Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?
#41
வியாசன் நீங்கள் சொல்லும் மட்டக்களப்பு விடயத்தில் எனது பார்வை வித்தியாசமானது. ஆனால் நண்பர்கள் யாரும் இந்த விடயத்தை பிரதேச வாரியாக பார்த்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர்களுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு மட்டக்களப்பு மக்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது. பாடசாலை ஆசிரியர்கள்ää கமநலத்திணைக்களம் என பல்வேறு பணிகளுக்கு பிற தேச வாசிகள் அந்த நகருக்கு செல்வது வழமை. இங்கே இன்னொரு விடயத்தையும் சொல்லி விடுகின்றேன். யாழ் மண்ணில் உங்களுக்கு ஒரு நண்பன். அவன் பெயர் சுரேஸ் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு ஒரு தங்கையும் உள்ளாள். நீங்கள் சுரேசை தேடி அவன் வீட்டிற்கு போகின்றீர்கள். அவன் வீட்டிற்கு வாசலில் நின்று சைக்கிள் பெல்லை அடித்து சுரேஸ் என்று அழைப்பீர்கள். உள்ளிருந்த படியே ஒரு அநாமதேய குரல் வரும். அவர் இல்லை. வெளிய போட்டார் என்று. நீங்கள் திரும்பி விடுவீர்கள். இதுவே மட்டக்களப்பு என்றால் வாசல் திறந்த படியே இருக்கும். நீங்கள் சுரேஸ் என அழைத்தபடி உள்ளே செல்வீர்கள்- அவன் தங்கை ஓடி வந்து வாங்கோ அண்ணா உள்ளுக்கு வாங்கோ என்று தேநீர் பரிமாறியபடியே சொல்லுவாள் அண்ணா வெளிய போட்டார். இப்ப வந்திடுவார் என்று.

இந்த விருந்தோம்பல் பண்பில் மயங்கிய நம்மவர்கள் தங்கள் நிலை மறந்து காதல் வயப்படுவது உண்மை. ஆனால் மீளவும் தங்கள் தேசத்திற்கு சென்றதும் தங்கள் நிலையுணர்ந்து மாறிவிடுவார்கள். இங்கே அதிகம் பாதிக்கப்படுவது வஞ்சகம் இல்லாமல் இருக்க இடம் கொடுத்து விருந்தோம்பல் செய்தவர்கள் தான். அதுமட்டுமில்லாமல் அவரை சு10ழ்ந்துள்ளவர்கள் தங்கள் பிள்ளை அல்லது உறவினன் உத்தமன் என்பதை நிரூபிக்க கதை ஒன்றை அவிழ்த்து விடுவார்கள் மட்டக்களப்பு பாயோட ஒட்டிற்று என்று. ஆக இது தொடர்பில் நாம் பழமொழிகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம் என்பதே என் கருத்து வியாசன்.

யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நானும் யாழ் மண் வாசி தான். ஆனாலும் எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.
.
.!!
Reply
#42
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கல்யாணம் ஆன பின், தற்போது உங்களுடன் அந்த அக்காவுக்கு ஏன் கோவம்?
[size=16][b].
Reply
#43
உப்பிடியெல்லாம் நீர் கேள்வி கேட்க வேண்டுமென்றுதான்.

:wink: :wink: :wink: :wink:
Reply
#44
எனக்கு செய்வினை சூனியம் இரண்டிலும் நம்பிக்கையுண்டு நாம்சூனியத்திலிருந்து(ஒன்றுமில்லாததிலிருந்து)செய்வினையால்(செய்யும்முயற்சியால் )முன்னேறலாம்.மற்றபடி உந்த செய்வினை செய்பவர்கள் சூனியம் எடுப்பவர்கள் கனபேரை என் அனுபவத்தில்பார்த்திருக்கிறேன்.அடிச்சஅடியிலை ஆளைவிட்டாகாணும் எண்டு ஓடினவர்கள்.அடிச்சவனுக்கே ஒருசெய்வினையும் அவையாலை செய்யஏலாமல்போனது ஏன்??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#45
சும்மா போங்கையா போங்க செய்வினையும் சு}னியமும் என்று கொண்டு.. கிரகங்களுக்கு நாங்க அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறம் அவங்கள் சுற்றுலாவும் போகதொடங்கீட்டாங்க.. இன்னும் செய்வினை.. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
செய்வினை சுhனியம் எப்படிசெய்யிறது? :roll: எனக்கு ஒருக்காசொல்லித்தாங்கோ இங்க ஒராலுக்கு வைக்கணும் அவர்ர பெயர் மோ ல் தொடங்கி ன் ல் முடியிது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#47
ஏன் அந்த ஆள் உங்களுக்கு என்ன செய்தது.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
சும்மா வேலைசெய்யுதோ எண்டு முயற்ச்சித்து பார்க்கதான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#49
எனக்கு செய்வினை, சூனியத்திலை நம்பிக்கை இல்லை.

