Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
[quote=kuruvikal]தனி நபர்கள் சிலரின் ஆதிக்கத்தின் பிரகாரம் எதுவித அறிவித்தலும் இன்றி...(மோகன் அண்ணா சிறிய மாற்றம் செய்தாலும் அறியத்தருவார்...ஆனால்...) பக்கச்சார்ப்பான முறையில் இங்கிருந்து எமது கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளதால் இதிலிருக்கும் எமது கருத்துக்கள் அனைத்தையும் சுய தணிக்கை செய்கின்றோம்...!
என்ன நடகிங்க.. ஒரு பிராணி புலம்பிற மாதிரித்தெரியுது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஆஹா தமிழினி வம்பு வளர்க்கிறதிலேயே குறியா இருக்கிறீங்களே? :roll: :wink:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா நான் சும்மா சொன்னன்.. உண்மை தானே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி குழைக்காட்டான் உங்கள் நிழற்படம் நன்றாக பரிமாணத்தோற்றத்தை அளிக்கிறது. அந்தப் பாலம் தான் பரிமாணத் தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. படத்தில் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான வெளிச்சம் இருக்கிறதோ?
நன்றி மழலை உங்கள் கருத்துக்களுக்கு.
அஜீவன் அண்ணா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. உங்கள் நிழற்படத்தில் அந்தப் பலகைகளும் அந்தக் குடும்பம் நிற்கின்ற நிலைகளும் நல்லதொரு பரிமாணத்தை உண்டுபண்ணியிருக்கிறது. நன்றி மீண்டும்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img142.echo.cx/img142/5877/tree8fq.jpg' border='0' alt='user posted image'>
ஒளி அதிகமில்லாத சிதறல் ஒளியில் நிழல் விழாது தானே இளைஞன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி குழைக்காட்டான். இப்பொழுது இணைத்திருக்கும் படத்தில் மரங்களின் சிலைகள் பரிமாணத் தோற்றத்தை உண்டுபண்ணுகின்றன. அதேபோல் மரமும் தன்னில் பரிமாணத் தோற்றத்தைத் தருகிறது. ஆனாலும் பரந்த இடத்தை உள்ளடக்குியிருப்பதால் அது தெளிவாகக் காட்டப்படவில்லை. மரத்தின் சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கி பின்புறக் காட்சியை தெளிவில்லாமல் ஆக்கி எடுத்திருந்தால் பரிமாணத்தோற்றம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சரி அடுத்து விரைவில் "தொடுதல உணர்வு" என்கிற தலைப்பில் படங்களை இணைக்கவுள்ளேன். நீங்களும் உங்கள் படங்களை இணையுங்கள்.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
"தொடுதல உணர்வு" என்றால் என்ன..? ? ?
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம்...
இப்போது இங்கு இணைக்கப் போகின்ற படங்கள் தொடுதல் உணர்வை மையப்படுத்தியது. யேர்மன் மொழியில் Taktilititaet என்று கூறுவார்கள். தமிழில் உணர்தல், தொட்டுணர்தல் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். அதாவது படங்களில் நாம் காட்சிப்படுத்துகின்ற பொருளின் மூலம் அதனைத் தொட முடியும்/தொடலாம் என்கிற உணர்வை உண்டுபண்ணுதல். இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய மாதிரிச் சொன்னால் ஒரு முள்ளைக் காட்சிப்படுத்தினால் அது குத்தும் என்கிற உணர்வை அது உண்டுபண்ணும் அல்லவா - அதனைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். சண்முகி அக்கா விளங்கக் கூடிய மாதிரி சொல்லியுள்ளேனா? அல்லாவிட்டால் படங்களைப் பாருங்கள் சிலவேளை படங்கள் இன்னும் விளக்கமாக இருக்கும்.
ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு, பின்புற முன்புறக் காட்சிகள், மேடு பள்ளம் (பரிமாணத் தோற்றம்) போன்வற்றை சரியான முறையில் காட்சிப்படுத்தும் பொழுது காட்சிப்படுத்தப்படுகின்ற பொருள் பார்வையாளர்களிடம் தொடுதலுணர்வைத் தூண்டும். பின்வரும் படங்களைக் கவனியுங்கள். (இவற்றில் அனைத்தும் தொடுதலுணர்வை 100% ஏற்படுத்துவதாகச் சொல்ல முடியாது.)
