Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#1
[size=18]பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா?

நடுவர்கள் : , சண்முகி , சோழியன்


உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்:

வசம்பு -அணி தலைவர்
குறும்பன்
ஈஸ்வர்
விக்டோர்ப்
குளக்காட்டான்
மழலை
நடா
குருவி
மதுரன்




சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்:

சியாம் -அணி தலைவர்
சிம்ரன்2005
வியாசன்
ஈழப்பிரியேன்
நிதர்சன்
நிலவன்
இளைஞன்
சாத்திரி
மதன்



திரையின் பின்னால் : இராவணன், மோகன்
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



[/color]

ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழுதலாம். நடுவர்கள் மட்டும் வேண்டிய நேரத்தில் கருத்து எழுதலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
#2
நவீனமும் தொழில் நுட்பமும் மனிதனை சோம்;பேறியாக்குகின்றது உதாரணத்திற்கு முன்னர் ஒருவர் செய்திகளை அறிய வேண்டுமானால் காலையிலெழுந்து பத்திரிகை வாங்க கடைக்கு போக வேண்டும். எனவே அவர் நேரத்தோடு எழுந்து பல் துலக்கி குளித்:தோ முகம் கழுவியோ வெளிக்கிட்டு கடைக்கு போய் போகும் வழியில் தெரிந்தவர்களைப்பார்த்து கதை;த்துகடையில் பத்திரிகையை வாங்கிவருகிறார். இதில்பலநன்மைகள்உண்டு
1)காலை நேரத்தோடு தன்னை சுத்தமாக்கி கொள்கிறார்
2)கடைக்கு போக வர நடப்பதால் அவர் உடல் நலத்திற்கு நல்லம்
3)போய் வரும்போது தெரிந்தவர்களுடன் கதைப்பதால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறதென்கிற செய்திகளை அறிவதுடன் அவர்களினுடனான உறவு பேணப்படுகிறது.
அதைவிட்டு காலை எழுந்ததும் கணணியை போட்டால் முகம் கழுவுவதுமில்லை எழும்பி நடக்கிறதுமில்லை
; ;
#3
நன்றி திரு.சியாம் அவர்களே...இப்பொழுது இல்லை என்ற அணியில் இருந்து யாரவதுஒருவர் பேசலாம்.[தலைவரை காணாத காரனத்தால்]..
[b][size=15]
..


#4
திரைக்குப் பின்னாலிருந்து எம்மை உற்சாகமூட்டும் அன்புள்ளங்களே மேன்மை தங்கிய நடுவர்களே உற்சாகமாக என்னணியில் வாதாட வந்திருக்கும் உடன் பிறப்புக்களே எதிரணியில் சோம்பேறிகளாக உட்காந்திருக்கம் சோதரர்களே உங்கள் எல்லோருக்கும் எனது அன்பான வணக்கம்.



பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விடயம் கொழும்பிலுள்ளவர் அறியும் முன்பே வெளிநாட்டிலுள்ளோர் அறிந்து விடுகின்றனர் என்றால் சுட்டு விரலுக்குள் உலகத்தை கொண்டு வந்த நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தானே காரணம். எதிரணித் தலைவர் கூறியது போல் ஒருவர் தனது காலைக் கடன்களை செய்யாமல் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்குகின்றாரெனின் அது அவருடன் பிறந்த சோம்பேறித்தனமே தவிர வேறொன்றுமில்லை. முன்பு ஒருவரை சந்திக்க வேண்டுமாயின் ஒரு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்போது தொலைபேசி கணணி போன்றவற்றால் வீட்டிலிருந்தபடியே சந்திப்பை நடத்தி விடலாம். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் ஒரு வைத்தியர் நெற் மீற்றிங் மூலம் அமெரிக்காவிலுள்ள இன்னொரு வைத்தியரிடம் ஆலோசனை பெறலாம். ஏன் மேலதிகமாக இந்தப் பட்டிமன்றமே மேடையின்றி நடைபெறுவதெப்படி?? இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே மற்றவர்களின் வாதத்திற்கும் வழிவிட்டு மீண்டும் தொடர்கின்றேன். நன்றி வணக்கம்
#5
வணக்கம் யாழ் உறவுகளே!
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற தலைப்பில் தூயா அவர்கள் இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். அவரது இம்முயற்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்து, இப்பட்டிமன்றமானது மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் நிகழ ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்.
மேலும், தினமும் விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதகுல மேம்பாட்டுக்கு சாதனைகளையும்ää கூடவே சோதனைகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை எமது வாழ்வில் கண்டுகொண்டு வருகிறோம். அந்த வகையிலே விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உட்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்ற தலைப்பில் இடம்பெறும் தரவுகள் ஒருகணமாவது வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டினால், இப்பட்டிமன்றம் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது எனக் கருத இடமுண்டு. அந்தவகையில் இரு அணிகளிடமிருந்தும் காத்திரமான கருத்துகளை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.
முதலில் கருத்துகளை முன்வைத்த ஷியாம் அவர்கள், பத்திரிகை வாங்க காலை எழுந்து செல்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மையை கணனி தடைசெய்து, மனிதனை சோம்பேறியாக்குகிறது என்று தனது கருத்தை வைத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற தனது வாதத்தை ஆரம்பித்துள்ளார்.
இனி, இதை வெட்டிக் கருத்துக் கூறுவதோடு, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியிலிருந்து வசம்புவை அல்லது அவரது அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.
.
#6
Quote:பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது
,வசம்பு)

