Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
இன்னுமொரு விடயம் குருவிகளே
நீங்கள் சொல்கிறீா்கள் நாங்கள் அனைவரும் வெளிநாடு வராமல் தாயகத்திலிருந்திருந்தால் ஒன்றாக இணைந்து போராடி தாயகத்தை பெற்றிருக்கலாம் என்று. குருவிகளே போராட்டத்திற்கு நிதி யாா் வழங்குவது? வெளிநாடுகளில் உள்ளவா்கள் இதில் முக்கியமாக இருக்கிறாா்கள். தயவு செய்து தற்பெருமை பேசுகிறேன் என்று நினைக்காதீா்கள். இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் கடன் வாங்குகிறது. நாங்கள் யாரிடம் கடன் வாங்குவது எமது போராட்த்திற்கு?
இன்று வெளிநாடுகளில் தமிழா்கள் வாழ்வதால் தான் எத்தனையோ நாடுகள் எமது நாட்டுப்பிரச்சனையில் தலை நுழைக்கின்றன என்பதை மறந்து விடாதீா்கள். இன்று சுவிசில் தமிழா்கள் இல்லையென்றால் சுவிசில் வாழ்கின்றவா்களில் 90வீதமானவா்கள் தமிழீழம் என்றால் என்ன என்று கேட்பாா்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாய் மண்... உங்களை தவறாக உங்கள் பெற்றோர் வழிநடத்தியதாக ஒத்துக்கொள்கிறீர்கள் தானே... எனி உங்களையும் உங்கள் பெற்றோரையும் வழி நடத்தி தாயக விடுதலைக்காகப் போராட வேண்டியது உங்கள் கடமை... முதலில் விடுதலை பெற்றுக் கொள்வோம்...பிறகு தொழிற்கல்வி பெற்று தொழில் நிறுவனங்கள் அமைப்பது பற்றி யோசிப்போம்....!
சிறைகளில் இருக்கும் இளைஞர்கள் சில காலத்துக்கு முன் சர்வதேச அரசியல் ஆக்கப்பட்டிருந்தார்கள்... அவர்களுக்காக கருசணை காட்டியோர் இன்று மெளனமாகிவிட்டனர்...! இலங்கையில் சட்டமா அதிபரைத் தொடர்பு கொண்டால் விபரங்கள் தருவார்... சட்டத்தரணிகள் ஊடாகவும் விபரம் திரட்டலாம்...இணையங்களில் இவர்களின் (சட்டத்தரணிகள்) விபரங்கள் உண்டு...பெற்றுக் கொள்ளவும்...!
நாங்கள் புலிக்கோ இல்லை எந்த அமைப்புக்குமோ ஆதரவாளர்கள் என்று இல்லை... தமிழர் தேசியம் தேசம் தமிழீழ விடுதலைக்காக இதய சுத்தியோடு செயற்படுபவர்களை ஆதரிக்கின்றோம்..... மனிதருக்குள் கருத்து வேறுபாடுகள் சகஜம்...அதேபோல் ஆசைகளும் அதிகம்...இலட்சியத்துக்கு அப்பால் ஆசைக்கும் சலுகைக்கும் உட்படுவோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாற்று குழுக்களை அமைத்து பிழைக்கிறார்கள்... மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் கொள்கைகளை ஆதரிக்கவில்லையே....!
வன்னியில் விளையாட்டு மைதானம் கட்டுவதென்று நாம் கூறவில்லை.... நீங்கள் தான் சொன்னீர்கள்...!அதை தீர்மானித்தது யார் என்றெல்லாம் உங்கள் தகவலில் முன்னர் சொல்லவில்லை...அது எம் தவறல்ல....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
குருவியின் கருத்து நல்ல கருத்து
அனால் பழயகதையை மறந்திட்டார்
போல் இருக்கு ????????????????? :roll:
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே என்ன சின்னப்பிள்ளைத்தனமா பேசுகிறீா்கள்.
நாங்கள் மைதானம் கட்டுவது பற்றி சொன்னோம். ஆனால் நாங்கள் பிரதேசபிரிவினை கொண்டுவரவில்லை. அதை கொண்டு வந்தது நீங்கள். அதை தீா்மானித்தது யாா் என்று தெரியாமல் நீங்கள் எப்படி தான் எழுதினீா்களோ தெரியா.
