Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி:
#21
<b>யாழ். இராணுவ வன்முறையில் ஊடகவியாளர்கள் படுகாயம்! </b>

ஜ ம.சேரமான் வெள்ளிக்கிழமை 04 மார்ச் 2005 18:53 ஈழம்

யாழில் சிங்கள இராணுவம் நடத்திய வன்முறையில் ஊடகவியலாளர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தினக்குரல் பத்திரிகையின் யாழ். செய்தியாளர் இரத்னம் தயாபரனின் வாகனத்தை அடித்து சேதப்படுத்திய சிங்கள இராணுவம்ää யாழ். நகரின் இணைய மையங்களையும் நாசப்படுத்தியது.

லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர் வின்சென்ட் ஜெயன் என்ற ஊடகவியலாளரும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நெட் இணையத்தளம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
Reply
#22
<b>யாழ்பாணத்தில் ராணுவம் சுட்டு 2 பேர் பலி</b>

யாழ்பாணம்:

இலங்கையில் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகே மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாயினர். இதனால் தமிழர் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

யாழ்பாணத்தில் இன்று காலை காட்டுத்தனமான வேகத்தில் சென்ற ஒரு இலங்கை ராணுவ ஜீப் மோதி 12 வயதான நாகேந்திரம் துசிகா என்ற பள்ளி மாணவி இறந்தாள். மணிபே பகுதியைச் சேர்ந்த துசிகா, வேம்படி பெண்கள் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த விபத்தையடுத்து வேம்படி பள்ளி மாணவிகளும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர். இலங்கை விமானப் படையின் ஜீப் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

அப்போது அவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பரமேஸ்வரா சந்திப்பு அருகே ஒருவரும், கொட்டடி சந்திப்பின் அருகே ஒருவரும் பலியாயினர்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழர் பகுதிகள் முழுவதுமே பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தற்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#23
என்ன நடக்கிறது.. யுத்தம் ஆரம்பமாகிறதோ..?? :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
கொல்லப்பட்ட நாகேந்திரம் துஷிகா (12 வயது). இவர் வேம்படி மகிளிர் கல்லூரியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/nagendram_dushika.jpg' border='0' alt='user posted image'>

படம் தமிழ் நெட்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#26
<b>வேம்படி மாணவிகளின் மறியல் போராட்டம்</b>

<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/jaffna_prot_04_03_05_03_38376_435.jpg' border='0' alt='user posted image'>

படம் தமிழ் நெட்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#27
Mathan Wrote:கொல்லப்பட்ட நாகேந்திரம் துஷிகா (12 வயது). இவர் வேம்படி மகிளிர் கல்லூரியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

படம் தமிழ் நெட்

Cry Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#28
நாசமாக போவாங்கள்! :evil:
Reply
#29
Mathan Wrote:கொல்லப்பட்ட நாகேந்திரம் துஷிகா (12 வயது). இவர் வேம்படி மகிளிர் கல்லூரியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.


படம் தமிழ் நெட்
Cry Cry Cry
. .
.
Reply
#30
பேரூந்திற்குக் காத்துநின்ற மாணவன் கைது
Cry Cry Cry
ஸ்ரீலங்காப்படையினரின் அடாவடிச்செயற்பாட்டின் தொடர்ச்சியாக யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுடைய ச.திலீப்குமார் யாழ் இந்துகல்லூரியில் 2005 விஞ்ஞானப்பிரிவில் கற்று வருகின்றார். இவர் பேரூந்துக்காக தரிப்பு நிலையத்தில் காத்து நின்ற போது ஸ்ரீலங்காப் படையினர் கைது செய்து சென்றுள்ளனர்.

வெளிப்படையாவே மக்கள் மீது கண்மூடித்தனமதாக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இந்நிலையில் அம்மாணவனின் நிலை குறித்து பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

யாழ் குடாநாட்டில் படை அரண்களில் நிலைகொண்டுள்ள பெருமளவான படையினர் அனைவரும் குண்டான் தடிகளுடன் காணப்படுகின்றனர். யாழ் குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் போர்க்காலம் போன்று இரவு வேளை வெறிச்சோடிக் காணப்படுகின்றது. Cry Cry Cry Cry Cry
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#31
பலியான மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் இன்று மாலை இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர் ஓய்வு பெற்ற மாநகர சபை தொழிலாளி நாகன் கதிரகாமு வயது 58 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம் பெற்ற இராணுவ வாகன விபத்தில் பலியான மாணவி நாகேந்திரன் துளசிகாவின் சடலம் மரன விசாரனையின் பின்பு இன்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் மரன விசாரனையை மேற் கொண்டார்.