தந்தையர்காலத்தில் என்ன எம்தாத்தா காலத்திலும் ஒரு வேலையை செய்ய மனிதவலு அதிகம் பயன்பட்டது எனது தாத்தா அதிகாலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு போய் தண்ணீருற்றி 3 4 சாக்கு கத்தரிக்காய் மிளகாய் என்று பிடுங்கி மாட்டு வண்டிலில் சந்தைக்கு கொண்டு போய் விற்று காலை நான் பாடசாலைக்கு புறப்படும்போது 7.30ற்கு பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு உணவருந்திவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு போய்விடுவார். அவர் இறக்கும் போது 81 வயது அதுவும் வருத்தத்தால் அல்ல யுத்தத்தால் செல் விழுந்து. 81 வயது வரை அவரிற்கு பெரிய வருத்தம் எதுவும் வந்தில்லை காரணம் அவரின் உடல் உழைப்பு.

இன்று 50 போர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்து விட்டு போகிறதுஅதனால்
1)மனிதவலு கூடிய சனத்தெகை கூடிய நாடுகளின் எதிர் காலம் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றன
2)எல்லாநாடுகளிலும் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கின்றது
3)வேலை வாய்ப்பின்மையால் குற்ற செயல்கள் அதிகரிக்கின்றன
இவைகளால் எதிரணியினரைபோல் வேலையற்றமனிதன் வீடின்றி வீதிகளில் சோம்பேறிகளாய்.படுத்துறங்கி கொண்டிருக்கிறான்.
; ;
#7
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/41.gif' border='0' alt='user posted image'>
#8
அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.

மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா??
#9
[quote=Vasampu]அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.

மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா?? விதிமுறைகளை மதித்துதான் நான் எந்தவீத கருத்தும் எழுதாமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்தை உற்சாகப்படுத்துவதற்கே கரகோஷம் செய்தேன்! தவறு இருந்தால் மன்னிக்கவும்!
#10
அல்லார்க்கும் வணக்கமுங்கோ....

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற இந்த பட்டிமன்றத்தில தலைபோற வேலையை தலமறைவா செய்துண்டு இருக்கும் சண்முகியக்கா... கோழியன்... ச்சீ... சோழியன் அண்ணாவுக்கும் எனது சகபாடிகளுக்கும் மற்றும் சோம்பறியாக்கிறது என்று படுக்கைகளுடன் சோம்பல் முறிக்காமல் நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பேச வந்திருக்கும் எதிர்குழுவினர்க்கும் மீண்டுமொருமுறை வணக்கம் போட்டுக்கிறன்.

எதிர்கட்சி அண்ணாச்சி சொன்னார்... அந்தகாலத்துல அவங்கள் உடம்பு வேர்க்க விறுவிறுக் வேலை செஞ்சாங்களாம்.... 81 வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருந்தாங்களாம். அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில்
நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.
மனுசனுடைய, உலகத்தின் தொழிற்பாடுகளை, தொடர்புகளை இலகுபடுத்தத்தான் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சி அடைஞ்சுண்டு வருது. இதுவும் இல்லாம அந்த காலத்தில நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் அவங்க அப்புடித்தான் இருந்திருப்பாங்க என்பதுக்கு என்ன உத்திரவாதம். இப்பவும் கூட இலங்கை போன்ற நாடுகளில தொழில்நுட்பம் வளர்சி அடையாதாலதான் சுனாமி பற்றிய எச்சரிக்கையை தகவலை சரியாக கணித்து பயன்படுத்த முடியவில்லை. வாத்தியாரோட பாடல் ஒண்டு சொல்லலாம்.... அதாவது திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்... திருடனாப் பாத்து திருந்தணும். அதமாதிரி.... விஞ்ஞான வளர்ச்சி பற்றியும் அதுபற்றிய தேவைகள் பற்றியும் சரியான விரிவான விளக்கம் இல்லாதவர்கள் உலகத்தின் புதிய பரிணாமத்தினை ஏற்கும் பக்குவமற்ற சோம்பேறிகள் போல...
சோம்பேறிகளா பார்த்து சோம்பலை முறிச்சாத்தான் உண்டு.... அல்லாவிட்டால் நாங்கள் என்னதான் கூக்குரல் எழுப்பினாலும் செவிடன் காதுல ஊதின சங்குதான்.