குருவிகளே உங்கட கருத்தை நீங்களே கொஞ்சம் வாசித்துப்பாருங்க. ஒரு விடயம் விளங்கும். நீங்க சொல்றீங்க மனிதா்கள் பல விதம் பல ஆசைகள் என்று. எங்கோ ஒரு தமிழ் குழு முரண்பட்டால் ஏன் அனைவரையும் தவறாக பாா்க்கிறீா்கள். வெளிநாட்டிற்கு வந்த அனைவரும் ஒரே மாதிரி இல்லை.
குருவிகளே முதலில் விடுதலை பெற்றுக்கொள்வோம் என்பது உங்கள் தவறான கருத்து. விடுதலை பெற்றுத்தர தாங்கள் இருக்கின்றோம் என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளாா்கள். அதை கட்டியெழுப்பும் பொறுப்பு எங்களுடையது என்று கூறினாா்கள். எமக்கு ஒரு தேசம் கிடைக்கப்போவது உறுதி. நாங்கள் நம்புகிறோம் ஏன் நீங்கள் நம்புகிறீா்கள் இல்லை? வெள்ளம் வரும் முன்னம் அணை கட்டுவது போல. எமது நாடு கிடைப்பதற்கு முன்னம் அதனை கட்டியெழுப்பும் முயற்சியில் நாங்கள் எப்பவோ தொடங்கி விட்டோம்.
குருவிகளே எனக்கு இலங்கை சட்டமா அதிபா் யாா் என்றே தெரியாது. உங்களால் முடிந்தால் நீங்கள் எனக்கு இவா்களின் முகவரியை எடுத்துத்தாருங்கள் நான் தொடா்பு கொள்கிறேன். அல்லது இங்கே வரும் தமிழ் நெஞ்சங்கள் யாரிற்காவது தெரிந்தால் தந்துதவுங்கள். நான் வருகின்ற வருடம் முதல் முறையாக தாயகம் வரலாம் என திட்டமிட்டுள்ளேன். நேரில் சென்றே இவா்களை பற்றி அறிந்து கொள்கிறேன்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதென்ன பழைய கருத்து..சொன்னால் மீட்டிப் பார்க்கலாம்....! பழைய எங்கள் கருத்தை என்றால் நீங்கள் அவற்றை எங்கோ தவறாக நோக்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:வணக்கம் குருவிகள்
நாங்கள் எங்களுடைய பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணவில்லை. எமது விடுதலை போரளிகளும் போராட்டம் பற்றியும் எங்களிற்கு உங்களை விட ஆா்வமும் உற்சாகமும் உள்ளது. உதரணமாக சொல்லப்போனால் நானும் எனது கழக நண்பா்களும் வன்னியில் ஒரு இலட்சம் பிராங் செலவில் ஒரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தை கட்டி வருகிறோம். எங்களுடைய வயது என்ன? நாங்களும் இளைஞா்கள் தான். உங்களை விட எங்களிற்கு மாவீரா் பற்று அதிகம் இருக்கிறது. நாங்களும் வயதுக்கோளாறுகளில் பலவற்றை பண்ணியவா்கள் தான். அதே நாங்கள் தான் இன்று எமது தாயகத்தை கட்டியெழுப்ப நினைக்கின்றோம். நீங்கள் உலக இனங்களில் எங்காவது ஒரு இளம் சமுதாயம் இவ்வளவு செலவு செய்து ஒரு காரியத்தை செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீா்களா?
நீங்கள் சொன்னது போல நாங்கள் கெட்டவா்களாவே இருந்து விடுகிறோம். எங்களை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்தீா்கள். இன்று தாயகத்திலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினா் திரு. பாலகுமாரன் அவா்கள் சொன்னாா் இங்கே நாங்கள் விடுகின்ற பிழைகளை தாங்கள் விடுகின்ற பிழைகளாவே கருதுகிறோம். நாங்கள் அனைவரையும் அரைவணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று சொன்னாா். வெளிநாடுகளில் எமது இளம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு தமிழா் என்று சொன்னால் அது அவராகத் தான் இருக்க முடியும். அவா்கள் எங்கே...... நிங்கள்....?
