Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் பெயரால் வன்னியில் தாக்குதலுக்கு இராணுவம்
#1
கருணாவின் பெயரைப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் புலனாய்வு ஊடுருவல் தாக்குதல்களை நடாத்த இலங்கை அரசின் (அஐ) இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருகின்றது.

~கருணா குழு| என்பதில் எல்லோருக்கும் பெரிய குழப்பம் உண்டு. சிறீலங்காப் புலனாய்வு இயந்திரத்தையே கருணா குழு வென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக கருணாவின் ஆட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன.

கருணா குழு என்றால் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுää சிறீலங்கா இராணுவப் புலனாய்வு என்றால் ~கருணா குழு| என்றாகி விட்டது போல் உள்ளது. இதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. அதிலிருந்து இதைப் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஈருயிரும் ஓருடலுமாகிவிட்டது.

கடந்த காலத்தில் முதலில் கருணாவின் பெயரால் மட்டு. அம்பாறையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டும் புலிகள் மீது தாக்குதல் இடம்பெற்றது.

பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஊடுருவல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல்கள் இடம்பெறப் போகின்றது.

அதற்காக ~கருணா குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களை அரச இராணுவப் புலனாய்வுப் பிரிவு வவுனியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் அவர்கள் Nஐhசப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கருணாவைக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது புதிய புலனாய்வுக் கட்டமைப்பினை உருவாக்க முகவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் ஒரு புதிய அணியை வவுனியாவில் நிரந்தரமாக நிலை நிறுத்தப் போகிறது.

சிறிலங்காப் புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும்; முகவராக தற்போது கருணா செயற்படுகின்றார்.

சிறிலங்காவின் புலனாய்வு இயந்திரத்தின் பசிக்கு போதியளவு தீனி போடக்கூடியளவு ஆட்கள் கருணாவிடம் இல்லை. அதாவது தற்போது கருணாவிடம் வலுவுள்ள 15 பேரிலும் குறைந்தவர்களே இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர்களும் நாளுக்கு நாள் தலைமறைவாகி வெளிநாடு தப்பியோடுவதால் கருணாவின் பாசறையில் ~கருணா குழு| என்ற பெயரில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடர்த்தியே பெருகி வருகின்றது.

தற்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு வலையமைப்புக்கு பொலநறுவைää மட்டக்களப்புää அம்பாறைää வவுனியா மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதைவிட பொலநறுவை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களிலிருந்து அதிக கூலி கொடுத்து கருணாவின் பெயரால் அரச புலனாய்வு இயந்திரத்திற்கு ஆட்சேட்புச் செய்யப்படுகின்றது. இதற்கு பல சிறுவர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பில் அரச இராணுவப் புலனாய்வு இயந்திரம் மேற்கொள்ள முயன்ற பல தாக்குதல் முயற்சியில் மாற்றியக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதை விட பணத்தைக் கொடுத்து கூலிக்கு புலிகளின் பகுதியில் குண்டு வெடிப்புச் செய்ய மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளை புலிகளின் உளவுத்துறை அன்று கண்டு பிடித்ததாக மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருடன் நான் உரையாடும் போது அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கூலிக்கு இவ்வாறான ஆட்களைத் தேடிக் கண்டு பிடிக்க சிறிலங்காவின் புலனாய்வு நிறுவனங்களான ஊஐனுஇ Nஐடீஇ னுஆஐ என்பன தீவிர முயட்சியிலீடுபடுகின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவித் தாக்க முன்னர் இயங்கிவந்த டுசுசுPயின் புதிய வடிவத்தை கருணாவைக் கொண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது.

இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவி தாக்கத் தேவையான ஒற்றர்களை ~கருணா குழு| விடமிருந்தே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பெறப்போகின்றது.

கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலனாய்வு வெற்றிகள் சிலவற்றை பெற்ற இராணுவப் புலனாய்வுப் பணியகம்ää ஆடி அடங்கி வதங்கிப் போயிருக்கும் புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றியக்கங்களையும் தற்போது தடவி தட்டி எழுப்பி கருணாவால் முடிந்தால் ஏன் உங்களால் முடியவில்லை என கேள்வியும் கேட்டு ஊக்க மருந்து ஊசியும் ஏற்றி வருகிறதாம்.

