Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
நேற்றைய இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாரிய கடல் கொந்தளிப்பால் ஈழத்தின் கரையோரக் கிராமங்கள் பலவும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை பொத்துவில் தொடக்கம் யாழ் தீவகங்கள் உட்பட அனைத்துக் கரையோரக் கிராமங்களும் மாரிய அழிவுக்குப் உட்பட்டிருக்கின்றன. இவற்றால் ஏற்பட்ட உயிராபத்துக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வழிவுகளில் தென் தமிழீழமே மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இயற்கையில் வாவிகளால் சூழப்பட்ட மட்டு அம்பாறையில், வாவிகளினூடு பெருகிய வெள்ளமானது பல கிராமங்களை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டதாகவும், இவ்வனர்த்தத்தில் பல முஸ்லீம் கிராமங்களும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
"பட்ட காலிலேயே படும்" என்பதுபோல இயற்கையின் மழை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் மீண்டுமொரு அழிவுக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்தவர்களாகிய எமக்கு, எம்மக்களின் இவ்வனர்த்தங்களிலிருந்து மீளுவதற்கு சகல உதவிகளையும் உடனடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக வழங்கி, இரத்த உறவுகளின் துயர் துடைப்பில் பங்களிப்போம்.
"
"
Posts: 125
Threads: 70
Joined: Dec 2004
Reputation:
0
எம்மக்களின் இவ்வனர்த்தங்களிலிருந்து மீளுவதற்கு சகல உதவிகளையும் உடனடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக வழங்கி, இரத்த உறவுகளின் துயர் துடைப்பில் பங்களிப்போம்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Quote:எம்மக்களின் இவ்வனர்த்தங்களிலிருந்து மீளுவதற்கு சகல உதவிகளையும் உடனடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக வழங்கி, இரத்த உறவுகளின் துயர் துடைப்பில் பங்களிப்போம்
_________________
«¨ÉòР¡ú¸Ç §¾¡Æ÷¸û §¾¡Æ¢¸ÙìÌõ ±ÉÐ ¿ò¾¡÷ ÁüÚõ Òò¾¡ñÎ ¿øÅ¡úòÐì¸û
-தமிழீழத்திஇருந்துதமிழரசன்-
கட்டாயம் தமிழளரசு நிச்சயமாக
எம்மக்கள் அல்லவோ
[b]
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
தமிழரை வதைக்கும் இயற்கை  <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்தனோசியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடற்பெருக்கினால் அதிகளவில் தமிழர் பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன. தமிழீழத்தின் பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையுமான கரையோரப் பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
அதேபோன்று தென்னிந்திய தமிழ்நாடு மாநிலத்திலும் கடல்கொந்தளிப்பினாலும் கடற்பெருக்கினாலும் இதுவரை ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர். அதேவேளை கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐயாயிரம் மீனவர்களின் நிலை குறித்து அஞ்சப் படுகிறது.
அதேபோன்று ஸ்ரீலங்காவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களும் கடுமையான உயிர்ச்சேதங்களை எதிர் கொண்டுள்ளன. இதுவரை 300 வரையான உயிரிழப்புக்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இந்தக் கொடூரத்தினால் மாலை தீவின் மூன்றில் இருபங்கு நீரில் மூழ்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல்நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<b>
?
- . - .</b>
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
எனது முதலாவது பங்களிப்பாக இன்று காலையே 250 பவுண்ஸ்ஸுகளை TRO கொட்லைன் மூலம் செய்துள்ளேன். இந்த செய்தியை நான் இங்கு அறியத்தாறதாவது சுய விளம்பரத்துக்காக அல்ல நாமெல்லோரும் முன் வந்து செய்ய வேண்டுமென்பதற்காக.
எம்மக்களுக்கு சிறீலங்கா அரசோ அன்றி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களோ உதவி செய்யவுமில்லை! உதவி செய்யவும் வரமாட்டாது. எம்மை நம்பித்தான் எம்மிரத்தங்கள் கைகளை நீட்டியபடி உள்ளார்கள்.
