Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுக்கு 2 வார கெடு !
#21
உவங்கள் உப்பிடித்தான். இப்ப தலைவ÷ உரையில பேச்சு வா÷த்தை பற்றி சொல்லாமல் விட்டால் ....? சமாதானத்தில விருப்பமில்லை என்று கத்தலாம் தானே....... அதுக்குத் தான்.
உவ சந்ரிக்காவின்ர மடியுக்க பொல்லாத விஷ ஜந்துகள் இருக்குது பாருங்கோ.. அவ கொஞ்சம் அரக்கினாலே பொறுத்த இடத்தில கொத்திப் போடும். அதால உவ உப்பிடித்தான் இடக்கிட அறிக்கை விடுவா....
<b> </b>
Reply
#22
<b>சந்திரிகாவின் ஏமாற்று வேலை: புலிகள் பதிலடி</b>

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து மாத இறுதிக்குள் புலிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சந்திரிகா கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக புலிகள், தமது ஆதரவு இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா தலைமையிலான கூட்டணி அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நார்வே தூதுக் குழுவினர் வழியாக சந்திரிகாவிற்கு தகவல் அனுப்பினோம். அதற்கு இதுவரை சந்திரிகா பதிலளிக்கவில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு இதுவரை சந்திரிகா பதில் சொல்லவில்லை.

உண்மை நிலை இப்படியிருக்க, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விரும்புவராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும், அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியான ஜே.வி.பியை அனுசரித்துச் செல்லவும் சந்திரிகா முயல்கிறார். சிறுபான்மை இனத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் சலுகையும் வழங்குவதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இவர்களின் கூட்டணி கால, நேரத்திற்கு ஏற்ப விதவிதமான முகங்களைக் காட்டுகிறதேயொழிய, அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை.

சந்திரிகா சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.

thatstamil.com

இது தொடர்பாக குருவிகள் சொன்னதையும் கவனியுங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
<b>சிங்களவர் நடவடிக்கைகளால் சில காத்திரமான முடிவுகளை நோக்கி தமிழ்ச்சமூகம்: <i>தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை! </i> </b>
<i> வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2004,</i>

சமாதான சூழலிலிருந்து விலகிச்; செல்வதோடு தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் தாக்கி சமாதானத்தைச்; சீர்குலைக்கும் சிங்கள அரசு மற்றும் சிங்களத் தலைமைகளின் நடவடிக்கைகளால் தமிழீழ மக்கள் காத்திரமான முடிவுகளை எடுக்க தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தனியார் தொலைக்காட்சிக்கு தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி:

சிறீலங்கா அரசும் அதன் படைகளும் சமாதான சூழ்நிலையிலிருந்து விலகிக் கொள்கின்றது போல் தெரிகின்றது.

இப்படியான சூழ்நிலை ஏற்படும் போது எதிர்காலத்தில் காத்திரமான முடிவுகளை நாமும் தமிழ் மக்களும் எடுக்க வேண்டி நேரிடும்.

மன்னார் மற்றும் வவுனியாவில் மாவீரர் நாளையொட்டிய நிகழ்வுகள் சமாதானச்; சூழ்நிலையைச் சீர்குலைக்கும் செயல்பாடாகும்.

இத்தகைய சீர்குலைக்கும் யுக்திகளை தொடர்ந்து எமது மக்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

விடுதலைப் புலிகள் அமைதி காக்கின்ற வேளையில் பொதுமக்கள் மீது சிங்கள படைத் தரப்பினர் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழக்கின்றபோது புலிகள் இயக்கம் அமைதி காத்து மிக கவனமாக தமது நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் தற்போது பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமாதான சூழலை தொடர்ந்து முன்னெடுக்கக் கூடிய சூழலை அண்மைய நிகழ்வுகள் சீர்குலைத்து வருகின்றன. இந் நிலையில் நிலைமை இறுக்கமடைந்து வருகின்றது.

விடுதலைப் புலிகளோ தமிழ் மக்களோ தொடர்ந்து பொறுமை காத்துக் கொண்டு அமைதி காப்பார்களோ அல்லது அதை சகித்துக் கொண்டிருப்பார்களோ என்பதை எதிர்பார்க்க முடியாது.

சிங்கள அரசாங்கம் சிங்கள தலைமைகள் இன்று நிலமைகளைச்; சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது என்பதை நாம் உணர்த்தி வருகின்றோம்.

ஆகவே எதிர் காலத்தில் சில காத்திரமான முடிவுகளை நாமும் மக்களும் இணைந்து எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார் அவர்.

நன்றி புதினம்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2004 செய்தி என்னவோ? :?: Idea
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)