Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட இந்த செய்தியை படித்து பாருங்கள் .....
Sri Lanka's north sees a revival of the great divide
JAFFNA, JANUARY 10: They wonder up here whether the south has forgotten the north and how this part of the island was also a victim of the tsunami. That they too have suffered and need aid. Questions are also asked why Kofi Annan was not permitted to visit the area during his weekend visit.
They are also still burying their dead and there is a lot of grief, but there is rehabilitation as well. After the clean-up comes the restructuring, but this part of Sri Lanka, that opened up in February 2002 and was in many respects seriously damaged during the insurrection against Colombo, is still coming to terms with the invasion from the sea.
There is also another side of the destruction that is slowly emerging. Family here in the north who have lost contact with family in the south.
One is Usha Ishini (32), a senior nurse from Galle, who tells her story in a ward full of children injured by the tsunami in a hospital near Kopal, to the east of Jaffna. As she changes a bandage on a child's arm, she admits she still has no idea who of her family survived. Her last contact with her older brother Sachit was on Dec 24, to wish him on his birthday. She has been unable to contact anyone nor go to the coastal town.
It is very depressing and I am fearing the worst, she said. I am hoping to get away from here later in the week. But I am also needed here in the hospital. We lost staff during the disaster and there is no one to take my place if I go back to Galle.
Usha fears if children see her sadness or tears, they will be disturbed as they have been through enough. Most have lost family, but not all are orphans.
As Usha explains, the feeling abandonment and isolation is largely tied to a visit to the area by Prime Minister Mahinda Rajapakse and other politicos, one from the despised Marxist JVP (Janatha Vimukthi Peramuna). It is the JVP who want the LTTE to drop their demand for an independent self-governing authority as a rider for peace talks.
Wimal Weerawansa was chased out of Jaffna when tsunami survivors discovered he was the JVP propaganda secretary during a conversation. They now feel that the JVP are trying to stop any meaningful aid from reaching the peninsula.
Just what he (Weerawansa) hoped to achieve by coming here is hard to understand. They should have known that no one from the JVP is welcome in this region. says Usha. Ironically, the area where her family lived is now partly controlled by JVP cadres who have been defying the non-political stand of parties in relief operations by openly wearing red T-Shirts and distributing packages that two NGO groups had brought into the south.
It is one of the ironies of this massive aid operation, that political opponents have to work together. But LTTE and the JVP are far apart in all realms of ideology, and even the tsunami disaster, as Usha points out, has further polarised the situation. We have promised her that we are going to contact colleagues in the south to trace her family.
http://www.indianexpress.com/full_story.ph...ontent_id=62479
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுனாமியின் அநாதைகள் - நிலாந்தன்
சுனாமியினால் லாபம் அடைந்தது யார். நட்டமடைந்தது யார். என்று கணக்கெடுக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு சுனாமி அரசியல் வந்துகொண்டிருக்கிறது. எப்பொழுது சுனாமி ஒரு அரசியலாகியதோ எப்பொழுது சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான பணிகளில் மனிதாபிமான விகிதச்செறிவு அருவருப்பூட்டும் அளவிற்க்கு அதிகரித்ததோ அப்பொழுதிருந்தே சுனாமியின் இலாப நட்டத்தை கணக்கெடுக்க வேண்டிய ஒரு தேவையும் தோன்றி விட்டது.
இதன்படி பார்த்தால் சுனாமியால் பெரும் லாபம் அடைந்தது முதலாவதாக அமெரிக்கா. இரண்டாவதாக சிறிலங்கா அல்லது சந்திரிக்கா. இதில் நட்டம் யாருக்கு என்றால் தமிழர்களுக்கே. இதைச் சிறிது விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக அமெரிக்காதான் சுனாமியின் பயனாளி. சிறுதொகைப் பணத்தை நிதியுதவியாகக் கொடுத்ததைத் தவிர மற்றெல்லா விதங்களிலிலும் அதற்க்கு வரவுதான். ஆம் அவர்கள் தந்ததை சிறுதொகை என்றே கூறவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அது மிகச் சிறுதொகைதான். அதைக்கூட அவர்களின் மனிதாபிமான அரசியலுக்கு ஒரு முதலீடு என்று பார்த்தால் அதனை செலவுக்கணக்கில் போடமுடியாது. எனவே சுனாமியின் பெரியபயனாளி அமெரிக்காதான்
சுனாமியின் பெயரால் அமெரிக்கா இச்சிறுதீவில் தனது பிடியைமேலும் இறுக்கியிருக்கிறது. சாதாரண காலம் என்றால் இதைச்செய்யும் போது இந்தியாவிற்கு நோகாமல் செய்வது கடினம் ஆனால் சுனாமியின் பெயரால் அமெரிக்கா இலங்கைத்தீவில் உரிமை பராட்டுவதில் தனக்கு உருவாகியிருக்கும் புதிய வாய்ப்புக்களை ஆகக்கூடியபட்சம் பயன்படுத்தியிருக்கிறது. குறைந்த பட்சம் குறியீடகவேனும் அவர்கள் துருப்புக்களை இலற்கைத்தீவினுள் நகர்த்த முடிந்திருக்கிறது.
அண்மையில் அம்பாந்தோட்டையில் ஒரு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பேசியிருந்தார். இதில் அவர் ஜே.வி.பியை சுட்டாமல் சுட்டி சில கருத்துக்களைக் கூறியிருந்தார். நாட்டிலே தற்சமயம் தோன்றியுள்ள நிலை ஒரு அரசியல் யதார்த்தம் என்றும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்மென்றும் வெறுமனே அரசியல் கொள்கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு தூதரகங்களுக்கு முன் ஊர்வலம் செய்வதால் பலனில்லை என்றும் தொனிபட ரணில் அதில் பேசியிருந்தார். இதன் அர்த்தம் என்வென்றால் ரணில் முன்பு அடிக்கடி சொல்லி வந்த சர்வதேச வலைப்பின்னல் இதுதான் என்பதே. இலங்கைத்தீவில் அமெரிக்காவின் பிடி இறுக இறுக அது ஒரு கட்டத்தில் யூ.என்.பிக்கு நன்மையாய் முடியுமென்று ரணில் நம்புகிறார் போலும்.
அவர் கூறியது போல சர்வதேச வலைப்பின்னல் இப்போது சந்திரிக்காவிற்கு கிடைக்கத் தொடங்கிவிட்டது. இதன் படி கூறின் சந்திரிகாவை சுனாமியின் இரண்டாவது பெரிய பயனாளி எனலாம்.
அமெரிக்காவுடன் நெருங்கி ஒத்துழைக்கும் போது இந்தியாவுடன் ஏற்ப்படக்கூடிய அசௌகரியங்களிலிருந்து சுனாமி சந்திரிகாவை பாதுகாத்திருக்கிறது மட்டுமல்ல் சுனாமி சந்திரிகாவை அவர் சிக்கித்தவித்து வந்த பொருளபதார பிரச்சனைகளிலிருந்தும் ஒப்பீட்டளவில் விடுவித்திருக்கிறது.
இந்தோனேசியாவில் விடுதலைக்காக போராடும் அசே மாநிலத்தில் நிவாரண உதவிகள் Nபுழு க்களினூடாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இந்தோனேசிய சனாதிபதி தன்னிடம் கேட்டதாக கொபி அனான் அண்மையில் கொழும்பில் வைத்து கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்றுமவர் தெரிவித்திருந்தார்.
இந்நிதியை கையாளும் விசயத்தில் இணையத்தளத்தை திறந்து அதில் எல்லாக்கணக்கு விபரங்கயையும் பதிவில் வைக்குமாறு உலகவங்கியின் தலைவர் அண்மையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியிருந்தார்.
ஆனால் இது விடயத்தில் அரசாங்கம் ஒளிவு மறைவு அற்ற தன்மையை நிரூபிக்கும் விதத்தில் இப்பந்தி எழுதப்படும் நாள்வரையில் எது வித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.
சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்ப்படுத்த வல்லது. என்பதை விளங்கிக் கொள்வதற்க்கு அண்மைய நாட்களில் பொருளியல் நிபுனர்கள் பயன்படுத்தும் ஒரு சொற்றொடரை இங்கே சுட்டிக்காட்டலாம். னுருவுஊர் னுஐளுநுயுளுநு - டச் நோய் - என்பதே அந்த சொற்றொடர். சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் டச் நோயை கொண்டுவரக் கூடும் என்று மேற்;ப்படி பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். டச்சு நோய் எனப்படுவது 1960 களில் நெதர்லாந்தில் உண்டாகிய பொருளாதார வீக்கம் ஒன்றை குறிக்கப்பயன்படுத்தப்படும் ஓர் சொற்றொடராகும். நெதர்லாந்தில் 1960 களில் வடகடல் பிரதேசத்தில் பெருமளவு இயற்கை எரிவாயுப் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து டச்சுப் பொருளாதாரம் வேகமாக வீங்கியது. இதனால் டச்சு நாணயத்தின் பெறுமதி சடுதியாக உயர்ந்தது. ஆனால் அதேசமயம் எண்ணெய் அல்லாத அல்லாத ஏற்றுமதிக்குரிய உற்ப்பத்திப் பொருட்களை உற்ப்பத்தி செய்வதற்க்கான போட்டிகள் குறையத்தொடங்கின. இது போலவே சுனாமி நிதியும் இலங்கை நாணயத்தை எதிர்பாராத விதமாக பலப்படுத்தி -யிருந்தாலும் வரும் காலத்தில் இது என்னென்ன பக்கவிளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்பது பற்றி சிந்திக்கவேண்டுமென்று மேற்ப்படி நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் டச்நோய் வரக்கூடும் என்று சொல்யலுமளவிற்க்கு எதிர்பாராத பெருமளவு பெருமளவு நிதி கொழும்பில் வந்து குவிக்கிறது என்பதையே.
ஆனால் பொருளியலளர்கள் சற்றுக் கூடுதலாக கோட்பாட்டு ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சிந்திப்பதாகவே தோன்றுகிறது.
மாறாக சந்திரிகா அவருக்கு முன்னிருந்த எந்தவொரு சிங்கள தலைவருமே அப்படி நீண்டகால நோக்கில் கோடப்பாட்டு விளக்கங்களுடன் சிந்திப்பவர்கள் அல்ல. அப்படி சிந்தித்திருந்தால் சந்திரிகாவை சுனாமியின் பயனாளி என்று சொல்லும் நிலை வந்திருக்காது.
அவருக்கு தேவை உடனடி நிவாரணம். அது வந்து குவிகிறது. அதை வைத்து இனி காலத்தை கடத்தலாம். ஒரு புறம் சுனாமியைக்காட்டி பட்ஜெட் வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடலாம். அத்தோடு எதிர்க்கட்சிகளின் வாயையும் ஏன் ஜே.வி.பியின் வாயையும்கூட மூடிவிடலாம். இன்னொரு புறம் சுனாமிநிதியை வைத்து நாட்டின் பொருளாதரத்தை ஒப்பீட்டளவில் மீட்கலாம். சந்திரிகாவை பொறுத்தவரை சுனாமி என்பது பிச்சைக்காரனுக்கு வந்த புண்ணிற்குசமம் அதைவைத்து அவர் எல்லாத்தரப்பiயும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சமாளிக்கலாம்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனையான விடயம் என்னவென்றால் அவருடைய தனிப்பட்டநிகழ்சிநிரல் ஒன்றை சுனாமி அடுத்துக்கொண்டு போய்விடுமா என்பதுதான். அடுத்த ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிகிறது. அதற்க்கு பிறகும் நாட்டை ஆள்வது என்றால் அரசியலமைப்பில் ஏதாவது குறுக்குவழிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முதலில் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விலைக்கு வாங்கக்கூடிய எம்பிக்களை வாங்கி விடவேண்டும். இதைச்செய்யவில்லை என்றால் அடுத்த சனாதிபதி தேர்தலோடு சில சமயம் பண்டாரநாயக்காவின் ஆட்சி முnவுக்கு வரக்கூடும்.
எனவே இப்பொழுது சந்திரிகாவின் கவலையெல்லாம் அவருடைய தனிப்பட்ட கனவுகளை சுனாமி அடித்துக்கொண்டு போய்விடாதபடி பார்த்துக்கொள்ளுவதே. அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சுனாமியை வைத்து அவருடைய தனிப்பட்ட கனவுகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே. இதற்காக எதிர்த்தரப்பிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்குவதற்கு சுனாமி நிவாரனத்தைக் கூட பாவிக்க கூடிய ஆளாவர்.
