05-08-2005, 03:35 PM
எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பட்டிமன்றப்பேச்சாளருமான வலம்புரி ஜான் நேற்று நள்ளிரவு சென்னையில் காலமானார். அன்னார் அரசியலிலும் ஈடுபட்டு தி மு க காங்கிரஸ் அ தி மு க என மாறி மாறி எம்பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயினாலும் சிறுநீரகக் கோளாறினாலும் பாதிக்கப்பட்டு போருர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் உயிர் பிரிந்தாலும் அவர் தமிழ் உலகிற்கு செய்த சேவைகள் அவர் பெயரை வாழ வைத்துக் கொண்டேயிருக்கும். அன்னாரின் ஆத்மா சாநதியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
அடிப்படைத்தகவல் : தற்ஸ்தமிழ்
அடிப்படைத்தகவல் : தற்ஸ்தமிழ்

