Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
பணத்துக்காக பல்லிளிக்கிறவை அந்தக்காலத்திலையும் இருந்தினம்.. இப்பவும் இருக்கினம்.. வருங்காலத்திலையுத் இருப்பினம்.. உங்கை கத்திறவைபோலை கொஞ்சப்பேர் கத்திக்கொண்டே இருந்தினம்.. இருக்கிறினம்.. இருப்பினம்.. ஒழுக்கமானதுகளுக்கு.. கத்திறவையைப்பற்றியும் கவலையில்லை.. விக்கிறவையைப்பற்றியும் கவலையில்லை.. தாங்களும் தங்கடபாடும் சந்தோஷமாயிருந்ததுகள்.. சந்தோஷமாயிருக்குதுகள்.. சந்தோஷமாயிருக்குங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
குயில் மாமி சொல்லுறது உண்மைதான்...அதைத்தான் மாற்றி..கற்பை பொதுவில் வைப்போம் என்கிறேன்... அது இல்லை இரண்டு பேருக்கும் கற்பு வேண்டாம் எண்டால் சமுதாயம் நல்லா முன்னேறும்...
திருமணம் செய்ய பெண்களிடம் கற்பு இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல்....பெண்களே நீங்களும் மணமுடிக்க இருக்கும் ஆண் கற்புடனிருக்கவேண்டும் என்று எதிர்பாருங்கள்... எமது கலாசாரம் ஆரோக்கியமாக வளரும்...விபச்சாரம் என்ற சொல்லே இருக்காது...
Reply
மத்தைக்காணம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
Kanani Wrote:குயில் மாமி சொல்லுறது உண்மைதான்...அதைத்தான் மாற்றி..கற்பை பொதுவில் வைப்போம் என்கிறேன்... அது இல்லை இரண்டு பேருக்கும் கற்பு வேண்டாம் எண்டால் சமுதாயம் நல்லா முன்னேறும்...
திருமணம் செய்ய பெண்களிடம் கற்பு இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல்....பெண்களே நீங்களும் மணமுடிக்க இருக்கும் ஆண் கற்புடனிருக்கவேண்டும் என்று எதிர்பாருங்கள்... எமது கலாசாரம் ஆரோக்கியமாக வளரும்...விபச்சாரம் என்ற சொல்லே இருக்காது...
கணணி முதலில் திருமணத்துக்குமுன் காதல் என்ற சொல்லை இல்லாமலாக்குவோம் பின்னர் உங்கள் கருத்துக்கு வருவோமே அப்போதுதான் நடைமுறைக்கு சாத்தியமாகும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
ஏன் தாத்ஸ் ஒருத்தியையே காதலிச்சு கைப்பிடிக்க கஸ்ரமாக இருக்கோ?
Reply
Kanani Wrote:ஏன் தாத்ஸ் ஒருத்தியையே காதலிச்சு கைப்பிடிக்க கஸ்ரமாக இருக்கோ?
கஸ்ரமோ.. அட என்ரா இதுக்குள்ள மாட்டுப்பட்டன்.. இருந்தமாதிரியே இருந்திருக்கலாம்.. எண்டுதான் அடிக்கடி யோசனை போகுது.. அதை விடுவம் கருத்துக்கு வருவம். காசைக் கண்டவுடனை பாஞ்சுபோறாளவை.. பஞ்சாப் பறக்கிறாளவை. உவளவைக்கு காதல் ஒரு கேடு.. பணம் கொஞ்சமிருந்தால் கூப்பிட்டு பறிக்கிற கோஸ்டியே வந்திட்டுது. ஒருத்தரையும் நம்பேலாது.

பெடியள் BMW MERC AUDI வாங்கிறதன் இரகசியமே உதுதான்.. ஒண்டிரண்டு கரைசேருது.. அதைவிட தாங்களும் கெட்டு மற்றவையையும் கெடுக்கிற கோஷ்டி கூடிவருகுது.. நாடு அப்பிடி. சூழ்நிலை அப்படி. தலையெழுத்தை மாற்றவா முடியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>Kanani</b>,
Quote:திருமணம் செய்ய பெண்களிடம் கற்பு இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல்....பெண்களே நீங்களும் மணமுடிக்க இருக்கும் ஆண் கற்புடனிருக்கவேண்டும் என்று எதிர்பாருங்கள்... எமது கலாசாரம் ஆரோக்கியமாக வளரும்...