<img src='http://www.yarl.com/forum/files/1_104.jpg' border='0' alt='user posted image'>
இதில் வெளிச்சத்தின் தெறிப்பு ஓரளவு சரியாக இருந்தபோதிலும் மேடு பள்ளம் (பரிமாணம்) அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனாலும் தடவக்கூடியதாய் உள்ளது என்பது தெரிகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/2_960.jpg' border='0' alt='user posted image'>
இங்கே Mouse காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான இடம் ஒரே தோற்றத்துடன் அல்து "வழுக்கல்" தோற்றத்துடன் இருப்பதால் இதுவும் பெரியளவு தொடுதல் உணர்வைக் கொடுக்கவில்லை. ஆனாலும் Mouse இன் Roller இன்னும் அண்மித்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அதில் உள்ள மேடு பள்ளங்கள் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
<img src='http://www.yarl.com/forum/files/3.jpg' border='0' alt='user posted image'>
இதில் நீர்த்துளிகளும், அதில் பட்டுத் தெறிக்கும் ஒளியும் சேர்ந்து தொடுதலுணர்வை வெளிப்படுத்துகின்றன. தொட்டால் விரலில் ஈரம்படும் என்கிற தோற்றத்தைத் தருகிறதல்லவா?
<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
இங்கு பொருள் கை அணிகலன். இதில் ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு பொருத்தமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அண்மித்தக் காட்டியிருக்கலாம். அதேபோல் விரல்களைத் தெளிவில்லாமல் காட்டியிரக்கலாம். விரல்கள் தெளிவாகக் காட்டிருப்பதால் விரல்கள் தான் அதிகம் கவனிப்புப் பெறும். மற்றும்படி தொடுதலுணர்வை ஏற்படுத்துகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/5.jpg' border='0' alt='user posted image'>
இங்கும் ஒளிபட்டுத் தெறித்து நிழலையும் வெளிச்சத்தையும் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதால், அதன் நெழிவுகள் தடவ முடியும் என்கிற தோற்றத்தைத் தருகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/6.jpg' border='0' alt='user posted image'>
இங்கும் ஒளிபட்டுத் தெறித்து நிழலையும் வெளிச்சத்தையும் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிப்பதால், அதன் நெழிவுகள் தடவ முடியும் என்கிற தோற்றத்தைத் தருகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/7.jpg' border='0' alt='user posted image'>
இதுவும் முதலாவது படத்தைப் போன்றதுதான். ஆனால் ஒளி பட்டுத் தெறிக்கும் அளவு சரியாக இல்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
<img src='http://www.yarl.com/forum/files/8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/9.jpg' border='0' alt='user posted image'>
இரண்டாவது படத்தில் குறிப்பிட்டது போன்று ஒரே மட்டமான பகுதி அதிகம் என்றாலும் M என்கிற எழுத்து மேடான பகுதி என்பது தெரிகிறதல்லவா?
<img src='http://www.yarl.com/forum/files/10.jpg' border='0' alt='user posted image'>
இது Mouse இன் Circuit. இதில் எல்லாப் பகுதியும் தொடுதல் உணர்வை வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக முள்ளுப்போன்று காட்சி தரும் Pin களை மட்டும் அண்மித்துக் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
சரி... இதுவும் பயிற்சிப் படங்கள்தான். இதில் நீர்த்துளி இருக்கின்ற படம் தான் எனக்குத் திருப்தியைத் தந்தது. மற்றையவற்றில் சிறு சிறு குறைகள் உள்ளன. அவற்றை இங்கே இணைத்து அதன் குறைகளையுமு் குறிப்பிட்டுள்ளேன். அதிலிருந்து தொடுதல் உணர்வு என்பது என்னவென்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இது ஒரு Product Photography செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Product Photography என்னும் போது விளம்பரம், அல்லது விளக்கக்கட்டுரைக்கான படங்களுக்கு இந்த தொடுதல் உணர்வை ஏற்படுத்தும் நுட்பம் பயனுள்ளது. பார்வையாளர்களை ஒரு பொருளை வாங்கத் தூண்டுதல், அல்லது படங்களின் மூலம் அதன் தன்மையை விளக்குதல் போன்றவைக்கு இது தேவைப்படும்.
உங்கள் படங்களையும் இணையுங்கள். நன்றி.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நன்றாக விளங்கிக் கொள்ளும் அளவுக்கு சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன். படங்களையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறன்.
ஏதோ... சுமாராய் படங்கள் எடுத்தால் சரி என்று எடுத்துக் கொண்டிருந்தேன்.(முகங்கள் படத்தில் தெரிந்தால் போதும் என்றளவில்) மேலும் சற்று தெரிந்து கொள்வோமே... என்ற நப்பாசைதான்.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
மேலே படங்கள் இணைத்துக்கொண்டிருக்கும் போது கணினி மீளியக்கம் செய்யத் தொடங்கியது அதான் அரைகுறையில் அப்படியே இணைத்துவிட்டேன். இப்போது சரிசெய்துவிட்டேன்.