இப்போ கால ஓட்டத்தில் நேரத்தை மிச்சப்படுத்தவே ரொக்கேட் தேவைப்படுது. இதுக்கு பெரிதும் உதவியா இருப்பது விஞ்ஞான வளர்ச்சி. அதனோட வளர்ச்சியின் வீச்சுக்கு மனிதனால் சிறிது நேரம் ஈடு கொடுக்க முடியாது போகும்போதுதான் வேலையின்மை போன்ற இதர பிரச்சனைகள் உருவாகுகின்றது. பிளான் போடமல் பிள்ளை பெத்துக்கிறதில்லையா.. அதுபோலதான் இது. இதுவும் நாளடைவில் சரியாகும். ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.

ட்ட்ட்ரிரிரிரிரிரிரிரிரிங்ங்ங்ங்ங்ங்........

மணி அடிச்சுட்டானுங்கோ.... சரி வாய்ப்பு தந்ததுக்கு கும்புடுறனுங்கோ... வணக்கம்.
:: ::

-
!
#11
நான் மைக்கை விடுவதற்கு முன்னரே, மைக்கைப் பறித்து தனது வாதங்களை ஆரம்பித்துவிட்டார் 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியையின் தலைவர் வசம்பு அவர்கள்.. விஞ்ஞானத்திற்கு உதாரணமாக இணையத்தை எடுத்து அதன் அனுகூலத்தை கூறினார். அடுத்து ஷியாம் அணியிலுள்ளவரை அழைப்பதற்கிடையில் குறக்கிட்ட குறும்பன் அவர்கள், மைக் பிடிப்பது புதுப்பழக்கமாதலால் ஆரம்பத்தில் கோழியான்.. சோழியான் எனத் தடுமாறினாலும்... குரங்கின் கைப் பூமாலையாக இல்லாமல் விஞ்ஞானமானது விளங்கிக் கொண்டவர்களால் பயன்பாடடைகிறது என்றுமட்டுமல்ல.. விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியால் வேலையில்லாப் பிரச்சினைகள் தோன்றினாலும், அது நாளடைவில் சரியாகும் எனவும் எதிர்வு கூறினார்.
(சண்முகி பார்வையாளரின் ஏகோபித்த ஆதரவுடன் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்.. பார்வையாளரை விலத்தி வர தாமதமாகிறது போலுள்ளது.. அதை நான் பார்க்க.. வசம்பு அவர்களின் கருத்தால் உணுர்ச்சிவசப்பட்ட நிலையில் ஷியாம் அவர்கள் முந்திக்கொண்டுவிட்டார்.. எனினும் அவரது கருத்துகள் விதிமுறைக்கேற்ப கவனத்தில் எடுக்கப்படமாட்டா.. ஆனால் அதே கருத்தை அவரது அணியிலுள்ள வேறு யாராவது முன்வைக்கலாம்.. அல்லது ஷியாம் அவர்கள் இறுதியில் தனது தொகுப்புரையில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம்.)
தலைவர்கள் கவனிக்கவும்.. இறுதியில் தங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தை ஒரு தொகுப்புரையாக.. அதாவது அவரவர் அணியினர் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பாகவும்.. எதிரணியினரின் கருத்துக்கு முன்வைத்த பதில்களின் தொகுப்பாகவும் பயன்படுத்துங்கள்.. விவாதம் தொடரும்போது ஏற்கெனவே கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு, புதிதாக ஏதாவது கருத்து தோன்றினால்.. அவற்றை அடுத்து கருத்து முன்வைக்கும் அணி சார்ந்தவர்களுக்கு தனிச்செய்தியில்.. அல்லது மெயிலில் முன்வையுங்கள்.
பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இனி.. விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் இருந்து ஒருவரது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.. பொறுமையாக ஆறுதலாக ஆணித்தரமாக தங்களின் கருத்தை முன்வைக்க வாழ்த்துக்கள்.
.
#12
ஆகா.. அருமையாக இருக்கு பட்டி மன்றம்..... இன்று தான் பார்த்தேன் மிகவும் திறமையாக வாதாடுகிறார்கள்.. நடுவர்கள் .. மற்றும் கருத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்... நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறி ஆக்குகின்றதா உற்சாகப்படுத்துகின்றதா என்றதலைப்பை கருத்தில் கொண்டு கருத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏன் என்றால் விஞ்ஞானம் , தொழில் நுட்பத்தால் மனிதன் பயன் பெறுகிறானா, இல்லையா என்பது போல் கருத்துக்கள் அமைகின்றன சில இடங்களில். எனவே உங்களுக்கு தந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அடுத்த அணி அதனை தன் வாதமாக கொண்டு உங்கள் கருத்துக்களின் வீரியத்தைக் குறைத்துவிடும்.
நன்றி மிகப்பெரிய நடுவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தான் பெரிய சிக்கலில் மாட்டபோகிறார்கள். என்ன சொல்லி மழுப்பீனம் என்று பார்ப்போம்.
நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதனை ஒழுங்கமைத்த தூயாத்தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
[b][size=18]
#13
தூயா குறிப்பிட்ட ஒரு விதியை மீறவேண்டிய நிலை இருக்கிறது. அவர் பெயர்களை வரிசையாக எழுதி அதன்படி கருத்துக்களை கூறவேண்டுமென்றார். ஆனால: அப்படி நடந்தகொள்வதால் இந்த பட்டிமன்றம் நீண்டநாட்களக நடைபெறும் அத்துடன் சுவராசியம் குறைந்துவிடும் அதனால் ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலாமென்று நினைக்கிறேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#14
சரி அப்படியே விதியை மாற்றி அமைக்கிறேன்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