"
"
Posts: 20
Threads: 7
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழத்தில் மட்டும் 6000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் சிங்களப்பிரதேசங்களை அண்டிய பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளில் சிங்களவர்களால் பொருட்கள் அபகரிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப இதுகளை என்ன பண்ணுறது.. ஒரு ஈவு இரக்கம் இல்லாததுகள்.. :x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Mohan Wrote:தமிழீழத்தில் மட்டும் 6000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் சிங்களப்பிரதேசங்களை அண்டிய பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளில் சிங்களவர்களால் பொருட்கள் அபகரிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
°ÕìÌ ¯¾Å¡¾Ð¸û ±ñÎ ¿¡Î ¸¼òòÀð¼Å÷¸Ç¢ý ºó¾¾¢ §ÅÚ ±ýÉ ¦ºöÔõ :evil: :oops:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இலங்கை அரசின் திட்டமிட்ட இருட்டடிப்பு.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 26 டிசெம்பர் 2004 ஸ ஜ யாழரசி ஸ
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் ää தமிழ் மக்களுடைய பிராந்தியத்தில் எற்பட்ட இழப்பையும் இலங்கையரச ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் உட்பட அனைத்துத் தென்னிலங்கை அரசசார்பான ஊடகங்களும் சம்பவங்கள் பெரிதாக எதுவும் ஏற்படவில்லையென்று திட்மிட்ட முறையில் தகவல்களை இருட்டடிப்பு செய்து வெளியிடுவது தமிழர்கள்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்வூடகங்களில் பணிபுரியும் ஊடகத்துறைசார்ந்தவர்கள் அதிகமானவர்கள் முஸ்லீம் இனத்தவர்களாக இருப்பதால் முஸ்லீம் மக்களுக்கும் ää சிங்கள மக்களுக்கும் சார்பாகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை மட்டும் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒப்புக்கு அரசாங்கம் விசேட ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக தகவல்களை வெளிட்டுக்கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
" "
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஆமாம்! காலையிலிருந்து பிபிசி உலகசேவை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன். இலங்கைதான் கூடுதலாக பாதிக்கப்பட்ட பகுதியாக காட்டிக் கொன்டிருக்கிறார்கள். அரச ஊதுகுழல்களும் அவற்றில் வந்து இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக சிங்களப் பகுதிகலையும், கொழும்பையும்தான் கூறிச் செல்கிறார்கள். மற்றும் இந்த அனர்த்தங்களுக்கு எதிர்காலத்தில் உலக நாடுகளால் வழங்கப்படக்கூடிய உதவிகள் எல்லாம் தமிழ்ப் பகுதிகளுக்கு வழங்கப்படாமல் விடக்கூடிய சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன.
" "
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
மிகவும் வேதனையான சம்பவங்கள். உயிரிளப்பு மட்டுமல்ல பொருட்சேதம் .. சாண் ஏற முழும் சறுக்கும் என்பது நமக்கு தற்போது நமது தலைவிதியா? அனைவருக்கும் ஆழ்ந்த அனுபவங்கள்!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://news.bbc.co.uk/media/images/40665000/jpg/_40665041_woman_body_ap.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இயற்கையின் சீற்றத்தில் இலங்கை
<img src='http://kavithai.yarl.net/archives/top.srilankawavesap.jpg' border='0' alt='user posted image'>
தெற்கு,தென்கிழக்கு ஆசியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் கடல்கோள் காரண்மாகப் பெருமளவு உயிர் உடமை இழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதில் இலங்கை மற்றைய நாடுகளைவிடப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு,தென்கிழக்கு வடகிழக்கு இலங்கை தென்னிலங்கையின் சில பகுதிகள் முற்றாகச் செயலிழந்து போயுள்ளன.