இதை நாங்கள் கேட்டமா...நீங்கள் உதாரணத்துக்கு வழியில்லாமல் பிடித்த உதாரணம் இது...! இதையே நாங்கள் தாயகத்தில் ஒரு உள்ளக விளையாட்டு மைதானம் கட்டுகின்றோம் என்று எழுதி இருக்கலாமே...உங்களுக்குள் ஏன் அப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது... விடை சொல்லுங்கள் அதன் பின்னரே மேற்கொண்டு உங்களோடு கருத்தாடுவதால் பயன்கிட்டும்...!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே
நீங்கள் எமது தமிழ் இளைஞா்கள் வெளிநாடுகளில் தவறாக வாழ்கிறாா்கள் என்ற ஒரு கருத்தை முன்வைத்தீா்கள். அதை மறந்து விடாதீா்கள். அதனால் தான் நான் அதை குறிப்பிட்டேன். தற்பெருமை பேசுவதற்காக அல்ல. வேறு உதாரண் கேட்கிறீா்களா? சுவிசில் உள்ள புதிய நீலப்பறவைகள் என்ற விளையாட்டுக்கழகம் தாயகத்தில் (இடம் குறிப்பிடவில்லை பிறகு நீங்கள் அதற்கும் பிரதேசவாதம் என்று சொல்வீா்கள்) ஒரு மைதானம் கட்டுவதற்கு நிதி உதவி வழங்க முன் வந்துள்ளது. தயவு செய்து இதையும் நீங்கள் கேட்டீா்களா என்று சொல்லிவிடாதீா்கள். வேறு உதாரணம் கேட்டீா்கள். நான் கூறினேன்.
குருவிகளே வன்னி என்ன இந்தியாவிலா உள்ளது? எங்களிற்கு வன்னியும் எனது தாயகம் தான். மன்னாரும் எனது தாயகம் தான். அம்பாறையும் எனது தாயகம் தான். நாங்கள் பிரித்துப் பாா்க்கவில்லை. நீங்கள் தான் பிரத்துப்பாா்க்கிறீா்கள்.
வேறு உதாரணம் வேண்டுமா? அல்லது போதுமா?
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
சரி குருவிகளே நான் துாங்கச் செல்கிறேன். நாளை எனக்கு வேலை. மீண்டும் நாளை உங்களை சந்திக்கினறேன்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Rajan Wrote:குருவியின் கருத்து நல்ல கருத்து
அனால் பழயகதையை மறந்திட்டார்
போல் இருக்கு ????????????????? :roll:
அது என்ன கருத்து என்று இணைப்பைக்கொடுத்தால் நல்லது.. :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதென்ன பழைய கதை..உவர் இராஜன் கனகாலமா களத்தில இருந்ததற்காக கதைவிடேலாது...அதென்ன பழைய கதை என்றால்... கதையைச் சொன்னா நாங்க கதைக்கு என்ன அர்த்தம் என்று விளக்கக் கூடியதா இருக்கும்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவிதன் பழையதை புறக்கணிக்கும் நிலையில் நாங்கள் இல்லை... பழையதற்குள் பொக்கிசங்கள் இருக்கு அவற்றையும் புதுமையோடு கலக்கவே விரும்புகின்றோம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 44
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
இது எங்கும் உருவாகக்கூடிய பிரச்சினை. ஆனால் பொருளாதார வசதிகள் நிறைந்த ஆயுத சுதந்திரம் நிறைய இருக்கின்ற நாடுகளில் இவை பேரிழப்புக்களை ஏற்படுத்தி விடும்.
பாலியல் முதிர்ச்சி உள்ளவர்கள் எல்லோரும் நல்ல பெற்றோர்களாகி விட முடியாது. இளைய தலைமுறையினரிற்கும் பெற்றோர்களிற்கும் இருக்கின்ற பாலம் பாசப்பிணைப்பு உளுத்துப்போய்விடுவதாலும் இந்த Gangster கலாச்சாரம் உருவாகி விடுகின்றது.