அதன் மறுவடிவமாக கடந்த காலத்தில் துணைப்படையாக இயங்கி வந்த ராசிக்குழு மோகன் குழு புளொட் நுPனுPஇ நுPசுடுகு வரதர் அணிää நுNனுடுகு போன்றவற்றையும் கருணா கும்பலுடன் இணைக்கும் நடவடிக்கையில் இலங்கை தேசியப் புலனாய்வுப் பணியகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் அரச புலனாய்வு இயந்திர அதிகாரிகளும் இணைக்கப்பட்டு இவற்றை எல்லாம் ஒன்றாய் சேர்த்து இவற்றுக்கு ~கருணா குழு| என தற்போது பெயர் சூட்டப்பட்டு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவர் தான் கருணா. அனைத்து தமிழ் தேச விரோதிகளுக்கும் தலைமை தாங்கும் ஓர் மனிதராக மாறியுள்ளார்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போது ஒரு இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கினார். ஆனால் இன்று றிமோல் கொண்றோலில் இயங்கும் மனிதராகி விட்டார். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஹாபில கெந்தவிதாரனாவின் தாளங்களுக்கு ஆடும் ஒரு பொம்மையாக உருமாறியுள்ளார்.

கருணா கட்டளைகளைப் பிறப்பித்தே வாழப்பழகிக் கொண்டவர். கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுக் கிடந்த மனிதர் அல்லர். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் ஏற்படவே கருணா விரக்தியடைந்தார். ஆகவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலும் கருணாவால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பது வேறு விடயம் தான். புது மாப்பிள்ளைக்குத் தற்போது புது வீட்டில் நல்ல வரவேற்பாகத்தான் இருக்கும் போகப் போகத்தான் எல்லாம் ~அம்மானு|க்குப் புரியும்.

மட்டு. அம்பாறையிலிருந்து வவுனியா மன்னார் வரை தற்போது ~கருணா குழுவின்| செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றிருக்கின்றன. அண்மையில் வவுனியா விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் இதன் ஒரு அங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்வாறாக விரிவாக்கம் பெற்று வரும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடான கருணா குழுவின் தாக்குதல் தொடர்பாக புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பொறுப்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:-

~கருணா குழு? என்ற பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வன்னிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக தமது உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவரின் கருத்தைக் கொண்டு ஆராயும் போது இக்குழு வன்னிக்குள் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தேசத்துக்கு விசுவாசமாக நடித்துக் கொண்டு சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படலாம் என பாடசாலை அதிபர் ஒருவருடன் உரையாடிய போது அவரும் கருத்துத் தெரிவித்தார்.

இப்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல் தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய நிலையில் வன்னியில்; புலிகள் உள்ளனர். அவ்வாறான ஊடுருவல்களை முறியடிப்பதற்கு புலிகளின் உளவுத்துறை தயாராகிவிட்டதை அறிய முடிகின்றது.
~கருணா குழு|வின் தாக்குதலை முறியடிப்பதற்காக அல்லது கண்டு பிடித்து தடுப்பதற்காக வன்னிப் பிரதேசங்களுக்கு புதிதாக வருவோரை புலிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் சில தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சிக்கலின் மத்தியில் தான் முறியயடிப்பு உளவாளிகள் ~கருணா குழு|வின் ஊடுருவல் தாக்குதலைத் தடுப்பதற்கு புலனாய்வு வலயத்தை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இதில் புலிகளின் உளவுத்துறைக்கு இரு பணியுண்டு. ஒன்று கருணாவின் ஊடுருவல் தாக்குதலைத் தடுக்க வேண்டும். மற்றது அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்

இவ்வாறான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் புலனாய்வு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கருணா குழுவின் வன்னிப் பகுதி மீதான தாக்குதல்களை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவு உளவாளிகள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளை பொது மக்களின் புலனாய்வு முகவர் கட்டமைப்பினையும் விழிப்பு நிலையில் இருக்கும்படி வேண்டியிருப்பதாக அறிய முடிகின்றது.


