01-24-2005, 11:31 AM
84 வயது பள்ளி மாணவர் வெளியேற்றப்படுவார்?
உலகிலேயே மிக வயதான பள்ளி மாணவர் கென்யா நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் கிமானி மருகே வயது 84. கப்கெண் டூய்போ நகரில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூடத்தில் அவர் கடந்த ஆண்டு சேர்ந்தார்.
அவர் சிறுவனாக இருந்த போது மாடு மேய்க்க வேண்டி இருந்ததால் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. கல்விக் கட்டணத்தை கடந்த ஆண்டு அரசு ரத்து செய்ததும், அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டார். அதனால் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சேர்ந்தார். படிப்பில் முதலா வதாக தேறினார்.
தலைமை ஆசிரியை ஜேன் ஒபிஞ்சு கூறுகையில், ``கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னை ஈர்த்தது. அதனால் அவரைச் சேர்த்துக்கொண்டேன்" என்று கூறினார்.
ஆனால் அவர் படிப்பைத் தொடர்வது கேள்விக்குறியாகி இருக் கிறது.
``வகுப்பில் மற்ற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இவர் கெடுத்து வருவதாக பெற்றோர்கள் புகார் கூறி உள்ளனர்.
அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதைத் தான் குழந்தைகள் கவனித்துக்கொண்டே இருக்கின்றன என்றும் பெற்றோர் புகார் கூறுகிறார்கள்.
இதனால் அவர் பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Source : Dailythanthi

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->