Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேணல் கிட்டு
#1
<b>குடாநாட்டில் இராணுவத்தை முடக்கி வைத்த கேணல் கிட்டு</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/16/t-2.gif' border='0' alt='user posted image'>
உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அரங்கில் கூட சாதனைகள் புரிந்தவர்.........

<span style='color:green'>-தாயகன்-


இந்திய அரசாங்கத்தினதும் றோ உளவுப் பிரிவினதும் சதித் திட்டத்தினால் வங்கக் கடலில் வரலாறாகிய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவினதும் அவருடன் வீர காவியமான ஒன்பது போராளிகளினதும் 12 ஆவது வருட நினைவு தினம் இன்றாகும்.

விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட 1979 ஆம் ஆண்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் தன்னை ஓர் விடுதலைப் போராளியாக இணைத்துக் கொண்ட சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டு, போரியல் துறையில் காட்டிய அதிரடியும், ஆர்வமும் விவேகமும் அவரை வெகு விரைவில் விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக பரிணமிக்க வைத்தது.

1985 ஆம் ஆண்டு கப்டன் பண்டிதர் வீரச் சாவடைய அவரின் இடத்துக்கு யாழ். மாவட்டத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். பொலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டு பெருந் தொகையான ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறான பல தாக்குதல்கள் மூலம் குடாநாட்டில் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கியவரும் கிட்டுவே. இதே போன்ற நடவடிக்கைகளினால் எதிரிகளுக்கு கிட்டு என்ற பெயர் சிம்ம சொப்பனமாக மாறிய வேளை 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசத் துரோகியொருவனின் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி தனது இடது காலை இழந்தார்.

இதையடுத்து ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு, ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர பெரிதும் பாடுபட்டார். இவ்வாறான நிலையில் இந்திய அரசு கிட்டுவை வீட்டுக்காவலிலும், மத்திய சிறையிலுமாக மாறி மாறி அடைத்து வைத்தது. ஆனால், சிறைக்குள் கிட்டு நடத்திய அகிம்சைப் போராட்டத்தினையடுத்து இந்தியா கிட்டுவை தமிழீழத்தில் வைத்து விடுதலை செய்தது. இதையடுத்து வன்னிக் காட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த கிட்டு, இந்திய இராணுவத்தை தமிழீழத்திலிருந்து விரட்டும் வரை தலைவருடன் தோளோடு தோள் நின்று போர் உபாயங்களை மேற்கொண்டார்.

இதேவேளை, இந்தியாவை நிராகரித்த இலங்கை அரசு 1989 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் பேச முன் வந்தது. இதையடுத்து இலங்கை அரசுடன் பேசுவதற்காக கொழும்பு வந்த குழுவில் அங்கம் வகித்த கிட்டு, விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு கொழும்பிலிருந்தவாறே லண்டனுக்குப் பயணமானார்.

கிட்டு லண்டனில் இருந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் வளர்க்கும் முகமாக பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தினார். `களத்தில்' `எரிமலை'எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்து நிகழ்வுகளை புலம்பெயர் மக்களிடம் எடுத்துச் சென்றார்.கலைப்பண்பாட்டுக் கழகம், மாணவர் அமைப்பு என பல அமைப்புகளையும் உருவாக்கினார். புலிகளின் அனைத்துலக பிரதிநிதி என்ற வகையில் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கான ஆதரவைப் பெருக்கினார்.

இன்றைய உலகில் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்கப்பட முடியாத பெரு வடிவம் எடுத்ததற்கு கிட்டு அளித்த பங்களிப்பு இன்றியமையாதது. விடுதபை்புலிகளின் இன்றைய பாரிய வளர்ச்சிக்கும், அரசியல் ரீதியான,சர்வதேச ரீதியான பெரு வெற்றிகளுக்கும் அடிப்படைக் காரண கர்த்தாவாக கிட்டுவே உள்ளார்.

