Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சவுதியில் அமெரிக்க தூதரகத்துள் தீவிரவாதிகள்...!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40601000/jpg/_40601061_jeddah203.jpg' border='0' alt='user posted image'>

<b>ஜெட்டா யுஎஸ் தூதரகத்தில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை பிடித்தனர்</b>

சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் அமெரிக்கர்கள் உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது.

இன்று பிற்பகலில் தூதரகத்தின் அருகே பலத்த குண்டு வெடிப்புச் சத்தமும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சுடும் சத்தமும் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தூதரகத்துக்குள் புகுந்துவிட்டனர்.

இப்போது அவர்களுக்கும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் மற்றும் சௌதி போலீசாருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. தூதரக வளாகத்துக்குள் இருந்து தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டவாறு உள்ளது.

அந்தப் பகுதிக்கு சௌதி ராணுவ கமாண்டோக்கள் விரைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு காரணமாக தூதரகத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்து எரிந்து கொண்டுள்ளது.

தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் காலின் கூறுகையில், இன்னும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து ரியாதிலும், தரன் நகரிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன என்றார்.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் சூசன் பிட்மேன் கூறுகையில், இந்த துப்பாக்கிச் சண்டையில் தூதரகத்துக்குள் எத்தனை சாவுகள் நேர்ந்தன என்று தெரியவில்லை. எத்தனை அமெரிக்கர்கள் இறந்தார்கள் என்றும் தெரியவில்லை என்றார்.

சௌதியில் 2003ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை 90 பேர் வரை அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்பது நினைவுகூறத்தக்கது.

thatstamil and bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)