Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-66</b>
Belt.exe, Salm.exe, Relevancy என்னும் Malware கள்
எனது கம்பியூட்டர் சில மாதங்களாக மிகவும் மெதுவாக செயற்பட்டது. நான் பல முயற்சிகளை மேற்கொண்டும் சரிவரவில்லை. கடைசியில் Msconfig ல் Startup tab ஐ கிளிக்பண்ணி என்னென்ன புறோகிறாம்கள் system boot பண்ணும்போது தானாகவே யங்குகின்றன என
தேடிப்பார்த்ததில், மேலே குறிப்பிட்ட சந்தேகத்துக்கிடமான மூன்றை கண்டேன். இவைகள் யாது என தேடியபோது Malware சாதியை சேர்ந்தவை என தெரியவந்தது. இவைகள் Antivirus புறோகிறாம்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு உள்ளேயிருந்து, தனது தாய்த்தளத்திற்கு தகவல் அனுப்புவதோடு, நான் வெப்தளங்களுக்கு போகும்போது எனது பாதையை திசைதிருப்பிவிடும் வேலையையும் செய்துகொண்டிருந்தது. இவைகளை அழித்ததினால் எனது தாமத பிரச்சனை ஒரளவு சுமுகமாகியது. IE யும் சற்று வேகமாக வேலைசெய்தது.
Belt.exe யை எப்படி அழித்தேன் என பார்ப்போம்.
கம்பியூட்டர் பூட் ஆகும்போது F8 அடித்து safe-mode க்கு சென்று Program File லில் உள்ள Belt.exe என்ற கோப்பை அழித்தேன். சிலவேளைகளில் Belt.ini, Bi.dll, Suap.ini, Suap.exe, Mxtarget, FFGDEGOJ.ini எனெ வெவ்வேறு பெயர்களிலும் இக்கோப்பு காணப்படலாம்.பின் Normal startup செய்து பூட் ஆகியபின் start->Run->Regedit-> OK ஆகியவைகளை கிளிக்செய்து Registry Editor ஐ திறந்து Hkey-Locaol-Machine\Software\Microsoft\Windows\Current Version\Explorer\Browser Helper Object\{000006B1-19B5-414A-849F-2A3C64AE6939} என்ற சப்கீயை அழித்தேன். Registry Key.ஐ அழிப்பதன்முன் அந்த கீயையாவது backup எடுப்பது அவசியம்
மூன்றாவதாக Search யூட்டிலிட்டி ஐ பாவித்து மேலே கூறப்பட்ட 6 கோப்புக்களில் ஏதாவது எங்காவது காணப்படுகிறதாவென தேடி காணப்பட்ட இரண்டொன்றை அழித்துவிட்டேன். இதனால் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது மனதிருப்தியை தந்துள்ளது. கீழே காணப்படுபவையெல்லாம் Malware என்றவகையை சாரும். அழிக்கப்படவேண்டியவையே.
