Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'தமிழ்த்திரை' சேனல் !
#1
'தமிழ்த்திரை' சேனல்: ஒளிபரப்பு இன்று துவக்கம்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் தமிழ்த்திரை சாட்டிலைட் சானல் இன்று முதல் தனது ஒளிபரப்பை துவக்குகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் இந்த சேனலை தொடங்கி வைக்கிறார்.

தமிழக சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டமைப்பு சார்பில் "தமிழ்த்திரை' சாட்டிலைட் சேனல் துவக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர் கோவைத் தம்பி இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரின் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சேனலைத் துவக்கும் பணிகள் நடந்தன.

கடந்த மாதம் 22ம் தேதி முதல் தமிழ்த்திரையின் சோதனை ஒளிபரப்பு துவங்கியது. இன்று முதல் 24 மணி நேர அதிகாரபூர்வ ஒளிபரப்பு துவக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு இயக்குனர் பாலசந்தர் தலைமை தாங்குகிறார். நடிகர்கள் கமலஹாசன் விஜயகாந்த் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் தமிழ்த்திரை சேனலை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்இ தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுதர்சன சீனிவாசன் தமிழ்நாடு வினியோகஸ்தர் பேரவை தலைவர் வெள்ளைச்சாமி

இந்திய திரைப்பட சம்மேளன செயலாளர் அபிராமி ராமநாதன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் விஜயன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்இ தமிழ்த்திரையின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்குகிறது. விழாவில் தமிழ் சினிமாக்காரர்கள் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து மொழி சினிமா உலகினரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த சேனல் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா மத்திய கிழக்கு ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள 10 நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

சேட்டிலைட் சானல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த்திரை சேனல் தமிழகத்தின் சட்டசபை தொகுதி வாரியாக 150 டீலர்களை நியமித்து 30 லட்சம் கேபிள் டிவி இணைப்புகளை நேரடியாக பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாயிலாக துவக்க நாளன்றே 50 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு இந்த சேனல் செல்லும் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: Thatsதமிழ்
Reply
#2
Quote:இந்த சேனல் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா மத்திய கிழக்கு ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள 10 நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது
என்ன ஒவ்வொரு கண்டத்திலயும் ரெண்டு ரெண்டு நாடுகளுக்கு மட்டும் காண்பிக்கப்படுகிறதா?

!
Reply
#3
இனி கூத்துக்களை பார்போம்.... எப்படி போகும்... போகபோகிறது.... என... காரணம் பாரதிராஜாவும் இதனுள் இருப்பதால்.... (புலத்தில் உள்ளவர்களுடன்...) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :? Idea :wink:
Reply
#4
Eswar Wrote:
Quote:இந்த சேனல் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா மத்திய கிழக்கு ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள 10 நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது
என்ன ஒவ்வொரு கண்டத்திலயும் ரெண்டு ரெண்டு நாடுகளுக்கு மட்டும் காண்பிக்கப்படுகிறதா?

நல்லா கணக்கு படிச்சனீங்களா ஈஸ்வர் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#5
ஏற்கனவே இங்க இருக்கிறத பார்க்க நேரமில்லை அதுக்குள்ள புதிதாக ஒன்று தேவையா....?
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)