எனவே சுனாமியின் உடனடி பயனாளியாக அவர் காணப்பட்டாலும் சுனாமி அவருடைய தனிப்பட்ட கனவுகளையும் அள்ளிக் கொண்டுபோயிற்றா இல்லையா என்பதை வைத்தே சுனாமியால் அவர் பெறப்போகும் நிகர இலாபத்தை கணக்கிடலாம்.
இது வரையிலும் நாம் பார்த்தது சுனாமியினால் லாபமடையும் தரப்புக்களைப் பற்றியது. இனி நட்டமடைந்திருக்கும் தரப்பை பார்ப்போம்.
கடந்த இரண்டேமுக்கால் ஆண்டுகளாக சமாதானத்தின் அநாதைகளாக காணப்பட்ட தமிழர்களே சுனாமியின் அநாதைகளும் ஆகியிருக்கிறார்கள். சுனரி வந்து அவர்களுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேமிப்பை கரைத்துக் கொண்டு போகும் நிலை.
சுனாமிக்கு முன்பு தமிழ் அரசியலில் காணப்பட்ட அதே ஈருடகநிலை தான் சுனாமிக்கு பின்னும் தொடர்கிறது. சுனாமிக்கு பிந்திய அரசியலில் தமிழர்களுடைய சொந்த சேமிப்பு கரைந்து கொண்டே போகிறது என்பதே மெய். இது தவிர்க்க முடியாததும் கூட.
சர்வதேச உதவிகள் போதியளவு கிடைக்காத ஒரு நிலையில் தமது பலத்தில் அதுவும் அவர்களுடைய நவீன வரலாற்றில் முன் எப்பொழுதும் நிகழ்ந்திராத கடற்கோளின் இழப்புகளில் இருந்து மீண்டும் எழுவதற்கு தமது சொந்த சேமிர்ihயே செலவளிப்பது என்பது அதுவும் மீண்டும் ஒரு யுத்தம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில் அதைச் செய்வது என்பது ஒரு சிறிய இனம் எடுக்கக் கூடிய ஆகப் பெரிய ?ரிஸ்க்? தான்.
சர்வதேச சமூகத்தின் உதவி எனப்படுவது உத்தியோகபூர்வ வழிகள் ஊடாகவும்䤠நிறுவனமயப்பட்ட ஓர் ஒழுங்கிற்ககு ஊடாகவும் இது வரையிலும் தமிழர்களிடம் கையளிக்கப் படவில்லை. இத்தாலிய தூதரகம் கிளிநொச்சிக்கு வந்து நிவாரணப் பொருட்களை நேரடியாக புலிகளிடம் கையளித்தது போன்ற சில உதிரிச்சம்பவங்களைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செயல் பூர்வமான நகர்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் அலெசான்றோ பியோ கூறுகிறார்; புலிகளின் கோரிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கான மீள் கட்டுமானத்துக்கு உரிய தேவை மதிப்பீட்டை இறுதியாக்க முடியும் என்று.
ஆனாலும் சுனாமிக்கு பிந்திய தமிழ் அரசியலையம் ஒப்பிடுமிடத்து ஒன்று தெளிவாகத் தெரியம் நிலைமையில் பரவகமூட்டும் மாற்றம் ஏதும் இல்லை என்பதே அது. கடந்த சில தினங்களாக இலங்கைக்கு வந்து போகும் தலைவர்கள்䤠இராஜதந்திரிகள் மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் யார் யார் என்பதையும் அவர்கள் எங்கெங்கு விஜயம் செய்கிறார்கள் என்பதையும்䤠யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையம் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். உலகம் தமிழர்களை எந்தளவு கோல்களால் அளக்கிறது என்பதே அது.
அண்மை நாட்களாக கொழும்புக்குவரும் உயர் தலைவர்கள்䤠முதன்னிலை பிரதானிகள் போன்றோர் வன்னிக்கு வருவதில்லை. அதே சமயம் உதவி வழங்கும் அமைப்புகளின் இரண்டாம் நிலை பிரதானிகள் அல்லது வெளிநாட்டு அமைச்சர்கள் போன்றோரே வன்னிக்கு வருகின்றார்கள்.
உதாரணமாக கொபிஅனான்䤠கொலிக் பவல் உலகவங்கியின் தலைவர் மற்றம் கனேடிய பிரதமர் போன்றோர் வன்னிக்கு வரவில்லை. அதுமட்டுமல்லாது அன்னை தெரோசாவின் தொண்டு நிறுவனத்தின் தலைவியாய் இருக்கும் ககோதரி நிர்மலா கூட வன்னிக்கு வராமலே போய்விட்டார்.
அதாவது சுனாமிக்கு முன் காணப்பட்ட அதே அரசியலின் நீட்சிதான் சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான அரசியலும் காணப்படுகிறது என்பதே. இப்படிப் பார்த்தால் தமிழர்கள் தமது சொந்த சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்கும் அதே சமயம் சுனாமியின் பெயரால் கொழும்பு உதவியைப் பெற்று வீங்கிவருகிறது. ஒருபுறம் தமிழர்களின் சேமிப்பு கரைகிறது. இன்னொரு புறம் கொழும்பின் சேமிப்பு பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே டச்நோய் வந்து விடுமோ என்று அஞ்சும் ஓர் நிலை.
இது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது காணப்பட்ட வலுச்சமநிலையை குழப்பக்கூடிய ஓர் அம்சம். இது இப்பயே போனால் தமிழர்கள் சமாதானத்தின் அநாதைகளாகி விரக்தியுற்று சமாதானத்தில் நம்பிக்கை இழந்தது போலவே சுனாமியின் அநாதைகளுமாகி உலக சமூகத்திடம் நம்பிக்கை இழக்கும் ஓர் நிலை விரைவில் தோன்றக்கூடும். இத்தகையதொரு பின்னணியில் முன்பு ரணிலின் காலத்தில் எப்படி மேற்கு நாடுகளின் பிடி கொழும்பில் ஒப்பீட்டளவில் அதிகரித்து காணப்பட்டதோ அவ்வாறான ஓர் நிலை இப்பொழுது சுனாமிக்கு பின்பு வளர்ச்சி அடைந்து வருவது போல தோன்றுகிறது. இப்படி சந்திரிகாவை தமது செல்வாக்கு வலயத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் வெற்றிபெறுமாயிருந்தால் அவரை சமாதானத்தை நோக்கி நிர்ப்பந்திக்க வேண்டிய பொறும்பும் அவர்களுக்கு உண்டு.
இதன்படி இப்பொழுது சுனாமி அரசியலின் கீழ் சமாதானம் செய்வது என்பது தமிழர்கள் சுனாமியின் அநாதைகள் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்வதிலிருந்துதான் அதாவது தழிழர்களுக்குரிய உதவிகள் உரிய வழிகள் ஊடாக உரியநேரத்தில் வழங்கப்படுவதில் இருந்தே தொடங்கப்பட வேண்டியிருக்கிறது.
Eelanaatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுனாமி அரசியலா? அரசியல் சுனாமியா?
அமெரிக்க மக்களை கிலிகொள்ள வைத்த செப்ரெம்பர்11 தாக்குதலுக்குப்பின் எப்படி உலக ஒழுங்கமைப்பில் 9-11 க்குமுன் 9-11 க்குப் பின் என்று நோக்கப்பட்டதோ அதேபோல் தென்னாசியாவில் ஏற்பட்ட நிலநிடுக்க ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குப்பின் ஏற்ப்பட்ட நிகழ்வுகளை சுனனாமிக்குமுன் சுனாமிக்குபின் என ஆய்வாளார்கள் நோக்குகிறார்கள்.
உலகின் பல்வேறுநாடுகளிலும் ஏற்ப்பட்ட பிரச்சினைகளை தனது இராணுவ பொருளாதார நலன் களுக்காக தமக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி தூபம் போட்டு வளர்த்து வந்த வல்லரசு நாடுகள் 9-11 க்கு பின் 'தன் வினை தன்னைச்சுடும்" என்பதை உணர்ந்து தமது 'இராஜதந்திரங்களை' மாற்றிக்கொண்டதுடன் தமது கதவுகளையும் இறுக சாத்திக்கொண்டது.
அதன் விளைவாக தாம் 'பயங்கரவாதிகள்' என கருதும் எவருக்கெதிராகவும் சட்டவரப்பற்ற நடவடிக்கை எடுப்பது ஏனைய உலக அரசாங்களுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரை விஸ்த்தரிப்பது
எதிர்காலத்தில் தமக்கு சவாலாக வரக்கூடியவர்களை கண்காணிப்பது போன்ற நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டன செயற்படுத்தப்பட்டன.
இதனால் உண்மையாகவே விடுதலை வேண்டி நீண்டகாலமாக போராடிவரும் சில விடுதலை அமைப்புக்கள் பாதிக்கப்பட்டதும் இந்த வல்லரசுகளின் மறைமுக கண்காணிப்பு நாடுகளினது உதவியுடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.சில நாடுகளில் உள்நாட்டு ஆயுதப்போராட்டங்கள் மூலமே தமது கால்களை பதிக்கலாம் என கனவுகண்ட வல்லரசுகள் பின்னர் அப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தில் சமாதான தரகர்களையும் சர்வதேச ஊடகங்களையும் யன்படுத்தினாலும் தற்காலிகமாகவே தமது |கனவை| மறந்திருந்தன.இப்போ அங்கே ஏற்பட்ட சுனாமி தென்னாசியாவின் கதவுகளை அகலதிறந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் சில உபத்திரவங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
இலங்கைத்தீவை பொறுத்தவரை சுனாமி அரசியல் ஐ.நா செயலாலரின் இலங்கை விஜயம் ஜேவிபியின் யாழ் விஜயம் நிவாரணபங்கீட்டில் பாரபட்சம் இராணுவம் வலிந்து அகதிகள் முகாமின் நிர்வாகத்தை எடுக்க முனைந்தமை என்பவற்றில் வெளிப்பட்டது.சுனாமி அரசியல் மூலம் பயன்பெற நினைத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் இப்போ ஒரு அரசியல் சுனாமியையே இப்பிராந்தியத்திற்கு வரவழைத்திருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தரையிறக்கத்துடன் ஆரம்பமாகியுள்ள இவ் அரசியல் சுனாமி முழுத்தீவின் இறைமைக்கே கேள்விக்குறியாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம்| பண்ணும் இந்தியா இந்த விடயத்தில் தாமதமாகவே தன்னை சுதாகரித்துக்கொண்டு சீனாவுடன் தனது உறவுகளை பலப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது.ஆனால் எதுபற்றியும் கவலைப்படாத இலங்கை ஆட்சியாளர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்| என்ற மனப்போக்கில் நாட்டை அடகுவைக்க எந்த வல்லரசுடனும் பேரம் பேசவும் தயார் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்படுகிறார்கள்.
சிங்களதேசம் இதுகுறித்து சிறிதும் வெட்கம் கொள்வதற்கு மாறாக இந்த அரசியல் சுனாமியால் எப்படி தமிழர் தேசத்தின் கோரிக்கையை முற்றாக மூழ்கடிப்பது என்பதிலேயே முனைப்பாக உள்ளது.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த அரசியல் சுனாமிபற்றி விழிப்புடன் இருப்பதும் நமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமைக்கு பங்கம் நேர்ந்து விடாது பார்த்துக்கொள்வதும் எமது தலையாய கடமையாகும்.
தமிழத் தேசியம் மக்கள் போராட்டம் உலகத்தமிழர் ஆதரவு என்பவை முன் எப்போதும் இல்லாதவாறு தமது பலத்தை வெளிப்படுத்தி எமது இனத்தின் கவசமாக உள்ளவர்களின் கவசமாக செயற்படவேண்டிய மிகமுக்கிய தருணம் இது. செயற்படுவோம்..!
