Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#21
நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்போறியாக்கிறதா? உற்சாகப்படுத்துகிறதா? நல்லதொரு தலைப்பு ஆ ஊ என்பதற்கிடையில் இணையத்துக்கு சென்று பார்த்து செய்தி சொல்லும் காலமிது...சிறிலங்காவில் இருக்கும் பெரும்பாலனா வானொலிகளுக்கு பிரதேச ரீதியான செய்தியாளர்கள் உள்ளனர். அனால் எங்கள் நாட்டு (கனடா) தமிழ் வானொலிகளுக்கு தனியான செய்தியாளர்கள் இல்லை காரணம் தொழிநுட்ப வசதி. அவர்கள் இணையத்தில் வரும் செய்திகளை அப்படி பிரதி செய்து போடுகின்றனர். இதற்க்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லாம் என்று நினைக்கின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர். புதினம் இல்லை என்பதால் அவர்களால் செய்தியை சுயாதீன மாக வெளியிட முடியவில்லை இது தொழிநுட்ப்பத்தால் வந்த சோம்பொறித்தனமாகும். அடுத்து தொலை பேசியை எடுத்துக் கொண்டால்... இப்போது மக்களால் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று அழைக்கப்படுகின்றது. காரணம் குடும்பச்சண்டைமுதல் குழுச்சண்டைகள் வரை தொலைபேசியால் தான் வருகின்றது. அதை விட காதலர்களைக் கூட இது சோம்பொறிகளாக்குகிறது. பொதுவாக எமது நாட்டில் காதலர்கள் பூங்கா மற்றும் வேறு இடங்களில் அடிக்கடிச்சந்திப்பார்கள் ஆனால் இங்கு இரவு பத்து பதினொரு மணிக்கு பிறகு நித்திரை கூட கொள்ளாமல் தொலைபேசியில் கதைப்பாங்கள்.. இது எதனால்.. தொலை பேசி இல்லை எனில் அவர்கள் நேரடியாக சென்று தமது அன்பு வார்த்தைகளை பகிர்ந்து கொள்வார்களே! அடுத்து இணைய அங்காடி மனிதனைசொம்பொறியாக்ககும் மிகப்பெரும் சக்தி எனலாம். முன்பு நேரடியாக வார்த்தக நிலையத்தக்கு சென்று தமக்கு பிடித்த பொருட்களை வாங்கு வார்கள் இப்போது இணையத்தில் சென்று விண்ணப்பித்து விட்டு கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தி விட்டு வீட்டிலே காத்திருக்கின்றனர்.. இது எதனால் தொழிநுட்பத்தால் தானே!
அதை விட் வீட்டுக்குரிய பாதுகாப்பு ஓலி பெருத்துவது என்பது மனிதன் தனது பொருட்கள் மீது அக்கறைப்படாமலிக்க வைக்கும் ஒரு பொருள் எனலாம்... அது பொருத்தா விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் போன வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள் ஆனால் அது பொருத்திய பின் வீதியில் நிற்போர் வருவோர் ஏன் அங்கால நாலு வீட்டுக்கு போய் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 5 மணிநேரத்தில் செய்கின்றனர்.. இது அவர்கள் சோம்பொறித்தனத்தை காட்டுகின்றது... இதெல்லாத்தையும் தெரிந்து கொண்டு எதிர்தரப்பில் இருக்கும் வாதிகள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி பேச வெளிக்கிட்டாச்சு எதையாவது பேசுவோம் என்று பேசிக் கொண்டீக்கின்றார்கள்.... அடுத்து நம் வாழும் நாடுகளில் ஒரு 100 மீற்றர் எவராவது நடக்கின்றீர்களா? எதற்கெடுத்தாலும் மகிழுந்து அல்லது பேரூந்து என்று நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம் வளந்து வரும் விஞ்ஞானத்தால் மனிதன் வேலையின்றி சோம்பொறியாய் இருக்கபோகிறான்....அதன் காராணத்தால் உலகில் சனத்தொகை அதிகரிக்கப்போகிறது.. முதல் ஒரு நண்பர் எதிர்வு கூறியிருந்தார் தொழிநுட்ப வளர்ச்சியால் வேலையில்லாப்பிரச்சினை ஏற்ப்படாது என்று... அனால் அது கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜத்தில் அப்படியல்ல தொழிநுட்ப வளர்ச்சியால் தொழிவாய்பு அருகி வருகிறது குறிப்பிட்டு சொல்லப்போனால்..ஒரு 10 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது அப்படி செய்யும் போது 10 பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர்... இதனால் என்ன ஏறப்படும்?...ஆளில்லா விமானங்கள் (விமானியற்ற) மற்றும் மின்னியல் தொடரூந்த என்பவற்றால் எத்தனை பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர் எனபது எதிர்தரப்பில் இருக்கும் சோம்பொறிகளுக்கு தெரியவில்லை போலும்....அது தெரியமல் போவதற்க்கும் அவர்களுக்கு தொழிநுட்பம் தந்த சோம்பொறித்தனமே காரணம் ஏனெனில் எதையும் தமது பாட்டில் ஆராயும் திறன் அற்றவர்கள் தான் தொழிநுட்பத்தை நம்பி சோம்பொறிகளாய் உள்ளனர்...
ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு நீங்கள் உங்கள் தொழிநுட்பத்தையே புதியன எனக் கொண்டால் அது முத்தோரின் பிழையல்ல.. அதே நேரம் இந்த வார்த்தையை நான் எதிர்ப்பவன் காரணம் இந்த வார்ததை எதற்காக சொல்லப்படுகின்றது? பழையன கழிதல் என்றால் கட்டிய பழைய மனைவியையோ! அல்லது பெற்றவர்கள் வயதான பின் அவர்கள் பழையவர்கள் என்று ஒதுக்குவதற்காய் சொல்லப்பட்டதா? அல்லது ஏகபத்தினி விரதன் என்று பழைய காலத்தில் இருந்து வஇப்போது வரை வரும் அந்த தத்துவத்தை புதியதாக்கி உங்கள் விஞ்ஞானயுகத்தில் இன்றொன்று நாளை ஒன்று என்று வாழ்வதா?
இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது. சுனாமி வந்ததை தொழிநுட்பம் கண்டு பிடித்ததாம்.. ஆமாம் கண்டு பிடித்ததால் தான் இத்தனையாயிரம் பேர் இறந்தனரோ? நான் இங்கு நன்மை தீமைகளை பற்றி பேச வராததால் சிலவற்றைபற்றி விரிவாக பேசமுடியாமல் உள்ளது. நாங்கள் நுனி மரத்தில் இரந்து மரத்தை வெட்டுவதற்க்கு என்று ஆராயமல் உங்களை போல் தொழிநுட்பத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல ஆனால் நுனி மரத்தில் இருந்துதான் வெட்ட வேண்டும் என்ற கட்டாயம்் அதனால் தான் வெட்டுகின்றோம்...தொழிநுட்பத்தால் சோம்பொறிகளாய் இருப்பதிலும் நுனி மரத்தில் இருந்து அடிமரத்தையாவது வெட்டுகின்றோமே! நீங்கள் மரத்தில் இலை புடுங்குவதற்க்கு கூட தொழிநுட்பத்தை நம்பியிருக்கின்றீர்களே! இது வெட்க கேடாய் தெரியவில்லையா? இது சோம்போறித்தனமாய் தெரியவில்லையா?
