Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய உலக சாதனை
#1
புதிய உலக சாதனை
எழுதியவர்: 'மண்' சிவராஜா

சாதனையாளர்

செல்வன் துஸ்யந்தன் சத்தியமூர்த்தி

இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் சத்தியமூர்த்தி தொடர்ச்சியாக சுரத்தட்டு இசை (Keyboard) மீட்டி புதிய உலக சானையை நிலைநாட்டியுள்ளார். ஒரு வயதுக் குழந்தையாக யேர்மனிக்கு தனது குடும்பத்தவர்களுடன் இடம் பெயர்ந்த இவர், இலங்கையின் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது 21 வயது நிறைந்துள்ள செல்வன் துஸ்யந்தன் தனது உலக சாதனை முயற்சியை 12-05- 2005 அன்று பகல் 12:00 மணிக்கு ஆரம்பித்து 15.05.2005 அதிகாலை 4:02மணிக்கு முடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். 62 மணி.15 நிமிடங்கள் இவரின் சாதனை நேரமாகும். அமெரிக்க நாட்டவரான முன்னைய சாதனையாளர் ரண்டி றும்பெலோவ் (Randy Rumbelow) தனது சாதனையை 4-08-2004 தொடக்கம் 6-08-2004 வரையிலான 53 மணி நேர உலக சாதனையை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் இதனை முறியடிக்கும் வகைகயில் 9 மணி 15 நிமிடங்கள் கூடுதலான நேரமெடுத்து பழைய சாதனை முயற்சியை முறியடித்து புதிய உலக சாதனையாளராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இவரின் ஆரம்ப கால சுரத்தட்டு இசை ஆசிரியராக திரு மகேஸ் ஆசிரியர் இருந்துள்ளார். அவரிடம் முறையாகப் சுரத்தட்டு இசையை பயின்றார். அத்துடன் யேர்மன் பாடசாலையிலும் இதை ஒரு பாடமாகப் பயின்று இன்று ஒலி இசைத்துறையில் உயர் படிப்பை மேற்கொண்டுவருகிறார்.

தனது கல்வியை யேர்மன் மொழியில் பயின்றாலும் தற்போது தமிழ் ஆங்கிலம் டொச் மொழிகளை எழுத பேச வாசிக்க ஆற்றல் படைத்துள்ளார்

இவரின் இந்த உலக சாதனை வெற்றி பெறுவதற்கு இவரின் பெற்றோரின் பெரு முயற்சியும் முக்கிய காரணமாகும். இவர் சாதனை முயற்சியில் ஈடுபட இராட்டிங்கன் நகர அரச அரசசார்பற்ற தாபனங்களும் யேர்மன் பத்திரிகைள் தொலைக்காட்சிகள் வானொலிகளும் யேர்மனிய மக்களும் துருக்கிய மக்களும் நிறைந்த ஆதரவு கொடுத்து உதவினார்கள். ஆனால் நமது தமிழ் மக்களின் ஆதரவு குறைவாக இருந்தது.


இவரது முயற்சிகளாக:

1.யேர்மனி, சுவீஸ்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளில் பல பாடல் போட்டிகளில் கலந்துகொண்டதுடன் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

2.பல இசைக்குழுக்களுடன் சேர்ந்து இசை அமைத்துப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்

3.தானே மெட்டமைத்துப் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

4.எட்டுப் பாடல்கள்கொண்ட அழகே!..அழகே!.. என்ற இசைப் பேழையை வெளியீடு செய்துள்ளார்.

5.சுவீஸ் நாட்டில்; தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுவீஸ் பொப் ஸ்ரார் (Popstars) பாடல் போட்டியில் இரண்டு சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்.

6.சுனாமிப் பாடல்களுக்கான இசையமைப்பை தானே தனித்து இயக்கியுள்ளார்.

7.இந்தியா ராஜ் தொலைக்காட்சி (Raj TV) நடாத்திவரும் ராஐ கீதம் பாடல் போட்டியில் நான்கு சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். அடுத்த மாதம் 20ம் திகதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

[அப்பால்-தமிழ் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது]

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி நிதர்சன்
[b][size=18]
Reply
#3
தகவலுக்கு நன்றிகள்.. சாதனையாளர் மேலும் சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றி நிதர்சன். இப்போதுதான் இதுபற்றி அறிந்தேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
சாதனையாளருக்கும் அறியத்தந்ததற்கும் நன்றி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#6
சாதனையாளருக்கு வாழ்த்துக்கள் பற்பல சாதனைகள் படைத்திட இணைத்த நிதர்சனுக்கும் நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
எமது உற்சாக வரவேற்பு துஸ்யந்தனுக்கு. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

!
Reply
#8
சாதனையாளருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)