2_0_1browserhelper2.dll alchem.exe belt.exe bridge.dll cmesys.exe gmt.exe istsvc.exe msbb.exe mslaugh.exe mxtarget.dll newdot~2.dll optimize.exe save.exe sp.exe twaintec.dll updmgr.exe winnet.dll wuamgrd.exe wupdater.exe
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி அண்ணா நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
[b][size=18]
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-67</b>
Antivirus Software _ Stinger.exe
தனித்து நின்று இயங்கக்கூடியதும், 1.44 MB அளவிலிலும் சிறியதாகையால் மென்தட்டில் சேமித்து காவிச்செல்லக்கூடியதும், Macafee நிறுவனத்தால் இலவசமாக விநியோகிக்க படுவதுமான ஒரு சிறிய புறோகிறாம்தான் இந்த Stinger.exe ஆகும். இது 30 வகையான வைரஸ்களை கண்டுபிடித்து அழிக்கககூடியது. ஒரு கம்பியூட்டரில் இன்ரர்நெட் தொடர்பு இல்லாதபோது, தொடர்புள்ள இன்னொரு கம்பியூட்டர் உதவியுடன் Macafee.com என்ற தளத்திலிருந்து இதை ட்வுண்லோட் செய்து Floppy Disk ல் சேமித்து கொண்டு சென்று இன்ரர்நெட் தொடர்பு இல்லாத வைரஸ் தொற்றிய எந்த கம்பியூட்டரையும் சுத்தம் செய்யலாம். எனக்கு தெரிந்த வரை இப்படியான வசதியை கொண்ட ஒரு மென்பொருள் இது ஒன்றுதான். கீழ்க்காணும் தொற்றிகளை இது அழிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BackDoor-AQJ------- Bat/Mumu.worm------ Exploit-DcomRpc
IPCScan--------------IRC/Flood.ap----------IRC/Flood.bi
IRC/Flood.cd----------NTServiceLoader-------PWS-Sincom
W32/Bugbear@MM----W32/Deborm.worm.gen --W32/Elkern.cav
W32/Fizzer.gen@MM---W32/FunLove---------W32/Klez
W32/Lirva------------W32/Lovgate----------W32/Lovsan.worm
W32/Mimail@MM------W32/MoFei.worm------W32/Mumu.b.worm
W32/Nimda-----------W32/Sdbot.worm.gen--W32/SirCam@MM
W32/Sobig------------W32/SQLSlammer.worm--W32/Yaha@MM
Floppy Disk ஐ அதன் டிறைவினுள் செலுத்திவிட்டு Start->Run->cmd->Ok கிளிக் செய்து C:\ A: என ரைப் செய்து A: prompt ல் நின்று கொண்டு Stinger.exe/adl என ரைப்செய்து Enter ஐ தட்டவும். இதன் parameters ஆகியன
/Adl - Scan all local drives
/Go - Start scan immediately
/Log - Save a log file after scan
/Silent - Don't display graphical interface
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் இத்தளத்திற்கு செல்லவும்.
http://us.mcafee.com/virusInfo/default.asp...val/Stinger.asp
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நீங்கள் தந்த இணைப்பு பழைய இணைப்பு போல் உள்ளது.. இது ஒரு அருமையான மென்பொருள் இதனை நான் பலகாலமாக பயன் படுத்தி வருகிறேன்.. நேற்று இது குறித்து மற்ற தலைப்பினுள் இணைப்பு கொடுத்திருந்தேன்... நீங்கள் தந்த மேலதிக தகவல்களுக்கு நன்றி
http://vil.nai.com/vil/stinger/
<ul>BackDoor-AQJ
<li> BackDoor-JZ
<li> Exploit-LSASS
<li>IRC/Flood.bi
<li>PWS-Narod
<li>W32/Bagle@MM
<li>W32/Deborm.worm.gen
<li>W32/Elkern.cav
<li>W32/Klez
<li>W32/Lovgate
<li>W32/Mumu.b.worm
<li>W32/Netsky
<li>W32/Polybot
<li>W32/Sober
<li>W32/Swen@MM
<li>W32/Zindos.worm
<li>BackDoor-CEB
<li>Bat/Mumu.worm
<li>IPCScan
<li>IRC/Flood.cd
<li>PWS-Sincom.dll
<li>W32/Blaster.worm (Lovsan)
<li>W32/Doomjuice.worm
<li>W32/Fizzer.gen@MM
<li>W32/Korgo.worm
<li>W32/Mimail
<li>W32/MyDoom
<li>W32/Nimda
<li>W32/Sasser.worm
<li>W32/Sobig
<li>W32/Yaha@MM
<li>BackDoor-CFB
<li>Exploit-DcomRpc
<li>IRC/Flood.ap
<li>NTServiceLoader
<li>W32/Anig.worm
<li>W32/Bugbear@MM
<li>W32/Dumaru
<li>W32/FunLove
<li>W32/Lirva
<li>W32/MoFei.worm
<li>W32/Nachi.worm
<li>W32/Pate
<li>W32/SirCam@MM
<li>W32/SQLSlammer.worm
<li>W32/Zafi<ul>
[b][size=18]
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-68</b>
Index.dat என்பதன் விபரம் என்ன?