விமானம் ஏறி மட்டுந்தால் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா? அதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்ப்பட வில்லை ஆனால் உங்கள் தொழிநுட்பம் தந்த விமானத்தால் ஓசோன் படலம் ஓட்டையாக அதிலிருந்து நச்சு கதிர்கள் வெளிவருகின்றது என்பது உங்களுக்கு எதிர்தரப்பினர்கு தெரியமல் போனது அவர்களின் துரதிஸ்மே! அதைவிட ஜப்பானில் உங்கள் விஞ்ஞானம் தந்த அணுவாயுதத்தால் இன்று எத்தனை பேர் குறைபாடுடன் வாழ்கின்றனர் என்பதும் இவர்களுக்கு தெரியவில்லை..என்று கூறி
தொழிநுட்பம் மனிதனை எந்த வகையிலும் உற்சாகப்படுத்த வில்லை மாறாக அது சோம்பொறியாக்குகிறது என் ஆணித்தரமாக கூறி விடைபெறுகின்றேன்
நன்றி வணக்கம்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#22
விஞ்ஞானம் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற அணியிலிருந்து வந்த நடா அவர்கள் நன்றாகவே கேட்டார்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் என முன்னோர்களே கூறியுள்ளார்கள்.. மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்கள்.. அதனால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? சுனாமியின் வருகையைக்கூட விஞ்ஞானம் அறிவித்தீருக்கிறது.. அதை அறியாமல் விட்டது உங்களின் பழமை வாதம்.. மலேரியா காச நோய் போன்றவற்றை தடுத்திருக்கிறது.. 10000 கிலோ மீற்றருக்கு அப்பால் உங்களுடைய பெற்றோர் தும்மியதை தும்மி முடிந்த ஒரு விநாடியில் உங்களால் அறியமுடிகிறது... ஆக, இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்.
அளவுக்கதிகமா ஆசைப்பட்டு, தேடும் அவஸ்தைகளை விஞ்ஞானத்தின்மீது போடாதீர்கள்.. என்று கூறி, விஞ்ஞானம் மனிதனை உற்றாகப்படுத்துகிறது.. நீங்கள்தான் வெள்ளைத் தாளைப் பார்ப்தைவிடுத்து.. அதிலுள்ள சிறு கரும்புள்ளியைமட்டும் பார்க்கிறீகளெனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நடா அவர்கள். அவருக்கு எமது நன்றி.
அடுத்து, 'நுனி மரத்திலிருந்து அடி மரத்தை' வெட்டுவோர் என்ற பழிக்காளாகியுள்ள அணியின் கருத்தைப் பார்ப்போம்.
.
#23
அடுத்து, சாத்திரி அவர்கள் சத்தான கருத்துகளை முன்வைக்கிறார்... நோய்கள் பெருகியது எதனால்? குண்டுகளும் கதிர்வீச்சுத் தாக்கங்களும் மலிந்தது எதனால்? புனிதமாகப் போற்றப்பட வேண்டிய மத அனுட்டானங்கள்கூட கணனிவரை வந்திருக்கிறதே.. எதனால்? விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது.. அதனால் என்கிறார்.
வெற்றிலையில் போடும் மைத்துளியிலே பூனைக் கண்காரர்களுக்க தெரிபவை எல்லாத்தையும் யாகூவிலும் கூகிளிலும் தேடுகிறார்கள் என்கிறார்.. சாமிகளைக் கும்பிட கணனியில் வசதி இருக்கென்றவர்.. உண்டியல் பணம் எப்படி செலுத்துவதென்பதை சொல்லவில்லை.. உண்டியல் பணம் செலுத்தும் இணையம் செய்யத் தெரிந்தவர்கள் எனக்கொன்று செய்து தந்தால் நன்றாக இருக்கும்..
விஞ்ஞானத்தால் சோம்பேறியானவர்களால் சாஸ்திரி அவர்களின் தொழிலும் பட்டுப்போச்சு.. அடுத்து வருபவர் என்ன கூறுகிறர் என்பதைப் பார்ப்போம்..!!
.
#24
ஆடத்து குளக்காட்டான் கருத்துக்களை அள்ளிக்கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்.. விஞ்ஞானம் தந்த விமானத்தில் புலம் வந்து.. (ம்.. பலர் விமானத்தால் மட்டுமா வந்தார்கள்.. கையால் விசா கீறி.. படம் ஒட்டியும் வந்தார்கள்) இணையத்தில் பட்டிமன்றம் நடாத்திக்கொண்டு சோம்பேறியாக்குகிறது என்றால் என்னையா அர்த்தம் என்று ஆரம்பிக்கிறார்.. தொலைபேசியைப் பற்றி சொன்னார்.. விவசாய உற்பத்திப் பெருக்கத்தைப்பற்றி விபரித்தார்... நோய்களால் ஏற்படும் இழப்புகளின் குறைப்பை சுட்டிக்காட்டினார்... விஞ்ஞானம் வசதிகளைத் தந்திருக்கிறது.. அதற்காக மனிதன் புலம்பெயர்கிறான்.. விஞ்ஞானத்தின் விளைவுகளால் மனிதனின் தேடல் அதிகரிக்கிறது.. தேடல் மனிதனை உற்சாகப்படுத்துகிறதே ஒழிய சோம்பேறியாக்கவில்லை என்று ஆணித்தரமாக கருத்தை முன்வைத்த குளக்காட்டானுக்கு நன்றிகள்.. இதற்கு அடுத்த அணியிலிருந்து என்ன கருத்து வருகிறது என்று பார்க்கலாம்.
.
#25
அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..
நானும் ஒரு வானொலி கேட்டேன்.. செய்தி வாசிக்கும்போது பின்னணி இசை போகிறது.. தலைப்புச் செய்திகள்.. சிறிதுநேரம் இடைவெளி.. ஆனால் பின்னணியில் இசை.. பிறகு ஒவ்வொரு செய்திகள்.. இடையில் வரும் இடைவெளியில் பின்னணி இசை.. பிறகுதான் தெரிந்தது.. புதினம் முன்பக்கத்திலுள்ள செய்திகளை தலைப்பு செய்திகளாக வாசிக்கிறார்கள்.. மெளசால் அதற்குரிய பக்கங்களை அழுத்தி.. விரிவான செய்திகளை வாசிக்க எடுக்கும் நேர தாமத்தை பின்னணி இசையால் நிரவி சமாளிக்கிறார்கள்.. பேப்பரில்லாமல் பேனை இல்லாமல் அலைச்சலில்லாமல்... நல்ல முன்னேற்றம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அருமையாகச் சொன்னார்.. காதலின் மென்மையே முகபாவங்களில்தானே குவிந்திருக்கிறது.. அதை இந்த விஞ்ஞானம் தொலைபேசியால் தொலைத்துவிட்டது.. தென்றல்வீசும் பூங்காவில் பறந்தாடும் கூந்தல் வாசத்தில் கிறங்கிக் கதைபேசும் கணங்களை.. விஞ்ஞானம் தந்த சோம்பேறித்தனம் தூக்கி எறிந்துவிட்டது என்று அனுபவித்தவர்போலச் சொல்கிறார்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..
அதுமட்டுமா..
"ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள்."
இதுமட்டுமா?
"இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது."
இறுதியாக,
"விமானம் ஏறி மட்டுந்தான் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா?" என்றும் கேட்டிருக்கிறார்.
அடுத்து, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து என்ன கருத்துகள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து ஈஸ்வர், விக்டோர்ப், அம்மு, வசி ஆகிய நான்கு யாழ் கள அன்புறவுகளும்... 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, ஈழப்பிரியன், நிலவன், இளைஞன், மதன் ஆகிய ஐந்து யாழ் கள அன்புறவுகளும் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து அணித்தலைவர்கள் தமது தொகுப்புரையை வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.