#15
அனைவர்களுக்கும் எனது வணக்கம் பட்டிமன்றத்தில் வாய்ப்பு தந்த தூயாவுக்கு எனது நன்றிகள்.
நண்பர் வசம்பு வம்பாக கூறினார் விஞ்ஞானத்தால் நாங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று விஞ்ஞானத்தால் நாங்கள் மேடையில்லாமல் பட்டிமன்றம் நடத்துகின்றோம் என்று. ஆமய்யா நாங்கள் இந்த 25 வீத நன்மையை பெறுவதற்கு 75வீத எதிர்பயனை பெறுகிறோம்..ஒரு தொலைக்காட்சி நிகழ்வை பாத்துக்கொண்டிருக்கிறோம் அடுத்த நிகழ்வை பார்ப்பதற்கு எழுந்து செல்லவேண்டிய அவசியமில்லை இருந்தபடியே மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனை சுறுசுறுப்பில்லாமல் சோம்பேறியாக்கும் ஒரு நிகழ்வுதான் ;இது. இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான் மனிதனை மிகவும் துயரத்தில் கொண்டுசெல்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இந்த இலத்திரனியல் சாதனங்களினால் எவ்வளவு கதிர்வீச்சுக்கள் இடம்பெறுகின்றன என்பதை வசம்பு அறியமாட்டாரா இல்லை அறிந்தும் தன்னுடைய பக்கத்துக்காக விதண்டாவாதம் செய்கிறாரா? இந்த கதிர்வீச்சுக்களால் மூளைபாதிக்கப்பட்டு மனிதன்சோம்பலாகின்றான் என்று இவர் சார்ந்த விஞ்ஞானமே கூறுகின்றது
சில காலத்துக்கு முன்னர் பிரிட்டனிலிருந்து மாட்டிறைச்சி இறக்குவதற்கு மற்றைய நாடுகள் தடைசெய்தன அதற்கு காரணம் மாடுகளுக்கு இறைச்சி
யில் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுத்து மாடுகளை நன்கு கொழுக்கவைத்தனர் இதனால் பெரும்இலாபம் கிடைத்தது. இந்த இறைச்சிகளை உண்டவர்கள் நோய்களினால் பாதிக்கப்படத்தொடங்கினர். நோய் வாய்ப்பட்டவர்கள் என்ன உற்சாகமாகவா இருப்பார்கள். என்னுடைய அணித்தலைவர் சியாம் குறிப்பிட்டதுபோல விஞ்ஞான வளர்ச்சி குறைந்த காலத்தில் மக்கள் உடலுளைப்பால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் வயதுபோனவர்கள்கூட சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்கள் இயற்கை உணவுகளை உண்டார்கள் இன்றோ அதிக உற்பத்திக்காக கண்ட கண்ட இரசாயனப்பொருட்களை பயன்படுத்துகின்றார்கள் அதனால் ஆராக்கியமற்ற ஒரு சமுதாயம் உருவாகிறது. பழங்கள் கூட சுவைகளை இழந்துவிடுகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாவிட்டால் மாடிப்படிகளில:; ஏறுவதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றார்கள்.அவர்கள் இளைஞர்களாகட்டும். ஆனால் எங்கள் முதியவர்கள் சுலபமாக ஏறிவிடுவார்கள்.. அவர்கள ;இந்த விஞ்ஞானத்தால் சோம்பலாக்கப்படாதவர்கள். இயற்கையின் கொடைகளை உண்டு இயல்பாக வாழ்ந்து மனத்தாலும் உடலாலும் உற்சாகமாக வாழ்கின்றவர்கள்.. எதிரணியினரிடம் ஒரு கேள்வி உங்கள் உடல்எங்கள் ஊரவர்களைபோல வேலைசெய்வதற்ககு இடம் கொடுக்குமா?
பத்து கிலோ வை தூக்கிக்கொண்டு 100 மீற்றர் தூரம் நடப்பதற்கே உடல் இடம் கொடுக்காது என்பதுதான் உண்மை.. விஞ்ஞானத்தை நாங்கள் கையாள்வதுபோல காலக்கிரமத்தில் தொழில்நுட்பம் எங்களை கையாளப்போகின்றது. .ஓசோன் மண்டலத்தில் துளை விழுந்துவிட்டதாம் ;து விஞஞானிகள்தான் கூறுகின்றனர். அதற்கு காரணம் பூமியிலிருந்து வெளியேறும் தொழிற்சாலை புகைகள் காரணம். இப்படியான செய்திகள் மனித உள்ளங்களை பாதிக்கின்றது. அதனால் அவர்கள் சோர்வடைகின்றனர்.அதனால் நாங்கள் மனிதனை சோம்பலாக்கும் விஞ்ஞானத்தை கைவிட்டுமுடிந்தவரை மனித உழைப்பில் தங்குவோம். அதிக இயந்திரங்களை பயன்படுத்தி மனிதவளத்தை பாவிக்காமல் விடுவோம். இயந்திரங்களை பயன்படுத்தி வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்கி சோம்பேறிகளை உருவாக்காமல் நல்ல ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க நல்ல தீர்;ப்பு சொல்வார்கள் எங்கள் நடுவர்கள். என்று நம்பிக்கொண்டு வாய்ப்புக்ககு தூயாவுக்கு நன்றிகள் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#16
வியாசன் அவர்கள் அருமையாகக் கூறினார்.. மாடிப்படியேற இளைஞர்கள் இளைத்து மூச்சிழுக்கும்போது, முதியவர்கள் துள்ளித் துள்ளி ஏறிவிடுகிறார்கள் என்று.. துலா மிதித்து தோட்டம் செய்ததால் ஏற்பட்ட பயிற்சியாகக்கூட இருக்கலாம்.. அல்லது குரக்கன் புட்டும் ஒடியல் கூழும் தந்த தைரியமாகக்கூட இருக்கலாம்.. ஆனால் வியாசன் அவர்கள் அப்படியல்ல.. விஞ்ஞானம் அதிகளவு வசதிகளைக் கொடுத்து மனிதனைச் சோம்பேறி ஆக்கி, அவனது ஆரோக்கியத்தை ஆக்கிரமிக்கிறது என்றார். விஞ்ஞானமானது 25 வீதம் நன்மையைத் தரும்போது 75 வீதம் தீமைகளைப் பக்க விளைவாகத் தருகிறது என்று அடித்துக் கூறுகிறார் வியாசன் அவர்கள்..