எண்பதுகளில் இலங்கையைவிட்டு மேற்கத்திய நாடுகளிற்கு இளைஞர் யுவதிகளாக சென்றவர்களின் குழந்தைகள்தான் இன்று மேலே பேசப்படுகின்ற குளப்படிக்கார குழுவினர் என்பது சாதாரண வருடக்கணக்கில் புரிந்து விடும்.
எங்களின் கலாச்சாரம் பொதுவாக ஒரு கட்டுப்பாட்டு அவதானிப்புக் கலாச்சாரமாகும். அங்கே போகாதே இங்கே போகாதே அவனுடன் பழகாதே இவனுடன் பழகாதே இரவில் திரியாதே. ஏன் என்று கேள்வி கேட்டால் பிடறி மின்னுகின்ற பெற்றோரில் இருந்து முறைத்துப்பார்க்கும் பெற்றோர் என்று பல வகை.
குழந்தைகளுடன் நண்பர்களாகப்பழகும் பெற்றோர்களும் எம்மண்ணில் இருக்கின்றார்கள் இந்த சிறிய வாதம் அவர்களைப்பற்றியது அல்ல. அவர்களின் குழந்தைகள் இந்த குளப்படி குழுக்களிலும் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.
சந்தியில் நின்றால் யாராவது அவதானித்து வந்து வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவார்கள் அதன்பிறகு என்ன மங்களம்தான் ஆகவே ஒரு விதமான பயத்தில்தான் பெரும்பாலான குழந்தைகள் வளர்கின்றன அவர்களிடம் அவர்களை நிர்வகிக்கும் சுயநிர்ணய உரிமைையை பெற்றோர்கள் வழங்காமல் தண்டனையினால் கட்டுப்பாட்டில் வைககும் பெற்றோர்களே அதிகம்.
இப்படியான கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றதும் சிலர் திடீரென கிடைத்த சுதந்திரத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் குடிபோதை அடிதடியில் மாட்டுப்பட்டு அல்லøபட்டார்கள் மற்றயவர்கள் அøலும் பகலும் உழைத்து ஊருக்கனுப்பினார்கள்.
ஆரம்பத்தில் பொதுவாக பல இளைஞர்கள் அந்த அந்த நாட்டு வெள்ளைக்காரப் பெண்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் இளமைத்துடிப்படங்கிக்கொண்டு போகவும் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்தார்கள்.
ஆணும் பெண்ணும் உழைத்தால்த்தான் ஓரளவு வாழலாம் என்ற சூழலினால் பிள்ளைகளுடன் மினக்கெடும் நேரமும் இந்தப் பெற்றோரிடம் இல்லாது போக விரிசல் பெரிசாகி இடையில் பள்ளத்தாக்குகள் உறவில் தோன்றி விட பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளை கை கழுவி விட்டுவிட்டார்கள்.
சிறியவர்களாக இருக்கும் வரை இவர்களின் பெற்றோர்கள் ஊரில் இவர்களை எப்படி அடித்து அடக்கி வைத்தார்களோ அதே முறையை இவர்களும் மேற்கொண்டு அடக்கிவைத்தார்கள்
பெற்றோர்களின் கலாச்சாரமும் பிள்ளைகளின் கலாச்சாரமும் வேறுபாடுகள் கொண்டிருப்பது வழமை அது மேற்கத்திய நாடுகளில் பூதாகரமான வேறுபாடுகளுடன் மாறுபட்டுக் கொண்டதும் இந்தப்பிள்ளைகள் கட்டாக்காளைகளாகத் திரிவதற்கு இன்னும் ஒரு காரணம் ஆகும்.
அன்புடன் Jaya
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தம்பி தாய் மண்...
நீங்கள் நிச்சயம் விரைந்து தாயகம் சென்று பார்க்க வேண்டும் ... அப்பதான் அங்கு நிலவும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும்....அங்குள்ள மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கின்றனர்...அகதி முகாம்களில்.....மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறையுள்.... இவற்றைப் பெறமுடியாத நிலையில் பல குடும்பங்கள்... அவர்கள் இந்தப் போரினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்... பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இத்தனை நாள் சென்றாலும் அவர்களின் நிலையில் முன்னேற்றம் இல்லை...ஆனால் தாயகத்தில் உள்ள கோவில்களுக்கு குடை முழுக்கும் கும்பாவிசேகமும் வெளிநாட்டு பணத்தில் கிரமமாக நடத்தி முடிக்கப்படுகின்றன...!