பெரும்பாலும் குறைந்த பட்சம் Temporary Internet Files, History, Cookies என்ற போல்டரினுள் காணப்படும் ஒரு System file இது. இதை சுற்றியுள்ள எல்லா கோப்புக்களையும் Hard disk தாபரிப்பு வேலைகளின்போது அழிக்கும்போதும் அழியாமல் அடம்பிடிக்கும் file இது. அழிக்கப்போனால் Access denies என்ற செய்தி வரும். திறந்து பார்க்க முற்பட்டால் எந்த புறோகிறாமைக்கொண்டு திறப்பதென தெரியவில்லை புறோகிறாமை தேர்ந்து காட்டுங்கள் என்ற செய்தி வரும். Word ல் பலவந்தமாக திறந்து பார்க்க முற்பட்டால் புரியாத உருவங்கள் தென்படும்.
உண்மையில் இந்த கோப்பில் இருப்பது நாம் சென்ற வெப்தளங்களின் முகவரிகளின்தான். பெரிதாக ஒன்றுமில்லை. இன்னொருநேரம் இந்த வெப்தளங்களுக்கு செல்லும்போது எமக்கு வழிகாட்டி எம்மை வேகப்படுத்துவதற்கும் Intenet Explorer ன் Address bar ல் விலாசங்களை ரைப் செய்யும்போது எமக்கு வழிகாட்டும் Auto Complete என்னும் வசதி வேலை செய்வதற்கும் வேண்டி இந்த வெப்தளவிலாசங்கள் இங்கே பதியப்பட்டு வைக்கப்படுகின்றன.
இந்த File ஐ திறந்து பார்க்க விரும்பின் இப்படி செய்யவும். Word ஐ லோட்பண்ணவும். File/Open ஐ கிளிக்பண்ணவும். வரும் பெட்டியில் Look in என்பதன் எதிரில் Cookies என்ற போல்டரை கொண்டுவந்து நிறுத்தவும் File Types என்பதன் எதிரில் Recover Text from any file (*.*) என்றதை கொண்டுவந்து நிறுத்தவும். பெட்டிநடுவில் தெரியும் index.dat என்ற கோப்பை தெரிவுசெய்யவும். இப்போ Open ஐ கிளிக்செய்யவும். File திறபட்டு சில முகவரிகள் தென்படும்
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-69</b>
விண்டோஸ் 2000 அல்லது XP ஐ சாதாரணமாக நிறுவுவது எப்படி?
உங்கள் கம்பியூட்டரில் autorun வேலை செய்யாதவிடத்து, விண்டோஸ் 98 பூட் டிஸ்க் ஐ கொண்டு கம்பியூட்டரை ஸ்ராட் பண்ணி, விண்டோஸ்2000 அல்லது XP சீடியை அதன் டிறைவில் செலுத்துவிட்டு, A:>\ prompt தென்பட்டவுடன் D:>\ டிறைவிற்கு மாறி, \i386 என்னும் போல்டருக்குள் நுழைந்து, அதனுள் காணப்படும் winnt,exe என்னும் exe கோப்பை இயக்குவதனால் நிறுவுதல் ஆரம்பித்துவைக்கப்படும்.
எனக்கு இப்படி நிறுவவேண்டியொரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால இதுதான்வழி என அறிந்துவைத்துள்ளேன்
1) Format பண்ணும்போது உங்கள் ஹாட் டிஸ்க் 32 GB இலும் குறைவாக இருந்தால் FAT32 ஐ பாவிக்கவும். இந்த அளவிலும் பார்க்க கூடிய அளவான டிஸ்கில் FAT32 பாவிக்கமுடியாது. எனில் 32GB குறைந்தளவான டிறைகளாக பிரிக்கவேண்டும்.
2) ஹாட் டிஸ்க் எவ்வளவாக இருந்தாலும் இரண்டு ஒப்பரேட்டிங் ஸிஸ்டங்களை பாவிக்கப்போவதானால் FAT32 ஐ பாவிக்கவும்.
