Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி வாழ்த்துக்கள்...!
#21
Quote:ஒருவேளை நவராத்திரி பற்றி அறிந்திருந்திருதால் பில் கேட்ஸ் எதிர்பார்த்ததை விட விரைவாக பணக்காரர் ஆகி இருக்கலாம்...
ஏனையா நவராத்திரியைப் பற்றித் தெரிந்த அல்லது அதன் மகிமையை உணர்ந்த ஒரு இந்தியரோ அன்றி எமது நாட்டவரோ விரைவாக இல்லாட்டிலும் பரவாயில்லை மெதுவா எண்டாலும் பில் கேசைப் போல பணக்கார ஆக முடியேல்லை????

Quote:செல்வத்தின் கல்வியின் வீரத்தின் மகிமை அறிந்திருந்தும் எம்மால் சரியான முயற்சி எடுத்து பில் கேட்ஸ் மாதிரி ஆக முடியவில்லையே அதற்கான முயற்சி எம்மிடம் இல்லையே என்று வருத்தப்படாதவர்களுக்கு நவராத்திரி என்ன எதுவும் உறைக்காது...
நவராத்தியில் கல்வி தா செல்வம் தா வீரம் தா எண்டு கும்பிடுவதால் பயனில்லை முயற்சி எடுத்தாதான் வெல்லலாம் எண்டு சொல்லுறியள். அதைத்தான் நானும் சொல்லுறன்.
<b>
?
- . - .</b>
Reply
#22
நீங்க எங்கே இருக்கிறீங்க... உலகின் முதல் ஐம்பது பணக்காரர்களில் பல இந்தியர்கள் இருக்கின்றனர்... பில் கேட்ஸ் பணக்காரர் ஆக இந்தியர்கள் தான் காரணம்... மைக்குரோ சொவ்ரில் ஆட்சி செலுத்துபவர்களே அவர்கள் தான்... பில் கேட்சின் இடத்தைப் பிடிக்கக்கூடிய நிலையில் பல ஆசியக்காரர்கள் இருக்கின்றனர்...!

என்ன இந்த மூடநம்பிக்கை அது இதென்று அன்று தொட்டு இன்று வரை ஆக்களை குழப்பிவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்களால்தான் நவராத்திரி போன்றவற்றின் தார்பரியம் விளங்காமல் ஏதோ படம் வைத்து மனம் அலையவிட்டு கடமைக்கு ஒரு தேவாரம் பாடி... பல சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடி... புக்கையும் அவலும் சுண்டலும் சாப்பிடுவதுதான் நவராத்திரி என்று உங்களைப் போலவே பலரும் நினைக்கின்றனர்.. அதனால்தான் நவராத்திரியின் உண்மையான தாக்கத்தை சமூகத்தில் உணரமுடியவில்லை..... இதற்கு உதாரணம்... கனடாவில் ஒரு பல்கலைக்கழக வாணி விழாவின் போது மேற் சொன்ன அனைத்தும் நடத்தப்பட்டது...?! நடத்தினவைக்கு நவராத்திர்யின் தார்பரியம் தெரியுமோ தெரியாது...???! அதை அறியாமல் கொண்டாடுவதுதான் அறியாமை... முட்டாள் தனம்...அதுதான் சமூகத்தில் முதன்மை பெற்றும் நிற்கிறது...பிறகெப்படி பில் கேட்ஸ்சை விஞ்சிற மாதிரி முயற்சி எடுக்க நவராத்திரி வழிக்காட்டிட முடியும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
[quote]நீங்க எங்கே இருக்கிறீங்க...
நான் கனடா நாட்டிலுள்ள ரொரன்ரோ நகரத்திலை இருக்கிறன்.!