நன்றி தமி;ழ்நாதம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#2
இதோடதான் கருணாவின் ஆட்டம் முடியுதோ தெரியாது.... தயவு செய்து ""அம்மான்"" என்ற வார்த்தைப் பிரயோக்தை அந்த நன்றி கெட்ட நாய்க்கு பயன் படுத்த வேண்டாம் என தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்...
""
"" .....
Reply
#3
கருணா குழு - ஈ.என்.டி.எல்.எப். கூட்டை அம்பலமாக்கியுள்ள சொறிவில் தாக்குதல்

ழூ முகாமில் காணப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள்

கிழக்கில் தொடரும் மோதல்களின் பின்னணியில் பொலநறுவை மாவட்டம் தற்போது கொலைக்களமாக மாறியுள்ளது. யுத்தம் நடைபெற்ற மிக நீண்டகாலப் பகுதியில் ஒரு சில சம்பவங்களுக்கான களமாயிருந்த பொலநறுவை மாவட்ட எல்லைப் பகுதி இன்று சமர்க்களமாக மாறியுள்ளது. அடிக்கடி இங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் காய் நகர்த்தல்களால் பொலநறுவை மாவட்ட எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் திகைப்படைந்து போயுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் நடவடிக்கைகளுக்கு புலிகள் முற்றுப் புள்ளி வைத்ததையடுத்து கருணா குழுவினர் மட்டக்களப்பின் வடமேற்கு எல்லையிலுள்ள பொலநறுவை மாவட்டத்திற்குள் நகர்ந்தனர். இப்பகுதியில் வெலிக்கந்தை படைமுகாமிற்கு சமீபமாகவிருந்து இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாக புலிகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை படைத்தரப்பு மறுத்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் புலிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம்இ இந்த எல்லைப்புற மாவட்டத்தில் புலிகளுக்கெதிராக நடைபெறும் தாக்குதல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

பொலநறுவை - மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தைக்கு அருகிலிருந்து செயற்பட்ட கருணா குழுவினர்இ பின்னர் புலிகளின் பல அதிரடித் தாக்குதல்களையடுத்துஇ பொலநறுவை - வாழைச்சேனை வீதியில்இ மேலும் மேற்காக நகர்ந்து மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.

இப்பகுதிகளிலுள்ள தமிழ் கிராமங்களுக்கு மிக நெருக்கமாக சிங்களக் கிராமங்களிருப்பதால் இங்குள்ள தமிழ் -சிங்கள மக்களிடையே திருமண உறவுகளும் சர்வ சாதாரணம். அதேநேரம் இப்பகுதியில் ஆங்காங்கே முஸ்லிம் கிராமங்களுமுள்ளதால் இந்த எல்லைப் புறப் பிரதேசம் தங்களுக்கு பாதுகாப்பானதென கருணா குழுவினர் கருதியிருக்கலாம்.

அதேநேரம்இ புலிகளுக்கெதிரான கருணா குழுவின் நடவடிக்கைகளின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே இருப்பதாய் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதால் வெலிக்கந்தை மற்றும் மன்னம்பிட்டி படை முகாம்களின் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்கு அருகே இவர்களை வைத்துக் கொண்டு இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இதைவிடஇ கிழக்கிலிருந்து வன்னிக்கான புலிகளின் தரை வழிப் பயணம் இப் பகுதிகளூடாகவே நடைபெறுவதால் புலிகளின் முக்கியஸ்தர்களை மட்டக்களப்புக்கு வெளியே தங்களுக்குச் சாதகமான இடத்தில் வைத்து இலக்கு வைக்கவும் கருணா குழுவினருக்கு இப் பிரதேசம் மிகவும் வசதியாகவிருந்தது.