வெளிநாடுகளில் இராஜதந்திர நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கிட்டுக்கு தமிழீழத்திற்கு செல்லும் வாய்ப்பு திடீரென ஏற்பட்டது. இதையடுத்து சமாதான முயற்சியொன்று தொடர்பாக `குவேக்கஸ்' சமாதானக் குழுவின் யோசனைகளுடன் சுவிஸ் நாட்டிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக `எம்.வி.அகத்' என்ற கப்பலில் கிட்டுவும் சக போராளிகளும் பயணமானார்கள். இதுதான் தமது கடைசிப் பயணம் என்பது கிட்டுக்கோ போராளிகளுக்கோ வேறு எவருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை.

அனைத்துலகத்துக்கும் சொந்தமான கடலில் எம்.வி.அகத் என்ற கப்பலில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும், சர்வதேச தொடர்பாளருமான கிட்டு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மோப்பம் பிடித்து உடனடியாக அரசுக்கு அறிவித்தது. இதையடுத்து இந்திய அரசினால் சதி வலையொன்று பின்னப்பட்டு சர்வதேச கடலில் வீசப்பட்டது. மேற்குலக நாடொன்றின் சமாதானத் திட்டத்துடன் கிட்டு பயணமாகியுள்ளார் என்று தெரிந்தும் இந்தியா தனது நாச வேலையை அரங்கேற்றியது.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் களப்பலியாகியுள்ளனர். இவர்களில் கிட்டு, சங்கர், ராயு ஆகியோரே கேணல் தரங்களையுடையவர்கள். ஆனால், இவர்களில் கேணல் கிட்டுவும் கேணல் சங்கரும் இந்திய மற்றும் இலங்கையரசுகளின் சதியால் வீரமரணமடைந்தனர். கேணல் ராயு சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.

இந்த மூவரும் இராணுவ வல்லுநர்களாக இருந்த போதும் அவர்களின் மரணம் போரின் போது ஏற்படாது சமாதானத்தை நோக்கிய கால கட்டங்களில் ஏற்பட்டது சற்று வித்தியாசமானது. கேணல் கிட்டு குவேக்கர்ஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் வரும் போது வீர மரணமடைந்தார். கேணல் சங்கர் மற்றும் கேணல் ராயு ஆகியோர் இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான கால கட்டத்தில் வீர மரணம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு நாசகாரிக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன.இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு தெரியப்படுத்தினார். இதனால், கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தி உலகெங்கும் தீயாக ப்பரவியது. ஆனால், இந்தியா மௌனம் சாதித்தது.

இதற்கிடையில் கிட்டுவின் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேரே இந்திய கடல் எல்லை வரை கொண்டு வரப்பட்டு விட்டது. தளபதி கிட்டுவும் ஒன்பது போராளிகளும் சரணடையுமாறு கேட்கப்பட்டனர். சரணடைய மறுத்தால் கப்பல் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவீர்கள் எனவும் எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் எனவும் எச்சரிகையும் விடுக்கப்பட்டது.

கிட்டுவை கைது செய்து ராஜீவ்காந்தியின் கொலைக்கு அவர்தான் பொறுப்பு எனக் குற்றம் சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் நோக்கமாக இருந்தது. இதே நேரம் கிட்டுவையும் சக போராளிகளையும் உயிருடன் பிடிக்க முடியாதென்பதும் இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை விடுதலைப் புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பதே புலிகளின் தாரக மந்திரம்.

இதற்கிடையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கிட்டு தனது பயணம் தொடர்பாகவும், சர்வதேசக் கடற்பரப்பினூடாக பயணம் மேற்கொள்வோரை கைது செய்யும் உரிமை எந்த நாட்டுக்கும் இல்லையெனவும் இந்திய உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைத் தொடர்புகளில் தெரிவித்த போதும் அவை அசட்டை செய்யப்பட்டு,கிட்டுவை கைது செய்வதிலேயே முனைப்புக் காட்டப்பட்டது.

