11-03-2004, 12:05 AM
சின்னச் சின்ன "பில்லைகல்"!
எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள்"!
விமல் சொக்கநாதன்
டாக்குத்தர் தகலிங்கநாதன் 85க்கு பிறகுதான் லண்டனுக்கு வந்தவர். தனி ஆளா வந்து 'பிளாப்' சோதனை பாஸ் பண்ணி ஆஸ்பத்திரியில வேலையிலும் சேர்ந்தார். இவற்றை அன்ரி மூலம் அவருக்கு கலியாணமும் பேசிச் செய்து வைக்கப்பட்டது. பெட்டை நல்ல வடிவு. உவள் சினிமா நடிகை திரிஷா மாதிரி மெல்லிய, கவர்ச்சியான பெடிச்சி. பெயர் - பிரார்த்தனா.
85க்கு முதல் லண்டனிலை குடியேறின 'டமில் பீப்பிளை' கண்டா தகலிங்கநாதனுக்கு விசர் பிடிக்கும். 'அவையும் அவயின்ரை கார்களும் கதையளும்'. 'அவயின்ரை பிள்ளையளுக்கோ ஒரு சொல்லுத் தமிழிலை கதைக்க ஏலாது.' என்று சதா மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தார்.
சிலோனிலை, மெடிக்கல் கொலிஜிலை படிக்கேக்கை தகவிங்கன் MGR பேச்சுக்களை ரசிப்பான். கைதட்டுவான். விசிலடிப்பான். குறிப்பாக ஒரு MGR
பேச்சு அவன் காதிலை சதா ஒலிக்கும்.
MGR சொன்னாராம்:-
'தமிழ் நாட்டில் தமிழ்க் குழந்தை பிறந்ததும் 'அம்மா' என்று அழுகிறது!' தூரதேச அமெரிக்காவில் லண்டனில், குழந்தை பிறந்ததும், 'மம்மி' என்று அழுவதில்லை. 'ம்மா' என்றுதான் அழுகிறது. இப்படி அனைத்துலக பெருமை மிக்கது எமது தமிழ் மொழி!..' என்று MGR அன்று சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
"எனக்கு கலியாணமாகி பிள்ளை பிறந்ததும் பிள்ளைக்கு இங்கிலிசை கண்ணிலும் காட்டமாட்டன். பள்ளிக்கு போன பிறகு பிள்ளை இங்கிலிசு படிக்கட்டும். அதுவரை தமிழ் தான்" என்று நடவடிக்கை எடுத்தான்! வீட்டில் இங்கிலிஷ் பேப்பர் வாங்குவதில்லை. வாற ஓசிப் பேப்பரையும் குப்பையில் உடனே போட்டுவிடுவான். தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் லண்டன் தமிழ் டி.வி, கொழும்பு தமிழ் டி.வி, பாரீஸ் தமிழ் டி.வி, சென்னை தமிழ் டி.விகள் மூண்டு. குழந்தை பிறந்தது வளர்ந்தது. தமிழ்ப்பள்ளியில் இடம் கேட்டு "பதிவு செய்து வைத்தார் அப்பா டாக்டர். தன் இளம் சிட்டு 'டடி-மம்மி!' சொல்லிடக் கூடாது 'அப்பா அம்மா!' என்றே சொல்ல வேண்டும் என்று இராப்பகலாக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார் தகலிங்கநாதன் என்ற தமிழ்ப்பற்றாளர்.
பிள்ளையும் வளர்ந்தது!
ஆனால் 'அப்பா அம்மா' என்று அழகான தமிழ் அதன் வாயில் வரவில்லை! அப்படியானால் என்ன வந்தது? 'டடி' 'மம்மி' என்ற இங்கிலிஷா? இல்லவே இல்லை! அதன் வாயில் வந்த முதற் தமிழ் மழலைச் சொற்கள்:- 'கில்லி-கில்லி .. சுள்ளான்! சுள்ளான்!.. அப்பிடிப்போடு! போடு!' இவைதான்! அப்பாவும் அம்மாவும் தமது தலையில் கையை வைத்துக் கொண்டு திகைப்படைந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
இந்தத் திகைப்பு அனாவசியம் டாக்டர். பின் கதவால் ரகசியமாக நுழைந்து உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை பால்மணத்தை திருடி பரிதவிக்க வைத்த இந்திய மீடியாக்கள் பக்கம் சற்று கவனம் செலுத்துங்கள்.
புத்தனும் காந்தியும் இன்னும் பல மகான்களும் பிறந்த புனித மண்ணில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், கம்பனும் வள்ளுவனும் ஒளவையும் பாரதியும் வளர்த்தெடுத்த தமிழ் மாதாவை மீடியாக்கள் - ஊடகங்கள் இன்று பட்டப்பகலில் அப்பட்டமாக கொலை செய்வதைப் பார்த்து தமிழக தமிழ் அறிஞர்களே திகைத்து நிற்கிறார்கள்.
சில உதாரணங்கள்:
1. பென்கள், பில்லைகல் பெறும் யந்திரமல்ல என்று போராடுவோம்.
2. ஈராக்கில் குண்டுகளினால் ஏராளமான பாலங்கள் உடைந்தது.
3. இன்றைய செய்தியில் இனி, தங்கம் மட்டும் வெல்லி விளை நிலவரம்.
தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படி என்று சொல்ல முடியாது. பத்திரிகைகள், சினிமா ஞூம சகீகீ;கீமகி;கிகுகி
எல்லாமே ஒரே காமெடி சார்! சினிமாப் பாடல்கள் என்றால் கதாநாயகனும் நாயகியும் 28 பேருடன் துள்ளிக் குதித்து ஆடாமல் படமே இல்லை. அந்த ஆட்டத்திற்கு
எழுதப்படும் பாடல்கள் ஏதோ 'லப்படத்திற்கு' எழுதப்பட்ட பாடல் போல இருக்கும்?
'என் தேகமெங்கும் அவன் முத்தமிட்டபோது என் தலையில் நட்சத்திரங்கள் சிதறின! அந்த இடத்தில் அவன் முத்தமிட்டபோது ஆயிரம் சூரியன்கள் எனக்குள்
உடைந்தன!'
பாடல்: வெள்ளைக்கார முத்தம். படம்: செல்லமே.
'பஞ்சு மெத்தையில் பந்தயம் நடக்கும் அந்தப் பந்தயத்தில் இருவருமே ஜெயிப்பார்கள்'
பாடல்: கும்மியடி. படம்: செல்லமே
(இந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர் யார் என்று நான் அடையாளம் காட்டி புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்க விரும்பவில்லை.)
இந்தப் பாடல்களை ஏதோ பிரபல்யமான மெட்டுகள் என்று எண்ணி எங்கள் இளம் கலைஞர்கள் கானக்குயில்- இன்னிசை மாலை மெல்லிசைக் கதம்பம் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் அர்த்தம் தெரியாமல் பாடும் போது - எந்தச் சுவரில் எங்கள் தலையை முட்டி சாவது என்பது எங்கள் எண்ணமாக இருக்கும். சினிமா கவிஞர்கள் எழுதுவது ஆபாசமான அருவருப்புப் பாடல். அதைப் பாட இசையமைப்பாளர் அழைப்பது தமில் சினிமாப் பாடகர் சுக்விந்தர்சிங், உதித்
நாராயண் ஆகியோரை!
சில உதாரணங்கள்:
1. 'அச்சச்சோ புண்ணகை! ஆல் தின்னும் புண்ணகை! கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொல்வேன்'
படம்: ஷாஐகான் பாடியவர்கள்:உதித்நாராயண், கவிதா.
2. 'காதல் டகூடிடிஹசே' 'நானும் அவளும் பருவால்லே தனிமை பருவால்லே, தவீப்பூகளும் பருவால்லே..
படம்: ரன் பாடியவர்: உதித் நாராயண்.
இனிய தமிழில் இசை ரசம் ததும்பப் பாடும் பத்மஸ்ரீ யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோர் ஹிந்தியில் பாட அழைத்து செல்லப்பட்டபோது தென்னாட்டு தமிழ் பாடகனுக்கு உச்சரிப்பு சரியில்லை என்று ஊடகங்கள் கண்டித்து அவர்களின் ஹிந்திப் பாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் இன்று சுக்விந்தர் சிங்குகள், உதித் நாராயண்கள் எங்கள் தமிழை கொலை செய்து பாடும் போது தமிழக ஊடகங்கள் ரசித்து எழுதுகின்றன. எங்கள் குழந்தைகள் பாடலைப் பாடமாக்கி மேடையில் பாடுகின்றன.
இனிமையான உச்சரிப்புடன் பாடும் பாடகி வாணி ஜெயராம் அண்மையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது - 'மொழி தெரியாமல் ஒரு பாடலை சிதைப்பது மகாபாவம்' என்று கண்டித்தார்.
பழசு கண்ணா! பழசு!
தமிழ்க் கொலை, தமிழ் உச்சரிப்புக் கொலை பற்றி கட்டுரைகள் எழுதுவது கூட்டங்களில் பேசுவது நான் மட்டும்தான் என்றில்லை. இது ஒரு புது விஷயமல்ல. புதிய போராட்டமும் அல்ல! தமிழ் நாட்டில் திபதி மோகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வை.ஜி.மகேந்திரன் போன்றவர்கள் தமிழ் நாட்டு ஊடகங்கள் நடத்தும் அடங்காப் பிடாரித்தனமான - நிர்வாகத்தை அலட்சியமான போக்கை, மக்கள் மீதான அவமதிப்பை கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்கள். தற்போதைய சினிமா இசையால் வக்கிரப்படுத்தப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் பண்படுத்தப்பட வேண்டும். சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் தமிழ் கொச்சைப் படுத்தப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று போராட்டம் ஒன்றை டிசம்பர் 20ல் நடத்துகிறார் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ். இவை போன்றதுதான் நான் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்தக் கூக்குரல், இதனைச் செவிமடுத்து ஆவன செய்யாவிட்டால் எங்கள் எதிர்கால லண்டன் தமிழ் சிறார்கள் இங்கிலிஸ் குஞ்சுகளாக அல்ல ஸ்டன்ட் மாஸ்டர்களை குருவாக வணங்கும் கில்லிகளாகவும் சுள்ளான்களாகவும் தான் வளர்வார்கள்.
வால்க லண்டன் களைகள்! வால்க தமில்!
உருவியது ஒரு பேப்பர்
http://www.orupaper.com/

[i][b]
!
!

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->