கணணி அவர்களே,
திருமணம் ஆக முன்னர் ஆண்கள் கற்புடையவர்களா என்று கண்டறிய ஏதும் வழி முறை உண்டா ?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
என்ன முல்லைப்பாட்டி இதை (அதிச தேசக்காரற்ற கதை) விட்டுட்டியள்...அங்கையும் பாருங்கோ நீதிபதி...ஆண்தான்....!

மதி தாத்தா பிறகு குறைபடக் கூடாது குருவியும் ஓடுற தாவிற கதை கொண்டுவருகுதெண்டு....எல்லாம் முல்லாப்பாட்டியும்...அலைமாமியும்...சொல்லித்தந்ததுதான்...!
:twisted: :roll:

<img src='http://thatstamil.com/images13/suganthi-300.jpg' border='0' alt='user posted image'>

பஞ்சாயத்துக்காரர்களால் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரம் மண்டியிட வைக்கப்பட்ட பெண்ணிடம், நீதிபதியின் உத்தரவி பேரில் மன்னிப்புக் கேட்டனர் பஞ்சாயத்தினர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வலையபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் தொலைத் தொடர்புத் துறையில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேந்திரன் நெய்வேலி அணல் மின் நிலையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இடையில் ராஜேந்திரன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினார். அப்போது சுகந்திக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் ராஜேந்திரனிடம் கூறினர்.

இதை நம்பிய ராஜேந்திரன் சுகந்தியை கொடுமைப்படுத்தத் தொடங்கினார். மேலும் பணம் கேட்டும் அடிக்கடி சுகந்தியை துன்புறுத்தினார். இதையடுத்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

தனது தாயாருடன் தனியே வசிக்க ஆரம்பித்த சுகந்தி, விவாகரத்து வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த ராஜேந்திரன்..... மனைவி மீது ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் செய்தார் ராஜேந்திரன்.

இதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகந்திக்கு பஞ்சாயத்துத் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதால் இந்த விஷயத்தில் பஞ்சாயத்து முன் ஆஜராக மாட்டேன் என்று கூறிவிட்டார் சுகந்தி.
இதைத் தொடர்ந்து அவரை ஊரை விட்டு விலக்கி வைக்கப் போவதாக பஞ்சாயத்துக்காரர்கள் மிரட்டினர். மேலும் பல விதத்திலும் நெருக்குதல் கொடுத்து பஞ்சாயத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு அவருக்கு ஊர்க் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டுவதைத் தவிர்க்க விரும்பினால், பஞ்சாயத்து உறுப்பினர்கள் முன் சுடுமணலில் மண்டியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஊர்க்காரர்களின் கட்டாயம் காரணமாக, கொளுத்தும் வெயிலில் அவர் மண்டியிட்டார். மேலும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கவும் பணிக்கப்பட்டார்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனது தாயார் கிருஷ்ணம்மாளுடன் கடும் வெயிலில் மண்டியிட வைக்கப்பட்ட சுகந்தி மயங்கி விழுந்தார். ஆனால், அவருக்கு தண்ணீர் தரக் கூட விடவில்லை பஞ்சாயத்துக்காரர்கள். இந்தக் கொடுமைக்குப் பின் அபராதத் தொகை ரூ. 19,000 ஆகக் குறைக்கப்பட்டது. இந்தத் தொகையை பஞசாயத்தாரிடம் செலுத்தினார் சுகந்தி.

தனது குழந்தைகள் மற்றும் கணவரின் உறவினர்கள் முன்னிலையில் சுகந்திக்கு இந்தக் கொடுமை நடந்தது.

இதையடுத்து சுகந்தி தனது தாயாருடன் துறையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பியும் இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து தாங்கள் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய ராஜேந்திரன், அவரது தாயார், மைத்துனர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேரும், பஞ்சாயத்தார் 12 பேரும் முன் ஜாமீன கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கற்பக விநாயகம் முன் விசாரணைக்கு வந்தது. பஞ்சாயத்தார் செய்த கொடுமை குறித்து அறிந்து கடுப்பான நீதிபதி, பஞ்சாயத்தாரும், ராஜேந்திரனின் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் சுகந்தியிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டவும் உத்தரவிட்டார். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது:

சுகந்தியை பல மணி நேரம் மண்டியிட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளீர்கள். அதுவும் அவரது குழந்தைகள் முன்பே இந்தக் கொடுமை நடந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மன நிலை எப்படி பாதிக்கப்படும் என்பது தெரியுமா?