நீங்கள் உங்கள் உதவியைச் சொல்கிறீர்களே...முத்தையா முரளிதரனும் பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து வட தமிழீழத்தில் மைதானம் அமைக்கின்றார்... அதற்காக அவர் தமிழர்கள் உரிமைப் போராட்டத்தை நேரடியாக ஆதரிக்கின்றாரா.... இல்லை....! அவருடைய திறமைக்குக் கூட இலங்கை அணியில் முழு மதிப்பும் இல்லை...இதுகால் வரைக்கும் ஒரு பதவி கூட அவருக்கு அணியில் அளிக்கப்படவில்லை....ஆனால் அவர் ஒரு முன்னாள் உலக சாதனையாளர்... ஒப்பீட்டளவில் இள வயதினர்...1972 பிறந்தவர்....! அவர் இந்த உதவியைச் செய்யக் காரணம் அப்பிரதேச மக்களின் விளையாட்டின் மீதான ஆர்வமே அன்றி...தான் இளைஞன் சேவை செய்கிறேன் என்று சொல்வதற்கல்ல....ஒருவேளை அவர் அப்படிச் சொன்னாலும் பறவாயில்லை....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளான பல இளைஞர்கள் வெளிநாட்டில் ஒரு பத்து வருடம் வசித்தவுடன் தாயகத்தை பற்றி போடும் எடை இருக்கே... அப்பப்பா கேட்க முடியாது...ஏதோ மேற்குலகின் பிரபுக்கள் தாங்கள் தான் என்பது போலக் கதை...மேற்கின் மக்கள் கூட ஈழத்தை மதிக்கின்றார்கள்...அவர்களுக்குப் புரிகிறது ஈழத்தின் புவியியல் அரசியல் வாழ்வியல் தன்மைகள்....ஆனால் சொந்த மண்ணின் வாரிசுகளுக்கு புரியாதது வேதனை... வேடிக்கை...!
புலிகள் எப்போதும் சொல்லவில்லை நாங்கள் ஈழம் எடுத்துத் தாறம் நீங்கள் கட்டுமானத்தைச் செய்யுங்கள் என்று... இது விடுதலைப் புலிகள் பற்றி அறியாதவர்களின் கருத்து...! புலிகள் வெறும் இராணுவ அமைப்பல....அவர்கள் இராணுவ... சமூக ... அரசியல் அமைப்பினர்...! அந்த அமைப்பு விடுதலைக்குப் பின் தாயக கட்டுமானத்திற்கு வெளியாரிற்காக காத்திருக்கும் கையாலாகாத்தனத்தில் இல்லை.... தொண்ணூறுகளில் பாடசாலைக் காலத்தில் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் கண்காட்சி ஒன்றிற்குச் சென்ற வேளை... அவர்கள் எதிர்காலத் தமிழீழம் பற்றிய திட்டமிடல் ஒன்றைக் காட்டி விபரித்தார்கள்.... அது நடைமுறைக்கு வருமானால் மேற்குலம் தோற்கும்.... அவ்வளவு நேர்த்தியான திட்டமிடல் அவர்கள் கையில்...அப்பவே நீங்கள் இப்போ கேட்டதை கேட்டோம்... இதை யார் செய்து முடிப்பது...அவர்கள் சொன்ன பதில் எங்களோடு நீங்களும்...அதனால்தான் இதை உங்களுக்கு விளக்குகின்றோம் என்று....!
அதுபோக தாயகத்திலேயே பல துறைப் பட்டதாரிகள் இருக்கின்றார்கள் அதுவும் வேலை இன்றி...! அவர்களையும் அவர்களுடைய திறமைகளையும் முழு அளவில் பாவித்தாலே துரித வளர்ச்சியைப் பெறலாம்...ஆனால் நிச்சயமாக மேற்குலகத் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர்களின் உதவி தேவை....அதை இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அதையே காட்டி தாயகத்தில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றால் அது கனவுதான்....!