கொழும்பைத் தொடர்புகொண்டபோது அங்கிருந்து கேள்விப்படும் செய்திகள் பீதியை உண்டு பண்ணுகின்றன.கொழும்பு தெற்குப் பிரதேசங்களான வெள்ளவத்தை,தெகிவளை கல்கிசை பகுதிகளில் கடல்நீர் கரையை மேவி வருவதும் திடீரென வற்றிப் போவதுமாக இருக்கின்றதாம்.போதாக்குறைக்கு வானிலை எதிர்வு கூறல்கள்: இன்று மாலைக்குள் மீண்டுமொரு நிலநடுக்கமும் கடல்ப் பெருக்கும் கிழக்கிலங்கையையும் தென்னிலங்கையையும் தாக்கலாம் என எச்சரித்துள்ளன.
கரையோரப் பகுதி மக்களை பாதுகாபான பிரதேசங்களுக்கு இடம்பெயருமாறு கேட்கப்பட்டுள்ளது.நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான பகுதிகளுடன் தலைநகரின் சில பிரதேசங்களும் தாக்குதலுக்கு உள்ளானதால் மீட்புப் பணிகள் மிக மிக மெதுவாகவே நடைபெறுகின்றது.
ஏனைய நாடுகளிடம் அவசர உதவி வேண்டிக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.கிழக்கிலங்கையுடனான தொலைபேசித் தொடர்புகள் முற்றாகச் சீர்குலைந்துள்ள வேளையில் மேலதிக இழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு மின்சாரம் வெட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் கூடியழவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத் தீவும் பாரியளவில் கடல்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் முல்லைதீவில் ஏற்பட்ட சேதவிபரம் தெரியவில்லை ஆயினும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது உயிரிழப்பு சில நூறுகளாக இருக்கலாம் என ஒருவர் சொன்னார்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி,பருத்தித்துறை வைத்தியசாலைக்கு பிணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றனவாம்.கடரையோரப் பிரதேசங்களான மாதகல்,காரைநகர்,தீவுப்பகுதிகள்,பருத்தித் துறை ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல் நெடுகிலும் கடலை அண்டியே பாதுகாப்பு அரண்களை அமைத்திருந் இலங்கை இராணுவத்தினரும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளார்கள்.இருபதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாதாக செய்தியொன்று தெரிவித்தது.
இராணுவத்தினர் இறந்தார்கள் என்றாலும் அவர்களின் இழப்பும் ஒருவகை துக்கத்தையே தருகின்றது.போரில் இறப்பது வேறு இப்படியான இயற்கைச் சீற்றத்தில் உயிரிழக்கும்போது அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது.
இன்னும் சிலமணிநேரத்தில் மீண்டும் கடல்பெருக்கும்,பூமியதிர்ச்சியும் தாக்கக் கூடும் என்ற அறிவித்தல் பீதியைக் கிளப்பி விட்டிருக்கின்றது.
இதேவேளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உதவி வேண்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கோரிக்கை விட்டிருக்கின்றது.
உயிரிழப்பு ஆயிரத்தை எட்டியுள்ளதாக சொல்கின்றது இது பொய்யாகிப்போகாதோ என ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பூகம்பம்,மற்றும் கடற்பெருக்கு தாக்கியவிதம்
<img src='http://kavithai.yarl.net/archives/_40665113_detailedmap.gif' border='0' alt='user posted image'>
சிங்கப்பூரைச் சூழவுள்ள நாடுகள் மலேசியா,இந்தோனேசியா,தாய்லாந்து முதலியவையும் இலங்கை,இந்தியா,மாலைதீவு போன்றவையும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு ஒரு சிறு அசைவு தன்னும் இல்லையே என்பதுதான் என்னை வியக்க வைக்கின்றது.ஒருவேளை கடற்கரைக்குப் போயிருந்தால் வித்தியாசம் தென்பட்டிருக்கக்கூடும்.
இப்போதுதான் செய்தியில் சொன்னார்கள் கடலுக்குப் போன சிலரைக் காணவில்லையாம்.இதுவரை உயிரிழப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஆரம்ப நாடான இந்தோனேசியாவில் குறைந்த இழப்புகளே ஏற்பட்டிருக்கின்றது.இலங்கையும் இந்தியாவுமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு
இன்று காலை (இந்திய நேரம் 5.00-6.30 மணி?) சுமத்ரா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா அருகில் கடல் - இங்கெல்லாம் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்த நில அதிர்வுகள் இந்தியாவில் வங்காள விரிகுடாக் கடலோரங்களில் ஏற்பட்டுள்ளது. பெரும் அலைகள் 7.30 - 8.30 அளவில் கடலோரக் கரைகளைத் தாண்டி உள்ளே வந்து விட்டது.