எனினும்இ இப் பகுதிகளுக்குள்ளும் கருணா குழுவுக்குள்ளும் ஊடுருவிய புலிகள் இப் பகுதிகளில் வைத்து கருணா குழுவினர் மீது அடுத்தடுத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தி வந்ததால்இ பொலநறுவை - வாழைச்சேனை பிரதான வீதிக்கு சமீபமாகவிருந்து செயற்பட்ட கருணா குழுவினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதான வீதியிலிருந்து கிராமங்களுக்குள்ளே நீண்டதூரம் சென்று பாதுகாப்பு தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தீவுச்சேனை தமிழ் கிராமமும் இவ்வாறானதொன்றே. மேற்படி பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் ( வெலிக்கந்தைக்கு சமீபமாக) பிரதான வீதியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் தீவுச்சேனையில் பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் முகாம் அமைந்திருந்தது. கடந்த மாத நடுப்பகுதியில் ஆங்கில வார இதழ் ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது அம்பலத்திற்கு வந்த மறுநாள் இந்த முகாம் மீது புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்த இது மேலும் அம்பலப்படுத்தப்பட்டது. கிழக்கில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் கூட போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இங்கு கருணா குழுவின் முகாமிருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும்இ தீவுச்சேனைக்கு நீண்ட நாட்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவினர் சென்ற போது அங்குஇ கருணா குழுவினரின் முகாமிருந்த அடையாளங்கள் இல்லாதிருந்தன. ஆனாலும்இ தங்கள் விசாரணைகள் தொடர்வதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வெலிக்கந்தைக்கு தெற்கே (பொலநறுவை - வாழைச்சேனை வீதிக்கு தெற்கே) சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் திம்புலாகல பிரதேச சபை எல்லைக்குள்ளும் அரலகன்வில பொலிஸ் பிரிவிலுமுள்ள சொறிவில் தமிழ் கிராமத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

சொறிவில் கிராமத்திலிருந்து மேலும் தெற்காக (அம்பாறை நோக்கி) ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வண்ணாந்துறை எனும் பகுதியுள்ளது. இது பற்றைக் காடுகள் நிறைந்த பகுதி. இப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆயுதக் குழுவொன்று முகாமிட்டுள்ளது. இங்கு பத்திற்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நடமாடுவதை அப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

சொறிவில்லுக்கு அருகே மலியதேவபுரஇ நாமல்பொக்குண கிராமங்களுமுள்ளன. சொறிவிலில் இந்த ஆயுதக்குழு முகாம் அமைத்த பின்னர் மேற்படி மூன்று கிராமங்களிலும் இந்த ஆயுதக் குழுவின் நடமாட்டங்களும் நடவடிக்கைகளும் அதிகரித்தன. மலியதேவபுர மற்றும் நாமல் பொக்குண கிராமங்களில் 121 சிங்களக் குடும்பங்கள் வசிக்கின்றன. சொறிவிலில் 246 குடும்பங்களுள்ளன. திம்புலாகல விகாரைக்கு செல்லும் பாதையின் தென் பகுதியிலேயே இந்த மூன்று கிராமங்களுமுள்ளன.

சொறிவில் மட்டக்களப்பு எல்லையிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. கடந்த வாரம் இந்த மூன்று கிராமத்தவர்களையும் கூட்டமொன்றுக்கு அழைத்த இந்த ஆயுதக் குழுஇ இந்த மக்களிடமிருந்து ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டது. இப்பிரதேசத்தவர்கள் பெரும்பாலானோர் வறியவர்களென்பதால் இவர்களது வருமானத்திற்காக சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தூண்டிய இந்த ஆயுதக் குழு இதற்குத் தாங்களும் உதவுவதாகவும் கூறியதாக ஹலங்காதீப' சிங்களப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாயிருக்கும் இப்பிரதேசத்திலேயே இந்த ஆயுதக் குழுவின் முகாமிருந்துள்ளது. ஐந்து சிறிய கொட்டில்களில் மூன்று கொட்டில்களுக்குள் பத்துக்கும் மேற்பட்டோரும் இரண்டுக்குள் அவர்களுக்கான உணவுப் பொருட்களும் இருந்துள்ளன. இங்கேயே வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திடீர் தாக்குதலொன்று நடைபெற்றதில் இவற்றிலிருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொழுது புலர்ந்த பின்னர் அப்பகுதிக்குச் சென்ற கிராமவாசிகள்இ மூன்று கொட்டில்களுக்குள்ளும் அவற்றின் வெளிப்புறத்திலும் 9 பேர் இறந்து கிடப்பதையும்இ சிலர் படுகாயமடைந்திருப்பதையும் பார்த்துள்ளனர். படையினரும் பொலிஸாரும் பின்னர் அங்கு வந்து இறந்தவர்களது சடலத்தை அரலகன்வில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதுடன் காயமடைந்த இருவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