இதையெல்லாம் சாதிக்க சொந்த நிர்வாகத்தின் கீழ் சொந்த மண் தேவை...அது இல்லாமல் இப்ப இளைஞராக இருக்கும் நீங்கள் கிழவரானாலும் இவை நடக்காத விடயங்கள்...நீங்கள் தாயகத்தில் சேவைக்காக என்று படித்ததும் வீணாகலாம்... இல்ல இன்னோர் போர் திணிக்கப்பட்டால் கட்டும் மைதானமும் பயனற்றுப் போகலாம்... உண்மையில் உங்களுக்கு தாயகத்தின் மீதுள்ள கருசணை கூட பயனற்றதாகலாம்...அப்படி ஆகக் கூடாது என்பதே எமது விருப்பமும்...!
அதற்குப் புலம் தாயகம் என்றில்லாமல் அனைவரும் ஒரே மக்களாய் இணைந்து போராட வேண்டும்... அப்போதான் சர்வதேசமும் சிறீலங்கா அரசும் எமது பலத்தைக் கண்டு உருப்படியானதைச் செய்யும்... எமது பலத்தைப் பலவீனப்படுத்தும் சிறிய சிறிய மாற்றங்கள் கூட எதிரிக்கு எம்மை வீழ்த்தப் பேருதவியாக இருக்கும்.... இன்று புலம்பெயர்ந்த இளைஞர்களில் பலர் போரை விரும்புகின்றனர் ஏன்...அப்பதானாம் பீ ஆர் கிடைக்கும்.... பீ ஆர் எடுத்தவர்களுக்கோ இல்ல தாய் தகப்பனுடன் கூடி வந்து அல்லது பிறந்து வளர்ந்தவைக்கோ... தாயம் என்பது உல்லாச பயண இடம்.... தென்னை பனை காட்டிற இடம்...இந்த நிலை விடிவுக்கல்ல...வீழ்வுக்கே வழி சமைக்கும்..இதுதான் நிஜம்...உங்கள் கதை ஒருசில விதிவிலக்கான இளைஞர்களுக்கே பொருந்தும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
குருவிகளே இப்ப என்ன சொல்ல வாறீர்; புலம் பெயர் மக்கள் தாயகத்த்திற்கு உதவினால் நல்லதா அல்லது கூடாதா
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீா்கள் என்று எமக்கு விளங்கவில்லை. நீா் என் கருத்து சொல்ல வருகிறீா் என்று உமக்கே குழப்பமாக உள்ளது. முரளிதரன் முரளிதரன் என்கிறீா்களே அவா் எமது நாட்டு விடுதலைக்கு புரிந்த பங்குதான் என்ன? அவரைப்போல் நான் ஒரு உலகப்புகழ் பெற்ற வீரனாக இருந்தால் அந்த புகழை பயன்படுத்தி எனது நாட்டை (தமிழீழம்) உலக அரங்கில் முன் நிறுத்த உதவி புரிந்திருப்பேன். எங்களிற்கு நாடு இல்லை என்று சொல்கிறீா்கள் முதலில் அதை பெற வேண்டும் என்றும் சொல்கிறீா்கள். குருவிகளே முரளிதரன் போராட்டத்தை அதரித்தாலும் அதை எப்படி புலிகள் ஏற்றுக்கொள்வது? அவா் சிறீலங்கா அணியில் அல்லவா விளையாடுகிறாா். சிறீலங்கா என்ன உங்களுடைய நாடா? இது எப்படி இருக்கு என்டா கதிா்காமா் தமிழன் என்டதாலா அவா் எங்கட நாட்டில அதிபா் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ட மாதிரி இருக்கு. முரளிதரனின் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
குருவிகளே நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினா்கள் வெளிநாடுகளில் ஆற்றிய உரை கேட்பதில்லை என்று நினைக்கின்றேன். புதுவை இரத்தினதுரை அவா்கள் சென்ற ஆண்டு சுவிசிற்கு வந்த போது எமக்கு சொன்னது, உங்களிற்கு ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கித் தருகிறோம் நீங்கள் அங்கு வந்து போராட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. குருவிகளே இது புதுவை இரத்திணதுரை சொன்னது. நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை நேரில் காணும் போது நீங்கள் அவரை கேளுங்கள்.