கம்ப்யூட்டர் காலத்தில் போய் உச்சி வெயிலில் மண்டியிட வைத்தும், காலில் விழ வைத்து ஒரு பெண்ணை அவமானப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது.

சுகந்தியிடம் பஞ்சாயத்தார் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். சுகந்தியின் தாயார் கிருஷ்ணம்மாளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், பஞ்சாயத்தாரை தமிழகத்தை விட்டே வெளியேற உத்தரவிட்டு விடுவேன். நீங்கள் இங்கு வசிக்கவே முடியாத நிலையை உருவாக்கிவிடுவேன்.

இதையும் மீறி உங்களால் ஏதாவது பிரச்சனை வந்தால் சுகந்தி உடனே இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என்றார் நீதிபதி மிகக் கடுமையான குரலில்.
இதையடுத்து அந்தப் பஞ்சாயத்துக் கும்பல் நீதிமன்றத்திலேயே சுகந்தியிடம் மன்னிப்புக் கேட்டனர்.

கதை...தற்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>மனைவியின் காதைக்கடித்த கணவன்
பின் வாயையும் பதம் பார்த்தான்! </span>
தம்புள்ள பகுதியில் சம்பவம்

மனைவியின் காதையும், பின்னர் ஆஸ்பத்திரியில் வைத்து அவரது வாயையும் கடித்துக் குதறியதாகக் கூறிய நபர் ஒரு வரை தம்புள்ள பொலீஸார் கைதுசெய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
தனது மனைவியின் காதிலிருந்து இரத்தம் பீறிட்டு வரும் வரை அவரது காதைக் கடித்துப் பதம்பார்த்த கணவன் மனைவியின் மீதுள்ள ஆத்திரம் தீராத நிலையில், அவர் சிகிச் சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த தம்புள்ள ஆஸ்பத்திரிக்குள் பதுங்கிச் சென்று கணவன், வாயிலும் கடித்துக் காயம் ஏற் படுத்தினாராம்.
காதிலும், வாயிலும் கடியுண்ட அந்தப் பெண் பின்னர் ஆபத் தான நிலையில் பேராதனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல் லப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற் கிடையில் தம்புள்ள ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் முறைப்பாட் டின்பேரில் பொலீஸாரால் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். . .
நன்றி உதயன்


அடப்பாவி... முதலில் ஒருவேளை ஆத்திரத்தில் செய்திருந்தாலும்... பிறகெதற்கு பதுங்கிப் போய்...
Reply
காதை ருசி பார்த்த அனுபவம் வாயையும் பதம் பார்க்கச் சொல்லியிருக்கும்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
<span style='font-size:30pt;line-height:100%'>கற்பை சோதித்த கற்பூரம்!</span>

