Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?
#1
எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.

எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.

மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.

இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.

அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.

முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

நன்றி - சந்திரவதனா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
À¾¢Å¢¨É ¾ó¾¨Áìகு ¿ýÈ¢¸û.
Reply
#3
எனது நண்பர்களின் (மேற்கத்தேய மற்றும் நம்நாட்டவர்) அனுபவத்தில்
காதலை மறத்தல் மேற்கத்தேயருக்கு இலகுவாக இருக்கிறது.
சிறிய பிரச்சனைகளுக்குக்கூட பிரிகிறார்கள்...கோபத்திலிருக்கும்போது காதலை உணர போதிய காலவகாசம் கொடுக்கிறார்களில்லை...அதற்குள் அடுத்த காதல் தயாராகிறது...

நம்மவர் காதல் என்னதான் இழுபறிப்பட்டாலும் வண்டி ஓடும்... பிரியப்போகிறோம் என்று இருந்தவர்கள்கூட....இழுபறிப்பட்டு மீண்டும் 6 7 மாதங்களின் பின் சேர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்...
Reply
#4
நம்மாக்கள் சரியான சுயநலவாதிகள்.... காதலை வைச்சே கலியாணத்தை முடிச்சிடுவாங்கள்...பிறகெங்க பிரியுறதும் சேருறதும்.... என்ன கஸ்டப்பட்டாலும் வண்டி ஓட்ட வேண்டியதுதான்.... மேற்கத்தேயன் அப்படியில்ல அவன் லவ்விலும் சுதந்திரம் கொடுக்கிறான்...சுதந்திரமா உணர்வுகளை வெளிப்படுத்த விடுறான் அழுத்தங்கள் கொடுத்து சாதிக்க நினைக்கிறது குறைவு...ஆனா என்ன பணமில்லையோ காதல் அம்போ....அந்தளவிலதான் அவயின்ர லவ்...ஆனா எங்கட ஆக்களவிட கொஞ்சம் சுதந்திரம் இருக்கு.....!

ஆனா அவங்கட லவ்வ வரையறுக்கிறது வலு கஸ்டம் எங்கட வரையறுக்கிறதும் சுகம்...நீடித்தும் வாழும்...! மற்றும்படி காதலிச்சு கலியாணம் முடிச்சா பிரச்சனை எண்டுறது எங்க ஆக்களில எங்கினையன் ஈகோ கேசுகளிலதான் அதிகம்....ஆனா அவங்கள் லவ் பண்ணுவாங்கள் எல்லாம் செய்வாங்கள்..கலியாணம் எண்டா காய் வெட்டிடுவாங்கள்...அந்த லெவலிலதான் அவங்கட லவ்....அது அவங்களுக்குச் சரி பிறகு டி என் ஏ ரெஸ்ட் செய்து பிறக்கிறதுகளுக்கு அப்பா அம்மா கண்டு பிடிப்பாங்கள்..அது பொழுதுபோக்கு அவங்களுக்கு....! நமக்காகுமோ...ஆகும்...மனசு கேக்காதே....பாவம் பாத்திடுவமே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#6
Quote:அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.
இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஏறக்குறைய 10 வருடங்கள் ஒன்றாக ஜேர்மன் நாட்டு பெண்களைத் திருமணம் செய்த மூவரின் அனுபவங்களை கேட்டறிந்தவன் என்றவகையில் நான் அறிந்தவையாவன...
ஒருவருக்கு 5 பிள்ளைகள்.. மிகவும் நல்ல குடும்பம் என்றவகையில்தான் வாழ்ந்தார்கள். தொழிற்சாலை ஒன்றில் நல்லதொரு பதவியில் இருந்தார். திடீரென அவரது வேலை பறிபோக.. மனைவி வெளியில் பிடித்து விட்டுவிட்டார். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மற்றைய இருவருக்கு தற்போது 45 வயதுக்கு மேல்.. காரணம்.. 'வயதாகிவிட்டதாம்!' <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.)
.
Reply
#7
சோழியான்

நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் நடக்காமலில்லை.

அதே நேரம் கடந்த வருடம் 44வயது நிரம்பிய ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண் தனது நான்கு குழந்தைகளையும், கணவரையும் விட்டு விட்டு தனது மகனின் 22 வயது யேர்மனிய நண்பனுடன் போய் விட்டா. இது நடந்தது வடக்கு யேர்மனியின் பிரபல்யமான ஒரு நகரில்.

ஒரு கடைக்குச் சொந்தக்காரரான இன்னொரு தமிழரின் மனைவி கணவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற கோபத்தில் அவரை விட்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியது மட்டுமல்லாது அவரது கடையின் முன்னாடியே போயிருந்து புதிய நண்பருடன் சல்லாபித்துள்ளார். இது நடந்ததும் வடக்கு யேர்மனியில்.