ஆக, 'உற்சாகப்படுத்துகிறது' என்ன அணியைச் சேர்ந்தவர்கள் இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள்.. மேலும் என்ன கருத்துகளை முன்வைக்கப் போகிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருக்கிறது..
அடுத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற கருத்துகளுக்காக .. அந்த அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்..!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
#17
அனைவருக்கும் எனது வணக்கங்கள் .தூயாவுக்கு எனது நன்றிகள். நான் பட்டிமன்றத்தில் பழக்கப்பட்டவன் அல்ல.இங்கு ஏதோ என்னால் முடிந்த கருத்துக்களை வைக்கின்றேன்..
ஆனாலும் வியாசனுக்கு ரொம்பவும்ஏற்றம்தான் ஐயா நான் மற்வர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று காத்திருந்தேன்.அவர்கள் வர தாமதமாவதால் அவசரத்துக்கு உள்ளுர் மேளத்தை பயன்படுத்துவதுபோல நான் வந்திருக்கின்றேன்.
நான் வியாசனைப்போல அதிகம்தெரிந்தவன் அல்ல ஐயா வியாசரே நீங்கள் கூறும் திடகாத்திர மனிதர்களே கூறியிருக்கினர்றார்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று. அதனால்தான் விஞ்ஞானனிகள்; புதிது புதிதாக எதையாவது கண்டு பிடிக்கின்றார்கள். எந்த ஒரு செயலுக்கும் இரண்டுபக்க விளைவுகள் உண்டு நன்மையும் தீமையும் கலந்து இருக்கின்றது. மின்சாரத்தை கண்டு பிடித்தார்கள் அதனால் பெரிய நன்மைதான் அதில் சிறிய தீமையும் இருக்கலாம்..அதற்காக மின்சாரத்தை ஒதுக்கிவிடமுடியாது. இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் மனிதன் சோம்பேறியாகிவிடவில்லை. அதை வைத்து இன்னமும் சாதிக்க வேண்டும் என்று உற்சாகமாக போராடுகிறான். மனிதனை போராட தூண்டுகிறது விஞ்ஞானம்.. சுனாமி வருவதற்கு முன்னரே விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கமுடிந்திருக்கிறது. அது விஞ்ஞானத்தின் சாதனை. ஆனால் அதை தெரியப்படுத்தாமல் விட்டது உங்கள் பழமை வாதம். அது உடனடியாக தெரியப்படுத்தப்பட்டு உயிழப்புக்கள் இல்லாதிருந்தால் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்.
வியாசன் குறிப்பிட்டிருந்தார் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகுவதாக ஐயா வியாசரே நீங்கள் பத்தாம் பசலி கருத்துக்ளை வைத்திருக்கின்றீர்கள். அம்மை மலேரியா காசநோய் போன்ற கொடிய நோய்களை வருவதற்கு முன்னே தடுப்பதற்கான வகைகளை கொடுத்தது இந்த விஞ்ஞானம். நோய்களால் சோர்ந்திருந்த மனிதனை நோய்களிலிருந்து வருமுன்னரே தடுத்துமனிதனை உற்சாகப்படுத்துகின்ற விஞ்ஞானத்தை நீங்கள் குறை கூறுவது கீழேயிருந்து ஏணிமூலம் ஏறி மேலே சென்றுவிட்டு இந்த ஏணி சரியில்லை என்று சொல்வதுபோல இருக்கின்றது. இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது விஞ்ஞானம். வானொலி தொலைக்காட்சி தொலைபேசி என்பன தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம். அதனால்தான் 10000 கிலோ மீற்றருக்கு அப்பால் உங்களுடைய பெற்றோர் தும்மியதை தும்மி முடிந்த ஒரு விநாடியில் உங்களால் அறியமுடிகிறது.
வைத்தியதுறையில் விஞ்ஙானத்தின்சாதனைகள்தான் எவ்வளவு மலடுகள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு மனமுடைந்து போயிருப்வர்கள் கூட குழந்தைகளை பெற்றுக்கொண்டு உற்சாகமாக வாழமுடிகிறது. விஞ்ஞானம் எப்போ தொல்லையாக மாறுகிறது என்றால் அதை அளவுக்கதிகமாக உபயோகிப்பதனால். உதாரணமாக தொலைக்காட்சி அளவுடன் உபயோகித்தால் பிரச்சனை இல்லை அதுவே நாள் முழுவதையும் பிடித்துக்கொண்டால் அதுவே தொல்லை. ஐயா எதிரணியினரே நீங்கள் இங்கு வாதாடுவது நுனி மரத்திலிருந்து அடிமரத்தை வெட்டுவதுபோல இருக்கிறது. ஐயா வியாசரே இனிமேலாவது நுனிமரத்திலிருந்துகொண்டு அடிமரத்தை வெட்டாதீர்கள். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் நடுவர் திட்டுவார் அதனால் வாய்புக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். மனிதனை உற்சாகப்படுத்தும் விஞ்ஞானத்துக்கு எல்லோருமாக ஒரு ஓப்போடுவம்.....................................
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
#18
தன்னை அழகு படுத்திகொண்டே பட்டிமன்றத்தையும் ஒழுங்கு படுத்திய தூயாவிற்கும் மற்றும் நடுவர்களில் அடிக்கடி வந்து குடும்பியை ஆட்டிஉற்சாகம் அளிக்கும் சோழியனிற்கும் இதுவரை இந்தபக்கமே எட்டிப்பாக்காத சண்முகிக்கும்.மற்றும் எழுந்து இன்னமும் களத்துபக்கம் வந்து கருத்து கூறகூட முடியாமல் விஞ்ஞாத்தின் வளர்ச்சியால் சோம்பேறியாகி போயிருக்கும் எதிரணியினருக்கும் வணக்கங்கள்.