தமிழகக் கடலோர கிராமங்கள், சென்னை நகரம் சேர்த்து, இதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நான் இருப்பது கடல் கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி. முதலிரண்டு கிலோமீட்டர்களுக்குள்ளாக இருக்கும் மீனவர் குடியிருப்புகளில் தண்ணீரபுகுந்துள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள், கடலோரங்களில் காலைக்கடன்கள், குளியலுக்காகச் சென்றவர்கள், மெரீனாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ஜாக்கிங் வந்தவர்கள் என பலரும் தண்ணீரில் அடித்துக்கொண்டு போகப்பட்டுள்ளார்கள்.
அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னமும் வரவில்லை. ஆனால் சென்னையில் மட்டுமே குறைந்தது 100க்கு மேற்பட்டவர் இறந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 500 சாவுகள் இருக்கலாம்.
சென்னைக் கடற்கரை அருகே வசிக்கும் பலர் பீதியில் அலறியடித்துக்கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஆட்டோ, கார், கால்நடையாகவே என்று கடற்கரையிலிருந்து கிளம்பி ஊரில் உள்ளே சென்றனர். என் வீட்டில் இருந்தபடியே மக்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைக் காண முடிந்தது.
உயிர்ச்சேதம் இருந்தாலும், இது பெரும்பீதி ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சி இல்லை. கடலோரத்தில் பெரும் அலைகள் இன்றுமட்டுமல்ல, அடுத்த இரண்டு நாள்களும் இருக்கத்தான் செய்யும்.
காலை முழுவதும் முடிந்தவரை நண்பர்களைக் கூப்பிட்டு பயப்பட வேண்டாம் என்று சொல்லவேண்டிய ஒரு நிலை.
===
மாநகர நிர்வாகம், எதிர்பார்த்தது போலவே, நிலைகுலைந்த நிலையில்தான். தொலைக்காட்சிகளில் அதிகாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை. சென்னை நகர (ஆக்டிங்) மேயரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மாநில முதல்வரிடமிருந்து ஆசுவாசம் அளிக்கும் எந்தச் செய்தியும் இல்லை. மாநகரக் காவலதுறை கமிஷனரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.
சன் நியூஸ் அவ்வப்போது பழைய தண்ணீர் வந்த கிளிப்களைக் காண்பிக்க, அதில் அடித்துக்கொண்டு மிதக்கும் சில பிணங்கள் பார்ப்போரை இன்னமும் பீதியில்தான் ஆழ்த்தியிருக்கும். இந்தப் படங்கள் காண்பிக்கப்பட்டவுடனேயே இன்னமும் சில தொலைபேசி அழைப்புகள் வெளி மாநிலத்தில் இருக்கும் உறவினர்களிடமிருந்து வரத்தொடங்கியது.
பாதிப்புகள் உண்டு. ஆனால் பீதி வேண்டாம். கடலையொட்டி இருப்போர்/இருந்தோர் தவிர பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடல் கொந்தளித்து உள்ளே வந்து நகரை அழிக்கப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகள் செய்வதும், கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று இன்னமும் ஒரு வாரம் உணவு கொடுத்துக் கவனித்துக்கொள்வதும்தான் இப்பொழுதைய உடனடித் தேவை.
சென்னை விமானநிலைய ஓடுதளத்தில் விரிசல் விழுந்திருப்பதால் இன்று சென்னையிலிருந்து பறக்கவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நன்றி - பத்ரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நாகையில் தீவிர இழப்பு
சென்னையில் நடந்தது ஒன்றுமேயில்லை என்பது போல சற்றுமுன்னர் நாகபட்டிணம் நண்பரிடம் தொலைபேசியில் பேசியதில் கிட்டத்தட்ட 5,000 (ஐந்தாயிரம்) நாகையில் மட்டுமே இறந்திருக்கலாம் என்கிறார். தானே முப்பது உடல்களை இழுத்து வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகச் சொல்கிறார். நாகபட்டிணம், வேளாங்கன்னி (மாதா கோவில் விசேஷம்...), நாகூர், காரைக்கால் கடற்கரையோரங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவும் மீண்டும் இந்தோனேசியாவை ஒட்டி மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதனால் மீண்டும் கரையோரங்களில் கடலில் கொந்தளிப்பு இருக்கும் என்றும் சந்தேகிக்கிறார்களாம்.