(விழா அமைப்பாளர் தூயா அவர்கள் அவசரமாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.. மேடைக்கு சோடாப் போத்தல்கள் இன்னும் வந்து சேரவில்லை.. அவை வந்தால்தான் வீடீயோவுக்கு வடிவா இருக்கும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
.
#26
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தூயாவிற்கு !

எமது அணியில் ஒருவர் குறைவதால் அந்த இடத்தை நிரப்ப திரு.குருவி அவர்களை அன்போடு அழைத்திருந்தேன். அவரும் என் அழைப்பிற்கும் ஏற்கனவே வேறு சில உறவுகளின் வேண்டுகோளிற்கமையவும் சம்மதம் தெரிவத்துள்ளார். எனவே அவரது பெயரையும் எமது அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.
#27
எங்கும் எதிலும் எப்பவும் நீதி தவறாத நடுவர்(கள்) அவர்களே ! மௌனமாக இருந்தாலும் விழிப்பாகவும் உற்சாகமாகவும் பட்டிமன்றத்தை ரசித்துக் கொண்டிருக்கும் கள அன்பர்களே ஆதரவாளர்களே.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள். ஊரறிந்த உண்மைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை என்பதுதான் உலக நியதி.
உங்களெல்லோருக்கும் தெரிந்த உண்மை எதிரணியினர்க்கு மட்டும் தெரியாமல் போன மர்மம் என்ன. அல்லது நித்திரை கொள்பவனைப் போல் நடிக்கிறார்களா.

முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்.

பட்டிமன்றத் தலைப்பை அவையோர் எல்லோரும் கவனமாகப் பாருங்கள். ஏனெனில் எதிரணியினர் தலைப்புக்கு சம்பந்தமில்லாத பல விடயங்களை இங்கு கூறி உங்கள் கவனத்தை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள்.

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உங்களை சோம்பேறியாக்குகின்றதா அல்லது உற்சாகப்படுத்துகின்றதா?