- மு.விஜயராகவன் (இலண்டன்)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரிட்டிஷ் உயரதிகாரியிடம் தமிழ்க்கூட்டமைப்பு வேண்டுகோள்
கடற்கோள் அனர்த்தத்தால் மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் புனரமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தனியான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் மூலமே அரசின் மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியுமென்றும் எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகொள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியான சைமன் பொன்டை நேற்று செவ்வாய்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பிரிடிட்ஷ் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெரிவிக்கையில் கூறியதாவது:-
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றுக்கான சகல அலுவலகங்களும் மத்தியிலேயே தான் அமைக்கப்பட்டுள்ளன.
மிக மோசமான இழப்புக்களை எதிர்கொண்ட தமிழ்ப்பிரதேசங்களின் மக்களினது அல்லது அங்குள்ள பிரதிநிதிகளினதோ பங்களிப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களினால் பெறப்படவில்லை. இதுவோர் பாரபட்சமான தன்னிச்சையான நடவடிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பங்கு கடற்கரைப் பிரதேசம் வடக்கு.கிழக்கிலேயே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
வடக்கு,கிழக்கில் அரச இயந்திரம் முழுமையாக செயற்பட முடியாத நிலையே உள்ளது. எனவே, வடக்கு,கிழக்குக்கு தனியான கட்டமைப்பைபொன்று உருவாக்கப்பட்டு அதற்கூடாக புனரமைப்பு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில், தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரச தரப்பினர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை தொடர்ந்தும் புறக்கணித்த வண்ணமேயுள்ளனர்.
கடற்கோள் அனர்த்தம் அரசுக்கு நல்லதோர் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய புனரமைப்பு நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்றும் தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வெறும் வாயை மெல்லும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள்
9/10 ஜப் போலவே 12/26 உம் வரலாற்று புகழ்பெற்ற திகதியாக மாறிவிட்டிருக்கிறது. அன்றைக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் மனித அவலங்களை சுனாமி அரங்கேற்றியது. சிறிலங்காவின் தென் பகுதிகளும் தமிழீழத்தின் கிழக்குக் கரையும் அதற்குத் தப்பவில்லை. 30000 உறுதிப்படுத்தப்பட்ட சாவுகள், காணாமல் போனவர்களின் கணக்கையும் சேர்ந்து 6000 ஆக அதிகரிக்கும் ஏது நிலை காணப்படுகிறது. 'பொருண்மிய சுனாமி" அடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த மனித பொருண்மிய அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய தென்னிலங்கை ஊடகங்கள் 26.12.2004 இல் இருந்து 04.01.2005 வரையான பத்து நாட்களும் நடந்து கொண்ட முறை நாகரிக சமூகத்தினர் வெட்கித்தலைகுனிய வேண்டிய விதத்திலேயே அமைந்தது.
வடக்குக் கிழக்கின் பொது மக்களது சேத வீகிதங்களை பெருமளில் இரட்டிப்பு செய்த இந்த ஊடகங்கள் தென்னிலங்கை சேதங்களையும் 28ஆம் திகதி வரை பெரிதாக வெளிவிடவில்லை. கொழும்பிலிருந்து 1500 பேருடன் புறப்பட்ட புகையிரதங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பலியாகியதைக் கூட வெளியிடாத இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சேதங்களை மட்டும் தங்கள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி 29ஆம் திகதியிலிருந்து வெளியிடத் தொடங்கின. இராணுவத்தின் இழப்புக்களை வெளியிட்ட அதே கையோடு புலிகளின் சேதங்கள் என்று அவை கூற விருபியவற்றை அல்லது ஆட்சிப் பீடத்தினர் 'கேட்க விரும்பிய"வற்றை அவை வெளியிட்டன.
இதற்கு அடியெடுத்து கொடுத்தவர் வேறுயாருமல்ல சந்திரிகாதான். புலிகளின் வளங்கள் பெரும்பாலும் சுனாமி கொண்டு போய்விட்டது. இனி அவர்கள் போருக்கு வரமாட்டார்கள் என்று கூறியவர் அவர்தான்.
அதையும் விட 28.12.2004 அரசு ஊடகங்களின் தலைவர்களுக்கென நடாத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதுமே சுனாமியினால் பாதிக்கப்பட்டதாகக் காட்டும் விதத்தில் செய்திகளை வெளியிடும் படியும் சிறிலங்காவைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் இழப்புகளை பூதாகாரமாக்கி காட்டும் படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. (ஆதாரம் சண்டேலீடர் 02.01.2005 post Shots)
அரச ஊடகங்கள் மட்டுமல்லாது ஏனைய தென்னிலங்கைப் பத்திரிகைகளும் இதையே வேத வாக்காக கொண்டுவிட்டதுபோல் நடந்து கொண்டன. 29.11.2004 க்கும் பின்பு ஆயுதப் படைகளின் சேத விபரங்கள் வெளிவரவில்லை. இந்தப் பின்னணியில் புலிகள் பற்றிய செய்திகளை எப்படியான கோணத்தில் இந்தத் தென்னிலங்கைப் பேரினவாத ஆங்கில இதழ்கள் கையாண்டன என்று பார்ப்போம்.
02.01.2005 ஞாயிறு சண்டேலீடரில் பிறட்றிக்கா ஜான்ஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு.
'புலிகளின் பிரதேசங்கள் துடைத்தழிப்பு" என்பதாக அமைந்ததோடு முல்லைத்தீவில் இருந்த புலிகளின் முக்கிய முகாம் ஒன்று சுனாமியால் தகர்க்கப்பட்டது. அவர்களது நிலத்தடிக் காப்பரண்களும் கருவி கல நிலையங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்று கூறியிருந்தார். இதே கட்டுரையில் 5 அதிகாரிகள் மற்றும் 71 வீரர்கள் முப்படை,பொலிஸ் தரப்பில் பலியானதாகவும் எழுதியிருந்தார்.
02.01.2005 சண்டே ஜலண்டின் பாதுகாப்பு செய்தியாளர் ஒருபடி மேலே போய் முடமாக்கும் வகையிலான அடியை சுனாமி புலிகளுக்கு வழங்கியது என்று தலைப்பிட்டு கட்டுரை வரைந்திருந்தார். 200க்கும் மேற்பட்ட புலிகள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பிரமாண்டமான அளவில் புலிகளின் படைக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தலைவர் பிரபாகரனையும் விட்டுவைக்கவில்லை. என்றும் அவர் சுனாமிக்கு பலியானரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் (ஏக்கத்துடன்) குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் மீட்புப் பணியில் நின்றதாக கூறியிருந்தார். முதல் தடவையாக எமது தளபதிகளின் கேணல் நிலையை வழமை போல் 'கேணல்" என்று குறிப்பிடாமல் மேற்கோள் குறி இல்லாமல் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
இதே கட்டுரையில் புலிகளின் கடல்புலிப் பிரிவு (கிட்டத்தட்ட முழுமையாக) அழிக்கப்பட்டது என்றும் 100க்கு மேற்பட்ட சண்டைக் கலங்கள் மூழ்கிவிட்டன அல்லது பாரிய சேதத்திற்கு உள்ளாகிவிட்டன என்றும் கரையோரமாக இருந்த புலிகளின் தொலைத்தொடர்பு நிலையங்கள் கடற்புலித்தளங்கள், ரேடர் நிலையங்கள் ஆட்டிலறிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் ஒருபத்தியில் கூறியிருந்தார்.
பின்பு ஒரு பந்தியில் சாலைத்தளம் ஒப்பீட்டளவில் குறைந்த சேதம் அடைந்தது என்று கூறிகிறார்.
இன்னும் சில பந்திகள் கடந்ததும் முழுமையாக அழிக்கப்படாத தங்கள் படகுகளை தேட 'பெரும் எண்ணிக்கையிலான தங்கள் உறுப்பினர்களை கடற்புலிகள் ஈடுபடுத்தினர் என்று கூறுகிறார். 'கிட்டத்தட்ட முழுமையாக" அழிந்துவிட்ட கடற்புலிகளின் பிரிவில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் மீண்டதன் மர்மத்தை அந்த செய்தியாளரிடம் தான் கேட்கவேண்டும்.
02.01.2005 சண்டே ரைம்ஸ் பத்திரிகை சுனாமியின் போது பிரபாகரனும், சூசையும் கொல்லப்பட்டதாக கூறிவிட்டு அதை தாமே மறுப்பது போல் வதந்திகளை முறியடிக்கும் விதத்திலே பிரபாகரன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழில் ஒப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சூசை அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது. 'தமிழில் ஒப்பமிட்டு" என்பதை தடித்த எழுத்துக்களில் போட்டு ஏதோ அப்படி ஒப்பமிடுவது மகா பாவம் என்று காட்ட முனைந்திருக்கிறார்.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது அத்தாஷின் 02.01.2005 சண்டே ரைம்ஸ் கட்டுரையாகும்.
அவரது தலைப்பு இன்னும் சுவையானது:
'புலிகளை சுனாமி நொருக்கியதோடு போர் அச்சுறுத்தல் தணிகிறது" என்ற தலைப்பில் அவர் கட்டுரை வரைந்திருந்தார். அக்கட்டுரையிலே:
புலிகளின் படை இயந்திரம் சுனாமியால் மோசமான சேதமாகியிருக்கிறது.
கடற்புலிகளின் பிரதானமுகாமான சாலை மிக மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது
கரையோரம் இருந்த முகாம்கள் சிறு பிரிவுகள் இவ்வாறே சேதப்பட்டுள்ளன.
திங்கள் (27.12.2004) அளிவிலே புலிகளின் சண்டையிடும் உறுப்பினர்கள் 2100 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டே ரைம்ஸ்சுக்கு அறியக் கிடைத்தது.
யாழ்,நாகர்கோவில் பகுதிகளில் 250க்கு மேல் புலிகள் பலியாகியதாக கூறப்படுகிறது.
முல்லை, சாலை, நாயாறு அயற்பகுதிகளில் 1400க்கு மேற்பட்ட புலிகள் பலியாகினர்.
சம்பூர், கூனித்தீவு, கொக்குத்தொடுவாயில் அதிகளவில் பலி.
வெருகல், கதிரவெளி, வாகரை அயற்பகுதிகளில் 150 புலிகள் பலியானர்கள் என்று கூறப்படுகிறது. இத் தொகைகள் அதிகரிக்கலாமென்று தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன என்று அத்தாஷ் கூறியிருகிறார்.
இதேபோன்று 29.12.2004 ஜலண்ட இப்படிக் கூறியது.
புலிகளின் வள்ளங்களில் பெரும் பகுதியை சுனாமி அடித்துச் சென்றது"
ஞாயிறு கடல் பயங்கரம் பாதுகாப்புப்படையினரதும் சிறப்பாக கடற்படையினரதும் புலிகளுடைய வளங்களுக்கும் குறிப்பிடத்தக்களவு சேதம் விளைவித்துள்ளது என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலவற்றைத் தாக்கியழித்த சுனாமி புலிகளை மட்டும் தப்பவிட்டிருக்காது என்றும் அவர்களுடைய வளங்களில் அநேகமானவை கிழக்குக் கரையிலேயே இருந்தன. அவர்களுடைய நடவடிக்கை ரீதியான கலங்கள் சுனாமிக்குத் தாக்குப் பிடித்திருக்கமுடியாது அவற்றுள் அரைவாசியையாவது இழந்திருப்பார்கள் எனவும் படை அதிகாரிகள் தெரிவித்தனர் என செய்தி வெளியிட்டிருக்கும் இதே ஜலண்ட் பத்திரிகை புலிகளின் ஆட்லறி வான்பிரிவு தரைவழிப் படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறி தன்னைத் தானே மறுதலித்துக் கொண்டுள்ளது.
இந்தச் 'செய்தியாளர்"களுக்கும் 'ஆய்வாளர்"களுக்கும் பொதுவான ஒரு விடயமாக அவர்களுக்கு உண்மையான கள நிலைமைகள் தெரியாது என்பது இருக்கிறது. முன்பு 'லங்கா புவத்" இருந்தது. அதுகோயபல்சுக்கு பெரியப்பாமுறை, புலிகளின் தாக்குதலில் அல்லது இராணுவத்தின் நடவடிக்கையில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டால் (1இராணுவத்திற்கு 10 புலிகள் என்ற கணக்கில்) 100 புலிகள் கொல்லப்பட்டனர் என்று லங்காபுவத் கூறிவிடும். ஆகாசபுளுகர்களுக்கு லங்காபுவத் என்று தமிழ் மக்கள் பெயர் வைக்கும் அளவிற்கு லங்காபுவத் 'நம்பகத் தன்மை"யின் குறியீடாக இருந்தது.