3) உங்கள ஹாட் டிஸ்க் 32GB இலும் கூடுதலாகவும் ஒரு ஒப்பரேட்டிங் ஸிஸ்டத்தை பாவிக்கப்போகிறீர்கள் எனில் NTFS ஐ பாவிக்கவும்.
4) கூடிய file பாதுகாப்பும் அதிக Disk Compression ம் தேவையெனில் NTFS ஐ பாவிக்கவும்.
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
E.Thevaguru Wrote:<b>குறுக்குவழிகள்-69</b>
விண்டோஸ் 2000 அல்லது XP ஐ சாதாரணமாக நிறுவுவது எப்படி?
உங்கள் கம்பியூட்டரில் autorun வேலை செய்யாதவிடத்து, விண்டோஸ் 98 பூட் டிஸ்க் ஐ கொண்டு கம்பியூட்டரை ஸ்ராட் பண்ணி, விண்டோஸ்2000 அல்லது XP சீடியை அதன் டிறைவில் செலுத்துவிட்டு, A:>\ prompt தென்பட்டவுடன் D:>\ டிறைவிற்கு மாறி, \i386 என்னும் போல்டருக்குள் நுழைந்து, அதனுள் காணப்படும் winnt,exe என்னும் exe கோப்பை இயக்குவதனால் நிறுவுதல் ஆரம்பித்துவைக்கப்படும்.
.
மேற் குறிப்பிட்டபடி நிறுவும் முறை தவறானது. XPஅவ்வாறு நிறுவும்போது இடையிலேயே நின்றுவிடும்.
E.Thevaguru Wrote:1) Format பண்ணும்போது உங்கள் ஹாட் டிஸ்க் 32 GB இலும் குறைவாக இருந்தால் FAT32 ஐ பாவிக்கவும். இந்த அளவிலும் பார்க்க கூடிய அளவான டிஸ்கில் FAT32 பாவிக்கமுடியாது. எனில் 32GB குறைந்தளவான டிறைகளாக பிரிக்கவேண்டும்.
2) ஹாட் டிஸ்க் எவ்வளவாக இருந்தாலும் இரண்டு ஒப்பரேட்டிங் ஸிஸ்டங்களை பாவிக்கப்போவதானால் FAT32 ஐ பாவிக்கவும்.
3) உங்கள ஹாட் டிஸ்க் 32GB இலும் கூடுதலாகவும் ஒரு ஒப்பரேட்டிங் ஸிஸ்டத்தை பாவிக்கப்போகிறீர்கள் எனில் NTFS ஐ பாவிக்கவும்.
4) கூடிய file பாதுகாப்பும் அதிக Disk Compression ம் தேவையெனில் NTFS ஐ பாவிக்கவும்.
உங்களுக்கு FAT32( >32 GB hard disk) வேண்டும் என்றால் hard disk tools ஐ பயன்படுத்தலாம். இதை hard disk company யின் இணையத்தில் இருந்து தரவிறக்கலாம்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-70</b>
Java virtual Machine (JVM)
JVM என்பது ஒரு தனி புறோகிறாம் அல்ல. Java2 Runtime Environment (JRE) என்ற software ன் ஒரு பகுதிதான். J2SE என்ற இன்னொரு software ஐக்கொண்டு தயாரிக்கப்பட்ட புறோகிறாம்களை எமது Browser ல் பார்வையிட உதவுவதுதான் இந்த JRE. இந்த JRE Netscape 4.7 இலிருந்து மேல், Mozilla1.2.1 இலிருந்து மேல், IE 5.5(SP2+)இலிருந்து மேல் ஆகிய Browser களை சப்போட் பண்ணும்.
நாம் ஒரு வெப்தளத்திற்கு சென்று அதில் ஒரு பக்கத்தை பார்வையிட முயலும்போது, இப்பக்கத்தை பார்வையிட JVM வேண்டும் என்று செய்தி வந்தால் எமது Browser ல் JVM இல்லை என அர்த்தம். எனவே Download பண்ணி பொருத்திக்கொள்ளவேண்டும். அச்செய்தியினடியில் Download என ஒரு பட்டன் இருக்கலாம். அதை கிளிக்பண்ணின் Microsoft வெப்தளம் திறபட்டு சுற்றுவழி ஒன்று காண்பிக்கப்படும். நீங்கள் நேரடியாக www.Java.com என்ற வெப்தளத்திற்கு போங்கள். அதன் முன்பதாக, Adware Blocking Software ஏதாவது இருந்தால் நிறுத்திவிடவும்.