நான் இங்கே சோம்பேறியாக்கவில்லை என்பதற்கு சில தரவுகள் தருகிறேன். ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்.

இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட விவசாயி ஒருவன் மண்வெட்டியை மட்டும் நம்பியிருந்த காலத்தில் விடியக்காலை மூன்று மணிக்கு தோட்டத்தில் இறங்கி மாலையில் இருட்டும் மட்டும் வேலைசெய்தான். உழவு இயந்திரம் வைத்திருக்கிற இபபோதைய விவசாயி ஒரு பத்து மணி வாக்கில் தோட்டத்துக்கு போய் அப்பிடியே ஒரு அரை மணித்தியாலத்தில் அந்த நிலத்தை உழுது போட்டு பிறகும் ஒரு அரை மணித்தியாலத்தில் மோட்டர் பம்ப் பாவித்து நீர் இறைத்து விட்டு மிகுதி நேரம் முழுக்க வீட்டில் படுத்து நித்திரை கொண்டிருந்தான் என்றால் நான் எதிரணிக்கு தலை வணங்குகிறேன். மாறாக அவன் இன்னும் பல ஏக்கர்களுக்கு தனது விவசாயத்தை விஸ்தரித்து தனது மூதாதையர் போலவே அதிகாலை எழுந்து தொழிலுக்கு போகிறானே அது ஏன்

அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.

ஆகாய விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று தொழில் வளர்த்த தொழில் அதிபர் இப்போது விமானத்தில் பறப்தில் செலவழித்த தனது பொன்னான நேரத்தை தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் மிச்சம் பிடித்திருக்கிறார்.

எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.

மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.
இதை எதிரணியினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எதிரணியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் புதிது புதிதாக நோய்கள் வருவதாக. வரும்தானய்யா நீங்கள் பழைய நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க புதிதாக நோய்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பெயர்தான் இயற்கைச் சமநிலை. பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது இயற்கையின் விதி. நீங்கள் இறப்புத் தொகையைக் குறைக்க முயன்றால் மனிதர் போவதற்கும் வழி வேண்டுமல்லவா. அல்லது ஒரு சுனாமியோ நிலநடுக்கமோ கொண்டுபோகும் இது நவீன தொழில்நுட்பத்தின் தாக்கமல்ல என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னுமொருவர் சொன்னார் 10 கிலோவைத் தூக்கிக் கொண்டு 100 மீற்றர் நடக்கக் கஸ்ரப்படுவதாக. அது உண்மைதான் நவீனதொழில் நுட்பத்தின் பின்விளைவு அது. உங்களைப் போன்ற சில சோம்பேறிகளை மேலும் சோம்பேறியாக்கி விட்டிருக்கிறது வேதனைக்குரிய விடயம். ஆனால் நாம் பேசுவது முன்னேறத் துடிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு நவீன தொழில் நுட்பம் வைக்கும் சோதனையைப் பற்றி.

நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே.

இறுதியாக எனக்கு வாய்ப்பளித்த தூயாவுக்கும் சிறந்ததொரு முடிவை அறிவிக்கக் காத்திருக்கும் நடுவர் குழுவுக்கும் பார்வையாளர் சமூகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