லங்காபுவத்தையே தோற்கடிக்கும் அளவிற்கு தங்கள் மன விகாரங்களையும் படை அதிகாரிகள் 'தகவல் வட்டாரங்கள்" என்ற பெயரில் அனாமதேயமாகத்தரும் ஊடகக் குறிப்புக்களையும் வெளியிட்டு பொச்சம் தீர்த்துக்கொள்ளும் இந்த பத்திரிகைகள் ஒரு போதும் திருந்தப் போவதில்லை. சுனாமி வரப் போகும் தகவலை தருவதற்கு முழுமுயற்சி எடுக்காமல் இப்போது நிவாரண உதவிகளுடன் இத்தீவில் கால் வைக்க முயலும் மாகானுபாவர்களை கண்ணடிக்க வக்கில்லாமல் ஆதார மற்றசெய்திகளை வெளியிடுவதோடு பலசந்தர்ப்பங்களில் அவற்றோடு முரண்படம் செய்திகளையும் தாங்களே வெளியிடும் இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.
வின்சென்ற் புளோறன்ஸ் ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்ப்படவில்லை
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்ப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை குழுவின் செய்தியாளர் மகாநாட்டில் கருத்து வெளியிடும் போது அமைச்ர் கதிர்காமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்டுகின்றன ஆனால் இதுவரை இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாதடதிடப்படவில்லை என்றும் அவர் தெரவித்துள்ளார்.
தமது விருப்பு வெறுப்புகளை கைவிட்டு நாட்டு நலன் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் விருப்பமில்லாதவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஹரீம் பீரிஸ் எந்த ஒரு சர்வதேச உதவியும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக வழங்கப்படமாட்டாது விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் வேலைக்கான உடன்பாடு தொடர்பாகவே பேச்சுக்ள் நடத்தப்படுகின்ற என்றும் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத எந்த ஒரு அமைப்பின் ஊடாகவும் வெளிநாட்டு உதவிகள் கையாளப்பட முடியாது என்றும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு ஒரு பொழுதும் மாற்றமடையாது என்றும் ஹரிம் பீரிஸ் குறிப்பிட்டார்.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுனாமி அனர்த்த நேரத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழா நடத்தினார்.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.
வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.
'மானுடம் எழுதுகிறோம்" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?
வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.
அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது".
இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->சுனாமி அனர்த்த நேரத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழா நடத்தினார்.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.
வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.
'மானுடம் எழுதுகிறோம்\" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?
வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை\" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.
அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);\" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று\" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது\".
இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)
தினக்குரல்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll: :evil: :evil:
. .
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுருட்டும் முயற்சி....
வாய்ப்பைப் பயன்படுத்திச் சுருட்டிக் கொள்ளலாம் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு உதவ பல அரசுகள் முன்வந்துள்ள நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பெயரால் அதிகரித்த நிதியுத வியைப்பெற அரசாங்கம் முற்பட்டுள்ளதாக எண்ண வைக்கின்றது.
சுனாமி பாதிப்புக் குறித்து சிறிலங்கா அரசு போலியானதொரு மதிப்பீட்டு அறிக்கையையே வெளிப்படுத்த முற்பட்டுள்ளது என்பதை அரசாங்கத் தரப்புத் தகவல்களே அம்பலப்படுத்தி விடுபவையாக உள்ளன. எடுத்துக்காட்டாகää சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்கள் தொகை சுமார் 30ää000 ஆயிரம் பேர் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் ஒரு நாள் இரவில் இத்தொகை திடீரென 7000 பேரால் அதிகரித்திருந்தது. இதேபோன்றே அனர்த் தத்திற்கு உள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு முதலில் 15ää000 கோடி கோரிய அரசாங்கம் தற்பொழுது 35ää000 கோடி ரூபாய்களைக் கோருகின்றது.
அரசாங்கத்தின் இப்புள்ளி விபரங்களில் திடீரென ஏற்பட்ட மாற்றத்திற்கு உதவி வழங்குவோரிடம் இருந்து அதிகளவு நிதியுதவி களைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகும். அல்லாதுவிடில் ஒரு வீதி திருத்துவதற்கு ஆறு தடவைகள் நிதியுதவி கோரி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கமாட்டாது.
அதாவதுää சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம்ää சுனாமி அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்துவிடலாம் எனத் திட்டமிடுவது போல் தெரிகின்றது. ஏற்கனவேää சுனாமி அனர்த்தத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளால் ஏற்கனவே உருவாகியிருந்த தீவிர நெருக்கடியிலிருந்து அரசாங்கம் சற்று விடுதலை - அதாவது அரசின் மீதான நெருக்கடி சற்றுத் தளர்வடைந்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில்தான்ää முற்றாக நெருக்கடியில் இருந்து விடுபடும் நோக்கில் இழப்பீடு தொடர்பான மதிப்பீட்டில் அதிகரிப்புச் செய்ய சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனைக் குழு தீர்மானித்திருத்தல் வேண்டும். ஆனால்ää இது சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில்ää சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளும்ää நிதி அமைப்புக்களும் தமது மதிப்பீடு எதுவும் இன்றி நிதி உதவிகளை வாரி வழங்கிவிடப் போவதில்லை. உதவி வழங்குவோர் வாரி வழங்கினும்கூட அவற்றின் பயன்பாடு குறித்தும் அவதானம் செலுத்தாமல் இருக்கப்போவதில்லை.
இது ஒருபுறம் இருக்கத் தற்பொழுது அரசாங்கம் புனர்நிர்மாணப் பணிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் இணைத்துக் கொள்வதற்குமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச நிதியுதவியில் அரசு கொண்டுள்ள அக்கறை இதன் மூலம் வெளிப்படும்.
அதாவதுää வெளிநாட்டு அரசுகளும் சரிää அரச சார்பற்ற நிதி நிறுவனங்களும் சரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்திருப்பினும் அவை வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள அழிவிற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது தமது நிதியுதவி சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அவை கோருபவையாக உள்ளன. இவை நிதி உதவிக்கான நிபந்தனையாக இல்லாது போனாலும் அழுத்தம் கொடுக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலை நிலவுகையில் தான்ää பெரும் நிதி எதிர்பார்க்கைகளுடன் கூடிய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளையும் நிவாரணப் பணிகளில் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுவதாகவுள்ளது. இவ்வாறு சந்தேகிப்பதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஏனெனில்ää அரசாங்கம் நிவாரணப் பணிகளில் புலிகளை இணைப்பது பற்றிப் பேசுகையில் ஆயுதப் படைத்தரப்போ நிவாரணப் பணிகளில் கெடிபிடிகளை அதிகரித்துள்ளது. குறிப்பாகää அம்பாறை மாவட்டத்தில் அதிரடிப்படையினரின் அடாவடித்தனம் அதிகரிக் கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும்.
இந்நிலையில்ää நிவாரணப் பணி விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்த செயற்பாடு குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானதே. ஏனெனில் வெளிநாட்டு நிவாரண நிதி மூலம் அரசாங்கம் தனது நோக்கத்தை நிறைவு செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது.
நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்விடுதலைப்புலிகள் கோரிக்கை
கொழும்பு, ஜன. 28- ஈழத்தமிழர் பகுதியிலும் இந்தியா நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா உள்பட பலநாடுகள் உதவி வருகின்றன. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும்தான் அந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் ஆளுகையில் உள்ள பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதிலும் அங்கு எந்த ஒருநாடும் உதவி முன்வரவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது„-
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் செய்யும் இந்தியா வடக்குப் பக்கமும் தனது கனிவான பார்வையை திருப்பவேண்டும். தெற்கிலும் கிழக்கிலும் மட்டும் உதவி செய்து கொண்டு இருக்கவேண்டாம். துயரப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா கருணை காட்ட வேண்டும். உதவிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த நாங்கள் தடுக்கவில்லை. அரசு பிரதிநிதிகளுடன் இணைந்தே பணி செய்திருக்கிறேhம். இதற்காக அரசு உதவியை வரவேற்கிறேhம். தொழில்நுட்ப உதவியும் எங்களுக்கு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக அவதிப்படும் எங்களுக்கு இந்த பேரழிவு மேலும் துயரத்தை இழைத்துவிட்டது. தமிழ்நாட்டின் மீது இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. எங்கள் பகுதிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா பிரதமரையும் வரவிடாமல் இலங்கை அரசு தடுத்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் பல உலகத்தலைவர்கள் இங்கு வர விருப்பம் தொpவித்தபோதிலும் இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு அணுகவில்லை. இவ்வாறு கூறினார்.
புலிகளுடன் அரசு உடன்பாடில்லை
இலங்கையில் சுனாமியால் பாதித்த மக்களுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிவாரண உதவிகளை மக்களுக்கு பங்கிட்டு தர இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயல்படும் வகையில் பொதுவான ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க யோசனை தொpவி;க்கப்பட்டது. இதை புலிகள் தலைவர் பிரபாகரன் வரவேற்றhர். இப்போது இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை மந்திhp லஷ்மண் கதிர்காமர் கூறியது வருமாறு„-
பொது அமைப்பு குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் தீவிரமாக பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எமது மக்களுக்கு உதவி கிட்டுவதற்காக இலங்கை அரசுடன் பேசிவருகின்றோம்
முல்லைத்தீவு நலன்புரி நிலையத்தில் பாலசிங்கம் தெரிவிப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக் கென உலகின் அனுதாபத்தால் கிடைத்த நிதிகள் எம் மக்களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண் டும்.அதற்காக இலங்கை அரசுடன் ஒருமட்டத் தில் புலிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள சமா தான செயலகங்கள் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற் றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அவர் இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் திரு மதி அடேல் பாலசிங்கமும் உடன் வந்திருந்தார்.
வடமராட்சி கிழக்கில் ஆழியவளையில் இருந்து பாலசிங்கம் தம்பதியரை கடற்புலிகளின் படகில் ஏற்றிச்சென்ற தளபதி சூசை பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை கடலில் இருந்தவாறு அவர்களுக்குக் காண்பித்தார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையும் பாலசிங்கம் தம்பதியர் நேரில்சந் தித்து ஆறுதல் கூறினர். முள்ளியவளை வித்தியா னந்தாக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் உரையாற்றும் போதே பால சிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
ஈழத்தமிழ் மக்களையும் உலகில் வாழும் தமிழ்மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய துயரச் சம்பவம் ஆழிப்பேரலை அனர்த்தம். இப்படியான பேரழிவுகள் 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக் கின்றன என வரலாறுகள் கூறுகின்றன.
ஆனால், சமீப காலத்தில் இப்படியான பெரிய அனர்த்தம் எதுவும் - தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தில்லை. எமது மக்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழினத்துக்கே பெரும் அதிர்ச்சியை இது கொடுத் துள்ளது.
அனர்த்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழி வின் ஆழமான பரிமாணங்களை எல்லாம் நாம் அறிவோம். அதன் தாற்பரியத்தை வார்த்தை களால் கூறமுடியாது. ஆறுதல்கூடச் சொல்லமுடி யாத அளவுக்கு இந்தத் துயரம் உங்களை அழுத் தும் என்பது எங்களுக்குத் தெரியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழ் மக் கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறவே இங்கு வந்தேன்.
தலைவரின் அழைப்பின்பேரில் நான் இங்கு
வந்தேன். இலங்கை அரசு எமது மக்களுக்கு உதவி செய்வதில் என்னென்ன தடைகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதை அறிந்து அதனைச் சர்வதேசத்துக் குத் தெரியப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.
நோர்வேயின் முக்கிய அமைச்சர்கள் இங்கு வந்து தலைவரைச் சந்தித்தபோது நானும் உட னிருந்தேன். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துவிளக்கி எமது பகுதிகளை மீளக் கட்டி யயழுப்ப உலக நாடுகளின் உதவி தேவை என நாம் வலியுறுத்தினோம்.