1. போங்கள் www.java.com
2. கிளிக் Manual Download என்ற சொற்றொடரை. Get it Now என்ற மஞ்சள் பட்டனின் கீழ் உள்ளது.
3. மீண்டும் கிளிக். Windows Installation என்பதன் வலப்புறம் உள்ள Download என்ற மஞ்சள் பட்டனை.
4. வரும் பெட்டியில் ஒரு போல்டரை பெரும்பாலும் My Downloads என்ற போல்டரை தேர்வு செய்து save பண்ணவும்.
5. இப்போது Browser உட்பட எல்லா application களையும் மூடிவிடவும்.
6. J2RE-1-4-2-04 என்ற பெயரில் சேமிக்கப்பட்ட இந்த கோப்பை தேடிப்பிடித்து இரட்டை கிளிக்பண்ணவும்.
7. Installation ஆரம்பமாகிவிடும்.
8. வரும் பெட்டியில் License Agreement ஐ ஏற்கின்றேன் என்ற radio பட்டனை தேர்வு செய்து Next ஐ கிளிக்பண்ணவும்.
9. அடுத்து வரும் பெட்டியில் Typical ஐ என்ற radio பட்டனை தேர்வு செய்து Next ஐ கிளிக்பண்ணவும்.
10. Installation Completed என்ற செய்தி வரும் வரை காத்திருக்கவும்.
11 IE ஐ திறந்து Internet Options, Advance Tab களை கிளிக்பண்ணவும். கீழ்நோக்கி scroll பண்ணி Use Java2 Version என்பதன் இடப்புறம் Tick இல்லாவிடின் Tick போடவும்.
12. அதே பெட்டியில் security Tab, Custom Level ஐ கிளிக்பண்ணி, கீழ்நோக்கி scroll பண்ணி Sripting Java Applet என்பதனை Enable பண்ணவும். கிளிக் OK.
Download, Installation and Enabling முடிந்துவிட்டது. இனிமேல் Testing செய்து பார்க்கவேண்டும்.
கீழ் உள்ள லிங் ஐ கிளிக்பண்ணவும். Congradulation! Java is installed in your computer என்ற செய்தியும் ஒரு கூத்தாடும் உருவமும் தெரிந்தால், எல்லாம் சுபம்
http://java.com/en/download/help/testvm.jsp
இதை நான் பரீட்சித்துள்ளேன்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி தேவகுரு. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள் - 71</b>
A - Z ஏறுவரிசையிலுள்ள ஒரு கோப்பை அந்நிரலில் முன்னிலைப்படுத்த......
Windows Explorer ஐ திறந்து அதிலுள்ள ஒரு போல்டரை கிளிக்பண்ணினால் அதன் கீழுள்ள அத்தனை கோப்புக்களும் வலது பக்க பாளத்தில் A - Z வரிசை ஒழுங்கின்படி ஒன்றின்கீழ் ஒன்றாக காட்சியாளிக்கும். சரி 25 கோப்புக்கள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இதன் மத்தியில் H ஐ முதன் எழுத்தாகக்கொண்ட ஒரு கோப்பை ஓராவதாக கொண்டுவரவேண்டிய தேவை ஏற்படின் என்ன செய்யலாம்?
அந்த கோப்பை வலது கிளிக்செய்யவும், Rename கட்டளையை கிளிக்பண்ணவும். இப்போது cursor ஐ அந்த கோப்பின் முத்லெழுத்தாகிய H ன் முன் நிறுத்தவும், space Bar ஐ ஒரு தட்டு தட்டவும். வெளியில் ஒரு முறை கிளிக்பண்ணிவிட்டு Windows Explorer ஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும். இப்போது அந்த கோப்பு வரிசையில் முதலாவதாக நிற்கும்.
