Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மண்ணில் வந்த நாள்...!
#1
<b>மண்ணில் வந்த நாள்...!</b>

என்றும் என்
நெஞ்சில் உயிர்கொண்டாய்
அன்புக் காதலுக்கு
ஆணிவேராய்...!

ஆனந்தக்காற்றின்
அவதாரமே...
இன்று நீ
மண்ணில் வந்த நாள்
இன்றும் உன்னை
வாழ்த்துகிறேன்...
புகழும் மலருமாக
மகிழ்வோடிருப்பாய் நீ...!

ஒன்று பொருள் இன்பம்
என உணர்ந்தேன்
தாயுமானவளே.........
நின்று நிமிர்ந்து ஒளிர்வாய்....
ஒளிவீசும் ஒவியமாய் நீ...!

உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!

ஈரநிலாவில் இருந்து
உடைந்து விழுந்த
ஒளித்துண்டாய்...
என்னருகில் நீ...
ஒளிவீசி நடந்தாலும்
தொட்டுவிட முடியாத
தொலை தூரமாய்த்தான்
இன்னும்...
நானும் என் காதலும்...!

இருப்பினும்.........
என் இதய அறையில் இருந்து
உடலெங்கும் பாயும்
இரத்தத்துளிகள் ஒவ்வொன்றும்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
இப்படி.........

இலைகளின் உதிர்வு
மரங்களின் மரணம் அல்ல
அது....
இலைகளின் இடைவேளை
மீண்டும் வசந்தகாலம் வரும்
எனக்கும் அதுபோலவே.....

மீண்டும் நீ
வசந்தமாய் வரலாம்...!
மீண்டும் நாம்...
கண்களால் கதைபேசலாம்...!
காதல் கொள்ளவென
என் வாசல் தேடி நீ வரலாம்
ஆனால்...........
அந்த நாள் வரும் வரை.....
நான் மண்ணில் இருப்பேனா.....???????

இருந்தால்...
கட்டாயம் காத்திருப்பேன்
உன்னோடும்....
உன் கண்ணோடும் கலந்துபோக...!!!


த.சரீஷ்
10.09.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
வாழ்த்துக்கள் நண்பா

அவள் கண்ணோடு நீர் கலந்துபோகமுதல் என் நெஞ்சோடு ஏன் உரசிக்கொள்கின்றீர் அன்பாலே........
அருமையான வார்த்தை தொடுப்பு
இனிக்கின்றது வலிக்கின்றது


உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!

[b] ?
Reply
#3
அம்மாடி...! காதல் சோக கவிதை இவ்வளவு அழகாக இருக்கே காதலை விட.மிக நன்று.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
காத்திருந்தால்
வெண்கொக்கும் காணும் தீன்
காதலிக்காய் காத்திருப்பு
உன் வசந்தகாலத்தை
தீயால் கருக்கிடும்...!
கவனம்...!
கவிதை வரிகளோடு போகட்டும்
நிஜத்தில் வேண்டாம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
காதல் சோகத்தை அனுபவிக்க வேணுமென்று ஆசையாத்தான் இருக்க.. வழிதான் தெரியலை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#6
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->காதல் சோகத்தை அனுபவிக்க வேணுமென்று ஆசையாத்தான் இருக்க.. வழிதான் தெரியலை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

காதலித்தால் மட்டுமே அந்த இனிமையை அனுபவிக்கலாம் சோழியான் அண்ணை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
முறிந்த சிறகுகள் வாசியுங்கள் காதலிக்காமலே பெறலாம் . கவிதைக் கூடாக.

பாதசாரிகளே மெதுவாக சாலையை கடவுங்கள் இந்த கல்லறையில் தான் எனது காதலி உறங்குகிறாள். ஆகா இதை விட ஏதம் கவிதை உண்டா?
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#8
<!--QuoteBegin-sharish+-->QUOTE(sharish)<!--QuoteEBegin--><b>மண்ணில் வந்த நாள்...!</b>

உன்னை ஒரு  
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில  
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!


          த.சரீஷ்  
          10.09.2003 (பாரீஸ்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதயமே நொருங்கும் வார்த்தைகள் கவிதையின் கனதியை கண்ணீரை அப்படியே வாசகரின் விழிகளில் வழியவைக்கிறது. வாழ்த்துக்கள் சரீஷ்.
Reply
#9
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->முறிந்த சிறகுகள் வாசியுங்கள் காதலிக்காமலே பெறலாம் . கவிதைக் கூடாக.