!
#28
"முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்." என்ற அறிவுறுத்தலுடன் வந்துள்ளார் ஈஸ்வர் அவர்கள்.
விஞ்ஞானம் விவசாயம் போன்றவற்றில்.. உற்பத்திக்கான நேரத்தை மீதமாக்கி, ஏனைய முயற்சிகளுக்கோ அல்லது முயற்சிகளின் விஸ்தரிப்புக்கோ வழிவகுக்கிறது.. அதனால் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்கிறார் ஈஸ்வர்.
பழையது ஒன்று அற்றுப்போகும்போது, புதியது ஒன்று தோன்றத்தான் செய்யும்.. அதைப்போலத்தான் நோய்களும்.. இது இயற்கைச் சமநிலை.. இதை மறந்து எடுத்ததற்கெல்லாம் விஞ்ஞானத்தின்மீது பழிபோடாதீர்கள் என்கிறார் ஈஸ்வர்.
"நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே."
ஆக, சோம்பலும் உற்சாகமும் உன்னால்தான் வருகிறதே ஒழிய, விஞ்ஞானத்தினால் அல்ல எனும் கருத்துப்படக் கூறி தனது கருத்தை நிறைவுசெய்துள்ளார். அவருக்கு நன்றி.
அடுத்ததாக, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து ஒருவர் கருத்துகளைத் தர முன்வருவார். வாருங்கள்!
.
#29
நடுவர்கள் சோழியன் மாயமான் சண்முகிக்கும் முகமூடிகளுடன் சென்றிக்கு நிற்கும் கண்காணிப்பு குளுவுக்கும் நிகழ்ச்சியை நன்கு ஒழுங்கு செய்த தூயாவுக்கும் கணனிக்கு முன்னால் சக்கர நாற்காலிகளில் கொறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி வாதிகளுக்கும் எறும்பை விட சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் எமது நண்பர்களுக்கும் அமைதியுடன் இருந்து எமது வாதம்களை ரசித்துக் கொண்டிருக்கும் யாழ் கள உறுப்பினருக்கும் வணக்கம்.எதிர் தரப்பு வாதிகள் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானம் முன்னேறியதால் எல்லோருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய கூடியதாக உள்ளதாக கூறி தமது சோம்பேறித் தனத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நன்றிகள்.நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாகிறோம் என்பதற்கு நிறையவே சொல்லலாம்.நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம் என்று எண்ணுகிறேன்.அதாவது இப்போது பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்து நடக்க தொடங்க முதலே கணனியில் விளையாட கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.அப்படியே வளரும் பிள்ளை சிறு வயதில் பெற்றேர்கள் சொல்லிக் கொடுத்தபடியே வளர்ந்த பின்பும் தொடர்கிறார்கள்.உதாரணத்துக்கு 22 பேருடன் விளையாட வேண்டிய உதைபந்தாட்டத்தை தனித்து ஒருவர் இருந்தபடியே உடம்புக்கு ஒரு கஸ்டமும் இல்லாமல் விளையாடுகிறார். இதனால் அவர் சுத்த சோம்பேறியாவது மட்டும் அல்ல மற்றவர்களுன் சேர்ந்து விளையாடும் போது ஏற்படும் பொறாமை இல்லாமல் இருத்தல் விட்டுக் கொடுப்பு போன்றவை கூட என்னவென்று தெரியாமல் ;வளர்ந்துவிடுவார.அத்துடன் இவர்கள் 40 வயதுக்கு முதலே பலூன் உடைந்த மாதிரி டொப்பு டொப்பு என்று மண்டையைப் போட்டுவிடுவார்கள்.தப்பித் தவறி இருந்தாலும் சட்டைப்பை முட்ட மாத்திரைகளுடன் இருப்பார்.எனவே தான் நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மனிதர்களை சோம்பேறி ஆக்குவதோடு நின்றுவிடாது மனிதரின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றது.
கடைசியில் ஈஸ்வர் கணனியில் கணக்காய்வாளர் எவ்வளவு குறுகிய நேரத்தில் வேலையை முடிக்கிறார் என்று.உண்மைதான்.ஆனால் ஒரு மாதம் மின்சாரம் நின்றுவிட்டால்அவரின் நிலைமை என்னவாகும் என்பதை எண்ணவில்லையே.நனறி வணக்கம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
#30
[size=14]வியாசனின் உட்பட பலரின் வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பார்க்கும் வகையில் பட்டிமன்றத்தை பொழுதுபோக்கு பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#31
போட்டாரே ஒரு போடு! கேட்டாரே ஒரு கேள்வி!!
கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்.. அவர்தான் ஈழப்பிரியன் அவர்கள்!!
இதுதான் பரவாயில்லை என்று பார்த்தால்.. விட்டுக்கொடுப்பு.. முன்னேறவேண்டுமென்ற போட்டிமனப்பான்மை போன்ற உணர்வுகளை அறியாதவர்களாகவே மனிதனை ஆளாக்கி.. அவனது ஆயுளை ஆகக் கூடியது நாற்பது வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் வேலையை விஞ்ஞானமானது வெகுகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது எனும் சிந்தனைக்குரிய அரிய கருத்தொன்றையும் தெரிவித்திருக்கிறார் ஈழப்பிரியன் அவர்கள்.
தாயகத்திலே 80களிலே எனது உறவினர் மத்தியிலே 'சலரோகம்' என்ற வியாதி இல்லையென்று கூறுமளவிற்கு வெகு குறைவாகவே இருந்தது.. அதனால் நான் யோசித்ததுண்டு.. அந்த காலநிலையில் சலரோகம் வெகுவிரைவில் வராது என.. ஆனால் சென்ற வருடம் போனபோது.. பெரும்பாலானவர்கள் சலரோகத்துக்கு ஆட்பட்டிருந்தனர்.. அங்கும் விஞ்ஞான சாதனங்களின் பாவனை அதிகரித்திருக்கிறதுதானே.. உதாரணமாக முன்பு சைக்கிள் இருந்த வீடுகளில் எல்லாம் மோட்டார் சைக்கிள்கள்தானே.. ஆக, ஈழப்பிரியனின் கருத்தைப் பார்க்கையில் விஞ்ஞானம் மனிதனைச் சோம்பேறியாக்கி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது..
இந்த அச்ச உணர்வைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் தற்போது 'எற்சாகப்படுத்துகிறது' என்ற அணியைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்..

விக்டோர்ப், அம்மு, வசி, குருவி... இவர்களுள் ஒருவரை தற்போது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
#32
ம்.. தொடருங்கள் நேரடியாக பார்க்கும் பட்டி மன்றம் போல உள்ளது. அனைவரின் வதத்திறன்களும் அருமை. ஆழ்ந்து சிந்திக்கத்தூண்டுகின்றன. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#33
நடுவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!
மேடையில் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் எதிர்தரப்பினர் எங்கே நித்திரை கொள்கிறார்களோ தெரியவில்லை 48 மணிநேரங்களுக்கு மேலாக பட்டி மன்றத்தில் இது வரை எதிர் தரப்பினர் பதிலளிக்க வில்லை எனவே அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டர்கள் போல... இனி தீர்ப்பை வழங்குங்கள் அல்லது எமது அணியில் அடுத்த உறுப்பினர்க்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.... எனவேண்டுகின்றேன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#34
மதிப்புக்குரிய பட்டிமன்ற நடுவர்களே எதிரணி உறவுகளே எமதணிக் கருத்துக் கண்மணிகளே..எல்லோருக்கும் தமிழ் தாயின் பெயெரால் முத்தமிழ் வணக்கங்கள்..!

இப்பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள ஆரம்பத்தில் அழைத்த தமிழினியினதும் துயா பாப்பாவினதும் கோரிக்கைகளை ஏற்கத் தவறியமைக்காக அவர்களிடம் மன்னிக் கேட்பதுடன் எங்கள் கருத்துக்களையும் உள்வாங்க விரும்பிய கருத்துச்சகபாடி வசம்புவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு எமது பக்க கருத்தைத் தருகின்றோம்...!

முதலில் சோம்பேறித்தனம் என்பதற்கும் விஞ்ஞானத்துக்கும் இங்கு பட்டிமன்றக் கருப்பொருளாக வைக்கப்பட்ட அம்சத்துக்கும் இடையேயான தொடர்பு சரியா...???!