இதேபோல வெவ்வேறு முதலெழுத்துக்களை கொண்ட 4 கோப்புக்களை முன்னிலைபடுத்தவேண்டின், ஒவ்வொரு கோப்பையும் Rename செய்து 1.,2.,3.,4. என்ற இலக்கங்களை முறையே நான்கு கோப்புக்களின் முன்பும் சேர்த்து மேற்சொன்னவாறு செய்யின் அந்நான்கு கோப்புக்களும்1,2,3,4. என்ற வரிசைப்படி முன்னிலைபடுத்தப்படும். இலக்கங்களுக்குப்பின் ஒவ்வொரு புள்ளியையும்சேர்த்து விடுங்கள். செய்துபாருங்கள்
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள் - 72</b>
Hard disk ஐ பிரதி பண்ணல்
O/S, Applications, Drivers ஆகிவைகள் நிறுவப்பட்ட ஒரு Hard disk ஐ பிரதி எடுத்து நாம் பவுத்திரப்படுத்தி வைப்பதுதான் எமது சிஷ்டம் தொற்றுக்குள்ளாகி அழியும் நிலையில் எமக்கு உதவி செய்யக்கூடியது. Win98 ல் பிரதி எடுப்பது எப்படி என பார்ப்போம். .
1. முதலில் Disk cleanup, Scandisk, Defragmenter ஆகியவைகளை இயக்குங்கள். தேவையற்ற கோப்புக்கள், புறோகிறாம்களை அழித்து C: டிறைவை சுத்தம் செய்யுங்கள்
2. ஒரு புதிய hard disk ஐ பெற்று, Slave ஆக jumper setting செய்து Primary அல்லது Secondary IDE Channel லில் இணைத்துக்கொள்ளுங்கள். புதிய டிஸ்க் பழையதளவு அல்லது கூடிய கொள்ளளவு கொண்டதாக இருக்கவேண்டும்.
3. கம்பியூட்டரை ஸ்ராட் செய்து Ms-Dos prompt அல்லது Command prompt க்கு போங்கள். அதில் Fdisk என ரைப்பண்ணுங்கள். Enter கீயை தட்டுங்கள். Change current fixed disk drive என்பதை தேர்ந்தெடுங்கள். புதிதாக நிறுவிய டிஸ்க்கின் இலக்கமாகிய (பெரும்பாலும்) 2 ஐதேர்ந்தெடுக்கவும். Enter ஐ தட்டி Fdisk Options க்கு செல்லவும்.
4. Fdisk Options ல் Create DOS partition or logical DOS fdisk என்பதை தேர்ந்து Enter ஐ தட்டி மீண்டும், Create Primary DOS Partition என்பதை தேர்ந்து Enter ஐ தட்டி, பின் Set active partition என்பதை தேர்ந்து Enter ஐ தட்டி, பின் Esc கீயை தட்டி வெளியேறுங்கள்.
5. கம்பியூட்டரை மீண்டும் ஸ்ராட் பண்ணி, Windows Explorer க்கு செல்லவும். D: வை (எமது புதிய டிறைவ்) வலது கிளிக்பண்ணவும். Format, Full, Copy system files, என்பவைகளை தேர்ந்து Enter ஐ தட்டவும். Formating complete என செய்திவரும்.
6. Windows Explorer ல் View, Folder options, view tab, Show all files என்பவைகளை கிளிக்பண்ணவும்.
7. Control Panel க்கு போங்கள், System, Properties, Performance tab, Virtual memory என்பவற்றை கிளிக்பண்ணி Disable Virtual memory என்பதை தேர்ந்து எடுங்கள். அதாவது Virtual memory ஐ நிறுத்திவிடுகிறீகள்.
8. மீண்டும் கம்பியூட்டரை ஸ்ராட்பண்ணி Scandisk ஐ இயக்குங்கள். C; டிறைவில் பிழைகள் இருந்தால் திருத்தப்படும்
9. இப்போது C: டிறைவிலிருந்து கோப்புக்களை D: க்கு கொப்பி பண்ணவேண்டியதுதான். MS-DoS prompt க்கு போங்கள்.
