12-05-2004, 08:48 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/SCARAB3.jpg' border='0' alt='user posted image'>
<b>பூஞ்சோலை எதற்கு
என் சோலை போதும்
மாமரத்து மலரெடுத்து
மகத்தான கவி படிக்க....
மலருக்கு உண்டு ஓர் அழகு
அது கண்டு மயங்கும் இளைய வண்டு
மதியிழந்து வந்து
மண்டியிட்டுப் போகும்
வாடா மலரை வாட வைக்க....!
மலருக்குள் உண்டு அமிர்தம்
அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!
மலருக்குள் உண்டு மென்மை
அது உணரத் துடிக்கும் வண்டு
மெல்ல வரும் பதுமையாய்
பதுங்க மலர் இடங்கொடுத்தால்
கட்டும் மடம் மலரே கலங்க....!
மலருக்கு உண்டு உணர்வு
அது தேடிக் கலக்க வரும் வண்டு
உறவில் தன் நிலை மட்டும் கொள்ளும்
சுழன்றடிக்கும் சிறகுக் காற்றில்
மலர் படும்பாடு உணரா....!
இத்தனையும் வக்கணையாய் செய்து
மலர் தாண்டி மலர்
வசந்தம் கண்டு களித்து
வந்த வழி போகும் வண்டு...!
மலர்கள் கதறி அழும் கோலம்
மனமிருந்தால் மன்னிக்காது....!
பாவம் வண்டு...
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....
மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!
இப்போ யாருக்காய் வருந்துவது...
மலருக்கா வண்டுக்கா....???!
யாருக்காயும் ஏங்க முடியவில்லை
வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!
வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே
நாகரீகப் போர்வை போர்த்தி...!</b>
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<b>பூஞ்சோலை எதற்கு
என் சோலை போதும்
மாமரத்து மலரெடுத்து
மகத்தான கவி படிக்க....
மலருக்கு உண்டு ஓர் அழகு
அது கண்டு மயங்கும் இளைய வண்டு
மதியிழந்து வந்து
மண்டியிட்டுப் போகும்
வாடா மலரை வாட வைக்க....!
மலருக்குள் உண்டு அமிர்தம்
அதில் அமிழ்ந்தே களிக்க
காத்திருக்கும் கருவண்டு
கண்டதும் கொண்டதும்
கதை முடித்து காலி செய்யும்...!
மலருக்குள் உண்டு மென்மை
அது உணரத் துடிக்கும் வண்டு
மெல்ல வரும் பதுமையாய்
பதுங்க மலர் இடங்கொடுத்தால்
கட்டும் மடம் மலரே கலங்க....!
மலருக்கு உண்டு உணர்வு
அது தேடிக் கலக்க வரும் வண்டு
உறவில் தன் நிலை மட்டும் கொள்ளும்
சுழன்றடிக்கும் சிறகுக் காற்றில்
மலர் படும்பாடு உணரா....!
இத்தனையும் வக்கணையாய் செய்து
மலர் தாண்டி மலர்
வசந்தம் கண்டு களித்து
வந்த வழி போகும் வண்டு...!
மலர்கள் கதறி அழும் கோலம்
மனமிருந்தால் மன்னிக்காது....!
பாவம் வண்டு...
மலரின் போலித்தனம் அறியா
வஞ்சனையில் சிக்கியதறியா
திமிரோடு மலர் விட்டு மலர் பறக்க....
மலரின் சொத்தாய் சுமையாய் மகரந்தம்
அது காவ அழைக்கும் மலருக்கு
மாதவி கோவலனாய் வண்டு....!
அறியாமல் பற்றும் மலரின் சுமை கொண்டு
காவிச் செல்லும் உடல் நோக....!
இப்போ யாருக்காய் வருந்துவது...
மலருக்கா வண்டுக்கா....???!
யாருக்காயும் ஏங்க முடியவில்லை
வஞ்சனையாய் வண்டை அழைத்ததும்
மலரல்லோ....
வந்த வேலை முடிந்தது என்று
தேவை முடித்து
வஞ்சகமாய் எண்ணியதும் வண்டெல்லோ...!
வஞ்சனைக்கு வஞ்சனை
வாஸ்தவமான தீர்ப்பு
இயற்கை எழுதியது....!
அதை....
மனிதரும் திருப்பி எழுதுகிறார்
தமக்குள் தாமே
நாகரீகப் போர்வை போர்த்தி...!</b>
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->