உலகின் முதல் 50 பணக்காரர்களில் பல இந்தியர்கள் அல்ல இருவரே இருக்கிறார்கள். அதுவும் 38ஆவது மற்றும் 40 ஆவது இடங்களில் நவராத்திரின் பெருமையை அறிந்தவர்கள் 38, 40ஆவது இடங்களில் ஆனால் நவராததிரி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இவர்களை விட முன்னிலையில்.....
பில்கேற்ஸ் முதல் பணக்காரன் ஆக வரவேண்டும் என்பதற்காக எந்த இந்தியனும் ஊதியம் வாங்காமல் வேலை செய்யவும் இல்லை. அதேநேரம் மைக்குரோ சொப்ரில் ஆட்சி செய்யும் இந்தியர்கள் பில்கேற்ஸ் மைக்குரோ சொப்ரை ஆரம்பிக்காமால் இருந்திருந்தா?
<b>
?
- . - .</b>
Reply
#24
என்ன அண்ணா சொல்லுறியள்.... இது சரிப்பட்டு வராது.. நீங்கள் கனடாவிலை தானே இருகிறியள்..சரி நவராத்திரி பற்றியும் மூட நம்பிக்கைகள் பறியும் அறிந்து தெளிந்த ஆள் ...அதுக்காக உலகத்திலை முதலாவது பணக்காரனாக வர முடியுமா அல்லது இன்னொரு மைக்கிரோசொவ்ரை ஆரம்பிக்க முடியுமா..இல்லை தானே போட்டியில் ஒருவன் முன்னுக்கு வருவான் மற்றவன் பின்னுக்கு நின்டே ஆகனும் முந்த பாக்கனும் அதிலை முன்னுக்கு நிக்கிறவன் செய்யிற திருகுதாளங்கள் எத்தனை..பின்னுக்கு நிக்கிறவன் செய்யிற திருகுதாளங்கள் எத்தனை.. எங்கடை சனத்திலை எத்தனையோ பேருக்கு மின்சாரம் எப்படி வேலை செய்யும் அதை என்ன செய்யிறதெண்டே தெரியலை..... கணனி எண்டால் என்ன எண்டு கேக்கிற கோடிக்கணக்கான சனம் இந்தியாவிலை இருக்கு ஆனால் கணனியில் எல்லா விடையத்திலும் முன்னணியில் இருப்பது இந்தியா... இப்படி யார் யாருக்கு எது எது அளவோ அதை அதை செய்யலாம்... படிப்படியா தான் வளரலாம் அதுக்கு வசதிகள் வேணும் நல்ல சூழ்நிலை வேணும்.... இதை விட்டிடு இந்தாபார் உதராணம் பில்கேட்ஸ் அவர் மாதிரி வா பாப்பம் அவன் மூட நம்பிக்கை இல்லாமல் தான் வளர்ந்தான் இப்படி என்று எப்படி சொல்லுவியள்.. அவன் எத்தனை சாத்திரியையும் எண்சாத்திரமும் பார்த்து தான் இப்படி இருகிறானோ.. யாருக்கு தெரியும்.... எங்கடை நாட்டிலை குண்டு போடேக்கை ... மாணவர்களுக்கு பாடசாலைக்கு துண்டு போட தான் முடியும் ... இங்கு மாணவர்கள் படிக்கும் விதத்தையும்..அவர்களின் அறிவையும் வடிவா ஒப்பிட்டு பாருங்க தெரியும் அங்கு இருக்கிறவனின் திறமை எப்படி எண்டு......
[b][size=18]
Reply
#25
உங்களுக்கு எப்படித் தெரியும் இந்தியாவில் பில் கேட்ஸை விடப் பணக்காரர்கள் இல்லையென்று,,,,இருக்கிறார்கள் வருமானம் காட்டுவதில்லை...பெருமை காட்டுவதில்லை.... ஆக்கும்...! நாங்கள் சொன்ன பட்டியல் மேற்குலகப் பட்டியல் அல்ல சர்வதேசப் பட்டியல்....மேற்குலகு சாராத நடுநிலைப்பட்டியல்....சும்மா பில் கேட்ஸ் என்றியள் அவருக்கு கணணியில என்ன தகுதி இருக்கென்று சொல்லுங்க பாப்பம்... மாடு மேய்ச்சாலும் உள்ளதுகள களவெடுத்து உல்டா பண்ணினா பில் கேட் லெவலுக்கு வந்திடலாம்... முயற்சி வேண்டும்...சும்மா உளறாமல் அதைச் செய்யுங்கோ....ரொரண்டோவில மாட்டுப்பண்ணை வைச்சுப் பாருங்க.....பில் கேட்ஸ் லெவலுக்கு வந்திடலாம்....எல்லாத்துக்கு முயற்சி வேணும்....!