XCOPY C:\ D:\ /c/e/f/h/k/r என ரைப்பண்ணி Enter ஐ தட்டுங்கள். ஆயிரக்கணக்கான கோப்புக்கள் கொப்பிபண்ணப்படும்.
Switch களின் அர்த்தம்:-
e - Copies directories and sub directories including empty ones
c - Continue copying even if error occurs
f - Displays full sources and destination files names while copying
h - Copies hidden and system files
k - Copies attributes - Normal Xcopy will reset read-only attributes
r - Over ride read-only files
சில கோப்புக்களின் பெயர்களை தந்து overwrite பண்ணவா என கேட்டால் Y (Yes) கீயை தட்டி Enter ஐ தட்டுங்கள்
10. மீண்டும் Scandisk ஐ இயக்குங்கள். பிழைகள் இருந்தால் திருத்தப்படும்.. இப்போது கம்பியூட்டரினுள் C: டிறைவிற்கு செல்லும் Data cable ஐ கழற்றிவிட்டு மீண்டும் ஸ்ராட் பண்ணுங்கள். கம்பியூட்டர் D: டிறைவிலிருந்து Boot ஆகும்.
11. கம்பியூட்டரை நிறுத்தி புதிய டிறைவை கழற்றி பவுத்திரமாக வையுங்கள்.
12. விண்டோஸ் 2000 த்திற்கும் இது பொருந்தும். Button பெயர்களில் மாற்றம் உண்டு, செயற்பாடு ஒன்றுதான். உ.ம் Scandisk க்கு பதில் CHKDSK, MS-DOS prompt க்கு பதில் Command prompt.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
பயனுள்ள தகவல் நன்றி.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி அண்ணா... நல்ல தகவல்
[b][size=18]
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-73</b>
Keyboard Shortcut to a webpage
கீபோட்டில் உள்ள மூன்று கீ க்களை ஒருசேர தட்டியவுடன் நாளாந்தம் பார்வையிடும் உங்களுக்கு விருப்பமான வெப்பக்கம் உடனே திறக்கவேண்டுமெனில் கீழே உள்ளவாறு செய்யவும்.
விருப்பமான வெப்பக்கத்தை திறந்து Favorites List ல் Add பண்ணவும். (Ctrl+D கீ க்களை ஒரு சேர அழுத்தியவுடன் பதிவாகிவிடும்). பின் Favorites menu List ஐ திறந்து அந்த வெப்பக்கத்தை வலது கிளிக்செய்து மீண்டும் Properties ஐ கிளிக்பண்ணவும். வரும்பெட்டியில் Shortcut Key என்பதன் எதிர் பெட்டியில் (text box) கிளிக்பண்ணி ஏதாவது ஒரு எழுத்தை தட்டவும் (உ~ம். Y). உங்கள் O/S XP அல்லது 2000 ஆயின் அப்பெட்டியினுள் இப்போது CTRL+ALT+Y தெரியும். CTRL+Alt தானாக போடப்படும். OK பண்ணிவிட்டு Internet explorer ஐ மூடிவிட்டு, பின்பு தேவையானபோது CTRL+ALT+Y ஆகிய மூன்றையும் ஒன்றாக அழுத்த உங்கள் பிரியமான வெப்பக்கம் உடனே திறக்கப்படும்
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-74</b>
Memory குறைபாடு
என்னிடம் இரண்டு கம்பியூட்டர்கள் உண்டு. அதில் ஒன்றின் Processor 900MHz; Memorly 128 MB. வைரஸ் பயம் காரணமாக இந்த சிறிய கம்பியூட்டரில்தான் நான் அதிகம் வேலை செய்வது. வெப்தளங்களில் உலா வருவேன். முக்கியமான தகவலிருந்தால் அதனை கொப்பி பண்ணவேண்டி "Word" ஐ திறந்து வைத்துக்கொள்வேன். சிலவேளைகளில் ஒன்று அல்லது இரண்டு வெப்தளங்கள் minimize பண்ணப்பட்டு status bar ல் கிடக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில் ஏதாவதொன்றை கிளிக்பண்ண முயற்சிக்கையில் மாத்திரம் எனது கம்பியூட்டர் திடீரென நின்றுபோவதுண்டு. மின்சாரம் திடீரென தடைப்பட்டது போல. மீண்டும் கம்பியூட்டரை ON செய்வேன்; வேலை செய்ய மறுக்கும். பின்புறமுள்ள Power Cord ஐ வெளியே இழுத்துவிட்டு மீண்டும் சொருகுவேன். மீண்டும் ON பண்ணினால் வேலை செய்யத்தொடங்கும். இப்படி 2 மாதங்கள் கடந்தன.