எதிரணியில் வசம்புவும் குறும்புவும் சில விற்றமின் குளிசைகளை போட்டுக்கொண்டுவந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் தாங்கள் உற்சாகமாக இருப்தாக கூறிவிட்டு போனார்கள் பாவம் நடா என்பவர் கடிதத்தை காலில் பிடித்தபடி வந்து நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் வைத்திய துறை முன்னேறி விட்டது என்கிறார்.
நான் கேட்கிறேன் நோய்கள் பெருகியது எப்படி இந்த விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளால் தானே. இன்கு எமது தாயக பிரதேசத்தில் 10ல் ஒருவருக்கு புற்றுநோய். எதனால் வந்தது வீஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான மனிதனை அழிக்கும் குண்டுகளின் கதிர் வீச்சுகளினால்.அதற்கு மாற்றாக மனிதன் வைத்திய துறையிலும் கண்டு பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
அடுத்ததாக மனிதன் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மதத்தை வீஞ்ஞானம் விட்டுவைத்ததா? இல்லை.முன்பு கேவிலுக்குமனிதர் போவதாக இருந்தால் விதரமிருந்து குளித்து சுத்தமாகி கேவிலுக்கு போனதும் பாதணி மேல்சட்டை என்பனவற்றை களற்றி கடவுளைநினைத்து தேவாரம்பாடியபடி பணிவாககும்பிடுவான். கடவுளை நம்பாத நாத்திகன் கூட அந்த ஆலயத்தில் நுழைந்ததும் தன்னில் ஒரு மாற்றத்தை உணருவான்.அதில் மனிதன் சுத்தத்தை பணிவை மன ஒருமைப்பாடு என பல நன்மைகளை அடைந்தான். ஆனால் இப்போ கணணியிலேயே உங்களிற்கு செவ்வாய் குற்றமா?பரிகாரம் செய்ய இங்கே கிளிக் பண்ணவும். உங்களிற்கு சனி தோசமா? சனிபகவானிற்கு பரிகாரம் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்.பிள்ளையாரை கும்பிட வேண்டுமா இங்கே கிளிக் பண்ணவும். என்றுஇருக்கும் .கணணியிலேயே நீங்கள் வீட்டிலிருந்தபடியேஎல்லா கடவுளையும் கும்பிடலாம்.கணணியின் ஒரு ழூலையில் யாழ் அரட்ரையரங்கம் போய்க்கொண்டிருக்கும்.மறுமுலையில் தமிழ்மசாலாபடம் ஒன்று தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும்.நிங்கள் நடுதிரையில் சனி தோசத்திற்கு சனியனை கும்பிட்டபடி இருப்பீர்கள். உங்கள் மனைவி அடுப்படியில் மீன் பொரித்துக் கொண்டிருப்பார். உங்கள் பிள்ளை குளியலறையில்.
இந்த வளச்சி தேவையா? ஏன் முன்னர் ஏதாவது தொலைந்தால்அல்லது ஏதாவது தேடுவதென்றால் என்னிடம் வருவார்கள் மை போட்டுபார்க்க. இப்ப போலிசுக்கு போகிறார்கள். ஏதாவது தேடுவதெண்டால் yahoo gogoolபோய் தேடுகிறார்கள்.அதாலை என்ரை தெழிலும் பட்டுபோச்சுது.
எதிரணியினரை பதில் சொல்ல வாய்ப்பளித்து விடை பெறுகிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
#19
.
தூயவின் முயற்சிக்கு வந்தனம் சொல்லி...........அத்துடன் உற்சாகமாக தலமை தாங்கும் சோழியன் அண்ணா திரைமறைவில் இருக்கும் சண்முகி அக்கா மற்றும் சக பாடிகள்......... எதிரணி சோம்பேறிகள் அனைவருக்கும் வணக்கம்.

