கூடமோ அல்லது கிளை நிறுவனமோ எதுவும் கிடையாது என்று சன் தொலைக்காட்சி நிறுவனம் இன்று சென்னையில் அறிவித்துள்ளது.
அதேவேளை சன் நிறுவனம் இலங்கையில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் வவுனியாவில் தாக்குதலுக்கு உள்ளான மறு ஒளிபரப்பு நிலையத்துக்கும் சென்னை சன் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தகவலறிந்த வட்டாரங்களும் கூறுகின்றன.
பிபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|