தொலைக்காட்சியில் இப்பொழுதைக்கு நாகையில் 1,500 சாவு என்றுமட்டும் செய்தி வருகிறது.
நாகை/காரைக்கால் பகுதிகளில் பல பாலங்கள் உடைபட்டுவிட்டன. இப்பொழுதைக்கு ஒரேயொரு பாலம் திருவாரூரை இணைப்பது மட்டும்தான் இப்பொழுதைக்கு உடையாமல் உள்ளது.
இலங்கையில் 500ஐத் தாண்டிவிட்டது.
கடலூரில் 200க்கும் மேல்.
இராணுவம், கப்பல்படை மீட்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கொண்டு விவரங்கள் கிடைக்கக் கிடைக்கத் தருகிறேன்.
நன்றி - பத்ரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இலங்கையிலும் பேரிழப்பு
1,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இறந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
தொலைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டிலே மொத்த இழப்பு - 90% மீனவர்கள் - மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கடலுக்குள் சென்ற படகுகள் - வெறும் படகுகளாக மட்டுமே திரும்பி வருகின்றனவாம்.
அதேபோல பொருள் சேதமும் மிகப்பயங்கரம்: பல மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்கள், மீன்வலைகள் ஆகியவை முழுதும் நாசமாகி, அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்பதோடு கூட இழப்பு பல நாடுகளை மொத்தமாகத் தழுவியுள்ளது என்பதும் மிகவும் வருந்தத்தக்கது
நன்றி - பத்ரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உயிரிழப்புகள்
காலை 6.30க்கு நில அதிர்வுகள் ஏற்பட்டதும், இந்தியாவில் உயிர்ச்சேதம் ஏதும் இருக்காது, மிகவும் மெலிதானதுதானே என்று தோன்றியது.
பின் 8.30 மணிக்குப் பிறகு சிறிது சிறிதாக தகவல்கள் வர ஆரம்பித்ததும் உயிர்ச்சேதம் நூறுகளில் இருக்கும் எனக்கருதினேன்.
பின் மதியம் ஆனதும், இந்தியாவில் மட்டுமே ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று தோன்றியது.
இப்பொழுதைக்குக் கிடைத்த தகவல்கள்படி இந்தியாவின் மொத்த உயிர்ச்சேதம் மட்டுமே பத்தாயிரத்தைத் தொடும் என்று தோன்றுகிறது. இது அதிகாரபூர்வத் தகவல் இல்லை. எனது யூகம் மட்டுமே.
எண்ணிக்கையில் இதைவிடக் குறைவுதான் பிற நாடுகளில் இருக்கும் என்று தோன்றுகிறது. இலங்கையில் ஐந்தாயிரம் வரை இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
சென்ற வருடத்தைய இரானிய நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000. ஆனால் இம்முறை அதைவிடக் குறைவாக இருந்தாலும் பரவலாக, பல்வேறு நாடுகளில், பரந்த கடற்கரையோரத்தில் நிகழ்ந்த இந்தக்கொடுமை மிக அதிகமான மக்களைத் தொட்டுள்ளது.
பொதுவாகவே நிலநடுக்கம் ஏழை-பணக்கார வித்தியாசம் இல்லாது கொல்லும்.
ஆனால் இப்பொழுதைய சுனாமி ராட்சத அலைகளால் இந்தியாவில் இறந்தவர்கள் யார் யார் என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நமக்குத் தெரிவது:
1. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்
2. கடலோரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகள்
3. சில சுற்றுலாப்பயணிகள், சென்னையில் கடற்கரஒயோரம் உடற்பயிற்சி செய்த சிலர், ஏதோ பண்டிகையையொட்டி கடலில் குளிக்கச்சென்ற இந்துக்கள், வேளங்கண்ண்ணி போன்ற இடங்களில் கடலோர தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடச்சென்ற கிறித்துவர்கள்.