பல தமிழ்ஆண்கள் தமது மனைவியருக்கு வயதாகி விட்டது என்பதற்காக சிறு பெண்களைத் தேடும் பல சம்பவங்கள் யேர்மனி, டென்மார்க், கனடா.. என்று உலகளாவிய ரீதியில் நடக்கிறது.

ஒரு ஆண் தனது மகனுக்குப் பெண் பார்ப்பதாகச் சொல்லி ஊருக்குப் போய் பெண் பார்த்துக் கூட்டி வந்து, தானே அப்பெண்ணுடன் வாழ்கிறார்.

இப்படியான சமூகச் சீரழிவான விடயங்கள் எமது தமிழ்ச்சமூகங்களில் தாராளமாகவே நடக்கிறது. இது இன்று நேற்றல்ல. ஊரிலும் சில குடும்பங்களில் நடந்துதானிருக்கின்றன. ஆதலால் நீங்கள் சொன்ன உதாரணத்தை வைத்து எங்கள் ஊர்க்காதல் சிறந்தது என்றோ ஐரோப்பியக் காதல் பிழையானது என்றோ சொல்லி விட முடியாது. மேற்கூறியதெல்லாம் காதல்களே அல்ல.
nadpudan
alai
Reply
#8
ஏன் அலை உங்களுக்கு வேல ஆரு ஆரோட ஓடுறதும் போறதும் பாக்கிறதே.... நல்ல வேலைதான்...சம்பளம் எவ்வளோவு......ஒரு காலத்தில ஓடுறதுகளும் போறதுகளும் திருந்தித்தான் இருந்தவை...( 90 களின் ஆரம்பத்தில் வந்த விடுதலைப் புலிகளின் மகளிர் சஞ்சிகை சுதந்திரப் பறவைகளில் இருந்தது ஒரு புள்ளி விபரம்...)....இப்பதானே கட்டாக்காலியலா அவிழ்த்துவிட்டிருக்கே...பிறகென்ன.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஆனா ஒன்று நம்ம ஊர் காதல் சுயநலக்காதல் எண்டது மட்டும் உண்மை....வெள்ளைக்காரன் அந்த வகையில் எங்களை விட மேல்தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
எங்கள் ஊர் காதல் பெரிதா அல்லது மேற்கத்தைய காதல் பெரிதா எண்டு எனக்குத் தெரியாது.

ஆனால் இந்தக் காதல் எங்கள் ஊரிலும் மேற்குலகிலும்
காமத்தை, பணத்தைச் செல்வாக்கை அடிப்படையாக வைத்தே உருவாகிறது. எங்கைகேயும் புனிதமான காதல் என்பது இல்லை. அது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே!!!

காதல் ஒண்டும் கடவுள் இல்லடா
இது கார்மோன் செய்யும் கலகம் தானடா
(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
<b>
?
- . - .</b>
Reply
#10
Quote:காதல் ஒண்டும் கடவுள் இல்லடா
இது கார்மோன் செய்யும் கலகம் தானடா
(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#11
வசூல்ராஜாவுக்கு அப்படியாக்கும் நமக்கென்ன... ஆனா காமம் கலக்காத காதல் இருக்கு...நாங்க எங்க கொள்கைகளைக் காதலிக்கிறம்....தாயகத்தைக் காதலிக்கிறம்... என்ன காமத்திலா.... இப்படிப் பல வடிவங்களில் காதல்...ஐ லவ் இந்தியா எனும் வசூல்ராஜா காமத்திலா இந்தியாவ லவ் பண்ணுறார்... இல்ல கார்மோன் தூண்டலிலதான் காதலிக்கிறாரா....வேணும் எண்டா சரிகா வசூல்ராஜாக் காதல் அப்படி இருக்கலாம்...ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
பெண் மீது ஆண் கொள்ளும் காதலும்
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.

நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று

Quote:ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....!
காமமே இல்லை எண்டா புனிதமான காதல்(ஆண் பெண் காதல்) கூட இல்லை என்பது எனது கருத்து.
<b>
?
- . - .</b>
Reply
#13
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் அலை உங்களுக்கு வேல ஆரு ஆரோட ஓடுறதும் போறதும் பாக்கிறதே.... நல்ல வேலைதான்...சம்பளம் எவ்வளோவு......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>குருவி

உங்களைப் போல கண்டும் காணாத மாதிரி கடந்து செல்ல எனக்குத் தெரியாது.
சில அநியாயங்களும் சமூகச் சீரழிவுகளும் நடக்கிற போது கண்ணை மூடிக் கொண்டிருக்கவும் தெரியாது.