இப்போது தலைவரின் பிரதிநிதியாக உங் களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். இரு தினங்கள் தலைவருடன் பேசினேன். அவரின் ஆழமான உணர்வலைகளை என்னால் புரிய முடிந்தது.சகல இராணுவ , அரசியல் நடவடிக் கைகளையும் ஒத்திவைத்துவிட்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப் பதற்காக முழுப் புலிகள் இயக்கத்தையும் அதனோ டிணைந்த சகல அமைப்புகளையும் இந்தப் பணி யில் அவர் இறக்கியுள்ளார்.
மக்களைக் காப்பாற்றவும் அவசர உதவிக ளைச் செய்யவும் எமது கடற்புலிகள், அரசியற் பிரிவு உட்பட அனைத்துப் படையணிகளும் தமி ழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட சகல பிரிவுகளும் தலைவரால் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள் ளன. எமது விடுதலை இயக்கமே உங்களுக் குப் பேருதவி செய்து வருகின்றது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசுடனும் பேச்சுக்களை நடத்தி உலகத் தலைவர்களை இங்கு அழைத்து அவர்களுடன் கலந்தாலோ சித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை வளம் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க எமது தலைமை முழு முயற்சிகளையும் செய்துவரு கின்றது. இந்தத் தகவலை உங்களுக்குச் சொல் லத்தான் இங்கு வந்திருக்கின்றேன்.
இந்தப் பாடசாலையில் - அகதி முகாமில் - நீங் கள் வாழ்க்கையைத் தொடர நாங்கள் அனும திக்கப் போவதில்லை.
வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உங்களை உங் கள் சொந்தக் காணியில் குடியமர்த்தவும் மீண் டும் தொழில்வாய்ப்பை உங்களுக்கு உருவாக் கித்தரவும் பெரியளவிலான புனர்நிர்மானத் திட்டத்துடன் எமது இயக்கம் முழுமையாக - முழு மூச்சுடன் - பணியாற்றி வருகின்றது என்ற செய் தியை உங்களுக்குச் சொல்லத்தான் வந்திருக் கின்றேன்.
இதற்காக கொழும்பு அரசுடனும் நாங்கள் ஒருமட்டத்தில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின் றோம். வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஏராளமான உதவிகளை நிதி உதவியோடு நிவாரணப் பொருள்களையும் வழங்கிக்கொண் டிருக்கிறார்கள். அந்தப் பொருள்கள் இங்கு வந்த டைந்ததும் எமது இயக்கத்தின் உப அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன் றவை உங்க ளுக்கு அவற்றை வழங்கிக்கொண்டிருக்கின் றன.
அவசர கால உணவு, உடை மற்றும் மருந்து போன்ற அவசர உதவிகள் உங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், இது ஆரம்பகால உதவி கள் மட்டுமே. இதை வைத்து கொண்டு வாழ்க் கையை நடத்த முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.
எனவே, புதிய வீடுகளை அமைப்பதற்கும் மீளமைப்பைத் துரிதப்படுத்தி அகதி முகாமில் இருந்து மக்களை அவர்களது சொந்த இடத் திற்கு திரும்பிச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உலக நாடுகள் பெருமளவான உதவிகளைச் செய்ய வாக்களித்துள்ளன. ஆனால், இந்த உதவி கள் இலங்கை அரசு ஊடாகத்தான் வரவேண்டி யிருக்கின்றது. ஓர் அரசு என்ற ரீதியில் வெளி நாடுகள் உடனடியாக தமது உதவிகளை அர சுக்கே கொடுக்கும்.
இந்த அரசு உதவி நிதியை எடுத்து எமது மக் களுக்கு அதனை சரிவர பங்கிடுமோ என்பதில் எமக்கு சந்தேகம் என்று நாங்கள் கூறுகின் றோம்.
சிங்கள அரசு சுனாமி அனர்த்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதி உதவியை வேறு வழிகளில் தனது அரசைப் பலப்படுத்தவும், தனது இராணுவ இயந்திரத் தைப் பலப்படுத்தவும், தமது அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அரசு செயற்படுகிறது.
நாங்கள் உலகநாடுகளிடம் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளோம்.
வடக்கு - கிழக்கில் தான் பெரியளவில் அழிவு ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கின் கரையோ ரப் பிரதேசந்தான் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்தான் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மீனவச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வந்திருக்கின்றது. இராணுவம், கடற்படையின் ஒடுக்குமுறை காரணமாக எமது மீனவச் சமூகம் நீண்ட காலமாகப் பெரும் துன்ப, துயரங்களை அனுபவித்துள்ளது. சுமைகளோடு வாழ்ந்தது அந்த நிலையில் இப்போது ஆழிப்பேரலை அனர்த் தம் ஏற்பட்டுள்ளது.
மீனவச் சமூகத்தின் துன்ப வரலாறு ஆழிப் பேரலையுடன் வந்ததல்ல. தலைவர் சொல்லி யிருக்கிறார் முதலாவது ஆழிப்பேரலை இராணு வத்தால் ஏற்பட்டது என்று. இராணுவம், கடற்படை ஆகியவற்றின் கொடுமையால் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் தமிழீழத்தில் கொல் லப்பட்டனர். மீனவத் தொழில்துறை பாதிக்கப் பட்டது. மீனவ மக்கள் சமாதானச் சூழலில் தமது வாழ்வை மீளக் கட்டியமைக்க முயன்றபோது இயற்கையின் அனர்த்தத்தால் இப்போது மீண் டும் ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் இரண்டாவது ஆழிப் பேரலை என்று தலைவர் சொல்கிறார்.
நீண்டகாலமாகத் துன்பப்படும் இந்த மக்க ளுக்கு நிரந்தரமான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உலக நாடு களிடம் கோருகின்றோம்.
போராட்டம் என்ற வகையில் அரசியல் உரி மைக்காகப் போராடுவது வேறு. இது மக்களின் பொருளாதார வளத்துக்கான போராட்டம். இதில் நாங்கள் சிறிலங்கா அரசுடன் பேசி, அரசுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பெருந்தொகை வெளி நாட்டு நிதியுதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கும் வந்து சேரும் வழிகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவ தற்குப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின் றோம். பேச்சு ஒருமட்டத்தில் நடக்கின்றது. கொழும் பில் இருக்கும் சமாதானச் செயலகத்துக்கும் கிளி நொச்சியில் இருக்கும் சமாதானச் செயலகத்துக் கும் மத்தியில் பேச்சுக்கள் நடக்கின்றன.
நிவாரண உதவிகளை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதற்கு இருதரப்பும் இணைக்கப்பாடு கண்டு ஒரு கட்ட மைப்பை உருவாக்குவதற்காகத் தான் பேச்சு நடக்கின்றது. இதிலும் எங்களுக்குச் சில சிக்கல் கள் இருக்கின்றன.
சந்திரிகா அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தக் கட்டமைப்பைக் கொண்டுவருவது பிரச்சினைக் குரியது. தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற் காக சந்திரிகா அம்மையார் அனர்த்தம் நிகழ்ந்த - பேரழிவு- சூழ்நிலையிலும் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள யோசிக்கிறார்.
ஆனால், தலைவர் பிரபாகரன் நோர்வே அமைச்சரிடம் கூறினார், இந்த நிதியுதவி எவை யும் எமது அமைப்பு ஊடாக வரத்தேவையில்லை. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாவது உதவிகளைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு அந்தப் பணத்தை நேரடியாகக் கொடுத்து, அந் தத் திட்டங்களை நீங்களே நின்று செய்து மக்க ளின் வாழ்வை வளம்படுத்தினால் போதும் - என்று
விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி வரவேண் டும் என்று நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. உல கத்தின் அனுதாபத்தால் வந்த நிதிகள் எமது மக் களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது இயக்கத்தின் நிலைப்பாடு.
உங்கள் துயரமான மனநிலை எங்களுக்குப் புரிகின்றது. உங்கள் ஆழமான உணர்வலை கள் எங்களுக்குப் புரிகின்றன. கடலை, சமுத்திரத் தைத் திட்டிப் பயன் இல்லை. எந்தநேரமும் கடல் அமைதியாகத் தான் இருக்கின்றது. சூறாவளி ஏற்படும்போது கொந்தளிக்கும். இது கடற்றொழி லாளர் சகலருக்கும் தெரியும்.
கடலுக்குக் கீழ் பெரிய பூகம்பம் ஏற்பட்டுத் தான் அனர்த்தம் நிகழ்ந்தது - என்றார் பால சிங்கம்.
Jaffna Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சந்திரிகா எந்த வழியால் போகிறார்? - நிலாந்தன்
நீ எதையாவது புதிதாக உருவாக்க விரும்பினால் முதலில் ஏற்கனவே இருப்பதை அழித்துவிட வேண்டும் என்று ஜேர்மனிய தத்துவஞானியான நீட்N~ ஒரு முறை கூறியிருந்தார். இது இலங்கைத்தீவின் இப்போதுள்ள நிலைக்கு மிகப்பொருத்தமான ஒரு கூற்றகத்தெரிகிறது.
குறிப்பாக தென்னிலிங்கையின் கடலோரங்களை மீளவடிவமைக்கும் விடயத்தில் அரசாங்கம் முன்பு செய்யமுடியாதிருந்த ஒரு விடயத்தை சுனாமி செய்திருக்கிறது. என்றே செல்லவேண்டும். மேற்படி கடலோரக்கட்டுமானங்கள் பல சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மீள வடிவமைக்கப்படாதவைகளாய் இருந்தவை என்றும் அவற்றை சுனாமியின் பெயரால் இப்பொழுது புதிதாக கட்டியெழுப்ப ஒரு வாய்புக்கிடைத்திருக்கிறது என்று துறைசார் நிபுனர்கள் கூறுகிறார்கள்.
17ம் நூற்றாண்டில் லண்டன் மாநகரை சாம்பலக்கிய நெருப்பு எப்படி இப்போதுள்ள லண்டன் மாநகரை புதிதாக வடிவமைக்க உதவியதோ அப்படித்தான் இதுவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ?லண்டன் நெருப்பு? அப்போதிருந்த பழைய மரக்கட்டடங்களை எரித்தழித்துவிட்டது. இது பின்பு புதிய லண்டன் மாநகரை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்பைவழங்கியது.
இலங்கைத்தீவிலும் இப்படித்தான் சுனாமி ஆழிவின் பின் அசேநகமான கடலோரக் குடியிருப்புக்களையும் நகரங்கள் பட்டினங்களையும் புதிதாய் வடிவமைக்க ஒரு சந்தர்ப்பம்கிடைத்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு காசிலேயே இதைச்செய்யக் கிடைத்திருப்பது என்பது ஒரு கூடுதல் அனுகூலம்தான்.
ஆசியாவின் சுனாமி எனப்படுவது எமது காலத்தில் நிகழ்ந்த மெய்யான பூகோல அனர்த்தம் என்று அழைக்கப்படுவதாக ஆர்தர்.சி.கிளாக் கூறுகிறார். சுனாமியின் வருகை பற்றிய தகவல்களை பரிமாறும் விடயத்தில் தகவல் யுகம் அல்லது பூகோள கிராமம் போன்ற படிமங்களை சு10ழ்திருந்த மாயைகள் பெருமளவுக்கு கலைந்துபோய் விட்ட போதிலும் கூட சுனாமிக்கு பிந்திய தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை உலகளாவிய தகவல்வலையமைப்பு மிகப்பெரியதொரு தொண்டை செய்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
சுனாமி அமிவின் புகைப்படங்கள் உலகமெலாம் பரவப்பரவ வந்துகுவியும் நிதியம் பூகோளமயப்பட்டதாக மாறலாயிற்று. ஆனால் இந்த நிதியை கையாள்வதற்குரிய நம்பகத் தன்மை மிக்கதும் எல்லாத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமாகிய ஒரு நிர்வாக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் இலங்கைத்தீவில் இப்பந்தி எழுதப்படும் நாள் வரையில் வெற்றிபெற்றிருப்பதாக தெரியவரவில்லை.
ஆனால் அதேசமயம் அரசாங்கம் தெற்கில் தனது சுனாமி அரசியலின் ஓர் அங்கமாக புதிய கடலோர குடியிருப்புக்களை வடிவமைக்கும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறது. இதற்காக தெரிவுசெய்யப்பட்ட மாவட்டம் எது என்பதிலும் சந்திரிகாவின் அரசியல் இருக்கிறது. அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்~வின் கோடடைக்குள் வருகிறது. அதேசமயம் அது ஜே.வி.பியின் கோட்டையும் கூட. எனவே அம்hபாந்தோட்டையைத்தெரிவு செய்ததன் மூலம் சந்திரிகா ராஜபக்~வையும் ஜே.வி.பியையும் ஒதுக்க முயற்சிக்கிறாரா?