மொத்தத்தில் இந்தியாவில் பேரிழப்பு மீனவர்களான ஏழைகள்தான்.
ராட்சத அலைகள் பற்றிய புரிதல் பசிபிக் கடல் வாசிகளுக்கு இருக்கும் அளவுக்கு இந்துமாக்கடல் வாசிகளுக்கு இல்லை என்றார் ஒரு நிபுணர்.
அதேபோல கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி இருக்கும் என்பது நில அறிவியலாளர்களுக்குத் தெரிந்துள்ளது, ஆனால் அரசுகளுக்கு இந்தப் புரிதல் இல்லை. இரண்டு மணிநேர அவகாசம் இருந்துள்ளது இந்தியர்களுக்கு. (இலங்கைக்கு 1.5 மணிநேரம்). இதற்குள் கடலோர கிராமங்களில் உள்ளவர்களை ஓரளவுக்கு அரை கிலோமீட்டர் உள்ளே கொண்டுவந்திருக்க முடியும். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்களை ஹெலிகாப்டர் மூலம் சீக்கிரமாக உள்ளே வரவைக்க முடிந்திருக்கும். உயிர்ச்சேதத்தைப் பெருமளவுக்குக் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
நன்றி - பத்ரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இராட்சதன் சுனாமி- இணையத்தில் வெளியான தகவல்களின் குறிப்புக்கள்
Hindu.com
.....தென்கிழக்காசியாவின் பல பிரதேசங்களில் பிரதிபலித்த கடற் கொந்தளிப்புக்குக் காரணம் சுமத்ரா தீவின் பண்டா அகே (Banda Aceh) எனும் இடத்திலிருந்து 257கி.மீ தூரத்தில் நிலநடுக்க மையத்தை(epicentre) கொண்டு அமைந்த கடற்கீழ் நிலநடுக்கமே...இது 40 வருடகாலத்தில் வரலாறு காணாத 8.9 றிச்டரை எட்டிக் காணப்பட்டது.....நிலநடுக்கம் சுமத்ரா தீவில் அமைந்திருப்பினும் விளைவுகள் 1800 கி.மீ அப்பாலிருந்த நாடுகளான இலங்கை, தென் இந்தியா போன்றவற்றிலியே கொடூரமா பலி எடுத்துள்ளது....
இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதில் அர்த்தம் இல்லை. உயிர்களை எண்ணிக் கூறுவது முறையும் அல்ல. எதிபார்க்காத அளவுக்கு உயிப்பலி இடம்பெற்றுள்ளது
Rueters.com
........"எல்லா இடமுமே சுடுகாடாக மாறிக் கிடக்கு..."-செல்லப்பா, 55-வயது நிரம்பிய மதுரை வாசியான முதிய மீனவர்.........
தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆதவின்றி ஒதுங்கி நின்ற சடலங்களால் நிரம்பி இருந்தது...மனது இன்னமும் ஒருகியே கிடக்கிறது
........."இலங்கையில் நிலமை மிகவும் ஆபத்தான நிலையின் காணப்படுகிறது"- Peter Rees, of the International Federation of the Red Cross in Geneva, told CNN....
......இலங்கையின் 5% ஆன சனத்தொகை சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. உலக செஞ்சிலுவைச் சங்கம் உடனடி உதவி வேண்டுகோளை விடுத்துள்ளது....
தமிழ்நெட்
.....பெரும் எண்ணிக்கையிலான சிறவர்கள் சுனாமி அலைகளிற் சிக்குண்டு கோரமாகச் செத்து மடிந்துள்ளனர். மேலும் காயமுற்ற சிறுவர் பலர் இன்னமும் முதலுதவி இன்றித் தவிக்கின்றனர்.....
.....முல்லைத்தீவு, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன......
தகவல்கள குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கப்படுகின்றன
நன்றி - விகடன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|