குருவிகளே நீங்கள் அகதிமுகாம்கள் பற்றியும், சிறையில் வாடுகின்ற இளைஞா்கள் பற்றியும் பேசுகிறீா்கள் அவா்களிற்கு நீங்கள் என்ன செய்தீா்கள்???
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shiyam Wrote:குருவிகளே இப்ப என்ன சொல்ல வாறீர்; புலம் பெயர் மக்கள் தாயகத்த்திற்கு உதவினால் நல்லதா அல்லது கூடாதா
உங்களை உருவாக்கியது அல்லது உங்களுக்குள் உள்ளது தாயகம்...தாயக மரபணுக்கள்... தாயகப் பூர்வீகம்.... அவற்றைப் புடுங்கி எறிந்து விட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் புலத்தார் என்று... புலம் என்று சொல்லி நீங்கள் புறம் செல்வதுதான் ஏனோ அதுதான் எம் கேள்வி....உங்களுக்கு தாயகம் தூரப் போவதேனோ அதுதான் எம் கேள்வி... பெற்ற தாயும் தந்தையும் விட்டு செவிலி பின் ஓடுவோம் என்போரே கேளீர்... புலம் புறம் அல்ல.... அமெரிக்கனுக்கு சிறீலங்கா மீதுள்ள அக்கறையும் நோர்வேயானுக்கு உள்ள அக்கறையும் பிரித்தானியனுக்குள்ள அக்கறையும் கனேடியனுக்குள்ள அக்கறையும் சீனனுக்குள்ள அக்கறையும் இந்தியனுக்குள்ள அக்கறையும் பாகிஸ்தானிக்குள்ள ஆக்கறையும் ரஷ்சியனுக்குள்ள அக்கறையும் தங்களிடத்தில் இல்லாமல் போக தாங்கள் என்ன தேவலோக வரவுகலோ..... நாம் யார் உங்களுக்குப் பதில் சொல்ல.... மணியடித்துக் கேளுங்கள் உங்கள் தாயக உறவுகளை... அம்மா நீதான் என்னைப் பெற்றயா...அதற்கு கூலி என்ன வேண்டும் என்று....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே
நீங்கள் சொல்கின்ற இந்த அமெரிக்கா, இந்தியா, நோா்வே எல்லாம் எப்பொழுதையா வந்தாா்கள்? விடுதலைப்போராட்டத்தில் இவா்களின் பங்கு என்னய்யா? அமெரிக்கா, யப்பான், இந்தியா எல்லாம் உங்கள் மீது அக்கறை எடுத்தாய்யா உங்களிற்கு உதவி செய்ய வருகிறது? ஆசியாவில் யாா் வல்லாதிக்கம் செலுத்துவது என்பது இவா்களிற்குள் போட்டி. அதற்கு களமாக இலங்கைப்பிரச்சனையை பாவிக்கிறாா்கள். இது விளங்காமல் நீங்கள் இன்னும் அவா்கள் உங்கள் நலனுக்காக வந்தவா்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீா்கள்.
குருவிகளே, தமிழா் புணா்வாழ்வுக்கழகம், பெருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விளையாட்டுத்துறை என்று நாங்களும் தாயகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் இணைந்து தான் செயற்படுகிறோம். அவா்கள் எங்களை வேறாகப்பாா்க்கவில்லை. உங்களை மாதிரி சில ...... தான் இப்படி எங்களையும் தாயகத்தையும் பிரித்துப்பாா்க்கிறீா்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:குருவிகளே நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீா்கள் என்று எமக்கு விளங்கவில்லை. நீா் என் கருத்து சொல்ல வருகிறீா் என்று உமக்கே குழப்பமாக உள்ளது. முரளிதரன் முரளிதரன் என்கிறீா்களே அவா் எமது நாட்டு விடுதலைக்கு புரிந்த பங்குதான் என்ன? அவரைப்போல் நான் ஒரு உலகப்புகழ் பெற்ற வீரனாக இருந்தால் அந்த புகழை பயன்படுத்தி எனது நாட்டை (தமிழீழம்) உலக அரங்கில் முன் நிறுத்த உதவி புரிந்திருப்பேன். எங்களிற்கு நாடு இல்லை என்று சொல்கிறீா்கள் முதலில் அதை பெற வேண்டும் என்றும் சொல்கிறீா்கள். குருவிகளே முரளிதரன் போராட்டத்தை அதரித்தாலும் அதை எப்படி புலிகள் ஏற்றுக்கொள்வது? அவா் சிறீலங்கா அணியில் அல்லவா விளையாடுகிறாா். சிறீலங்கா என்ன உங்களுடைய நாடா? இது எப்படி இருக்கு என்டா கதிா்காமா் தமிழன் என்டதாலா அவா் எங்கட நாட்டில அதிபா் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ட மாதிரி இருக்கு. முரளிதரனின் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
குருவிகளே நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினா்கள் வெளிநாடுகளில் ஆற்றிய உரை கேட்பதில்லை என்று நினைக்கின்றேன். புதுவை இரத்தினதுரை அவா்கள் சென்ற ஆண்டு சுவிசிற்கு வந்த போது எமக்கு சொன்னது, உங்களிற்கு ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கித் தருகிறோம் நீங்கள் அங்கு வந்து போராட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. குருவிகளே இது புதுவை இரத்திணதுரை சொன்னது. நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை நேரில் காணும் போது நீங்கள் அவரை கேளுங்கள்.
