12-26-2004, 07:19 AM
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது சேதவிபரம் அறியமுடியவில்லை, முழுமையான தகவல் கிடைத்தவுடன் அறியத்தருகிறேன்,
|
மட்டக்களப்பில் ......
|
|
12-26-2004, 07:19 AM
மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது சேதவிபரம் அறியமுடியவில்லை, முழுமையான தகவல் கிடைத்தவுடன் அறியத்தருகிறேன்,
12-26-2004, 07:34 AM
மக்கள் பாரியளவில் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருப்பதாக அறியமுடிகிறது, தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மேலதீக விபரங்களை பெறமுடியவில்லை
12-26-2004, 07:38 AM
கொழும்பிலும் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது, நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்த சிரமமாக உள்ளது, அனேக தொலைபேசி இணைப்புக்கள் வேலை செய்யவில்லை!
12-26-2004, 07:45 AM
பல கிராமங்கள் முற்றாக அழிந்து போய்யுள்ளதுதாக தகவல் கிடைத்துள்ளது,
12-26-2004, 07:50 AM
திருகோணமலை பிரதேசமும் பாரியளவில் பாதிக்கப்படுள்ளது, மூதூர் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
12-26-2004, 07:54 AM
மன்னா உங்கள் உடனுக்குடன் தகவலுக்கு நன்றி பல தொலை பேசி இணைப்புக்கள் வேலை செய்யவில்லை என்றுதான் நானும் அறிகிறேன்...
[b][size=18]
12-26-2004, 08:08 AM
பல பிரதேசங்கள் நீர்மட்டம் 6 அடிக்கும் உயர்வாக காணப்படுகின்றதாம்,
12-26-2004, 08:12 AM
சற்று முன்னர் வெள்ளவத்தை, தெகிவளை கடல் பிரதேசத்துக்கு அண்மிய பகுதிகள் சிறிய கடல் கொந்தளிப்புக்கு உட்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
12-26-2004, 08:19 AM
நாட்டின் எல்லா பகுதியிலும் இக் கடல் கொந்தளிப்பு இருக்கிறதா அல்லது கிழக்கு மட்டும் தானா?
[b][size=18]
12-26-2004, 08:19 AM
மூதூர் வைத்தியசாலையில் இறந்தவர்களின் 100க்கும் அதிகமானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
12-26-2004, 08:26 AM
Tsunami causes major catastrophe along Sri Lanka's East coast
[TamilNet, December 26, 2004 04:12 GMT] Reports say that a sudden rise in sea-level along the coastal areas in Sri Lanka, a phenomenon known as tsunami, has created a major catastrophy including loss of lives and property. Trincomalee town is submerged under 6 feet of sea water and bodies of several residents of coastal towns in Batticaloa district are seen floating, according to recent reports. TamilNet is awaiting further details. Reports also say that most of the coastal towns across Sri Lanka including Thalaiyadi in the North and some villages south of Colombo are also inundated with sea-water entering mainland. Details of damages to these areas are not yet known. Sources from Colombo said that water levels in affected coastal towns near Colombo are receding and that life is returning back to normal in Colombo. Telephone lines to towns in Trincomalee, Batticaloa and Amparai districts are completely cutoff, and only satellite-based communication is available to these areas. Experts at the U.S Geological Survey said that 8.5 Richter scale earth quake that hit Indonesian islands of Sumatra recently was the cause of the temporary rise in the sea-level around the island of Sri Lanka. The phenomenon, tsunami, is a series of waves of extremely long wave length and long period generated in a body of water by an impulsive disturbance that displaces the water. Tsunamis are primarily associated with earthquakes in oceanic and coastal regions. Landslides, volcanic eruptions, nuclear explosions, and even impacts of objects from outer space (such as meteorites, asteroids, and comets) can also generate tsunamis. As the tsunami crosses the