விஞ்ஞானம் என்பது இந்த பிரபஞ்சம் தோன்றிய போதே தோன்றிய ஒன்று....அதை மனிதன் தனது பகுத்தறிவால் நுண்ணறிவால் ஆராய்ந்து விளங்கிக் கொண்டு அதன் வழி தனது வசதிகளுக்கு ஏற்ப விதிகளையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் புகுத்தி நவீன விஞ்ஞானத்தின் விளைவுகளைத் தந்து வருகின்றான்...!

மனிதனே ஒரு விஞ்ஞானம்தான்...மனித உயிரியல் விஞ்ஞானம் இதைத் தெளிவாகச் சொல்கிறது...! அப்படிப்பட்ட விஞ்ஞானத்தினை கண்டறிந்து.. விளங்கித் தெளிந்து... புதுபுது வடிவங்களுக்குள் அதைப் புகுத்தி.... வளர்க்க மனிதன் என்பவன் தொடர்ந்து முயற்சித்ததன் பலனே இன்றைய நவீன விஞ்ஞானத்தின் விளைவுகள்...! அவற்றில் சில பாதகங்களும் பல நன்மைகளும் அடங்கும்...அந்த நன்மைகளையும் பாதகங்களையும் கூடச் சொல்வதும் விஞ்ஞானந்தான்...அதே விஞ்ஞானம் தான் பாதகங்களுக்கு விடையும் சொல்கிறது சொல்லிக் கொண்டும் இருக்கிறது....!

இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!

<img src='http://img98.echo.cx/img98/9563/acsloth5mw.gif' border='0' alt='user posted image'>

(In fact it is the laziest animal in the world.It sleeps hanging from a tree and hardly even moves)

நமது எதிர்தரப்புவாதிகளையும் விஞ்சிய உலகில் வாழும் மிகவும் சோம்பேறி விலங்கு..!

இதில் என்ன வேடிக்கை என்றால் பாவம் எதிர்தரப்புவாதிகள்... அவர்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு அடங்கிக்கிடக்கும் ஒரு உள உடற் பலவீன நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்...அதுதான் சோம்பேறித்தனத்துக்கு ஆளாகி உள்ளனர் போலும்...! அதுதான் எய்தவன் இருக்க அம்பை நோகின்றனர்....!

சோம்பேறித்தனம் என்பது இவர்களைப் போல "மனிதனுக்கு" மட்டுமல்ல...சில உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் ஒரு வகை உடற்தொழிற்பாடு மற்றும் மனோவியல் சார்ந்த நோய்.. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் அந்த உயிரினங்களுக்கும் சோம்பேறித்தன்மை என்பது... என்ன இவர்களைப் போலவே உலகில் படைக்கப்பட்டுள்ள சக மனிதர்களின் கடும் சிந்தனையாளும் உழைப்பாலும் வளர்ந்த நவீன விஞ்ஞானத்தின் விளைவால் வந்ததா..????! சில பிராணிகள் இரவில் சோம்பேறியாகத் தூங்கி பகலில் சொற்ப நேரம் தொழிற்படுங்கள்...இன்னும் சிலதுகள் மாறியும் செயற்படுங்கள்... இவை அவை அவை தனிப்படக் கொண்டுள்ள உடல், உள நிலை சார்ந்த விடயங்களின் தாக்கமே அன்றி மனிதன் படைத்த நவீன விஞ்ஞானத்தினதல்ல...!

காரணம்...இந்தச் சோம்பேறி மனிதர்களைப் போன்ற மனிதர்களால்தான் விஞ்ஞானமே ஆராய்ந்து அறியப்பட்டு புகுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது வினைத்திறனான விளைவைப் பெறுவதற்காக...! அப்படி ஒரு பகுதி மனிதர்கள் தொழிற்படும் போது இவர்கள் மட்டும் நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாவதாகக் கூறுகின்றனர்...இவர்கள் ஏன் அவர்களைப் போல.. இல்ல அதைவிட அதிகமாக சிந்திக்க்க செயலாற்ற முனையவில்லை...???! கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டு மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்க நினைக்கும் ஒருவகை நோய்த்தாக்கத்துக்கு உள்ளானதன் விளைவே இவர்கள் சோம்பேறிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்தக் காரணம்...! அது இவர்களின் தனிப்பட்ட உள உடற்குறைபாடுகளே அன்றி...வேறில்லை...! வேண்டும் என்றால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் இவர்களின் குறைபாடுகளுக்கு தீர்வு எட்ட இப்பவே செயற்பட முனைவோம்...காரணம்...இது இவர்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் சிந்திக்க விரும்புபவனையும் தவறாக வழிநடத்திச் சோம்பேறி வியாதிக்குள் தள்ளவே வழி செய்யும்...!

துலா மிதத்தல் போன்ற அடிப்படை விஞ்ஞானப் பொறிகளால் உடற்பயிற்சி பெற்றதாகவும் இப்ப அந்த அடிப்படை விஞ்ஞான நெம்புப் பொறிமுறை நவீனத்துவம் பெற்றதால் அந்த பயிற்சியைப் பெற முடியவில்லை என்று ஒரு வாதம் வந்தது.... முன்னர் துலா மிதித்துச் செய்த வேலையை இப்ப நவீன விஞ்ஞானம் புகுத்தப்பட்ட பொறி கொண்டு செய்யும் போது சக்தி, வள மற்றும் நேர விரயம் தவிர்க்கப்பட்டு அது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊக்கிவிக்கப்படுகிறது..! அதுமட்டுமன்றி தேவைகள் பெருகிவிட்ட உலகில் சக்தியையும் வளத்தையும் நேரத்தையும் மீதப்படுத்துவது இன்றியமையாததாகிறது...! அதற்காக பொறியைப் பாவித்துவிட்டு மூளையை ஓய்வுக்கு விட்டுவிட்டு உறங்கச் சொல்லி நவீன விஞ்ஞானம் சொல்லவில்லை...! அப்படிச் செய்வது உடல் உள நலத்துக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கூடாது என்று சொல்லித்தான் ஜிம் மற்றும் பலவகை விளையாட்டுக்கள் என்று உடற்பயிற்சி முறைகளையும் சாதனங்களையும் இந்தச் சோம்பேறி மனிதர்களின் பரிதாப நிலைகண்டு சிந்திக்கும் மனிதன் படைக்கின்றான்...! அதைக்கூட செய்யத் தவறும் இந்த சுய சிந்தனையையே சுமையாக எண்ணும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் தானா...??????!