உங்கள் கண்ணுக்குச் சோழியான் எழுதியது தெரியவில்லையோ? </b>
nadpudan
alai
Reply
#14
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->எங்கள் ஊர் காதல் பெரிதா அல்லது மேற்கத்தைய காதல் பெரிதா எண்டு  எனக்குத் தெரியாது.

ஆனால் இந்தக் காதல் எங்கள் ஊரிலும் மேற்குலகிலும்
காமத்தை, பணத்தைச் செல்வாக்கை அடிப்படையாக வைத்தே உருவாகிறது. எங்கைகேயும் புனிதமான காதல் என்பது இல்லை. அது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே!!!

காதல் ஒண்டும் கடவுள் இல்லடா
இது கார்மோன் செய்யும் கலகம் தானடா
(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b]எங்கடை காதல்தான் சிறந்தது என்று சனம் சொல்லுது.
அப்படியில்லையென்று அந்தக் கட்டுரை சொல்லுது.

மற்றும் படி காதலுக்கு இலக்கணம் நீங்கள் சொல்லுறமாதிரி இல்லை.

காதல் காதல்தான்.
nadpudan
alai
Reply
#15
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->பெண் மீது ஆண் கொள்ளும் காதலும்
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.

நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று

<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காமமே இல்லை எண்டா புனிதமான காதல்(ஆண் பெண் காதல்) கூட இல்லை என்பது எனது கருத்து.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

[b]வைரமுத்து சொன்னால் அது என்ன வேதவாக்கா..?
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.
அதற்காக அவர் என்ன மேதையா?

மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.
nadpudan
alai
Reply
#16
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மற்றும் படி காதலுக்கு இலக்கணம் நீங்கள் சொல்லுறமாதிரி இல்லை. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் சொல்லுற மாதிரி காதல் இலக்கணம் இல்லை எண்டா. அது எப்படி எண்டு நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கோவன்.

தயவு செய்து தமிழ் சினிமாவிலை சொல்லுற காதல் இலக்கணத்தைச் சொல்லாதையுங்கோ. அந்த இலக்கணம் தனிய தமிழ் சினிமாவிலை மட்டும்தான் வேர்க் அவுட் ஆகும்

ஒரு பெண் மீது ஆணோ அல்லது ஆண் மீது பெண்ணோ காதல் கொள்ளலாம் ஆனால் அவர்களின் காதலில்(எப்போதுமே) காமம் இல்லை எண்டு அவர்களுக்குத் தெரிந்தால் நிச்சயமாக அந்தக் காதல் நிலைக்காது.
<b>
?
- . - .</b>
Reply
#17
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வைரமுத்து சொன்னால் அது என்ன வேதவாக்கா..?  
அவருக்கு அழகாகக் கவிதை எழுதத் தெரியும்.  
அதற்காக அவர் என்ன மேதையா?  

மனசால் காதலிக்கும் எத்தனையோ பேர் இந்த உலகில் இருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மனசால் காதலிக்கும் காதல் கமமே இல்லை எண்டா பாடை ஏறவேண்டியதுதான். இப்படிச் சொல்லுறதெல்லாம் படங்களை பார்த்து கதைகளைப் படிச்சுத்தான். இவற்றுக்யெல்லாம் உண்மை உலகில் இடமில்லை.

ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணை விட மற்றைய பெண்களை எண்ணாமல் இருக்கலாம் தனது காதலியை அடைவதற்காகக் கடுமையாகப் போராடலாம். ஆனால் தன் காதலியிடம் தனக்கு காம இன்பம் கிடைக்காது என்றால் நிச்சயமாக அவளை அவன் தவிர்ப்பான்.

வைரமுத்து சொல்வதையெல்லாம் ஏற்கவில்லை.
ஆனால் அவரின் அந்தப் பாடலில் வரும்
காதல் ஒண்டும் கடவுளில்லடா அது கார்மோன் செய்யும் கலகம் தானடா எண்ட வரி மாத்திரம் நிஜம்.

மனிதனுக்கு காம உந்துதலின் காரணமாகவே காதல் பிறக்கிறது அதைத்தான் வைரமுத்து அந்தப் பாடலில் அப்படிச் சொல்லியுள்ளார்.

அது சரி வேத வாக்கு வேத வாக்கு எண்டு எல்லாரும் சொல்லுறியள் அப்படி எண்டா என்னென்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
<b>
?
- . - .</b>
Reply
#18
வைரமுத்து ஒரு மேடை பேச்சில் கூறியது... காதலில் காமம் இல்லை என்றால் நீ ஒரு நாய் குட்டியை காதலிக்கலாம். காமத்தில் காதல் இல்லை என்றால் நீ ஒரு விலை மகளை காதலிக்கலாம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)