சேலத்தில் கடந்த வாரம் நடந்த கொடூரச் சம்பவம் இது!
சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்குப் பின்பக்கம் உள்ளது குண்டுக்கல். இங்கு வசித்துவரும் கந்தசாமி - செல்லமாள் தம்பதிக்கு திருமணமாகிப் பதினான்கு வருடங்களாகிவிட்டன. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். சந்தேகப் புத்தி கொண்ட கந்தசாமி, அவரது மனைவி செல்லம்மாள் கையில் கற்பூரத்தைக் கொளுத்தவைத்துக் கற்பைச் சோதித்திருக் கிறார்.
பாவம் செல்லம்மாள்..! அவரது கையில் தீக்காயம். ரொம்ப சிரமத்துடன் நடந்ததை நம்மிடம் விவரித்தார் செல்லம்மாள்.''எங்க வூட்டுக்காரருக்கு வேற ஒரு பொண்ணுகூட சகவாசம் இருக்குங்க. எப்ப பார்த்தாலும் அவகூடவேதான் சுத்துவாரு. இது ஊருக்கே தெரியும். நான் எதுனா கேட்டா என்னைப் போட்டு அடிப்பாரு. நானும் கண்டுக்கறதே இல்ல.
ஒரு நாள் என் சக்காளத்தியா என் வீட்டுக்கே வந்து, 'இந்த வீடு என்னுது... காலி பண்ணுடி'னு சண்டை போட் டுட்டுப் போனா. அப்பத்தான் நான் எங்க வூட்டுக்காரரைத் திட்டினேன். என்னை அடிச்சு வீட்டைவிட்டுத் துரத்தினாரு. எங்க சித்தப்பா வீட்டுல போய் கொஞ்சநாள் இருந்துட்டு திரும்பி வந்தேன்.
'இத்தனை நாள் எங்கடி போன? நீ தனியா போனியா.. இல்ல, வேற எவன்கூடவாவது போனியா? உன்னை எப்படி வீட்டுக்குள்ள சேர்க்கிறது..?' - இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டாரு. நான் புள்ளைங் கமேல சத்தியம் பண்ணியும் அவரு நம்பல. கடைசியா என் புள்ளைங்களைப் படுக்கவெச்சு அவுங் களைத் தாண்டினேன்.
அப்பக்கூட, 'இல்லடி... நீ வேற எவன்கூடவாவது படுத்திருப்பே'ன்னார். உடனே, வெளிய எங்கேயோ போயிட்டு கையில ஒரு கட்டி கற்பூரத் தோட திரும்பி வந்தாரு. 'இந்த கற்பூரத்தை உன் உள்ளங்கையில வச்சி கொளுத்திக்க... நீ எவன்கூடவும் படுக்கலன்னா இந்த கற்பூரம் உன்னை சுடாது'னு சொல்லி கற்பூரத்தைக் கொடுத்தாரு. எனக்கு வேற வழி தெரியலை. கற்பூரத்தை கையில வெச்சுக் கொளுத்திக் கிட்டேன். நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சூடு தாங்கினேன். அதுக்குமேல தாக்குப்புடிக்க முடியாம கற்பூரத்தைக் கீழே போட்டுட்டேன்.
உடனே அவரு, ''எனக்கு அப்பவே தெரியும்டி... நீ வேற எவன்கூடவோ சுத்திட்டு வந்திருக்கே?'னு கண்டபடி திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்குமேல என்னால பொறுக்க முடியலை. போலீஸ்ல போய் புகார் கொடுத்துட்டேன்'' என்று சொல்லி முடித்தபோது, செல்லம்மாளின் கண்களில் நீர் கோத்திருந்தது.
ஊர்க்காரர்கள் சிலரிடம் பேசினோம். ''கந்தசாமிக்கு எப்பவும் சந்தேக புத்திதாங்க. அதுவுமில்லாம எப்பவும் குடியும் கூத்தியாவுமா சுத்திட்டு இருப்பான். எல்லாத்தையும் அந்தப் புள்ள பொறுத்துக் கிட்டு போச்சு. பாவிப் பய கடைசியா கற்பூரத்தை கையில வச்சி கொளுத்தச் சொல்லியிருக்கான். இப்பக்கூட அந்தப் புள்ள போலீஸ#க்கு போயிருக்காது. நாங்க எல்லாம் தைரியம் சொன்ன பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்துச்சி'' என்றார்கள்.
இந்த வேதனையான வழக்கை விசாரிக்கும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அழகு ராணி நம்மிடம், ''அந்த பொண்ணை ரொம்பவும் சித்ரவதை பண்ணியிருக்கான்.
அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கும் காலக்கட்டத்தில், கட்டிய பொண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு கையில கற்பூரத்தை ஏத்தியிருக்கான்னா, அவன் எப்படிப்பட்ட ஆளா இருப்பான்? கம்ப்ளெயிண்ட் வந்ததும் தேடிப்பிடிச்சு கந்தசாமியை அரெஸ்ட் பண்ணிட்டோம்...'' என்றார் கவலையோடு.
கடைசியாக கந்தசாமியோடு பேசும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்தது. அப்பவும் அவர் ''அவமேல எனக்கு டவுட் இருந்துச்சு. அதனாலதான் அப்படி செய்யச் சொன் னேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவமட்டும் பெருசா பொழைச்சிடுவாளா? நான் செஞ்சது தப்பே இல்லீங்க..'' என்றே சொல்லிவிட்டுப் போனார்.
- கே. ராஜாதிருவேங்கடம்
படம்: வி. செந்தில்குமார்
நன்றி
Reply
முந்திப் பாடசாலைகளில் எல்லாம் ஜீனியர்விகடன் குமுதம் மங்கை படிக்கப் போடுறதில்லை...இதாலத்தான் போல....!கல்கண்டு முத்தாரம் கோகிலம் அம்புலிமாமா விகடன் கல்கி இதுகள் தான் போடுறது....மற்றதெல்லாம் பொடியள் களவாத்தான் வாசிக்கிறவங்கள்...இப்பதானே சங்கதி விளங்குது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ரை கற்பை சோதிக்கச் சொன்னா.. துாக்குக் காவடி எடுத்துக் காட்டுவன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
இந்தக் குளிரிலா ? ? ?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
கற்புக்கே சோதனை வந்த பின்னர் குளிரென்ன வெப்பமென்ன....! அப்படித்தானே சோழியான் அண்ணா....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஈழத்தமிழர்களின் பிரதேசங்கள் எங்கும் பெண்கள் எழுச்சி நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஈழத்தமிழர் பிரதேசங்கள் உட்பட உலகெங்கும் மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அதற்கு மேலாக ஒக்ரோபர் 10 ஆம் திகதியை மகளிர் எழுச்சி நாளாக ஈழத்தமிழர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள். அதற்கு சிறப்பான காரணங்கள் உண்டு.