நானும் ஆரம்பப் பயிற்சியாளன் தான். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
படங்களை பார்க்கும்போது நீங்கள் சொல்ல வரும் விடயம் புரிகின்றது, இவ்வளவு நாளும் கமராவை ஆட்களை எடுக்க பயன்படுத்துவதுடன் விட்டு விட்டேன், முயற்சி செய்து பார்க்கின்றேன் இது போல ஒரு படம் எடுக்கலாமா என்று.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
நன்றாக இருக்கிறது இளைஞன் அண்ணா...அந்த நீர்த்துளி மிகவும் நல்லா இருக்கு...6 வது படமும் நன்றாக இருக்கு...தெரியல பெயர்....எந்த கமராவாலும் எடுக்கலாமா? இல்லை இதற்குரிய தொழில் நுட்ப வசதியுடன் கூடிய கமராக்களா? சரி எப்படி எடுக்கப்படவேண்டும் என்பதையும் விளக்குவீர்களா? நன்றி மிகவும் பயன் உள்ள தகவல்கள்..... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
இளைஞன் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்...............
தொடர்ந்து எழுதுங்கள்.
இதை குறும்படப் பகுதிக்கு நகர்த்தினால் பலருக்கு பயன் தரும் என நினைக்கிறேன்.
ஒளிப்பதிவுக்கான அடிப்படை நிலைகளை எழுதிக் கொண்டிருப்பதால்
இந்த விண்ணப்பம்......................
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி மதன், மழலை அஜீவன் அண்ணா...
மதன் நீங்கள் இதுசம்பந்தமாக எடுக்கின்ற படங்களையும் இங்கு இணையுங்கள்.
மழலை எந்தக் கமரா என்றாலும் பரவாயில்லை. அதிமுக்கியம் உங்களுக்குள் இருக்கின்ற கற்பனைத் திறன், இரசனைத் தன்மை. உங்களிடம் அது நிறையவே இருக்கும். காரணம் உங்கள் சில கவிதைகளைப் படித்துணர்ந்தேன். எனவே முயற்சி செய்யுங்கள். "படம் எடுப்பது கமராவல்ல, கண்கள் தான்" என்று இத்துறையில் புகழ்பெற்ற ஒரு கமராக் கலைஞர் சொல்லியுள்ளார். (அவர் பெயர் சரியாகத் தெரியவில்லை). கமராவின் தொழில்நுட்பம் செலவுகளையும், நேரத்தையும் மிச்சப்படுத்துமே ஒழிய, உங்கள் இரசனைதான் சிறந்த நிழற்படங்களை எடுக்க உதவும். Digital Camera ஆக இருந்தால் நீங்கள் பயிற்சி செய்வதற்கு இலகுவாக இருக்கும் - காரணம், நேரமும் மிச்சம், அதிக செலவும் இல்லை. அதாவது நிறையப் படங்களை எடுத்து சரியில்லாவிட்டால் Memory Card இல் இருந்து அழித்து அழித்து மீண்டம் எடுக்கலாம். Filmroll இற்காக பணம் செலவளிக்கத் தேவையில்லை. Analog Camera இருந்தாலும் பரவாயில்லை - ஆனால் படம் எடுத்து அதனைகஇ கழுவக் குடுத்து வர நேரமெடுக்கும் - அதில் பிழையிருந்தால் திரும்பவும் அத்தனை வேலையும் செய்யவேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள கமராவை பயன்படுத்தி படங்களை எடுத்துப் பாருங்கள். உங்களை ஒரு சிறந்த இரசனையாளராக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருட்களையும் இரசனையோடு பாருங்கள். முக்கியமாக ஒரு பெரிய பரப்பை எடுப்பதை முதலில் தவிருங்கள். ஒரு பெரிய பொருளின் சிறிய பகுதியை காட்சிப்படுத்த முயலுங்கள். உதாரணமாக அந்த "நீர்த்துளிகள்" படம் ஒரு Shampoo போத்தலின் மூடியாகும்.
எப்படி எடுக்கவேண்டும்?