ஆனால் யாராவது செய்வினை. சூனியம் பிஸ்னஸ் ஆரம்பிக்கிறதெண்டால் சொல்லுங்கோ. நானும் பங்குதாரராய் வாறன். நல்ல வருமானம் எடுக்கலாம். வெளிநர்டுகளில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. நான் இங்காலை ஊர்ப்பக்க நடவடிக்கையளைப் பார்ப்பன். நீங்கள் உங்காலை பாருங்கோ.
--
--
Reply
#50
தம்பி நல்ல வியாபாரத்தைத்தான் தெரிவு செய்திருக்கிறீங்கள். நானும் ஒரு பங்கு உங்கடை லிஸ்ரிலை எனது பெயரையும் இணைத்து விடுங்கோ துசி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#51
இல்லை.
Reply
#52
அட அட.... Confusedhock: Confusedhock:
நம்ம மக்காள் ரொம்ப உஷாராத்தான் இருக்கினம்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதில் நம்பிக்கை இல்லாது இருந்தாலும்
தாயகத்தில் நான் கேட்ட சம்பவங்கள் அப்படி இருக்கலாமோ
என்ற பயத்தோடு சேர்ந்த நம்பிக்கையை வரவழைக்க முயன்றது
வியப்பானதே!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#53
அப்படி என்னதான் கேள்விப்பட்டனீங்கள் குறும்பன் அண்ணா? எங்களுக்கும்
சொல்லுங்கோவன். :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
vasisutha Wrote:அப்படி என்னதான் கேள்விப்பட்டனீங்கள் குறும்பன் அண்ணா? எங்களுக்கும்
சொல்லுங்கோவன். :roll:
எமக்கும் கேட்க ஆசைதான்.
Reply
#55
சரி சரி... நீங்கள் எல்லாரும் கேக்குற படியால சொல்லுறன்.

அண்மை காலத்தில நான் தாயகம் சென்றுவந்தேன். கிட்ட தட்ட 16 வருடங்களுக்கு
பின்னர். சிறு வயதிலேயே வந்த படியால சிறுவயதில் பார்த்த முகங்களை கற்பனை செய்து கொண்டு போன எனக்கு
முகம் தெரியாத உறவுகள் மட்டுமே அறிமுகமானது. அகண்ட வீதிகளெல்லாம் ஒடுங்கிப்போய் இருந்தன. சிறுவயதில்
வீதியின் ஒரு கரையிலிருந்து மறுகரை தாண்டுவதே உயிர்போகும் விடயமாக இருந்தவை இப்போது இரண்டு அடி
எடுத்து வைப்பில் தாண்டியது வியப்பாக இருந்தது. ஊரே மாறிப்போயிருந்தது மனிதர்கள் பலரும் கூட.

எமது வீட்டுக்கு பக்கத்து வீடு பற்றி நான் அறிந்த விடயம்தான், இந்த செய்வினை, சூனியம் பற்றி கேள்வி எழ அடித்தளமாக இருந்தது. அதாவது, எமது பக்கத்து வீடும், காணியும் இடிபாடுகள் நிறைந்த யாருமே வசிக்க முடியாத படி பற்றைகள் நிறைந்து காணப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தத்தின் கோரபற்களுக்கு பலியானவற்றில் இதுவும் ஒன்றென எண்ணினேன். ஆனால், ஊரிலுள்ள வயோதிபர் ஒருவர் சொன்னார். அவரை அப்பப்பா என்றுதான் அழைப்பேன். அவர் கூறியது தான் துாக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார், அந்த காணியில யாரோ செய்வினை செய்து போட்டிருக்கினமாம், அதனால் அங்க வாழ்ந்த குடும்பம் சிதறி சின்னா பின்னமாக போய்விட்டது என்று. அந்த காணியில் வசித்து வந்தது ஒரு அழகான சிறிய குடும்பம். தாய், தந்தை 2 பெண், 3 ஆண் - நடுத்தர குடும்பம். நான் சிறு வயதில் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தனால் நன்றாக நினைவிருக்கிறது. அவர்களுக்கு அந்த காணி சொந்தமானது அல்ல வாடகையே. அவர்கள் அங்கு வருவதற்கு முன் 4 வீடு தள்ளியுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்கள். அங்கு வீட்டு உரிமையாளரின் மகன் இவர்களது மகனை காதலித்த விடயம் தொடர்பாக பிரச்சனை உருவாக இங்கே வந்து குடியேறி இருந்தார்கள். இங்கே குடியேறும் வரை ஒரளவு வசதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், வந்தபின் சோதனைமேல் சோதனை. அயலவர்களுடன் சண்டை. வேலை வாய்ப்புகள் இன்றி பட்டினி, ஆண் பிள்ளையின் நண்பர்கள் வீட்டுக்கு வருவதால் பெண்பிள்ளைகளுடனான உறவில் காதல். இதனால் பெற்றோர்களுடன் சண்டை. அதுவரை அவர்கள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஊரில் மிகவும் மதிக்கப்பட்ட பெண்கள். முத்தவர் ஆண்மகன் பலநேரங்களில் நோய்ப்பட்டே இருப்பார். சில நேரங்கள்தான் வெளியே காணும் வாய்ப்பு கிடைக்கும்.