நவீன விஞ்ஞானத்தால்...அதாவது ஒரு பகுதி மனிதனின் சிந்தனையால் பிறந்த விஞ்ஞானத்தால்... பல தீமைகள் என்று சொல்லி தமது சிந்தனைகளைக் குறுக்கி சோம்பேறிகள் ஆகும் மனிதப் பிரிவினரே...அந்தத் தீமைகளுக்கு என்ன பரிகாரம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவும் ஆராயவும் கண்டுபிடிக்கவும் அறிமுகப்படுத்தவும் முனையவில்லை..???! அதைச் செய்ய வேண்டாம் என்று என்ன நவீன விஞ்ஞானம் தடையா போடுகிறது...????! அப்படிப் தடைகள் போடப்படுவதாக எண்ணினால் அதை ஏன் உடைக்க முயலாமல்..சோம்பேறியாக்குகிறது என்று உங்களை நீங்களே சிந்தனையாலும் செயலாலும் செயலற்றவர்கள் ஆக்குகிறீர்கள்..???!

மனிதன் என்ன எந்த உயிரிக்கும் இயற்கையாக போராடக் கற்றுத்தரப்பட்டுள்ளது...அதைக் கூட செய்ய மறுக்கும் சோம்பேறி நோய் பிடித்தோரே... உங்களுக்கு உங்களைப் போன்ற சக மனிதரின் சமகால அரும் முயற்சியால் உதிக்கும் வளரும் நவீன விஞ்ஞானம் என்ன இயற்கைக் கடன் கழிப்பது கூட உங்களுக்கு அபந்தமாகத்தான் தெரியும்...அது அந்த நோய்த்தாக்கத்தின் விளைவே அன்றி வேறில்லை...!

எனவே அந்த உள உடல் நோயில் இருந்து வெளியே வர சுய சிந்தனையும் சுய ஆய்வும் அவசியம்...அதைச் செய்யக் கற்றுக் கொண்டு... வெறுமனவே விஞ்ஞானத்தைக் குறை சொல்லிக் கொண்டிராமல் அதை உங்கள் தேவைக்கும் எதிர்கால சந்ததியின் தேவைக்கும் ஏற்ப மாற்றியமைக்க முயலுங்கள்....அதுதான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இப்போ அவசியம் என்று கூறி எமது வாதத்தை நிறைவு செய்கின்றோம்...!

எம்மைத் தொடரும் எமதணி கருத்துக் கண்மணிகள் எமது அணிக்கு வலுச்சேர்க்க மேலும் கருத்துப்படை நடத்துவர் என்று முழங்கி விடை பெறுகின்றோம்...! எமது அலுவல்கள் காரணமாக எமது கருத்து வரத் தாமதிததற்கு பட்டிமன்றம் சார்ந்த அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#35
அம்மு சமூகமளிக்க தவறியதால், மழலை வசி அண்ணாவின் அணியில் இடம் பெறுகிறார்,
[b][size=15]
..


#36
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

இப் பட்டிமன்றத்தில் நானும் எனது கருத்தினை முன்வைத்திட ஆவல் கொண்டேன். இங்கே கருத்துக்களை முன்வைத்த அனத்து கள உறவுகளும் திறம்பட தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

எனது கருத்தினை அணித்தலைவர் வசம்புவின் அனுமதியோடு முன்வைக்கின்றேன்.

அதாவது திரு சியாம் அவர்களும் அவரின் அணியினரும் முன்வைத்த விடயங்கள் பல நவீன விஞ்ஞானமும் தொளில்னுட்பமும் மனிதனை சீரளிக்கின்றது என்கின்றார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனைப்போலவே நவீனவிஞ்ஞானமும் தொளில்நுட்பமும் எதனை செய்தாலும் எதிர்த்தரப்பினருக்கு திருப்தி ஏற்படுவது இல்லை. நண்பர் வியாசன் ஒரு கருத்தினை முன் வைக்கின்றார். அதாவது நவீன விஞ்ஞானத்தின் தாக்கத்தினால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதாம். அது என்னமோ வேதனையான விடையம்தான். அனால் அந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதென்பதை கண்டுபிடிக்கப் பயன்பட்டதுவும் ஒரு நவீன தொளில்நுட்ப கருவியே என்பதனை நண்பரைப்போன்ற பலர் அறிந்துகொள்ளல் வேண்டும். முன்னய காலங்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு அது என்ன நோயென்றே அறியாமல் இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல பல கடினமான சத்திர சிகிச்சைகளினைக்கூட நுணுக்கமாக நவீன விஞ்ஞானதொளில்நுட்ப சாதனக்களின் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எயிட்ஸ் என்னும் நோய் நவீனவிஞ்ஞானதொளில்னுட்பத்தினால் ஏற்பட்டதொன்றல்ல. அதனையும் கட்டுப்படுத்திட தேவைப்பட்டது விஞ்ஞானத்தின் வளர்ச்சியே என்பதனை எதிர்த்தரப்பினர் தயவுகூர்ந்து புரிதல் வேண்டும். நவீன தொளில்னுட்பங்கள் செயற்பாடுகள் யாவுமே மனிதனின் முன்னேற்றத்திற்கு கைகொடுப்பனவே. அவற்றினை தவறாக பயன்படுத்துவது நவீன தொளில்நுட்பத்தின் பயன்பாடு பற்ரிய அறிவு இல்லாதவரே.