இங்கு சாத்திரி தனது சோம்பேறி சாத்திரி வேலை பறி போகும் அவலத்தில் இறுதியில் சம்பந்தா சம்பந்தமில்லாது புலம்பி சென்றுள்ளர்


இங்கு தலைப்பு விஞ்ஞானம் மனிதனை உற்காகபடுத்துகிறதா சோம்பேறி ஆக்குகிறதா என்பதே.
விஞ்ஞானம் தந்த விமானத்திலேறி புலம் வந்து அதன் பயனாக கிடைத்த இணையத்தில் இவ்வளவு உற்சாகமக பட்டி மன்றத்தில் அது சோம்பலை தருகிறது எனும் எதிரணி நண்பர்களை பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
இன்று பல அலுவல்களை விரைவில் முடித்து வேறு அலுவல்களில் கவனம் செலுத்த முடிகிறதே. உதாரணத்துக்கு 5 கிலேத மிற்றர் துரத்தில் இருக்கும் ஒருவரிம் அலுவலுக்கு போடி நடையில் போய் கதைத்து முடித்து வர பாதி நாள சென்றுவிடும் அதையே இப்பொது தொலை பேசி மின்னஞ்சல் மெசஞ்சர் என நிமிடத்தில் அந்த அலுவலை முடிக்க முடியும். ஏன் நேரில சந்திக்க வேண்டியிருந்தாலும் வாகனத்தில் போய்சந்தித்து வர 1 மணி நேரம் போதும் இதனால் வினைத்திறன் கூடுகிறது.
பாட்டன் காலத்தில் சிறு பரப்பில் விவசாயம் செய்தார் அதனால் துலா போதும் .இன்று பல ஏக்கர் கணக்கில் உழவு இயந்திரத்தையும் தண்ணீர் பமபியையும் கொண்டு விவசாயம் செய்ய முடிகிறது . வருமானம் பெருகுகிறது . அது தந்த உற்சாகத்தில் மேலும் அதிக பரப்பில் விவசாயம் செய்ய துண்டுகிறது. ஒரு உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இன்னுமொன்று வாங்குகிறார். அதற்கு மேலாக அரிசியாலை திறக்கிறர் இப்படி மேலும் மேலும் உற்சாகமாக முன்னேறிய பலர் ஊரிலும் உண்டு உலகத்திலும் உண்டு.

இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.