deep ocean, its length from crest to crest may be a hundred miles or more, and its height from crest to trough will only be a few feet or less. They can not be felt aboard ships nor can they be seen from the air in the open ocean. In the deepest oceans, the waves will reach speeds exceeding 600 miles per hour (970 km/hr). When the tsunami enters the shoaling water of coastlines in its path, the velocity of its waves diminishes and the wave height increases. It is in these shallow waters that a large tsunami can crest to heights exceeding 100 feet (30 m) and strike with devastating force. Tamilnet
12-26-2004, 08:42 AM
kavithan Wrote:நாட்டின் எல்லா பகுதியிலும் இக் கடல் கொந்தளிப்பு இருக்கிறதா அல்லது கிழக்கு மட்டும் தானா?இலங்கையின் கிழக்கு பகுதி மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது, மற்றைய பிரதேசங்களும் சிறியளவிலான பாதிப்புக்குட்பட்டுள்ளது, மட்டங்களப்பில் தொடர்ந்து அபாய நிலை நீடிக்கின்றது, கடல் மட்டம் கூடிக் குறைந்த வண்ணம் உள்ளது
12-26-2004, 08:46 AM
நன்றி அண்ணா பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் கொழும்பின் கரையோர பகுதிகளில் தற்போது கடல் மட்டம் நன்றாக வற்றி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிப்பதாக அறிந்தேன் இது உண்மையா
[b][size=18]
12-26-2004, 08:51 AM
சரியான தகவல்களை பெறமுடியவில்லை, தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து கடல் கொந்தளிப்பு உள்ளதாக அறியமுடிகிறது,
12-26-2004, 08:53 AM
<b>கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நூற்றுக்கு மேற் பட்ட கரையோக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. </b>
ஜ நமது செய்தியாளர் மட்டக்களப்பிலிருந்து ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2004, 11:08 ஈழம் ஸ பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரக் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி எங்கும் சோகமயமாகக் காட்சியளிப்பதாக எமது செய்தியாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக் மட்டக்களப்பு ,திருகொணமலை,மூதூர் ,கல்லாறு ,மருதமுனை ,கல்முனை ,நிந்தவ10ர் சாய்ந்தமருது ,களுவாஞ்சிக்குடி ,திருக்கோவில் அக்கரைபற்று ,கின்னியா உட்பட 25 ற்கும் மேறபட்ட பிரதேசங்கள்; கடலில் அடி;த்துச் செல்லப்பட்டுள்ளது வாவி மற்றும் ஆறுகளை அண்டியுள்ள கரையோக் கிராமங்களே பெரிதும் பாதிப்புக்களாகியுள்ளது நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ளார்கள் ,மேலும் நூற்றுக் கணக்கானோர் பற்றி தகவல்கள் இல்லை.வீடுகள் வாகனங்கள் ,உடமைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணிக்கும் 9.00 ற்குமிடையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புகாரணமாக மக்கள் தமது இருப்பிடங்களில் கடல் நீர் வந்ததையடுத்து அகப்பட்ட பொருட்களுடன் அல்லோல கல்லோலப்பட்டு வெளியேறி மேட்டு நிலங்களிலுள்ள பொது இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளார்கள். வாவி யிலும் கடலிலும் பல சடலங்கள் மிதந்துசென்றுள்ளன.குழந்தைகளின் சடலங்களே அதிகம் என நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்கள். 3 அடி முதல் 12 அடி வரை விததியாசமான நிலையில் கடல் கெந்தளிப்பு காணப்பட்டுள்ளது.இதேவேளை வடக்கில் முல்லைத்துPவு யாழ்ப்hணம் பகுதிகளில் கடல் உடபகுதிகளில் நுழைந்ததால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதே வேளை இலங்கையின் ஏனைய பகுதிகளான வத்தளை, தங்காலை ,காலி ,மாத்தறை,புத்தளம் ,களுத்துறை போன்ற இடங்களிலும் கடல் கொந்தளிப்பு காரணமக ஏராளமான உயிரிழப்புகள் ,உடமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தகவல்கள் வரும் http://www.eelampage.com/index.shtml?id=20...61109018580&in=
[b][size=18]
12-26-2004, 08:54 AM
நேற்று கடவுளின் பிறந்த நாளை கொண்டாடிய மக்களுக்கு கடவுள் கொடுக்கும் பரிசு இதுதானா?
