tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/13/44113_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என்ன என்னைப்பாத்தால்...
இழிச்ச வாய் என்று தெரிகிறதா...???
அன்பாய் பேசினால்.. என்ன
அடிமையாகிடுவேனா...??
என்னுடன் பழகும்
ஆயிரம் உயிர்களில்.. ஓருயிர் நீ...
அதைவிட ஸ்பெசல் ஏதும் இல்லை...
வேண்டாத கற்பனைகள் நினைவுகள்
வேதனைகளைத்தான் தரும்..
எனக்கில்ல உனக்கு....
நான் என்றும் நான் தான்...
எனக்காய் எப்போதோ
போட்டவழியில் சிறிதும்...
மாற்றம் இல்லாமல் பயணித்தபடி...
என் இலக்கை நோக்கி
ஒரு பயணத்தின் பாதியில்..
எங்கோ என்னுடன்...
இணைந்து கொண்ட நீ...
உன் வழியில் பயணித்தால்
உனக்கும் நல்லது...
சக பயணி எனக்கும் நல்லது...
இடையில் உன் சித்தம் கலங்கினால்...
சிந்திக்க வேண்டியது எதுவுமே இல்லை.
சந்தி வைத்தியரை...
சக பயணி உனக்கு
இப்பயணி தரும்..
ஒரு சிறிய அறிவுரை....................!
நீ இழிச்ச வாய் இல்லை என்றால்
நான் மட்டும் என்ன இழிச்சவாயா...??!
தறிகெட்டுத் தவறான
அர்த்தம் கொள்ளாது
அன்பாகப் பழகியதாய் ஒத்துக்கொண்டாயே
அந்தளவில் மகிழ்ச்சி....!
ஆயிரம் உயிர்களில் ஓருயிர் என்றாயே
அந்த நினைவு வந்ததே
அதுபோதும்...!
என்னுயிர் உன்னிடம்
வாழ்க்கைப் பிச்சை கேட்கவில்லை
வாழ எனக்கு உன்னிலும் அதிகம் தெரியும்
இலட்சியத்தில் உன்னை விட
இறுக்கமானது என் மனம்
இழகியதாய் எண்ணாதே...!
பாவம் பட்ட கடன் ஒன்றுக்காய்
பாசம் வைத்தது தவறென்கிறாய்
என் பாசத்தை பாசாங்காய்ப் பார்க்கும்
உன் பார்வைக்கு
வைத்தியம் கூடக் கிடையாதே
பைத்தியம்...!
நீ ஒரு பைத்தியம் என்று தெரிந்தும்
அன்புக்காய் அணுகியது என் குற்றம்
இருந்தாலும் உன்மீது என்னன்பு
வைத்தியம் கடந்த தெளிந்த நிலை..!
நீ அது உணராய்
அதுவும் நான் அறிவேன்
அதையும் கடந்ததே என்னன்பு...!
என்னன்பிற்காய் நீ
வேதனையென்ன
மரணம் கூட பரிசளிக்கலாம்
மனதார ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் எனக்கிருக்கு....!
உனக்காய் அன்றி
உன் உள்ளத்தின் மீது
நான் கொண்ட
மகத்தான மாறாத அன்புக்காய்....!
அன்பறியா பென்குயினின் அகம்பாவ வார்த்தை கேட்டு தலை குனிந்து சோகமே உருவான அந்தப் பென்குயினுக்காய்...சகோதரக் குருவிகள் தரும் குரல்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>