சுனாமியால் அவருக்கு கிடைத்த பெரிய ஆதாயங்களில் ஒன்று ஜே.வி.பியைக் கையாள்வதில் அவருக்கிருந்த பலதடைகளை சுனாமி அள்ளிக்கொண்டு போய்விட்டது. சுனாமிக்குப் பிந்திய ஸ்ரீலங்கா அரசியல் எனப்படுவது முன்னெப்போதும் காணப்பட்டிராத ஒரு நூதனமான கலவையாக மாறிவருகிறது.
ஒருபுறம் சந்திரிகா ஜே.வி.பியுடன் கூட்டுச்சேர்ந்திருக்கிறார். இன்னொருபுறம் அமெரிக்கத் துருப்புக்கள் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இதுதவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இது தவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டில் உண்டு. அது ஒன்றைக்காட்டுகிறது. சுனாமிக்கு பிந்திய இலங்கைத்தீவின் அரசியலானது தற்கமயம் நிலவும் உலக ஒழுங்கை அதிகம் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவருகிறது. இதில் ஜே.வி.பி தான் ஒரு இடறல். ஆனால் அதுவும் பெருமளவுக்கு தணிந்து காணப்படுகிறது.
இப்படி பார்த்தால் முன்பு ரணில் விட்ட இடத்துக்கு சிட்டவாக சந்திரிகா வந்து கொண்டிருக்கிறார் எனலாமா? சிhதானத்தை கையாள்வதில் தான் அவருக்கும் ரணிலுக்கும் இடையில் சிலவேறுபாடுகள் உண்டு. மற்றும்படி பொருளாதார அர்த்தில் முழுக்கமுழுக்க ரணிலின் அலைவரிசையிலேயே சந்திரிகாவும் சிந்திக்கவேண்டிய ஒரு அரசியல் சு10ழலை சுனாமி கொண்டுவந்திருக்கிறது.
?ஸ்ரீலங்காவை மீளக்கட்டியெழுப்புவது? என்ற அரசாங்கத்தின் திட்டம் கிட்டத்தட்ட முன்பு ரணில் வைத்திருந்த ?ஸ்ரீலங்காவை மீட்பது? என்ற திட்டத்தின் சாயலை உடையதாகவே காணப்படுகிறது.
கடலோரங்களை மீளக்கட்டியெழுப்பும் விடயத்தில் சந்திரிகா முன்பு ரணில் விட்ட இடத்திலிருந்தா தொடங்கப்போகிறார்? என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதபடி எழுகிறது. ஏனெனில் மீளக்ககட்டியெழுப்புவதலுக்கான நிபுனத்துவ ஆலோசனைகளை நிதியுதவிகளை பெருமளவுக்கு மேற்கு நாடுகளே செய்ய முன்வந்துள்ளன. ஒன்றில் மேற்கு நாடுகள் நேரடியாகவோ அல்லது அவற்றின் ஆசிர்வாதத்துடன் உதவி வழங்கும் நிறுவனங்களோ தான் இந்த மீளக்ட்டியெழுப்பும் திட்டங்களின் பின்னால் இருப்பது தெரிகிறது. ஆயின் சந்திரிகா ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற நிகழ்ச்சித்திட்டத்தை திருடப்போகிறாரா?
இதனை இன்னும் சரியாக விளங்கிக்கொள்வதென்றால் முதலில் ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற திட்டத்தை சுருக்கமாக விளங்கிக் கொள்வது உதவியாயிருக்கும்.
முன்பு தனது பதவிக்காலத்தில் ரணில் முன்வைத்த இத்திட்டத்தின் படி சிங்களப் பகுதிகளிலுள்ள உட்கட்டுமானக் கட்டமைப்புகள் யாவும் பெருமெடுப்பில் மீளுருவாக்கம் செய்யப்படும். இது ஏழைகளுக்கு உதவும் திட்டம் என்று ரணில் சொல்லிவந்தார். ஆனால் அது உண்மையல்ல. உண்மைநிலை என்னவெனில் அது முதலீட்டாளர்களுக்கு உதவும் ஒரு திட்டமே. அத்திட்டத்தின் படி ஸ்ரீலங்காவின் உட்கட்டுமானங்கள் யாவும் புரட்சிகரமாக மாற்றப்படுவதன் மூலம் ஸ்ரீலங்காவை முதலீட்டாளர்களை கவரவல்ல ஒரு நாடாக மாற்றுவதே ரணில்䤠மொறகொட அரசின் இறுதி இலக்காய் இருந்தது.
ஒருபுறம் யுத்தமற்ற சு10ழலை பேணிக்கொண்டு இன்னொருபுறம் தென்னிலங்கையை முதலீட்டாளர்களின் கவர்சிக்கன்னியாக மாற்றும் மேற்படிதிட்டத்தை சிறிது கொச்சை வழக்கில் சொன்னால்? ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக தன்னை எப்பnயெல்லாம் அலங்கரித்து அழகுபடுத்திக்கொள்வாரோ அப்படித்தான் இதுவும் எனலாம்.
இப்பொழுது சந்திரிகாவும் அதேதிட்டத்தின் மாற்றொரு நகலையே கரையோரங்களில் பிரயோகிக்கப்போகிறார் போலதோன்றுகிறது.
உதவிவழங்கும் பன்னாட்டு நிறுவனங்கின் ஆலோசனைப்படி அவர் வடிவமைக்கப்போகும் கடலோரங்கள் நிச்சயமாக முதலீட்டாளர்களின் உல்லாசப் பயணிகளின் ருசி䤠ரசனை என்பவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப்படும் ஏது நிலைகளே அதிகம் தென்படுகின்றன.
கடந்த வாரம் ஜெனீவாவில் ஸ்ரீலங்காவின் நிதியமைச்சரை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை சொல்லியிருக்கிறார்கள். அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாவும் இது தொடர்பாக ஐ.எம்.எவ் இன் நிகழ்ச்த்திட்டம் ஏதும் இல்லை என்றால் சுனாமியின் பின் கவர்சியாக அறிவிக்கப்பட்டது போல கடன்களை தாமதமாகச் செலுத்தலாம் என்ற சலுகையில் கையெழுத்திடும் நிலையில் தான் இல்லை என்று அமெரிக்கா கூறுகிறதாம்.
ஐ.எம்.எவ் இன் நிகழ்சித்திட்டம் என்று அவர்கள் எதைக்கருதுகிறார்கள் என்பது தெளிவில்லை. ஆனால் அது அநேகமாக மீள் கட்டமைப்பு பணிகளை உதவி வழங்கும் நிறுவனங்களின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கே இட்டுச் செல்லமுடியும் என்று ஊகிக்கத்தக்கதாகத்தான் மேற்படி நிறுவனங்களின் கடந்த கால செயற்பாடுகள் காணப்படுகின்றன.
2000 ஆம் ஆண்டில் சந்திரிகா அரசாங்கம் உலக வங்கியுடன் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையின் படி 20 பொதுசன நிறுவனங்களை மீளுருவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிர்ப்புக்காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆயால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிப்புக் காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தமுடியவிலலை. ஆனால் இப்பொழுது சுனாமி அரசியலில் சந்திர்கா அதிகம் அதிகம் விட்டுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார். சுனாமிக்கு முன்பு ஜே.வி.பியிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களையிட்டு அவர் தயங்கினார். ஆனால் சுனாமி வந்து அவருடைய வழிகளை இலவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்தவாரம் கிடைத்த தகவல்களின் படி இலங்கை மின்சாரசபை䤠பெற்றோலியக் கூட்டுத்தாபனம்䤠தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை போன்றவை உதவி வழங்கும் நிறுவனங்களின் கைகளில் கொடுக்கப்படும் ஏது நிலைகள் தென்படுகின்றன.
எனவே சுனாமி அரசியலின் கீழ் சந்திரிகா சுனாமிக்கு முந்திய தனது அரசியலில் காணப்பட்ட வெற்றிடங்களை ஒவ்வொன்றாக நிரவிவருகிறார் என்றே தோன்றுகிறது. இப்படி பார்த்தால் அவருடைய மீளக்கட்டியெழுப்பும் திட்டம் முன்பு ரணில் வவைத்திருந்த திட்டத்தின் வேறொரு வடிவமாக அமையும் வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.
பொருளாதார வார்தைகளில் கூறின் ரணிலுக்கம சந்திரிக்காவுக்கும் ஏற்கனவே அதிக வித்தியாசம் இருக்கவில்லை. சுனாமிக்குப்பின் ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச வித்தியாசங்களும் அள்ளுண்டு போவது தெரிகின்றது.
சந்திரிகா நம்புகின்றார் வெளிநாட்டுப்படைகள் நாட்டில் உள்ளவரை மீண்டும் ஒரு யுத்தம் வராது என்று. எனவே வெளிநாட்டுத் துருப்புக்களை வைத்திருப்பதன் மூலம் யுத்தமற்ற ஒரு நிலையை பேணும் அதேசமயம் மேற்ப்படி நாடுகளுக்கு விசுவாசமாக அவர்கள் விரும்பும் வடிவத்தில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப அவர் தயாராகிவருவதன் மூலம் தனது தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றக்கிடைத்திருக்கும் ஒரு புதிய தெரிவை கையாளப்போகிறார் என்றே தோன்றுகிறது.
என்பதால்தான் அவர் அம்பாந்தோட்டையில் தனது மீளக்கட்டியெழும்பும் திட்டத்தை தொடக்கி வைத்த நிகழ்வில் உரையாற்றிய போது இனி ஐந்தாண்டுகளுக்கு தேர்தல் இல்லை என்று கூறினார்.
சுனாமிப்பேரழிவு பூகோள அளவில் ஒரு பேருண்மையை உணர்த்தியிருக்கிறது. மனிதனுடைய அறிவியல் வெற்றிகள் யாவும் பலசாலிகளான பணக்கார நாடுகளுக்கு சேவகம் செய்கின்றன என்பதே அது.
சுனாமி அரசியலிலும் இந்த பேருண்மையின் பிரதிபலிப்புக்களை காணமுடியம். சுனாமி அழிவின் பேரால் உதவிக்கு வந்த பலசாலி நாடுகள் வறியசிறியநாடுகளின் அரசியலை தமக்கு சேவகம்செய்யும் ஒன்றாக மாற்றிவருகின்றன. இதில் தமிழர்கள் கவணிக்க வேண்டியது என்னவெனில் சுனாமி அரசியலின் கீழ் வறியசிறியநாடுகளை தமது சேவகர்கயாய் மாற்றிவரும் பலசாலி நாடுகள் சிறிய போராடும் இனங்களின் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளப்போகின்றன என்பதையே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<b>Mathan</b>, நன்றி.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அரசுக்குள் முரண்பாடுகள்: அஸ்கிரிய பீடாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதாக அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்கர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளும் கட்சியினர் மகாநாயக்க தேரரை சந்தி;த்த போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டு;ள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை இரு தரப்பினரும் விடுத்து வரும் அறிக்கைகளின் மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த புத்திரகிட்ட தேரர்ää
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் கட்சிகளிடையே இருக்கும் முரண்பாடுகள் களையப்படுவது அவசியமாகும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
நன்றி - புதினம்
நல்ல செய்தி எப்படியோ ஜேவிபியும் சுந்திரகட்சியும் பிரிந்தால் சரி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரிட்டன் பிரதிநிதி றொபேட் ஈவன்ஸ் இலங்கை வருகிறார்
ஜரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதிநிதியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான றொபேட் ஈவன்ஸ் தமிழீழத்தில் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலை அனர்த்தத்தை நேரில் பார்வையிட தமிழீழம் வருகை தரவுள்ளார்.
இலண்டனில் உள்ள ஈழத் தமிழர்களின் விசேட வேண்டுகோளை அடுத்து எதிர்வரும் 5ம் திகதி இலங்கை வருகை தர உள்ள றொபேட் ஈவன்ஸ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளார்.
தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பினரால் (TITA - Tamil Information Technology Association) இலண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதி உதவியுடன் நடைபெறும் TITA/SKTATT யாழ் இலவச கணினி பயிற்சி நிலையத்தில் பயின்று வெளியேறும் மாணவர்களுக்குரிய சான்றிதழ் வைபவம் மற்றும் TITA/SKTATT இலவச ஆங்கில பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் யாழில் 6ம் திகதி றொபேட் ஈவன்ஸ் பங்குபற்றவுள்ளார்.
தொழிற்கட்சி உறுப்பினரான றொபேட் ஈவன்சுடன் இலங்கையரான ஹரோ கவுன்சிலர் தயாவும் உடன் வருகை தருகிறார்.
றொபேட் ஈவன்ஸ் தமிழீழத்திலே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்த மாவட்டங்களிலும் முன்னெடுத்து வரும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிமகன்/Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மொழி ஒரு தேசியத்தின் மூச்சு..... அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து ஒரு பார்வையும் சில பதிவுகளும்
ம.தனபாலசிங்கம் (அவுஸ்திரேலியா)
அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம். இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர்.
இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் இயேம்ஸ் கொனொலி மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3ம் திகதி 1916ம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார்.
குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து
'நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்பதாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்."
போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு படியாக 1920 இல் னுரடிடin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் டீநடகயளவ இனை தலைநகராகக் கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர். உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5ää 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.
கெரிலா கொமாண்டராகää அரசியல் கைதியாகää வெற்றிகண்ட புரட்சிவாதியாகää உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.
இதன் பிரதம மந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது.
இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என சுழல குழளவநச என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர்.
அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா 'நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்ää இவர்கள் குறைந்த சௌகரியங்களுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர்.
தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும்ää அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல்ää இடித்தல்ää கொழித்தல்ää புடைத்தலென படைப்போசையின் ஒலியும்ää குறும்பான சிறுவர்களின் குதூகலமும்ää உடற்பலம் மிக்க வாலிபத்தின் போட்டிகளும்ää வனிதையரின் சிரிப்பொலியும்ää நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும் எனக் கூறுகின்றார்.
டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது. (அவர் குறிக்கும் மொழி தொன்மையும்ää செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்) எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையதுää எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும்.
ஆயிரம்ää ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது. அவர்களின் சிந்தனைகளும்ää அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இன்று பேசப்படும் இந்த மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும்.
ஆழமான அனுபவ ஞானங்களையும்ää வாழ்வுபற்றிய பார்வையில் கிறிஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே எமது மொழி. இதனை இழப்பது என்பதை வெறும் கனவாகக் காண்பதுகூட தாங்கமுடியாததாகும். இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை விட்டுப் பிரிவது போலாகும். எமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்கு சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித்தேசத்திற்கு மேல் நாம் என்றுமே கட்டிஎழுப்ப கனவுகாண முடியாது" எனக்குறிப்பிடுகின்றார்.
இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது. அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும்ää எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும்ää தீதும் நன்றும் பிறர்தர வாராää என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும்ää நூற்றாண்டுகால அந்நியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது.
நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும்ää எலிசபெத்தியரின் அமுக்கங்களும்ää அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன.
சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும்ää மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது.
சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அந்நியர் ஆட்சியின் அமுக்கங்களையும் தாண்டிää சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காதுää சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும்ää போரியலாலும் புதிய வீரியத்தை பெற்றுள்ளது எனலாம்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம்.
பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும்ää போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும் வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.
'நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.." என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்...
'ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக்கெட்ட கோபம் வந்திடும்..."
எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம் என்ன கனகாலமா ஆளையே காணேல்லை... வாகனக்காரங்கள் ஆராவது ஆத்திரத்தில் ஒரேயடியா அடிச்சு நொருக்கிப் போட்டாங்களாக்கும் எண்டு நினைச்சிருப்பியளாக்கும். என்னை அறிஞ்சவை தெரிஞ்சவையள் காணிற நேரமெல்லாம் கேட்பினம் 'என்ன அப்பு எழுதிறதை விட்டிட்டியள். நொட்டை தாங்கேலாமல் ஆராவது வெருட்டிப்போட்டாங்களோ? எண்டு. ம்...ம்... அடுத்தவங்கள் வெருட்ட மருண்டு போற ஆளில்லை இந்த ஏரம்பர்! எட நல்ல விசயத்தை துணிச்சு சொல்லிறதுக்கு, அதுகும் வன்னியில நான் ஏன் பயப்பிட வேணுமென்டு கேட்கிறன்.
உதுக்கு மேல நடந்ததைப் பற்றிக் கதைக்கிற தருணமும் இல்லை இப்ப. ஏனெண்டால் எங்கட இனம் பெரிசா ஒரு அழிவைச் சந்திச்சிருக்கு. கன சனத்தை நாங்கள் இழந்திருக்கிறோம்.! சொத்த, பத்தெண்டு காலாகாலமாச் சேர்த்ததையும் சுனாமி அள்ளிக்கொண்டு போட்டிது. அவனவன் அங்கையிஞ்சை உதவி செய்ய ஆலாப்பறக்கிற நேரத்தில எங்கட 'சிங்கிடி நோணா" தமிழாக்களின்ரை சடலங்களுக்குப் பக்கத்தில நிண்டுகொண்டு, போறவாற நாடுகளையெல்லாம் இழுத்திழுத்து ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறா. என்னடா! எங்கையிருந்து உப்பிடி ஒரு ஞானம் பிய்ச்சுக் கொண்டு வந்திச்செண்டு பார்த்தால், பிணங்களின்ரை தொகையைக் காட்டி சர்வதேச சமூகத்துக்கு முன்னால பிழைப்பு நடத்தலாம் எண்டிற கேவலமான புத்திதான் பாருங்கோ அது! சே.... உதுகும் ஒரு பிழைப்பே! எந்தக்கேவலமான பிழைப்பும், உந்தளவுக்கு கேவலம் இல்லை! தங்கட இனவாதப் போக்கின்ரை வன்முறையால கன வருசங்களாகப் பாதிக்கப்பட்ட சனத்துக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யிறத்துக்கான 'சிரான்' ஜயும் உருப்படவிடேல்லை, 'இடைக்காலத்தீர்வுதிட்ட"த்தையும் ஏற்றுக்கொள்ளேல்லை. இப்ப என்னடாண்டால கலைச்சுக்கலைச்சுப் பிடிச்சு கைகுடுக்கிறா. கோபால் பற்பொடிக்கு மாதிரி ஈ-யெண்டு போஸ் வேற குடுக்கிறா! இழப்பைப் பொறுத்தவரை இனசனம் பார்க்ககூடாது. உண்மையைச் சொல்லப் போனால் இன்னுமொரு தரையிறக்கத்தை அனுமதிக்கக்கூடாதெண்டு கரையெல்லாம் முகாம் அடிச்சு நிண்டு, அலையடிச்சதில செத்துப் போட்டினம். சண்டையில சாகிறது வேற, இது வேற! நினைச்சா ஏதோ மனசில வேதனையாகத்தான் கிடக்கும். எங்கட மனம் இப்படிப் பாடுபட, 'கோல்" ஜயும், ஹம்பான்ரோட்டை' யையும் காட்டி, அங்கதான் முழு இழப்பும் எண்டு சொல்லிறதோட, வாற உதவிப்பொருள்களில ஆறிலொரு பங்கை மட்டுந்தான் தாங்கள் எடுக்கிறம், மிச்சத்தையெல்லாம் புலியளிட்டைக் குடுகிறம் எண்டு அண்டாப்புளுகை எல்லோ அவிழ்த்து விடிறா. இஞ்சை அவையின்ர வந்து குவியிற லட்சணத்தை ஒருக்கால் பார்ப்போமெண்டால் பிபிசி இன்ரை கமராவயர் காலியில சிக்குப்பட்டுக் போய்க் கிடக்கு. எங்கட செய்தியாளர்மாரும். பேய்க்காயள். அன்றாடம் தேவையான பொருட்களெல்லாம் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில தவறாமல் கிடைக்கிறது. ஆனால் அது எங்கையிருந்து கிடைக்கிதெண்டு கேட்டால் 'அறிஞ்சு கொள்ளேலாமல்' கிடக்கிதாம். தயவுசெய்து உந்த 'விலாங்குபம்மாத்து' விளையாட்டுக்களை கொஞ்சம் ஒத்தியாவது போடுங்கோ! எங்கட தலையளைக் காட்டி எடுக்கிற பிச்சையை வைச்சே, எங்கட தலையளிலை குண்டுகளைக் கொட்டக்கூடிய 'நோணா"வின்ர நோகாத நகர்வுகளுக்கு தெரியாமல் கூட ஒத்துழைச்சு, பாதிக்கப்பட்ட சனத்தின்ர பழியை வாங்கிக்கொள்ள வேண்டாம்! அந்த வெள்ளைக் காரத்தங்கச்சி பிரான்சிஸ் ஹரிசன் தன்னோட வேலையைத்தரமாச் செய்யிது. அந்தளவுக்கொண்டாலும் செய்யாட்டி தமிழனா இருந்து என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லிறது வெறுமனே செய்தி மாத்திரமல்ல. இஞ்சை நொந்துபோயிருக்கிற எங்கட சனத்தின்ரை நிலைமை எண்டதையும் மனசில வைச்சுச் செயற்படுங்கோ! மற்றது இன்னுமொரு விசயம் நாங்கள் கி.பி. 2005 இலும். பிரபாகரனுக்குப்பின் 51ஆம் ஆண்டிலையும் இருகிறம். அப்பிடியிருக்க பன்னாட்டு சேவையில கிடைச்ச ஒரு வாய்ப்பில அதேன் இயக்கத்தைக் குறிப்பிடிறதுக்கு Rebel (கலகக்காரர்கள், கிளிர்ச்சியாளர்கள்) எண்டு பாவிக்கிற பழக்கம்? விடுதலைப்புலிகளின்ர மாவீரர் தினம் பற்றியும் குறிப்படிறனீங்கள். சனத்தின்ர விடிவு இயக்கத்துக்கான சர்வதேச அங்கீகாரத்திலையும் தான் தங்கியிருக்கு. அதுக்காக நாணொணடும் பரணிபாடச்சொல்லிச் சொல்லேல்லை. மனச் சாட்சியோட பாதிக்கப்படிற மக்களின்ர குரலா வெளியுலகத்துக்கு ஒலிக்கிற ஒரு பத்திரிகையாளனாக இருந்தால் போதும். தயவுசெய்து 'விறகு நெருப்பில' மட்டும் குளிர்காயவும்! மற்றது பாருங்கோ, உந்த உலக நாடெல்லாம் கண்ட கிண்ட பிரச்சினைக்கெல்லாம் விசாரணைக்கமிசனுள் வைப்பினம். எங்கட நாட்டிலையும் காணாமல் போன பட்டியலில் உப்பிடியானகன 'கமிசனுகள்" இருக்கினம். வெளிநாட்டுக்காரைக் கொண்ட அப்பிடி ஒண்டை வைச்சு, உந்த நிவாரணப்பொரட்கள பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்றதை உறுதி செய்யேலாதோ?