வீட்டுக்குள் அடங்கியும் - அடக்கப்பட்டும், அடுப்பங்கரையில் முடங்கியும், முடக்கப்பட்டும் கிடந்த ஈழத்தமிழ் பெண்கள், வீறுகொண்டெழுந்து விட்டார்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் நாளாக ஒக்ரோபர் பத்து திகழ்கின்றது. ஆம், ஈழத்தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரில் களப்பலியான முதலாவது பெண் போராளி - மாவீரரான - இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவு நாள்தான் மகளிர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1987 இல் இந்தியப் படை, ஈழத்தமிழரின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்த முயன்ற சமயம் அதை எதிர்த்து களத்தில் சமராடி, தன்னுயிர் ஈந்து, விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றிய புதிய பரிணாமத்தை விரிவடைய வைத்தார் இரண்டாம் லெப்டினன்ட் மாலதி.
பெண்கள் உரிமை, பால் சமத்துவம் குறித்தெல்லாம் சர்வதேச மட்டத்தில் "வெத்துவேட்டு" பிரசாரங்களும், அறிக்கைகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்க, அதனை பெரும் எழுச்சியாக - செயலில் - வெளிப்படுத்திக் கொண்டிருகின்றார்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள்.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் விழித்துக்கொண்டது. கல்வி உரிமை கூட மறுக்கப்பட்ட பெண்கள், தங்களைப் புத்தூக்கப்படுத்திக் கொண்டதால் கல்வி மற்றும் பொருளியல் துறைகளில் உயர்வுறும் சூழ்நிலை ஏற்பட்டது. <b>இப்போது பல்கலைக்கழகக் கல்வி கற்போரில் அறுபது வீதமானோர் பெண்கள் என்ற புள்ளிவிவரம், உயர் கல்வித்துறையில் பெண்களின் பங்களிப்பை</b> - இடத்தை - உறுதிப்படுத்தப் போதுமானதோர் உதாரணமாகும்.

காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த உலகின் பல்வேறு இனக் கலாசாரங்கள், பண்பாடுகள் பெண்களின் ஆளுமையை நிராகரிக்கும் பண்பையே அடித்தளத்தில் கொண்டிருந்தன. அந்தப் பண்புப் போக்கில் பெரிய மாற்றம் இப்போது நிகழ்ந்து வருவதை யதார்த்தத்தில் காண்கின்றோம். பெரிய அளவில் அந்தப் பண்பு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை ஈழத்தமிழ் மகளிருக்கு உண்டு. பால் நிலை சமத்துவம், பால் நிலை நீதி என்பவற்றுக்காக வழமையாகப் பெண்கள் போராடும் நிலைமைக்கு அப்பால் சென்று, பால் நிலை வீரத்தை வெளிப்படுத்தும் விஞ்சிய நிலையில் - உச்சத்தில் - மிளிர்கிறார்கள் அவர்கள்.