நாம் நெல்லுக்குத்தான் நீரை பாச்சுகின்றோம், என்ன செய்ய அது புல்லுக்கும் அல்லவா போய் செருகின்றது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#37
மன்னிக்கவேண்டும் மதுரன் நீங்கள் அணியில் இல்லை. அடுத்ததாக நீங்கள் அணியில் இருந்தாலும் உங்கள் அணியில் ஒருவரின் வாதத்துக்கு பிறகு நீங்கள் உங்கள் வாதங்களை வைக்கமுடியாது. ஆதலால் உங்களுடைய வாதம் அகற்றப்படவேண்டும் நீங்கள் அகற்றிவிடுங்கள் அல்லது தூயா மட்டுறுத்துனர்கள் மூலம் இந்த வாதத்தை அகற்றி பட்டிமன்றத்தின் விதிமுறைகளை காப்பாற்றுங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#38
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏற்கெனவே கூறியது கடைப்பிடிக்கப்படும்.. ஆகவே, தயவுசெய்து அணிகளிலுள்ளவர்கள் எவரும் உணர்ச்சிவசப்படாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்!
நடுக்கடல் தாண்டிவிட்டோம்.. கள உறவுகளின் (இளைஞர்களின்) ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.. மேலும் பல பட்டிமன்றங்களுக்கு இது முன்னோடியாக அமையும் என நினைக்கிறேன்.. ஆகவே, எல்லோரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து பட்டிமன்றத்துக்குள் செல்வோம்!!
.
#39
பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போதே விஞ்ஞானத்தின் தோற்றமும் ஆரம்பமாகிவிட்டது.. மனிதனானவன் தனது பகுத்தறிவினாலும் நுண்ணறிவினாலும் தனது வசதிகளுக்கேற்ப விஞ்ஞானத்தின் மூலம் விளைச்சலைத் தருகிறான்.
அதுமட்டுமா? மனிதனே விஞ்ஞானமென்று சொல்கிறதாம் உயிரியல் விஞ்ஞானம்.. என்றெல்லாம் தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைக்கிறார் குருவிகள். (குருவிகள் அவர்கள் என்று கூறமுடியாததால் குருவிகள் என்றே கூறுகிறேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
விஞ்ஞானமானது நன்மைகளுடன் சில பாதகங்களைக் கூறினாலும், அவற்றுக்கும் விடையைச் சொல்லுகிறது.. ஆனால் நீங்கள்தான் தேடிக் கண்டறிந்து பலனடையாமல் சோம்பேறிகளாக இருந்துகொண்டு, விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது என, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள் என்பதுபோல, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியைக் கேட்கிறார்.
அதுமட்டுமா?
மனிதன் ஏதோ வகையில் இயங்கிக்கொண்டு இருக்கிறான்.. அதுதான் அடிப்படை என்கிறார்.
அதுதானே.. ஆகக் குறைந்தது அவனது இதயமாவது இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது? அதற்கு சோம்பல் வந்தால் மனிதனின் கதி என்னாவது?!
அப்படியானால் சோம்பல் என்றால் என்ன? சோம்பல் மனிதனின் உறுப்புகளில் இல்லை.. அவனது மனதில் இருக்கிறது.. அவனது சிந்தனையில் இருக்கிறது.. ஆக, இவர்கள் சோம்பல் என்ற வியாதிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. இதை இப்படியே விட்டுவிட முடியாது.. எதிர்கால சந்ததியையும் பாதித்துவிடும்.. அதனால் நவீன விஞ்ஞானத்தின்மூலம் இவர்களின் வியாதிக்கும் தீர்வு காண தற்போதே விளைவோம் என அழைப்பும்விடுக்கிறார்..
பார்த்தீர்களா குருவிகளுக்கு எவ்வளவு நல்ல மனது? எவ்வளவு பரந்த சிந்தனை? எதிர் அணியிலுள்ளவர்களை காப்பாற்றும் விசாலமான பார்வை!! இதைத்தான் மனிதாபிமானம் என்பார்களோ.. குருவிகளபிமானம்?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆக, மொத்தத்தில் விஞ்ஞானமானது மனிதனை சோம்பேறியாக்கவில்லை என அருமையாக எடுத்துக் கூறியதோடு.. சோம்பல் என்பது வியாதி எனவும் கூறியுள்ளார்.. ஆனால் என்ன? எதிரணியினரின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் காட்டிய அக்கறையை.. விஞ்ஞானமானது எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்... மேலும் சில புதிய கருத்துக்கள் பிறந்திருக்கும்.. பரவாயில்லை.. இன்னும் கருத்துக்களை முன்வைக்க உறவுகள் இருக்கிறார்கள். ஆக, அதுவரை காத்திருப்போம்.
'விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, நிலவன், இளைஞன், மதன் ஆகியோரில் ஒருவர் அடுத்ததாக தனது கருத்துகளை வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
.
#40
முடிவை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், புதிதாக பார்வயாளர்களுக்கான வாக்கு பட்டியலை சேர்த்துள்ளோம்.அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும். நன்றி.

இரு அணியிலும் 9 பேர் சரியாக இருப்பதால் இனிமேல் யாரையும் சேர்க்கவோ, விலக்கவோ முடியாது.
[b][size=15]
..




Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)