இப்படியான குடும்பம் நான் வெளிநாடு வந்த சில காலங்களில் சின்னாபின்னமாக போய்விட்டது. நோய்வாய்ப்பட்ட அந்த ஆண்பிள்ளைக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் நோய் தீராமல் இளவயதில் இறந்துபோனார். பெண்பிள்ளைகளில் ஒருவர் காதலித்து திருமணம் முடித்து வேற்றுார் சென்றார். அதன் பின் குடும்பத்துடன் தொடர்பே இல்லையாம். மற்றைய 2 ஆண்பிள்ளைகள் காணியில் வெடிக்காமல் கிடந்த கைக்குண்டு வெடித்ததில் பலியாகியுள்ளனர். மிகுதியாய் இருந்த அந்த பெண் மற்றும் பெற்றோர்கள் அநாதரவாக அந்த வீட்டிலேயே இறந்து கிடந்திருக்கிறார்கள். சில நாட்களின் பின்னரே அது ஊரவர்களால் கண்டறியப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்படி அந்த சின்னபின்னமாக போன அந்த குடும்பம் பேரரில் நேரடியாக பாதிப்படையாமல் இப்படி போனது குறித்து அப்பப்பா சொன்னார் " அந்த காணியில் குடியிந்த யாருமே இப்போது உயிருடன் இல்லை என்றும். இவர்களுக்கு முன் இருந்தவர்கள் கூட துாக்கு போட்டு தற்கொலை செய்தவர்கள் என்றும் சொன்னார். இந்த காணியில் யார் வசிக்க வந்தாலும் உருப்படாமல் உருக்குலைந்து போனவர்கள்தான். காரணம் யாரோ எதோ காரணத்துக்காக அந்த காணியில் செய்வினை செய்து இருக்கினம். அத இன்னும் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இதை செய்வினையில் நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்.
ஆனால்,....... :?: :?: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#56
அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;
Reply
#57
Quote:அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம்
_________________


இங்கைபாருங்கள் இந்த கூத்தை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அந்த குடும்பத்திற்கு ஏன் இப்படியானது.. பாவம். :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#58
Quote:அந்த காணி எங்கையிருக்கெண்டு சொல்லுங்கோ குறும்பன் நல்ல மலிவா அமத்தலாம்
எனக்கும் சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சனம் திருந்தாது :evil: :twisted:
Reply
#59
செய்வினை சூனியம் பேய் பிசாசு இல்லை எண்டு நிறைய பேர் சொல்லுறீங்கள்..யாரவது தம்மளை சுடலைக்கு இரவு 12மணிக்கு ஒருக்கா போட்டு வருவீங்களோ??? நானும் நம்பிக்கை இல்லாதவன் தான்.ஆனாலும் மனப்பயம் இப்பவும் இருக்கு...என்ரை 2வது பெட்டையை உவன் பூபாலின்ரை பெடியன் மருந்து போட்டுதானே எடுத்தவன்..என்னை நிமிந்துகூட கதைக்காத பெடிச்சி அவனுக்காண்டி என்னோடை சண்டை பிடிச்சு அவனேடையே போயிட்டாள் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன் (நானும் இதுதான் சாண்ஸ் செலவு மிச்சம் எண்டு பேசாமல் விட்டுட்டன் அது வேறை கதை)
Reply
#60
MUGATHTHAR Wrote:செய்வினை சூனியம் பேய் பிசாசு இல்லை எண்டு நிறைய பேர் சொல்லுறீங்கள்..யாரவது தம்மளை சுடலைக்கு இரவு 12மணிக்கு ஒருக்கா போட்டு வருவீங்களோ??? நானும் நம்பிக்கை இல்லாதவன் தான்.ஆனாலும் மனப்பயம் இப்பவும் இருக்கு...என்ரை 2வது பெட்டையை உவன் பூபாலின்ரை பெடியன் மருந்து போட்டுதானே எடுத்தவன்..என்னை நிமிந்துகூட கதைக்காத பெடிச்சி அவனுக்காண்டி என்னோடை சண்டை பிடிச்சு அவனேடையே போயிட்டாள் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன் (நானும் இதுதான் சாண்ஸ் செலவு மிச்சம் எண்டு பேசாமல் விட்டுட்டன் அது வேறை கதை)

ììììììì ??? ¿øÄ ÝôÀ÷ ÌÎõÀõ... ¸ÅÉõ ¬îº¢ «Å¡¨Å¡ÅÐ ?? (¡ÕìÌ ¦¾Ã¢Ôõ º¢ýÉôÒ Á¡¾¢Ã¢ ÀÆÍ¸û ¯Ç¡Å¢È ¸Çõ þÐ) :oops: :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)