எனினும்இ ஐந்து சடலங்களே ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுதி நான்கு சடலங்களுக்கும் என்ன நடந்ததெனத் தெரியவரவில்லை. ஆனாலும்இ தாங்கள் 9 சடலங்களை பார்த்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர். அப்படியாயின் மிகுதி நால்வரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

முதலில் இந்தச் சம்பவத்தை பற்றி படைத்தரப்பு எதனையும் கூறவில்லை. பின்னர் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரட்ணஇ விடுதலைப்புலிகளின் உள் முரண்பாட்டால் வன்னிப் புலிகளுக்கும் கருணா குழுவினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டதாகக் கூறினார். எனினும்இ இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்புமில்லையெனக் கூறிய புலிகள்இ கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ். வுக்கும் (பெட்டிச் செய்தியை பார்க்கவும்) இடையிலான மோதலின் விளைவே இதுவெனக் கூறினர்.

அதேநேரம்இ இக் குழுவினருடன் இருந்த சிலரது கை வரிசையே இதுவென வேறொரு தகவல் கூறஇ இத் தாக்குதலை புலிகள் நடத்தினார்களா அல்லது கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ்.வுக்கும் இடையிலான மோதலா அல்லது உடனிருந்தவர்களின் கை வரிசையா இதுவென்ற கேள்வியும் எழுந்தது.

பெரும்பாலும் இதுஇ இக்குழுவுடன் உடனிருந்த சிலரது கைவரிசையே எனக் கருதப்படுகிறது. எனினும்இ உடனிருந்தவர்கள்இ ஊடுருவிய புலிகளா அல்லது கருணா குழுவைச் சேர்ந்தவர்களா அல்லது ஈ.என்.டி.எல்.எவ்.வை சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொட்டாவையில் கடந்த வருட நடுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று இதுவும் நடைபெற்றிருக்கலாம்.

துப்பாக்கிச் சூட்டை கேட்டு விழிப்படைந்த மக்கள்இ அங்கு மோதல் நடைபெற்றது போல்இ அதாவதுஇ இரு தரப்புகளிடையே சண்டை நடைபெற்றது போல் தெரியவில்லையென்றும்இ யாரோ சிலர் கண்டபடி சுடுவது போன்றே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறினர். அத்துடன்இ தாக்குதலுக்கு முன்னர் அப்பகுதியில் எவரது நடமாட்டமோ அல்லது தாக்குதலின் போது வெளியார் நடமாடியதற்கான அறிகுறியோ அப்பகுதியில் தென்படவில்லையென்றும் கூறினர்.

இதேநேரம்இ அங்கிருந்த 5 கொட்டில்களுக்குள் மூன்று கொட்டில்களுக்குள்ளேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதால்இ குறைந்தது மூவராவது தங்களுடனிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இந்த மூவரும் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தப்பிச் செல்லும்போதுஇ இவர்கள் வசமிருந்த முக்கிய பொருட்களையும் கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு சென்றிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

அதேநேரம்இ சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெருமளவு புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன. இவையெல்லாம்இ படையினருடன் இளைஞர் குழுவொன்று இணைந்து எடுத்த படங்களாகும். படையினர் இளைஞர் குழுவொன்றுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்குவது போன்றும் அவர்களுடன் இவர்கள் இணைந்து செயற்படுவது போன்றும் அந்தப் புகைப்படங்கள் தென்படுகின்றன.