நாங்கள் நவராத்திரி கொண்டாடி நாகரிகமா அளவோட உழைச்சு அளவோட வாழ விரும்புறம்... ஒரு வாழ்த்துச் சொல்ல மனமில்லாத உங்களை எல்லாம் மனிசர் எண்டு மதிச்சதே பிழை போலக் கிடக்கு... வாழ்த்துச் சொல்ல விருப்பம் என்றால் சொல்லுங்க இல்லாட்டி விடுங்க போய் பில் கேட்ஸ் காலில விழுந்தா டொலரில தருவார்.... உங்கட கடவுள் அவர்தானே.... தட்டுங்கள் திறக்கப்படும்....உதை வாங்காம வந்தாச் சரி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
Quote:சும்மா பில் கேட்ஸ் என்றியள்
ஐயோ நான் பில் கேட்சுக்கு சப்போட் பண்ணவில்லை. இந்த பகுதியிலை ஹரி தான் பில்கேற்சைப் பற்றி முதலிலை சொன்னது அதுக்குப் பிறகு குருவிகளே நீங்கள் தான் கதைச்சீங்கள் உங்களுக்குப் பிறகே நான் கதைச்சனான்.
1.பில்கேற்சுக்கு நவராத்திரியைப் பற்றித் தெரியாது
2.அவருடை முயற்சியாலேயே இண்டைக்கு அவர் உலகின் முதல் பணக்காரன் ஆனார்.
இதுதான் நான் பில்கேற்ஸ் பற்றிச் சொன்னது. நான் பில்கேற்சை புகழ்ந்து தள்ள வில்லை குருவிகளே நீங்கள் பில்கேற்சைப் பற்றிச் சொன்னவற்றிற்கு மாத்திரமே நான் பதிலளித்துள்ளேன்.
Quote:அவருக்கு கணணியில என்ன தகுதி இருக்கென்று சொல்லுங்க பாப்பம்...
அவருக்கு கணனியில் என்ன தகுதி இருக்கெண்டு எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றை நிறுவனத்திலை தயாரிக்கும் வின்டோசுக்கு அவரின்ரை லப்ரொப்பிலை இயங்குற தகுதியில்லை காரணம் பாதுகாப்பு பிரச்சினை. அதனாலை லினக்ஸ் என்ற ஒப்ரேற்றிங் சிஸ்ரத்தைத்தான் பில்கேற்ஸ் போட்டு வைச்சிருக்கிறார்
<b>
?
- . - .</b>
Reply
#27
இதில் எனது பதில் கருத்துக்களை முன்வைக்க நேரம் கிடைக்கவில்லை மன்னிக்கவும். காரணம் ஏழைகளுக்கு பூவும் விபூதியும் பணக்காரர்களுக்கு தங்க சங்கிலி, மோதிரம் கொடுக்கும் அந்த பெரிய மகான் சத்திய சயி பாபா பற்றி ஒரு cd தாயாரித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் மாயாயலங்களை புட்டுபுட்டு வைக்கும் பல video clips இனையத்தில் இருந்து தரையிரக்கிவைத்துள்ளேன்.

சோதிட புரட்டு என்ற தொடர் கட்டுரையின் ஆசிரியர் திரு. நக்கீரன் அவர்களின் கருத்தில் சில பகுதியை தருகிறேன். அவரின் கருத்துக்கு நான் 100 விகிதம் உடன்பாடு உள்ளவன். நிச்சியம் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய தொடர்.

தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைக்குரிய நிலத் தெய்வங்களையே வணங்கினார்கள். ஊரின் ஒரு கோடியில் மரத்தின் கீழ் தூண் நட்டு அதில் தெய்வ உருவம் பொறித்து வணங்கினார்கள். ஆடு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்தார்கள்.

போரில் விழுப்புண்பட்டவர்களுக்கு ஊர்ப்புறத்தே நடுகல் நட்டு வணங்கினார்கள். மறக்குடிப் பிறந்த மக்கள் நெல்லை உகுத்துப் பரவும் கல்லைத் தொழுவதன்றி வேறு கடவுளை வணங்கா இயல்புடையோர் என சங்கப் புலவர் மாங்குடி கிழார் சொல்கிறார்.

ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலவே - (புறம் 335)

சைவம் வடபுலத்தில் பிறந்து தென்புலத்தில் பரவி வளர்ந்ததாகும். அது மூவாயிரம் ஆண்டு பத்தாயிரம் ஆண்டு பழமையுடையது என்பது வெறும் புனைந்துரை. மொகெஞ்சொதரோவில் ஆசனமிட்டு தலையில் வளைந்த எரும்மைக் கொம்புளோடு யோகத்தில் அமர்ந்திருப்பது போல கண்டெடுக்கப்பட்ட உருவம் சிவனுடையது என்றும் சிவ வழிபாடு அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதும் வெறும் புனைந்துரையே.

அன்றைய வைதீக மதம் சங்க காலத்தின் இறுதியிலேயே தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கியது. வெள்ளை நிறத்தவரான ஆரியர் தம்மை நிலத்தேவர் என்றும் தம் மொழி தேவ மொழி என்றும் கருப்பு நிறத்தவரான தமிழ் மன்னர்களை ஏமாற்றி நம்ப வைத்தனர். இதனால் போர் புரியாமலே திராவிடரை வெல்லவும், அவர்களை வர்ணங்களாகப் பிரித்து அடிமை கொள்ளவும் கொள்ளவும் செய்தனர். 'மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்பதற்கு ஒப்ப பொதுமக்களும் மூவேந்தர் வழி சென்றனர்.