இதனால், தமிழீழ மக்களின் சுதந்திர விடுதலையை நோக்கமாகக் கொண்டு கிட்டுவும் சக போராளிகளும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தனர். இதையடுத்து கப்பல் மாலுமிகள் அனைவரையும் கடலில் குதிக்குமாறு கூறிய கிட்டு, அவர்கள் குதித்தவுடன் தனது கப்பலுக்கு தீ மூட்டிவிட்டு சக போராளிகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

கிட்டுவும் ஒன்பது போராளிகளும் தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழீழ மக்களுக்கு மட்டுமன்றி உலகத் தமிழர்களுக்கே இடியாக வந்திறங்கியது. தமிழீழம் சிலிர்த்துக் கொள்ள இந்தியா தலை குனிந்தது.

விடுதலைப்புலிகள் மீது இந்தியா மேற்கொண்ட மூன்றாவது சதிப் பலியெடுப்பு கிட்டுவும் ஒன்பது போராளிகளுமாவர். இந்திய சதியில் சிக்கி முதலில் வீரமரணமடைந்தவர் தியாகி லெப். கேணல் திலீபன், இரண்டாவது சதிப் பலியாக லெப். கேணல்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 10 புலிகளும் வீரமரணமடைந்தனர். இந்திய படைக்கும் புலிகளுக்குமிடையே யுத்தம் ஏற்பட்ட பின்னரும் கூட சமாதானம் பேசுவோம் என புலிகளின் முக்கியஸ்தரான மேஜர் ஜொனியை வரவழைத்த இந்தியப் படைகள் அவரைக் காட்டுக்குள் வைத்துச் சுட்டுக் கொன்றன.

இவ்வாறான சதித் திட்டங்கள், நய வஞ்சகத் தனங்கள், காட்டிக் கொடுப்புக்கள், கருணா போன்ற தமிழினத் துரோகிகளின் குழி பறிப்புகள், ஏனைய தமிழின விரோதக் கட்சிகளினதும் எடுபிடிக் கூட்டங்களினதும் பொய்ப் பிரசாரங்கள், பொறுக்கித் தனங்களுக்கு மத்தியிலும் புலிப் போராளிகளினது அர்ப்பணிப்பு, தியாகம், விடுதலை வேட்கை, பிரபாகரன் மீதான பற்றுறுதி, போன்றவற்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகம் வியக்கும் வண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

இராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக மட்டுமன்றி அண்மைக் காலமாக சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் பெற்று வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அடித்தளமிட்டவர் கேணல் கிட்டு.

வல்வையில் வளர்ந்து வங்கக் கடலில் வரலாறாகிய வரிப்புலி கேணல் கிட்டுவின் இழப்பு விடுதலைப்புலிகளுக்கு பேரிழப்பாக இருந்த போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது வழக்கமான பாணியிலேயே கிட்டுவின் இழப்பை படிப்பினையாகக் கொண்டு விடுதலைப்புலிகளை வெகு வேகமாக முன்னகர்த்தி பெரு வெற்றியும் கண்டார்.

கிட்டு இன்று இல்லாத போதும் அவர் விதைத்த நல் விதைகள் இன்று விடுதலைப்புலிகளாலும் தமிழீழ மக்களாலும் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.</span>

நன்றி, தினக்குரல்
Reply
#2
நல்ல கட்டுரை! நன்றி தகவலுக்கு... :wink:
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#3
கிட்டண்ணனுக்கும் மற்றும் அவருடன் நய வஞ்சகத்தின் வேள்வி தீயில் தம்முயிரை ஆகுதியாக்கிய மற்றைய மா வீரர்களிறகும் எனது வீர வணக்கங்கள்
; ;
Reply
#4
நன்றியண்ணா..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
[size=18][b]வல்வையில் வளர்ந்து வங்கக் கடலில் வரலாறாகிய வரிப்புலியும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது கேணல்
[b]
Reply
#6
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/kittu_memorial_02.jpg' border='0' alt='user posted image'>
நன்றி தமிழ் நெட்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)