குருவிகளே நீங்கள் அகதிமுகாம்கள் பற்றியும், சிறையில் வாடுகின்ற இளைஞா்கள் பற்றியும் பேசுகிறீா்கள் அவா்களிற்கு நீங்கள் என்ன செய்தீா்கள்???
ஒன்று புரிகிறது,,, நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது... இல்லாத ஒன்றுக்காய் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள் என்று கடவுளைப் காட்டிக் கேட்பது போல... இல்லாத தமிழீழத்திற்காய் நாம் இருவரும் கருத்துப் பகர்ந்து ஆகப் போவதென்ன... தமிழீழம் நாளை விடியும் என்று பாடிய புதுவையை கேட்க வேண்டும்...யோவ் நீ அந்த நாளையை ஐயா சொன்னா என்று.....இன்னும் தமிழீழம் விடியக் காணேல்ல என்று... கொஞ்சம் கற்பனை உலகில் இருந்து நிஜ உலகுக்கு வாருங்கள்... முரளியா நீங்களா யதார்த்தமாகச் செயற்படுகிறார்கள் என்று புரியும்...!
சும்மா நாலு கோவில் கும்பாவிசோகமும் செய்து ஒரு இரண்டு விளையாட்டு மைதானமும் கட்டின உடன தமிழீழம் மலர்ச்சி பெறப் போவதில்லை...அதற்குச் செய்ய நிறைய இருக்கு... அது வெறுமனவே வாயாலும் சொல்லாலும் ஆகாது.... செயலால் எல்லோரினதும் பலத்தால் ஒற்றுமையால் ஆக வேண்டியது...!
ஒருவிசயம்... உங்களை விட எல்லாம்.... கதிர்காமர் புத்திசாலி....அவரை பதவியில் இறக்கிய சந்திரிக்கா புத்திசாலி... புலம் புலம் என்று கத்துகிறீர்களே... 98 வரை புலத்தில் பல தேசங்களில் பறந்த புலிக் கொடியை இன்று காணக் கிடைக்கவில்லையே...தடை....காரணம் யார்...உது தமிழீழத்துக்கு நல்ல சகுனம் அல்ல...முதலில் உங்களைத் திருத்தி அதை எடுக்க முயலுங்கள்... அண்மையில் பிரித்தானிய ஒலி/ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளி பரப்பிய நிகழ்சியின் பிரகாரம் தமிழ் இளைஞர்கள் வன்முறைவாதிகள் என்பதே பொருள்....இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டிக்கிடக்கு...நீங்கள் தாயகத்துக்குச் செய்த பேருதவிகளில் இவையும் அடங்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
எனக்கொரு ஆசை குருவிகளே
நீங்கள் 6 வயதில் இங்கு வந்திருக்க வேண்டும். நான் தாயகத்தில் இருந்து உங்களை நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை கேட்ட வேண்டும். இன்று நாங்கள் செய்கின்றதில் 10 வீதம் என்றாலும் நீங்கள் செய்வீா்களா என்பது எனக்கு சந்தேகமே.