12-26-2004, 09:25 AM
<b>திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தமிழர் இறப்பிலும் அழிப்பிலும் மகிழும் பேரினவாதிகள் </b>
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2004, 11:43 ஈழம் ஸ ஏராளமான கிராமங்களும் 160க்கும் அதிகமான தமிழ் மக்களும் திடீரென இறந்தமை குறித்து சிங்கள இனவாதிகளும் ஜே.வி.பி. இனவிரோதிகளும் தங்கள் திருப்தியை கேளிக்கை களியாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். திடீரென ஏற்பட்ட தாழ்வமுக்க வழிமண்டலத்தால் கரையோரத்தில் வெள்ளப்பெருக்கும் நிலநடுக்கமும் ஏற்பட்டதையடுத்து பல தமிழ்க் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் இயற்கை அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர். இப்படி திடீரென நூற்றுக்கணக்கான தமிழர்கள் இறந்துள்ளமை தொடர்பாக ஜே.வி.பி. உட்பட பல இனவிரோதிகள் மறைமுகமாக தங்கள் திருப்தியையும் மனமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சிங்கள மக்களின் ஏகபோக உரிமையுள்ள மண் என்றும், அதிலே அங்குலம் அங்குலமாக உரிமை கொண்டாட நினைத்த அந்நிய இனமான தமிழருக்கு இயற்கை நல்ல பதிலளித்துள்ளதாகவும் ஜே.வி.பி. உறுப்பினரொருவர் கருத்துக் கூறியுள்ளார். இயற்கை தண்டனை வழங்கியுள்ள நிலையில் சிங்கள இனமும் விழித்தெழுந்து ஈழத் தமிழரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேற்ற முன்வரவேண்டுமென்றும் ஜே.வி.பி;. இனவாத உறுப்பினரொருவர் அழைப்பு விடுத்துள்ளார். ஈழத்திலும் சர்வதேசத்திலும் வாழும் ஈழத் தமிழர்கள் விழித்தெழுந்து ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பதுடன், ஈழத் தமிழரின் ஒருமித்த பங்களிப்பையும் ஒற்றுமையையும் வெளிக்காட்டும் இறுதித் தருணம் இதுவென தமிழின ஆர்வலர் ஒருவர் கருத்துக் கூறியுள்ளார். சர்வதேசத்தில் கருத்து வேற்றுமை கொண்ட தமிழ் ஊடகங்களும், தங்களது முரண்பாடுகளைக் களைந்து, இந்த இக்கட்டான சூழலில் ஒருமித்த தமிழின உணர்வை வெளிப்படுத்த இது இறுதித் தருணமென்றும், குறிப்பாக கனடிய ஊடகங்கள் தங்களது வேற்றுமைகளைக் களையும் இறுதித் தருணம் இதுவென்றும், இனவாதிகளின் கபட நாடகங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் தமிழின உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமென்றும் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். திடீரென ஏற்பட்ட இந்த அழிவினால் ஏராளமான கிராமங்கள், தீவுப்பகுதிகள், கரையோரப் பகுதிகள் அழிந்து போயுள்ளதாகவும், மக்கள் அல்லோலகல்லோலப் படுமளவிற்கு இயற்கை திடீர் அழிவுகளையும் களேபரங்களையும் உருவாக்கியுள்ளதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/index.shtml?id=20...61143088581&in=
[b][size=18]
12-26-2004, 09:33 AM
திடீரென இடம்பெற்ற 8.5 மக்னிரியூட் வேகப் புயற்காற்று மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான தமிழ்க் கிராமங்களும் தமிழர் தாயகப் பகுதிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'> |
|
« Next Oldest | Next Newest »
|