<b>சமூகத்தில் ஆணுக்கு நிகரானவள் பெண் என்றும், அவளுக்கு சமூகத்தில் சமவுரிமை வழங்கப்படுவது அவசியம் என்றும் பழைய பல்லவிக் குரல்களை ஏனையோர் எழுப்பிக் கொண்டிருக்க</b>, சமூகத்தில் மட்டுமல்ல, சமராடும் களத்திலும் ஆண்களுக்கு நிகரான வீரம்மிக்கவர்கள் பெண்கள் என்பதை செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அடுக்களையில் இருந்து அகப்பை ஏந்திய தமிழ்ப் பெண்கள் இன்று அதிரடித் தாக்குதலுக்காக ஆயுதங்கள் ஏந்தவும் தயாராகி விட்டார்கள். அன்று தங்க மாலைகளை கழுத்தில் அடுக்கியிருந்த பெண்ணினம் இன்று நஞ்சு மாலையைக் கழுத்தில் தாங்கி நிற்கின்றது.

இந்த எழுச்சியை - உயர்ச்சியை - வெளிப்படுத்தி, பெண்ணினத்தை மேலும் உயர்த்துவதே இந்த "மகளிர் எழுச்சி நாள்" அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம். "பாரதி கண்ட புதுமைப் பெண் ஈழத்தில் பிறந்து விட்டாள்" - என்ற செய்தியை உலகுக்குப் பறைசாற்றும் தினமாகவும் இன்றைய நாளைக் கொள்ளலாம். பெண்ணை வெறும் போகப் பொருளாகவும், வீட்டு அடிமையாகவும், குடும்பப்பாரத்தை தனியே சுமக்கும் சுமைதாங்கியாகவும் கருதும் காலத்தைக் கடந்து, தேவையெனில் வீரம் கொண்ட புயலாகவும் பெண்கள் மாறுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும் இன்றைய தினம் அமைகின்றது.

நன்றி: உதயன்
-----------------------------------------------------
அப்போ ஆண்கள் என்ன அந்நிய நாடுகளில் குப்பையா கொட்டிக்கிறார்கள்...ஈழவிடுதலை என்ன ஆண்களின் வீழ்ச்சிக்கா வழிவகுக்கிறது...??? ஈழத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பலமடங்கு அதிகம்...அதை ஏன் இந்தக் கட்டுரை சொல்லத்தவறியது....!பெண் எழுச்சி என்பது ஆணின் வீழ்ச்சியால் பெறப்படுமாயின் அது ஆணின் சமூக நிலைப்பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லும் என்பது உறுதி...! பெண்ணிற்கொப்ப ஆணும் சமவீத வளர்ச்சியை காண்பிக்க வேண்டியது அவசியமே அத்துடன் ஆணின் வீழ்ச்சியை பெண்ணின் உயர்சியாய்க் காட்டுதல் தவிர்க்கப்படுதலும் அவசியம்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அமைதிக்கான நோபல் பரிசில் வென்ற பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...தங்கள் சேவை தொடரட்டும்...!

-------------------------------------
ஈரான் பெண்ணிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

வெள்ளி, 10 அக்டோபர் 2003
ஜனநாயகத்திற்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் ஈரான் நாட்டின் மனித உரிமைகள் போராளி ஷிரின் எபாடி என்கின்ற பெண்மணி இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும், எழுத்தாளராகவும், மனித உரிமை போராளியாகவும் பண்முகம் கொண்ட ஷிரின் எபாடி, தான் பிறந்த ஈரானிலும், அதன் எல்லைகளுக்கு அப்பாலும் அடிப்படை மனித உரிமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து போராடிவரும் துணிச்சல் மிக்க பெண்மணி ஆவார் என்று நோபல் குழு பாராட்டியுள்ளது.

வன்முறையே வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த யுகத்தில், அஹிம்சையே வாழ்வின் அடிப்படையாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் ஷிரின் எபாடி, ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சக்தியே மனித உரிமைகளை காக்கவல்ல அதிகபட்சம் பலம் கொண்டது என்று தனது மக்களிடையே பேசி வருபவர்.