கோளாறு என்னவாக இருக்கும் என ஆராய்ந்தேன். முடிவில் இன்னொரு 128MB SDRAM Memory Stick வாங்கிவந்து கம்பியூட்டரில் பொருத்தினேன். இப்போது memory 256MB ஆகிவிட்டது. இதன் பிறகு இந்த கோளாறு இதுவரையில் இல்லை.
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-75</b>
MyWebEx PC - Free Remote access and Remote control to your Pc
உங்களது வீட்டு PC ஐ வெளியே வேலைக்கு போனவிடத்து Laptop மூலம் அணுகவேண்டுமா? அல்லது காரியாலய கம்பியூட்டரை வீட்டிலிருந்து இயக்கவேண்டுமா? அல்லது உமது PC ஐ நண்பனது கம்பியூட்டர் ஊடாக பார்க்கவேண்டுமா? அதுவும் இலவசமாக காரியம் நடைபெறவேண்டுமா?
கீழே உள்ள வெப்தளத்திற்கு போங்கள். "SIGN UP Now" என்று ஒரு Button காணப்படும். அதை அமுக்குங்கள். உங்கள் email, password. Access code (அதுவும் password மாதிரித்தான்) கொடுங்கள். இரண்டு நிமிடத்தில் install கிவிடும். பின்பு நண்பனின் கம்பியூட்டருக்கு போங்கள். Internet Explore ல் அதே வெப்தளத்தை திறவுங்கள். Member login என்ற பட்டனை கிளிக்பண்ணி அதே email password, access code கியவற்றை கொடுத்து Sign in பண்ணவும். connect என்றபட்டனை கிளிக்பண்ணி அரை நிமிடத்தில் உங்கள் வீட்டு கம்பியூட்டரின் Destop நண்பனின் கம்பியூட்டரில் தெரியும். உங்கள் வீட்டு கணனியில் என்னென்ன எல்லாம் செய்வீர்களோ அத்தனையையும் அதேமாதிரியே செய்யலாம். இதேநேரம் உங்கள் வீட்டு கணனி இருட்டடிக்கப்பட்டு, Keyboard ம் Mouse ம் வேலைசெய்யமாட்டாது. இந்த வெப்தளம் இச்சேவையை இலவசமாக வழங்குகிறது. GoToMyPC என்றவெப்தளம் இதே சேவையை பணத்திற்கு வழங்குகின்றது.
My WebExPc வேலை செய்வதற்கு windows இயங்குதளம் வேண்டும். அத்தோடு கீழ்காணுபவைகளும் அவசியம்.
Windows 95, 98, ME, 2000, NT, XP, Server 2003
Microsoft Internet Explorer 4.0 or later
JavaScript & cookies should be enabled for the browser
ActiveX should be enabled for the browser.
Internet connection (DSL, Cable, LAN).
முயன்று பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.
[url=http://www.mywebexpc.com/index.phphttp://www.mywebexpc.com/index.php[color=blue][/url]
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஆஹா நல்லதொரு விசயம் தேவகுரு நன்றி. நாளைக்கு செய்து பார்க்கப்போறன் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அண்ணா மிக மிக நல்ல விடையம் .. நான் இப்படி தேடாத இடம் இல்லை.. நன்றி.நன்றி
[b][size=18]
|