சங்க காலத்தில் தொழில் அடிப்படையில் பிரிவு இருந்தது. பிறப்பு அடிப்படையில் பிரிவு இருக்கவில்லை. தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்கள் குடிகள் என அழைக்கப்பாட்டனர்.

கிறித்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டிலேயே இந்து சமயக் கோய்pல்களும் உருவ வழிபாட்டு முறைகளும் பரவின. சிலப்பதிகாரம் காமன், பலதேவன், இந்திரன் போன்றோருக்கு கோட்டங்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது. பின்னர் அது வழங்கொழிந்து போனது. முருகனை மட்டுமே தமிழ்க் கடவுள் என்று குறிப்பதன் மூலம் எஞ்சியவர்கள் தமிழ்க் கடவுளர் அல்லர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது.

அரிது அரிது மானிடப் பிறப்பு அரிது என்றார் அவ்வையார். எனவே அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பிறப்பிலேயே நாம் செம்மையாக வாழ வேண்டும்.

நாம் வாழும் உலகம் சங்கரர் சொல்வதுபோல் மாயை அல்ல. புத்தர் சொல்வது போல் துன்பம் நிறைந்ததும் அன்று. சமணமதம் துறவை வற்புறுத்துகிறது. இந்து மதம் சொல்வது போல் ஒருவன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைப் படி பிரமனால் படைக்கப்படுகிறான் எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதும் உண்மையன்று.

துறவறத்தையும் மறுபிறப்பையும் கர்மவினையையும் வற்புறுத்திய இந்த சமயங்களால் தமிழர் போர்க்குணத்தை இழந்தார்கள். எதிரிகளோடு போராடி வெல்லாது அவர்களோடு இசைந்து செல்லும் சாதுக்களாக மாறினார்கள். ஏழ்மையை எதிர்த்துப் போராடாது அது விதி என்று அமைதியடைந்தார்கள். காணும் உலகியல் வாழ்க்கை சிற்றின்பம் எனவும் காணாத மறுவுலக வாழ்க்கை பேரின்பம் எனவும் சொல்லி தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர்.

உடல் நிலை, மனநிலை, நோய் நிலை, பொருளாதார நிலை அவரவரது மரபுவழி மற்றும் இப்பிறப்பில் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அமையும் என்பதற்குப் பதில் முப்பிறப்புக்குத் தக அமையும் என்ற நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்ப் புலவர்களில் வள்ளுவர் ஒருவரே சிறந்த அறிவியல்வாதி. சமயவாதிகள் கேள்வி கேட்காமல் தாம் சொல்வதை நம்புங்கள் என்று சொல்லும்போது வள்ளுவர் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அது உண்மையா என்பதை உரைத்துப் பார்ப்பதுதான் அறிவு என்றார். வள்ளுவருக்கு முன் இப்படிச் சொன்னவர் புத்தர் மட்டுமே.

வள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டி. பிற பண்பாட்டுப் படையெடுப்புக்கு வேலி கட்டியவர்.

ஒருவனது பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் செயல்களே காரணம் என்றார். புறக் காரணம் இல்லை என்றார்.

ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆதலால் அது உயிரைவிட மேலானது என்றார்.

'ஒழுக்கமற்ற ஆத்தீகனைவிட ஒழுக்கமுள்ள நாத்தீகன் மேலானவன்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒழுக்கம் பற்றி திருவள்ளுவர் தொடர்ச்சியாக பத்து அதிகாரங்களில் விளக்கிக் கூறுகிறார்.

பிறனில் விழையாமை, பொறையுடமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை தீவினை அச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ்.

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் களவும் பஞ்சமாபாதகம் என்கிறது மணிமேகலை.

கள்ளுண்பவர் நஞ்சுண்பவர் என்கிறார் திருவள்ளுவர். குடியைக் கெடுக்கும் குடிப்ப பழக்கத்திற்கு ஆளானாவர்கள் அதனை விட வேண்டும். புகை பிடிப்பர்களும் அவ்வாறே.

மதங்கள் ஒழுக்கத்தைவிட பக்தியே சிறந்தது என்கின்றன. பகவத் கீதையில் கண்ணன் 'எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னிடம் சரண்புகு. எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்' (கீதை 18-66) என்கிறான்.

அறம் செய்யத் தேவையில்லை. பக்தி செய்தால் போதும். கொலைகாரனாக இருந்தாலும் அவனுக்குச் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்டும். சிவராத்திரிக் கதை இதைத்தான் சொல்கிறது.