மனித உரிமைகளுக்காக பொதுவாக போராடினாலும், பெண்களும், குழந்தைகளும் முழு உரிமை பெற்று வாழும் சமூகமே நாகரீக சமூகமாக இருக்க முடியும் என்று கூறிவரும் எபாடியை, உணர்வுடைய முஸ்லீம் என்றும், இஸ்லாத்திற்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை என்கின்ற அவருடைய கருத்து பாராட்டத்தக்கது என்று நோபல் குழு கூறியுள்ளது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நோபல் பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை. இது ஈரான் மக்களுக்கு மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் அளிக்கும் என்றும், உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காக போராடிவரும் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவல்லதாக இருக்கும் என்று நோபல் குழு கூறியுள்ளது.

டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்ட பட்டம் பெற்ற ஷிரின் எபாடி, டெஹ்ரான் நகர நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராக 1975 முதல் 1979 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

ஈரானில் நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண்மணி என்கின்ற பெருமை பெற்ற எபாடியின் பதவிக்காலம் 1979 ஆம் ஆண்டு நடந்த "மத புரட்சி"யால் முடிவிற்கு வந்தது. தற்பொழுது வழக்கறிஞராகவும், டெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் எபாடி, இஸ்லாமிய சட்டத்திற்கு புதிய விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்று கோரி வருபவர் ஆவார்.
------------
our thanks to webulagam.com and suratha's pongu tamil converter.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:அப்போ ஆண்கள் என்ன அந்நிய நாடுகளில் குப்பையா கொட்டிக்கிறார்கள்...ஈழவிடுதலை என்ன ஆண்களின் வீழ்ச்சிக்கா வழிவகுக்கிறது...??? ஈழத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பலமடங்கு அதிகம்...அதை ஏன் இந்தக் கட்டுரை சொல்லத்தவறியது....!பெண் எழுச்சி என்பது ஆணின் வீழ்ச்சியால் பெறப்படுமாயின் அது ஆணின் சமூக நிலைப்பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லும் என்பது உறுதி...! பெண்ணிற்கொப்ப ஆணும் சமவீத வளர்ச்சியை காண்பிக்க வேண்டியது அவசியமே அத்துடன் ஆணின் வீழ்ச்சியை பெண்ணின் உயர்சியாய்க் காட்டுதல் தவிர்க்கப்படுதலும் அவசியம்...! Idea


Idea Idea Idea
Reply
ஆண்கள் எதிரியுமல்ல. அவர்களை புறந்தள்ளும் நோக்கமும் அல்ல. நீங்களாக கற்பனை செய்து நீங்களாக அலட்டிக்கொள்வதாகவே படுகிறது.

kuruvikal Wrote:அப்போ ஆண்கள் என்ன அந்நிய நாடுகளில் குப்பையா கொட்டிக்கிறார்கள்...ஈழவிடுதலை என்ன ஆண்களின் வீழ்ச்சிக்கா வழிவகுக்கிறது...??? ஈழத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பலமடங்கு அதிகம்...அதை ஏன் இந்தக் கட்டுரை சொல்லத்தவறியது....!பெண் எழுச்சி என்பது ஆணின் வீழ்ச்சியால் பெறப்படுமாயின் அது ஆணின் சமூக நிலைப்பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லும் என்பது உறுதி...! பெண்ணிற்கொப்ப ஆணும் சமவீத வளர்ச்சியை காண்பிக்க வேண்டியது அவசியமே அத்துடன் ஆணின் வீழ்ச்சியை பெண்ணின் உயர்சியாய்க் காட்டுதல் தவிர்க்கப்படுதலும் அவசியம்...! Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
அம்மா
Quote:பெண்கள் உரிமை, பால் சமத்துவம் குறித்தெல்லாம் சர்வதேச மட்டத்தில் "வெத்துவேட்டு" பிரசாரங்களும், அறிக்கைகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்க, அதனை பெரும் எழுச்சியாக - செயலில் - வெளிப்படுத்திக் கொண்டிருகின்றார்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள்.

என்று தலைவர் அறிக்கை விட்டிருக்கார்
அப்ப நீங்கள் இங்க எழுதுறது இன்னும் எங்களைச் சுரண்டவா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)