இதேநேரம்இ இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் விஜயன் (ராசேந்திரன் பேரின்பநாதன் - திருகோணமலை)இ கவியன் (செல்லையா குழந்தைவேலு - திருகோணமலை) ஆகிய இருவரும் ஈ.என்.டி.எல்.எவ். வைச் சேர்ந்தவர்களெனவும் துரை (சின்னப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை)இ வாசு (தேவதாசன் தெய்வேந்திரன்)இ காந்தன் (கந்தசாமி ஜெயநிதன்) ஆகிய மூவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகுதி நால்வர் யார் என்ற கேள்விக்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

கருணா குழுவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.சேர்ந்த பின்னர் இரு தரப்பும் ஒன்றாக இருந்த போது நடைபெற்ற முதல் சம்பவம் இதுவாகும். இதன் மூலம் இவ்விரு குழுக்களையும் இணைத்து களமிறக்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சொறிவில் கிராமத்தை சேர்ந்தவரென்பதால் கிழக்கிற்கு வெளியேயும் கருணா குழுவினருக்கு ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டதும் உறுதியாகியுள்ளது.

இதைவிட இதீவுச்சேனை முகாமே சில காரணங்களுக்காக இப் பகுதியில்இ பிரதானஇ வீதியிலிருந்து நீண்ட தூரக் கிராமத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈ.என்.டி.எல்.எவ்.வும் இங்கு வந்து சேர்ந்ததால் அயல் நாட்டு புலனாய்வுப் பிரிவும் இப்போது புலிகளுக்கெதிராக களமிறங்கி விட்டதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.

அதேநேரம் மட்டக்களப்போ அல்லது அம்பாறையோ அல்லது அதற்கு வெளியே எங்கு சென்றாலும் கருணா குழு நிழல் போலப் பின் தொடரப்படுவதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதன் மூலம் இந்தக் குழுவினருடனான படையினரின் தொடர்புகள் உறுதியாகிவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு குழு திடீரென அங்கு வந்து முகாமமைத்து மக்களை அழைத்து கூட்டம் நடத்திய பின்பும் இது பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாதென படைத்தரப்பு கூறினால் அது மிகப்பெரும் நகைச் சுவையே. ஆனாலும் கருணா குழுவுடன் மட்டுமல்லாது தற்போது ஈ.என்.டி.எல்.எவ்.வுடனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்புகள் ஏற்பட்டுள்ளமை இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கிழக்கில் தொடரும் நிழல் யுத்தம் முடிவுக்கு வரப் போவதில்லையென்பதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. நிழல் யுத்தம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து இராணுவத்தினரின் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தவறி வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும்இ ஆதாரம் தேவையென கண்காணிப்புக் குழு அடிஇ முடி தேடுவதால் ஹநிழலைஹ கண்காணிப்புக் குழு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இங்கும் கண்காணிப்புக் குழு செல்ல நீண்ட நாட்களெடுக்குமென்பதால் இங்கும் தமிழ்க் குழுக்களின் முகாமிருந்ததற்கான ஆதாரமில்லாது போகலாம்.

அதேநேரம்இ கருணா குழு படையினருடன் சேர்ந்தியங்கவில்லை முகாம்களை அமைத்தே அவர்களும் செயற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வெளியுலகிற்கு காண்பிக்க முடியும். ஆனாலும்இ இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருக்கும் கருணா குழுவின் முகாம்களே தாக்கப்படுகையில்இ புலிகளின் பகுதிக்குள்ளேயே கருணா குழுவின் முகாம்களிருப்பதாக படைத்தரப்பு கூறுவது எடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எவை எப்படியிருந்தாலும் அரசாங்கம் உறுதியான சில முடிவுகளை எடுக்காவிட்டால் தற்போதைய நிழல் யுத்தம் நிஜப் போராகுவதற்கு மிகவும் குறுகிய காலமே தேவையென்பது சர்வ நிச்சயம்.


யார் இந்த விஜயன்?

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணா ஹதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவர்இ ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) யுடன் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.