கமராவை உங்களுக்கு இயக்கத் தெரியும் தானே? அவ்வளவும் போதும். எவ்வளவு வெளிச்சம் எங்கிருந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள். நிழற்படத்தின் கருப்பொருளே வெளிச்சம்தானே? Photography என்றால் ஒளியினால் வரைதல் என்று பொருள்படும். அதனால் தான் இங்கு ஒளியோவியம் என்று தலைப்பிட்டேன். எனவே வெளிச்சம் எப்படி அமையவேண்டம் என்பது முக்கியம். வீட்டுக்குள் இருக்கும் மின்விளக்கு வெளிச்சமா, அல்லது யன்னலூடே வரும் சூரியவெளிச்சமா சரியாக இருக்கும் என்பதை நீங்களே ஒரு கலைஞராக, கமராக் கவிஞராக இருந்து முடிவு செய்யுங்கள். அதேபோல ஒருபொருளைக் காட்சிப்படுத்தும்போது அது படத்தில் சரி நடுவில் தான் இருக்கவேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். ஒரு பக்கமாக இருந்தால் நல்லது. கட்டாயமல்ல, அதேபோல் எப்போதுமே அப்படித்தான் இருக்குவேண்டும் என்று அவசியமும் இல்லை - தேவைக்கேற்ப அது வெளிப்படுத்தும் பெர்ருளிற்கேற்ப படத்தில் அந்தப் பொருளின் நிலை எங்கிருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். காட்சிக்கா தூரத்தையும் முடிவு செய்யுங்கள். தூரத்திலிருந்து Zoom செய்வதன் மூலம் காட்சியை அண்மிக்கலாம், அல்லது காட்சிக்கு/பொருளிற்கு மிக அண்மையில் சென்று காட்சிப்படுத்தலாம். இதனையும் உங்கள் இரசனைக்கேற்ப செய்யுங்கள். Zoom செய்வதற்கும், நீங்கள் பொருளிற்கு அருகில் சென்று காட்சிப்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை பின்னர் இணைக்கிறேன்.
எனவே உங்களை ஒளியோவியக் கலைஞராக, கவிஞராக நினைத்துக்கொண்டு படங்களை அணுகுங்கள், இரசியுங்கள், காட்சிப்படுத்துங்கள். சரி... இந்தளவு விளக்கம் தற்போதைக்கு காணும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள். நீங்கள் எடுத்த படங்களை இணையுங்கள். என்னென்ன திருத்தங்கள் செய்யலாம், இன்னும் எப்படிச் சிறப்பாக செய்யலாம் என்பவற்றை பிறகு பார்ப்போம். சரியா? எப்போது இணைக்கப் போகிறீர்கள்? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அஜீவன் அண்ணா உங்கள் கருத்திற்கு நன்றி. ஒரு கொஞ்சம் இன்னும் வளரட்டும். அதன் பின்பு குறும்படப் பகுதிக்கு நீங்கள் சொன்னது போன்றே மாற்றிவிடலாம்.
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
நன்றி இளைஞன் அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது...எப்பொழுது இணைக்கப்போகிறேன் என்பது தெரியாது...படங்களை எடுத்து விட்டு இணைக்கிறேன்....நன்றி இளைஞன் அண்ணா <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
விளக்கங்கள் நன்றாக இருக்கிறன.
இதில் இணைத்த படம் முதலே வேறு பதிவில் இணைத்தது தான். உங்கள் தலைப்புக்கு ஒத்து போகும் போலுள்ளதால் இணைத்துள்ளேன்
<img src='http://img136.exs.cx/img136/3074/s11bp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி மழலை.
நன்றி குழைக்காட்டன். பொருத்தமான படம். பின்புறக்காட்சியைத் தெளிவில்லாமல் ஆக்கி இன்னும் கொஞ்சம் அண்மித்தால் அதன் வெளிப்பாடு இன்னும் சிறப்பாய் அமையும். தொடர்ந்து இணையுங்கள்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img41.echo.cx/img41/2039/tou10dq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
குழைக்காட்டான், தொடுதல் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நல்ல படம். இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு சில கருத்துக்கள்:
இதே பொருளை இன்னும் கொஞ்சம் அண்மித்து (Zoom), வேறு ஒரு பின்புறக்காட்சியையும் தெரிவு செய்து, நிழல் விழுவதைத் தவிர்த்து (ஒளியமைப்பில் கொஞ்சம் மாற்றம்), கமராவின் நிலையை (angle) கொஞ்சம் மாற்றி ஒரு படம் எடுத்துப் பாருங்கள்.
கமரா angle 2D பரிமாணதத்தைத் தான் காட்டுகிறது. காரணம் கமரா angle. எனவே சீப்பை Verticle ஆக சரித்து பின்புறக்காட்சியை மங்கலாக்கி அல்லது பின்புறக்காட்சியை இருட்டாக்கி எடுத்துப் பார்க்கலாம். நன்றி
பிகு: சீப்பில் ஒரு தலைமுடி இருக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நல்ல விசயம் ஒன்று ஆரம்பித்துள்ளீர்கள் என்று இப்ப தான் புரிந்தது.
விளக்கங்களுக்கு நன்றி இளைஞன் அண்ணா.
குளக்ஸ் அண்ணா சீப்பை கிளீன் பண்ணிட்டு படம் எடுக்கனும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|