என்னவோங்கோ! முதல் தொங்கிக்கொண்டிருந்த 4.5 பில்லியன் உதவியையும் இப்படியாவது (இன,மத, போதமில்லாமல் எல்லாற்றை சடலங்களையும் வைச்சு, அழுது காட்டி) எடுத்து ராணுவத் தேவையளை பூர்த்திசெய்து, வீர 'துட்ட'கைமுனுக்களின் கைகளில நாட்டை விளையாடக்குடுக்கத்தான் அலுவல்கள் நடக்கிது. அதுக்காகத்தான் அந்தப் பொறுப்பும் ராணுவத்திட்டை குடுக்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு ஆமியின்ரை சாப்பாட்டுத் தேவையளையாவது நிவாரணத்தில இருந்து எடுத்தாலே, அவாவின்ரை கஜானாவின்ர கஷ்ரம் ஓரளவுக்கு எண்டாலும்தீரும் தானே! என்னவோ ஒண்டு சொல்லிறன். ஆராவது ஒரு நாடு நல்ல உள்ளத்தோட உதவி செய்ய முன்வந்தால், அதை ஏற்றுக் கொண்டு உறவாக இருக்கோணுமே தவிர அதுக்காக மற்றாக்களின்ரை கையளையே நம்பியிருக்கக்கூடாது. எங்களின்ரை பலம், நாங்கள் ஒவ்வொருவரும் தான்! அதிலையும் வெளியால வாழிற எங்கட சனம் தங்கட கடமைக்கு மேலாலயே செய்யிறது நீங்களெல்லாம் அறிஞ்சியிருபியள்தானே! சில ஆக்கள் நினைப்பீங்கள். 'ஏதோ தாய்-தகப்பனுகள் தங்கட மனச்சாட்சிக்குச் செய்யினம். அடுத்த தலைமுறைக்கு சமூகம் கைமாறேக்கிள்ளை நிலைமை மாறிடும்' எண்டு. அது பிழையுங்கோ! இன உணர்வு மனச்சாட்சியில தங்கியிருக்கேல்லை. இழக்கப்படிற ஒவ்வொரு ஈழத்தமிழன்ரை உயிராலையும், எங்கட தலைவரின்ரை நெறிகாட்டலாலையும் இன உணர்வு சகலதுமாய் வியாபிச்சிருக்கு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் நான் சொல்லிறன். எனக்குத் தெரிஞ்ச ஒரு தம்பி வெளியால போய்க்கனகாலம் ஆயிட்டிது. அவருக்கு போகேக்கிள்ளை கைக்குழந்தையா ஒரு பொம்பிளைப்பிள்ளை இருந்தது. இப்ப கிட்டடியில அவற்றை இடத்தில இருந்து வேற ஒரு தம்பி வந்து என்னைச் சந்திச்சுது. உங்களுக்குத் தெரியும்தானே, உந்த விடுப்பக் கேட்கிறதெண்டால் எனக்கும் அல்வா மாதிரி எண்டு. அப்பை நானும் விளா வாரியா விசயங்களைக் கேட்டன். கீழ்ப்பந்திக்கு வாங்கோ, வடிவாய்ச் சொல்லிறன்!
கை;குழந்தையா போன் அந்தச் சின்னன் இப்ப பதினைச்சு வயசு, பத்தாம் வகுப்பு முடிச்சு, பல்-டொக்ரரா வரப்படிக்கிதாம். அப்படிப் படிக்கேக்கிள்ளை போக்குவரத்து, அதுஇதுககெண்டு உதவித்தொகை கிடைக்குமாம்! தன்ர முதலாவது சம்பளம் நாட்டுக்குத்தான் எண்டு சொல்லி, எடுத்து வைச்சுக்குடுத்திச்சாம்! தகப்பன் குடுக்கிறதுக்கு மேலாக அவாவும் தன்னோட கையிருப்பைப் பொறுத்து அப்படியே இயக்கத்துக்கும், புனர்வாழ்வுக்கழகத்துக்கும் தொடர்ந்தும் குடுத்துக் கொண்டு வாறாவாம்! உண்மையில அந்த வீட்டில வயசுக்கு வந்த இரண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம். ஆம்பிளைப்பிள்ளையள் இல்லை. அப்படியிருந்தும் தங்களைப் பற்றி நினை;காமால் நாட்டைப்பற்றி நினைக்கிற அப்பிடியான சனம் இருக்கேக்கிள்ளை எங்களுக்கென்ன யோசனை!! அதுசரி, நீங்கள் யோசிக்கிறது. விளங்கிது. அங்கை எங்கட சனம் எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சுக் கொண்டிருக்க, இஞ்சை வேலைவெட்டி ஒண்டும் செய்யாமல், நோகாமல் இருந்து கொண்டு, ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை. ஆரோ சிலர் தங்களை ஏதோ பெரிய வைஜந்திமாலா, பட்டம்மா, சரோஜாதேவி.. சீச்சீ ! நான் என்ர காலத்திலேயே நிக்கிறன். இப்ப ஆரது? உந்த என்ன பேர்... அதுகும் அயத்துப் போச்சு.. ஆ.... சோனியா அகர் வாலோ.... ஆட்டுவாலோ எண்ட நினைப்பிலை, இரவல் பெற்றோலிலை ஓடிற TVS களுக்கு கழுத்தை நீட்டினால் அது தனிப்பட்ட பிரச்சினை தானேங்கோ. சே! எங்கையோ தொடங்கி புனர்வாழ்வு வரைக்கும் வந்திட்டன். எதிலை விட்டனான்? ஆ. அப்பிடி கனக்க வெளிநாட்டு விசயங்கள் வைச்சிருக்கிறன். பேந்து பேந்து தாறன்.
அப்பிடி ஆயிரம் விசயங்கள் இருக்கு கதைக்கிறதுக்கு பத்தாக் குறைக்கு எருமைமாடு வேற எனக்குக் கிட்ட வந்திட்டிது. ஜயோ.. என்ர பக்கத்துவீட்டுக்காரர் தங்களைத்தான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்கப்போயினம். சத்தியமா நான் அந்த எருமையளை சொல்லேல்லை. இயமன்ர எருமையைச் சொல்லிறன். சுனாமி அமளியோட பிறந்தநாளுகளையும் மறந்திட்டன். எத்தினையெண்டு முந்திச் சொன்னனான்?.... பாருங்கோ வயசு போறதால வாக்கும் மாறத்தொடங்கிட்டிது. ஆ.. எழுபத்தி மூண்டெண்டு சொன்ன ஞாபகம். அதோட ஓண்டைக் கூட்டிக் கொள்ளுங்கோ! அதாலதான் நேர காலத்துக்குள்ளை போய்ச்சேர்றதுக்கு முன்னால உங்களோட எவ்வள வைக்கதைக்கலாம் எண்டுதான் இறங்கிட்டன்.
நீங்கள் வேற பிரச்சினையளில் இருக்க. நான் வந்து என்ர கதையளைச் சொல்லிக்கொண்டிருக்கிறன. இண்டைக்கு முடிக்க முதல் ஒண்டைச்சொல்லிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். முக்கியமாக ஒருத்தரும் நடந்ததை நினைச்சு கவலைப்பட்டக்கொண்டு இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு சின்ன இனமா இருக்கலாம். ஆனாலும் சிறுத்தை இனம் பாருங்கோ! மற்ற இனங்கள் மாதிரி இல்லாமல், உலகத்திலேயே எங்கட இனம் மட்டும் தான் இரண்டு சூரியனுக்கச் சொந்தக்காரர்.
இயற்கைச்சூரியன் ஒண்டு இனத்துக்கான சூரியன் மற்றவர். ஒண்டும் யோசிக்காமல் எதிர்காலத்தில் பற்றுறுதியோட இருக்கோணும். உலகநாடுகள் உதவுதோ இல்லையோ உங்கட இயக்கம் உங்களுக்காக இருக்கெண்டிறதை நினைவில வைச்சிருக்கோ! தலைவற்றை விருப்பப்படி தம்பி சூசை முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்து கொண்டிருக்கிறா முல்லைத்தீவுக்குப் போய்வாற சனங்கள் சொல்லுது. அதேமாதிரி மற்றமற்ற இடங்களிலையும் கெதியாத் தொடங்கிடும். நம்பிக்கையாக இருங்கோ! அதைவிட்டிட்டு ஆராவது இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் கண்ணீர் வடிச்சபடி, மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக் கெட்டகோபம் வந்திடும். வந்து அலகு பேர்த்துப்போடுவன் பேர்த்து. சொல்லிப்போட்டன். ஓம்!
பொறுங்கோ! பொறுங்கோ! கடைசியாய்க் கிடைச்ச விசயங்கள் கொஞ்சம் கிடக்கு. ஆரோ ஒருத்தர் இந்தோனேசியாவில் நிண்டு சொல்லியிருக்கிறார். 'இனியெண்டாலும் 'ஆச்சே" இலையும், இலங்கையிலயும் பிரிவினை கோரிறதை விட்டிட்டு, சுமூகமாக வாழப்பார்ப்பினம் எண்ட நினைக்கிறேன்" எண்டு. இதென்ன கதை? நாங்களென்ன சுனாமிக்குத் தாற சோத்துப்பாசலுக்கும், சுடுதண்ணிப்போத்திலுக்காகவுமே போராடிறோம். எங்களை அவங்கள் மதிச்சா,இணைஞ்சிருப்பம். அதைவிட்டிட்டு மிதிக்க வெளிக்கிட்டா, பிரிஞ்சு போவோம்! அதைப் புரிஞ்சுகொள்ளாமல் உதென்ன கதை! இன்னுமொரு விசயம் பிள்ளையள். இதுவரை காலமா தமிழரின்ர இழப்புக்கள் வெளியுலகத்துக்குத் தெரியவந்தால்தான், அரசாங்கத்துக்கு சரியான சிக்கல்கள் வாறது. செம்மணிப்புதைகுழிகளையே நினைச்சுப்பாருங்கோவன்! ஆனால், இப்பயோ வெளியால தெரியரவரவரத்தான் அரசாங்கத்துக்கு வல சந்தோசமாம். ஒரேயடியா உத்தினை உயிருகளைக் கொடுத்த வேதனைக்கு மத்தியிலயும் இஞ்ச சனங்களும், இயக்கமும் சேர்ந்து மீட்டெடுத்த உடல்களுக்கு முன்னால நாங்கள் இடிஞ்சு போயிருக்க, தெற்கில அந்த கணக்கெடுப்பை வெளிநாடுகளுக்குக் காட்டியே காலியாக் கிடந்த கஜானாவை நிரப்பியத சந்திரிகா அரசு. உடலுகளைக் காட்டி உழைக்கிறதுக்கு வேற பேர் சொல்லிறவை. சே! அலை அடிச்சுப் பறிச்ச சனத்தின்ர வயித்தில அடிக்கிறதுகள் உருப்படாதுகள்.
வேற ஒரு விசயமும் எனக்கு துண்டற விளக்குதில்லை. எட ஈராக் விசயத்தில் தான் அமெரிக்கா சம்பந்தப்பட்டதால, ஆவெண்டு ஆராவது பார்த்துக்கொண்டிருந்தால், அதை ஏதோ ஏற்றுக்கொள்ளாமல். அது பெரிய சுப்பர் வல்லரசு. இதென்னடா வெண்டால் பொலிச்சி பிஸ்கற் மாதிரி ஒரு தீவு. அதிலை ஒரு பகுதியை மட்டும் கையில வைச்சிருக்கிற, பெரும்பாண்மையை இண்டுவரைக்கும் நிரூபிக்காத 25 கட்சியளின்ர கூட்டுக்கு ஒரு குடுமி. போயும் போயும் அப்பிடி யொண்டுக்கு ஒருத்தர் அடங்கித்தலையாட்டிருக்கிறார் எண்டால்... இதென்ன உலகம் பாருங்கோ? சமாதானத்திற்கான நோபல் பரிசு குடுத்தது உந்த அரசாங்கத்தோட சமாதானமாகப் போகிறதுக் கில்லை. இஞ்ச நாங்கள் ஒரேயடியாக ஆயிரமாயிரமாக் குடுத்துப்போட்டு இருக்கிறோம். கடைசி ஒருக்கால் எட்டிப்பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை ஆவது!! கொலின் பவல் 4 மணித்தியாலத்தில பார்த்து முடிச்சதைப் பார்க்கிறதுக்கு 48 மணித்தியாலம் தேவையோ? தாங்கள் போய்கோவன் எண்டு சொல்லியும். அவர் தான் விரும்பவில்லை எண்டு ஜனாதிபதிச் செயலகம் விட்டதாகவும் தெரியேல்லை. நாட்டில சமாதானம் வந்தப் பிறகு எங்கட பக்கமும் வந்து ரொபி, சொக்ளேற் தாறதா சமாதானம் சொல்லியிருக்கிறீங்கள். சமாதானத்துக்கான நோபல் பரிசு உங்களுக்கு வலு பொருத்தம் தான்! ஆனாதாழ்மையான ஒரு வேண்டுகோள். தமிழ்ப்பிரதேசங்களைப் பார்க்கவே விடாத அரசாங்கம், நாளைக்குத் கிடைக்கிற உதவியை மட்டும் நியாயமா பகிர்த்தளிக்கும் எண்டு ஒருக்காலும் எதிர்பார்த்துப் போடாங்கோ!
ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை.
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
|