1987 இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்இ புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது தான் ஈ.என்.டி.எல்.எப்.

இலங்கையில் இந்தியப் படை நிலை கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கெதிராக ஈ.என்.டி.எல்.எவ். தீவிரமாகச் செயற்பட்டதுடன் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் இவர்களும் தமிழகம் சென்று சேலத்தில் நிலை கொண்டனர்.

கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவருடன் இணைய ஈ.பி.டீ.பி. முற்பட்ட போதும் கருணாவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.பை இந்திய புலனாய்வுப் பிரிவான ஹறோ' வே இணைத்ததாக தமிழர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.பும் இணைந்த பின்இ கௌசல்யன் மீதான வெலிக்கந்தை தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பென தமிழ்த் தேசிப் படை (ரி.என்.எவ்.) என்ற அமைப்பு வெளிநாடொன்றிலிருந்து உரிமை கோரியதுடன் தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்பின் துணைப் படையே ஹரி.என்.எவ்.' எனக் கூறியிருந்தது.

கௌசல்யன் கொலையுடன் விஜயன் என்ற ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் சொறிவில் தாக்குதலின் விஜயன் கொல்லப்பட்டார்.

புலிகளுக்கெதிரான தாக்குதலை கிழக்கில் தீவிரப்படுத்துவதற்காக விஜயன் விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் தற்போது சேலத்தில் ஈ.என்.டி.எல்.எப். முகாமிலிருக்கின்றனர்.

விஜயன் இந்திய கடவுச் சீட்டைக் கொண்டவர். இவரது இழப்பு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் இவருக்குப் பதிலாக ஈ.என்.டி.எல்.எவ்.பைச் சேர்ந்தவர்கள் இங்கு அனுப்பப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#4
முக்கியமான ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட இருக்கிறார்.........
<b> </b>
Reply
#5
அண்மையில் தென் தமிழீழ சொருவிலில் துரோகக் கும்பலுக்கு எதிரான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய-இலங்கை புலனாய்வாளர்களினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராக "கருணா கும்பலின் பெயரில்" செயற்பட்ட "ENDLF" துரோகக் கும்பல் என்பது வெட்ட வெளீச்சமாகியுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட துரோகிகளின் "விஜயன்" என்பவன் "ENDLF" கும்பலின் இந்திய பிரஜாவுரிமை பெற்ற முன்னனித் தலைவனென்றும், இந்திய அமைதிப்படை காலத்தில் திருமலையில் முகாமிட்டு பல தமிழ் இளையர்கள், யுவதிகள் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போவதற்கும் காரணமான இரத்த வெறி பிடித்த மிருகம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இவ் "ENDLF" கும்பலானது இலங்கை-இந்திய ஒப்பந்த காலத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கும்பலாகும். ஆரம்பத்தில் "PLOTE". "EPRLF" களில் இருந்தவர்களைச் சேர்த்து "பரந்தன் ராஜன்", "டக்லஸ்" கூட்டுத் தலைமையுடன் "THREE STAR" எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின் "ENDLF" என பெயர் மாற்றம் பெற்ற இக்கும்பலானது ஆரம்பத்திலேயே தலைமைப் போட்டி "பரந்தன் ராசன்", "டக்லஸ்" இனுள் ஏற்பட்டதன் காரணமாக பல "டக்லஸ்ஸின்" ஆதரவாளர்கள் "பரந்தன் ராஜனினால்" கொல்லப்பட "டக்லஸ்" இந்தியாவிற்கு தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது. இதன் பின் இக்கும்பல் பின் இந்திய அமைதிப்படை உதவியுடன் யாழ்நகர், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருமலை, மட்டு-அம்பாறையில் நர மாமிச வேட்டையாடிய நிகழ்வுகள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க, மன்னிக்க முடியாத ரணங்கள்.