ஆதியில் உயிர் கொல்லி நோய்களான குக்கல் அம்மை போலியோ போன்றவை உலகிலிருந்து நீங்கும் நிலை வந்துள்ளதே. இதையே தெய்வ குற்றம் என்று பல குழந்கைகளை இழந்தொர் எண்ணிய காலம் போய் பிறக்கும் குழந்தைகளின் உயிர் உத்தரவாதப்படுத்தபடுகிறதே.......அது அவர்களுக்கு கிடைக்குட் ஊக்மன்றி வேறேது. விசர் நாய்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கபடாவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய இறப்புகள் ஏராளமாக இருக்கும். இன்று அதிலிருந்து தம்மை பாதுகாக்க முடிவதால் அதனால கடியுண்டாலும் பலர் உற்சாகமாக இருக்கிறார்களே.

வேலைவாய்ப்பு இல்ல என்பதல்ல பிரச்சனை. வேலைகளுக்கு குறிப்பிடத்தக்களவு அறிவு தேவை அதை தேடி பெறாது சோம்பியிருந்த விட்டு விஞ்ஞானம் சோம்பலை தருகிறது என்பது அபத்தமானது.

ஐரொப்பா எவ்வாறு இவ்வாறு வளர்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் அவர்கள் எதிர் கொண்ட பட்டிணி கொள்ளை நோய்கள் என்பன அவர்களை தேடலுக்கு வித்திட்டது. அமெரிக்காவை கண்டார்கள் நோய்க்கு மருந்து கண்டார்கள் பனிகாலத்தில் பயிர் செய்ய முடியாததால் பயிர் செய்ததை சேமிக்க நவீன முறைகளை தேடினார்கள் அவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மேலும் மேலும் அவர்களை உற்சாகப்படுத்த இன்றும் தொடர்கிறார்கள். நாமோ நமது நாட்டிலிருந்து அவர்களின் வளர்சியின் கவர்ச்சியால் புலம் பெயர்கிறோம். போரின் பதிப்பால் புலம் பெயர்ந்தவர்களுக்கு சமனான ஐரோப்பிய அமேரிக்க விஞ்ஞானம் தரும் வசதி வாய்பை தேடி பலர் புலம் பெயருகிறார்களே.
ரைட் சகோதரர்களின் பறப்பு முயற்சி முதலில் தோல்வியில் தான் முடிந்தது ஆயினும் தொடர்ந்து அது தந்த உற்சாத்தால் பறக்கவில்லையா இன்று அது நவீன இரண்டு மாடி விமானத்தில் வந்து நிக்கிறதே..............விஞ்ஞானம் சோம்பலை வளர்த்திருந்தால் இது நடந்திருக்குமா?

இந்தியா பவ தோல்வினளின் பின் இனறு வெற்றிகரமாக தனது நாட்டிலிருந்து செயற்கை கோளை ஏவுகிறதே விஞ்ஞானம் தந்த சோமபலினாலா உற்சாகத்தாலா? எதிரணி டீசாம்பேறிகளே.
குழந்தை புதிதாக நடைபயிலும் போது விழுந்து எழும்புது இயல்பு தானே..........? அதே போன்று சில நேரங்களில் வீழ்வதுண்டு உமதரணமாக எதிரணியினர் சொன்ன மாட்டு நோய் அதன் காரணி கண்டறியப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாதிருக்க விஞ்ஙானம் உற்சாமான தான் நடவடிக்கை எடுத்தது.
அதே போல வீட்டு பாவனை பொருட்களின் கதிர்கள் கண்ணை பாதிக்கதிருக்க கண்ணாடிகள் உண்டே அதை வாங்கி உபகரணங்களில் மாட்டாது சோம்பியிருக்கும் எதிரணியினரின் சோமபேறி தனத்துக்கு அளவேயில்லை.

விண்ணக்க நாயை அனுப்பி பார்த்து அது தந்த உற்சாகத்த்தில் தான் பறந்து இன்று செவ்வாய் நோக்கி பறக்க முயற்சிக்கிறானே அது விஞ்ஞானம் தந்த உற்சாகமன்றி வேறேது.

இறுதியாக எதிரணியினருக்கு ஒரு பணிவான வேண்டு கோள் எமதணியினர் விஞ்ஞபனம் தந்த உற்சாகத்தில் அவர்களது பணிகளில் இருப்பதால் உங்களை போல்சோபி வீட்டிலிருந்து பதில் வாதம் புரிய முடியவில்லை தான் ..விஞ்ஞானம் தந்த உற்சாகத்தில் நாமனைவரும் எமது பணியிலும் உற்சாகமாக இருப்பதோடு பட்டி மன்றத்திலும் உற்சாகமாக இருக்கிறோம். இனியாவது சற்று உற்சாகமாக வேலைக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறோம்
இத்துடன் எனது வாதத்தை முடித்து விடைபெறுகிறேன் வணக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
#20
பட்டி மன்றம் அருமையாக செல்கிறது.
மேலும் தொடருங்கள்...
தூயாவுக்கு விசேஷ நன்றிகளும் வாழ்த்துக்களும்...


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)