இவரது உத்தரவின் பேரில் இராணுவ வாகன சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவததையடுத்து இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது வேம்படி சந்தியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமும் ஆத்திரமடைந்த பொது மக்களினால் சேதமாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

இன்று காலை முதல் மாலை வரை யாழ்ப்பான நகரிலும் புறநகர் பகுதியிலும் இடம் பெற்ற இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கையின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக 8 பேர் பொலிசாரினால் கைது செயயப்பட்டுள்ளார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பின்பு குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை. அமைதி நிலவுகின்றது. இருப்பினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#32
பாவிபயலுகள்......... :evil: :evil:
Cry Cry
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
யாழ் நகரில் வன்முறைகள்

யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை இராணுவச் சிப்பாய் ஒருவர் ஓட்டிச் சென்ற உழவு இயந்திரம் மோதி பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வாகன விபத்தில் காயமடைந்த 12 வயதான நாகேந்திரம் துளசிகா என்னும் மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமுற்ற இளைஞர்கள் வேம்படி மகளிர் கல்லூரி சந்தியில் விமானப்படை ஜீப் வண்டி ஒன்றை தீயிட்டதுடன், அருகில் உள்ள சிறிலங்கா மாவட்ட கிளை அலுவலகத்துக்கும் தீ வைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதனையடுத்து வேறு சில இராணுவ நிலைகளைகளையும் கும்பல்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது.

கட்டுமீறி நடந்து கொண்ட இளைஞர்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகப் பகுதியில் இராமநாதன் வீதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த உரும்பிராயைச் சேர்ந்த நாகன் கதிர்காமர் என்பவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் யாருடைய துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை என்று யாழ் பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

நிலைமைய கட்டுப்பாட்டில் கொண்டுவர பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்ணீர்ப் புகைப் பிரயோகமும், தடியடியும் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்த பதற்றம் காரணமாக யாழ் நகரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன, நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

சம்பவ இடங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் சிலரும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நபர் துப்பாக்கிச் சூட்டில் தான் உயிரிழந்தார் என்பதை மருத்துவர்களால் உறுதி செய்ய முட்யவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஹெலனா ஒலப்ஸ் கோபிர் கூறினார்.

அதேவேளை விடுதலைப்புலிகள் தூண்டி விட்டதனாலேயே கும்பல் ஒன்று இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் தயா ரத்னாயக்க கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து விடுதலைப்புலிகளுடன் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

BBC TAMIL NEWS
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#34
நாகேந்திரம் துளசிகா ÌÎõÀò¾¢ýÕìÌõ, நாகன் கதிர்காமர் ÌÎõÀò¾¢ýÕìÌõ ±É¾¡úó¾ «Û¾¡Àí¸¨Çò¦¾Ã¢Å¢òÐì ¦¸¡û¸¢§Èý.

þÃì¸õ ±ýÀ§¾ ±ýɱñΦ¾Ã¢Â¡¾ «Ã츨à ±ýÉ ¦º¡øÖȦ¾ñ§¼ ¦¾Ã¢§Âøø.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#35
<b>இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ வாகனம் குறித்து மூனா வரைந்த சித்திரம்</b>

http://www.selvakumaran.de/kodukal/EM04.03.jpg
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#36
இராணுவத்தினரை எதிர்த்தால் தான் அவர்களுக்கு தெரியும் மக்களின் பலம்.... பாவம் அந்த சின்ன பிளையை கொன்றுவிட்டார்க <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#37
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/jaffna_prot_04_03_05_08.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/jaffna_prot_04_03_05_06.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/jaffna_prot_04_03_05_09.jpg' border='0' alt='user posted image'>
Reply
#38
Cry Cry Cry Cry
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
Reply
#39
மாணவி நாகேந்திரம் துலசிகாவின் குடும்பத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதி ஜந்து இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கியுள்ளார். அத்துடன் இராணுவத்தின் 51வது படையணியின் சார்பாகவும் ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும் என்றும் அவ் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
- உதயன்
Reply
#40
அரசியல்துறை போராளிகள் மீதான தாக்குதலுக்கு நோர்வே கண்டனம்


கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் மீதான தாக்குதலுக்கு தமது கடும் கண்டனத்தினையும்இ கவலையையும் நோர்வே தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதர் ஜோன் பிரட்ஸ் கரே இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக விமானப்படை ஹெலி கொப்டர் மூலம் கிளிநொச்சி பொது மைதானத்தை வந்தடைந்த ஜோன் பிரட்ஸ்கர் தலைமையிலான குழுவினரை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தைச் சேர்ந்த புலித்தேவன் மற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் வரவேற்றனர்.

அங்கிருந்து தமிழீழ காவல்துறையினரது பாதுகாப்புடன் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தூதர் குழுவினரை அங்கு வரவேற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் பேச்சுக்களை நடத்தினார். காலை 10.45 மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்கு பதிலளித்த நோர்வே தூதர் கிழக்கில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மீதான படுகொலை மற்றும் மட்டு. அம்பாறை அரசியல்துறை மகளிர் பிரிவு போராளிகள் மீதான துப்பாக்கி சூட்டுச்சம்பவம் என்பவை தொடர்பினில் நோர்வே அரசின் கண்டனத்தையும்இ கவலையையும் தாம் இன்று தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

அதேவேளை சுனாமி கடல் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளில் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான இணைந்த செயற்பாடுகள் தொடர்பாக அரசினது பதில் எதனையும் கொண்டு வந்திருந்தீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்இ இதுபற்றிய எந்தவொரு பதிலினையும் தான் எடுத்துவந்திருக்கவில்லையென தெரிவித்தார்.

அதேவேளை மீண்டும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக முன்னேற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா? இவ்விடயத்தினில் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்இ இவ்விடயம் தொடர்பில் அரசினது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக தமக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.

ஆயினும் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வட்டாரங்கள் தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை

சுட்டபழம்
நன்றி வீரகேசரி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)