பாதசாரிகளே மெதுவாக சாலையை கடவுங்கள் இந்த கல்லறையில் தான் எனது காதலி உறங்குகிறாள். ஆகா இதை விட ஏதம் கவிதை உண்டா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முறிந்த சிறகுகளை எழுதிய கலீல் ஜிப்ரான் காதலித்த பின்னர்தான் முறிந்தசிறகுகளை எழுதினார் நளாயினி. 10தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன். ஜிப்ரானின் காதலி செல்மா காரமியின் கல்லறையைக் காணவேண்டும் போலுள்ளது. அக்கல்லறையின் முன்னின்று ஜிப்ரானின் கண்ணீரால் எழுதிய முறிந்த சிறகுகளை வாசித்துக்காட்ட வேண்டும் போலுள்ளது.
Reply
#10
அதை வாசித்தாலே காதலிக்காதவர்கள் கூட காதல் அனுபவத்தை பெறலாம் என எழுதினேன்.என்ன நீங்கள். :wink: :wink: :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#11
<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->அதை வாசித்தாலே காதலிக்காதவர்கள் கூட காதல் அனுபவத்தை பெறலாம் என எழுதினேன்.என்ன நீங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->முறிந்த உடைந்த சிதைந்த.. எண்டுதான் முடிவெண்டால் காதல் எதுக்கப்பா.. நீங்கள் எழுதிறதைப் பார்த்தால் எதுவும் சந்தோஷமா முடியேல்லை..

பறக்கும் சிறகுகள் முறியாத பனைகள் எங்காவது இருந்தால் சொல்லுங்கோ.. வாசிச்சுப்பார்க்க.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
மகிழ்ச்சி சரீஷ்...
காதல் சோகத்தெ வடித்து வடித்துக்
கவிதையும் ஒருநாள் அழும்..........
கண்ணீர்த் துளிகளாய் விழுந்த கவிதையும்
ஓர்நாள் கண்ணீர் வடிக்கப் போகிறது!


வணக்கம் மதிவதனன் ஐயா...
நல்ல சிந்தனை.
"பறக்கும் சிறகுகள்" என்பதைக் காட்டிலும்
"முளைக்கும் சிறகுகள்" இன்னும் நன்றாக இருக்கும்.
காதல் தோல்விகளைத்தான் பலரும் எழுதுகிறார்கள்.
காதலின் வலியை மட்டுந்தான் பலர் எழுதுகிறார்கள்.

ஆனால்...
நளாயினி அக்காவின் கவிதைகள் காதலிக்கச் சொல்லும்.
காதலின் சுகத்தைச் சொல்லும் கவிதைகள் அவை. ம்....
காதலின் இனிமை சொல்லிக் காதலிக்கக் கற்றுத் தாருங்கள்!


Reply
#13
தாத்ஸ்
முறிஞ்சாத்தானே காதல் காவியமாகும்.....இல்லாட்டி காதலன் எதிர்காலத்தில் சந்நியாசியாவான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#14
காவன்ன தனா இல்லன்னா
அதில நான் அனா ஆவன்னா
அனுபவப்பட்டாய் அண்ணா
சொல்லித்தந்தால் தான் என்னா?


Reply
#15
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->தாத்ஸ்  
முறிஞ்சாத்தானே காதல் காவியமாகும்.....இல்லாட்டி காதலன் எதிர்காலத்தில் சந்நியாசியாவான்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கணணி.. காவியும் வேண்டாம் காவியமும் வேண்டாம் முளைக்கவும் வேண்டாம் பறக்கவும் வேண்டாம்.. நின்மதியா இருக்கவிட்டால் அது போதும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#16
நேரம் பொன்னானது...
பெண்ணாணதற்கு வீணாக்காதே அண்ணா...
Reply
#17
காதல் என்ன வீணா?
பெண்கள் மாய மானா?
இதுவும் அனுபவந் தானா?


Reply
#18
மலையிலிருந்து விழுந்தால் மரணம்
அதனால் விழுந்து பார்ப்பவருண்டோ?
மூத்தேர் அனுபவம் சொல்வழி கேள்!

காதல் சின்னம் தாஜ்மஹால் ஆணின் காதல் பரிசு
காதலுக்கு ஒரு செங்கட்டிதனும் பெண்கள் வைத்ததுண்டா?
வைப்பாள் உன் பெயரை அவள் எதிர்கால குழந்தைக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#19
காதல் சின்னமா தாச்மகால்?
யார் சொன்னார் நீ சொல்!

கயவன் சாஜகான்,
தன் வைப்பாட்டிக்கு கட்டி
வைத்தான் மரணப் பெட்டி

காதலிகள் நெஞ்சில் கட்டி
வைப்பார் உமக்குக் கோயில்

கண்டபடி உளறல் தகுமோ?


Reply
#20
வைப்பாட்டிக்காவது கட்டினான் தாஜ்மஹாலை
உனக்கா பெண்கள் கட்டுவார்கள் இன்னொரு கலியாணம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)