பின் வரலாற்றுத் தோல்வியுடன் இந்திய இராணுவம் மூட்டை முடிச்சுகளோடு பின் வாங்கிய போது ஈழத்தை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட இக்கும்பலானது இந்தியாவில் பல இடங்களில் தங்க விடப்பட்டது. அங்கு அண்ணநகர், வடபழனி, ... உட்பட தங்கியிருந்த இடங்களில் கொள்ளைகள், கொலைகள், வழிப்பறி, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என தம் திறமைகளை விஸ்தரித்த இக்கும்பலிலுள்ள பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல, இக்கும்பல் அழிந்துவிடும் தறுவாயில்தான் "கோடாலிக் காம்பு கருணாவின்" துரோகங்கள் செயற்பாடுகள் தணலாக எறிந்து கொண்டிருந்த இந்திய புலணாய்வாளர்களுக்கு எண்ணையாக மாறீயது. மீண்டும் "துரோகி கருணாவின் பெயரால்" இக்கும்பகுக்கு புத்துயிரளிக்கப்பட்டது.

இன்று தமிழ்த் தேசியத்தின் பலம், வளர்ச்சி, ... பற்றியறியாத இக்கும்பலானது இந்திய எஜமானர்களினால் வேள்விக்கு வளர்க்கப்பட்ட அடிமாடுகளாக ஒன்றன்பின் ஒன்றாக மாலைகளிட்டு அனுப்படுவது, இக்கும்பலின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
" "
Reply
#6
அப்ப தமிழன் திருந்த இடமே இல்லையா?
Reply
#7
நிச்சயமாக இல்லை............ இப்டியே அழிவதுதான்
<b> </b>
Reply
#8
Quote:MEERA



இணைந்தது: 09 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 906
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 8:40 pm Post subject:



முக்கியமான ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட இருக்கிறார்.........
_________________
இலட்சியவாதிகள் துாங்குவதில்லை

யார் பிள்ளை அது அப்ப 10 பேரே

ஒண்டு + பண்ணினால் சந்தோசம் தானே

ஊர் வீட்டுடில நக்கப்போனால் தெருநாய் நம்மவீட்டில நக்கினால் வீட்டுநாய்

தெருநாய்க்கு என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவரால் சாவு தான் இல்லையோ தம்பி கணோன் ம் ம்

இல்லை ஒருநாளைக்கு கவர்மென்டே தெருநாயை போட்டுத்தள்ளும் ஏனென்டால் மக்களுக்கு (தங்களுக்கு ) இம்சை எண்டு
(அரசாங்க நாய்பிடி வண்டில் :wink: )

+ - பாத்தா தெருநாய் செத்தே தான் தீரனும் இல்லையொ அப்ப சாகட்டும்
என்னனனன இந்த முறை தொகை கொஞ்சம் கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மி
[b]
Reply
#9
நண்பர்களே
அம்மான் என்று அழைப்பதற்கு தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒருவர்தான் நமக்கு இருக்கிறார். துரோகளையெல்லாம் அம்மானென்று அந்த வார்த்தையை சாக்கடை நீருடன் ஒப்பிடுவதை விட்டுவிடுவோம்.
தெருநாய்களை விலைகுடுத்து வாங்கியிருக்கும் அயல்நாய்களுக்கும் ஒருநாள் தெருநாய்கள் கடிக்கும். அப்போது தெருநாய்கள் எல்லாம் அநாதை நாய்களா சாகும்.
Reply
#10
நேசன் Wrote:அப்ப தமிழன் திருந்த இடமே இல்லையா?
திருந்திறதா ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#11
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
aswini2005



இணைந்தது: 30 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 310
வதிவிடம்: WORLD
எழுதப்பட்டது: புதன் சித்திரை 20, 2005 10:29 am    Post subject:  



நேசன் எழுதியது:
அப்ப தமிழன் திருந்த இடமே இல்லையா?

திருந்திறதா ?  
_________________
::::ஒரு படைப்பாளியின் படைப்பு எத்தனை சத்தியம் நிறைந்ததோ அதேயளவு சத்தியம் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டும். (நன்றி - ஆதிலட்சுமி சிவகுமார்)::::
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அது தானே பேத்தி உவர் நேசன் யாரைப்பாத்து என்ன கேள்வி கேக்கிறார்
:wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)