திருமங்கை ஆழ்வார் நாகபட்டினம் பவுத்தவிகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைக் களவுசெய்து சிறிராங்கம் கோயில் திருப்பணி செய்தார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை வைத்துக் கோயில் கட்டினார்.

பெரியபுராணத்தில் சொல்லப்படும் பல கதைகள் பக்திக்காக எந்த நேர்மையற்ற அநாகரிக செயலையும் செய்யலாம் என்கிறது.

ஒரு நாயனார் தினந்தோறும் சூதாடிப் பெற்ற பணத்தில் கோயில் திருப்பணி செய்தார்.

சிறு தொண்டர் என்ற நாயனார் சிவனடியார் கேட்டுக் கொண்டார் என்பதற்காக தனது பிள்ளையை வெட்டிக் கறி சமைத்து விருந்து வைக்க முனைந்தார். இயற்பகை நாயனாரிடம் சிவனடியார் அவரது மனைவியைக் கேட்டபோது அப்படியே தன் மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைக்க முயன்றாராம்.

விவிலிய வேதத்தில் கடவுள் கேட்டதற்கு இணங்க தனது ஒரே பிள்ளையை வெட்டிப் பலிகொடுக்க ஏப்ரகாம் முனைந்த கதை கூறப்படுகிறது.

இப்படி ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும், அறிவிற்கும் மாறான மதங்கள் நம் வாழ்வுக்கு பயன்படுமா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உங்கள் வருவாயில் இரண்டு விழுக்காட்டை அறச் செய்கைகளுக்குச் செலவிடுங்கள். சாநாள் வரும் வரை காத்திருக்காதீர்கள்.

அறம் எனப்படுவது மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் கொடுத்தல் அல்லது வேறில்லை என்கிறது மணிமேகலை. மேலும் மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறார்.

ஆனால் பாரதியார் இன்னும் ஒரு படி மேலே சென்று-

தெய்வம் பல பல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாயினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்கிறார்.

அறம் என்பது மனத்துக் கண் மாசிலன் ஆதல். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம். பொறாமை, அவா, கோபம், கடுஞ்சொல் இந் நான்கும் கடிந்து நடத்தல் அறமாகும்.

புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும் (298)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278)

வழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் (280)

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால் ( 972)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (616)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும் (625)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (322)

திருக்குறளில் உள்ள மருந்து அதிகாரத்தைப் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நலம் நீங்கள் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை, போதிய உறக்கம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.

அர்ச்சனை அபிசேகம் தேர்த் திருவிழா செய்தால் பாவம் கரையும் மறு உலகம் கிடைக்கும் என்றோ பிரார்த்தனை செய்தால் முக்தி கிடைக்கும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. அதனால் சமயவாதிகள் தீக்குறளை ஓதோம் என்று சொல்லிவிட்டார்கள்.

'இதெல்லாம் என் விதி! போதாத காலம்" என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடாதீர்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கையும் விடாமுயற்சி.யும் வேண்டும்.

'பிரார்த்தனை, ஆராதனை இவற்றால் பஞ்சம் தீராது. உழைத்தால்தான் பஞ்சம் தீரும். இதற்கு அறிவு, ஆற்றல், நம்பிக்கை இருக்க வேண்டுமம். சில சோம்பேறிகள் இருப்பதால்தான் நாடு எவ்வளவோ பின்தங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் அறியாமைகள், மூடநம்பிக்கைகள் நம் நாட்டில் அப்படியே இருக்கிறது" என்கிறார் கவியரசு வைரமுத்து.

'உண்டால் அம்ம இவ்வுலகம் பிறர்க்கென
வாழுநர் உண்மையானே"

என்று புறநானூறு பேசுகிறது. தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழும் சான்றோர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் தளைத்திருக்கிறது.

மனிதத்தை நேசியுங்கள். குடும்பம் ஒரு கோயில் என நினையுங்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவுங்கள். ஊருக்கு நல்லது செய்யுங்கள். நாட்டுக்கு தொண்டு செய்யுங்கள். தாய் தந்தையரைப் பேணுங்கள். நூல்களைப் படித்து அறிவை விருத்தி செய்யுங்கள். திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

சோதிடம் ஒரு புரட்டு என்பதை அசைக்க முடியாத சான்றுகளை மேற்கோள் காட்டி இக் கட்டுரைத் தொடரை எழுதியுள்ளேன். படித்தவர்கள் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தமிழர்கள் பகுத்தறிவோடு வாழ வேண்டும். அறிவியல் பண்பாட்டுத் தளங்களில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும். தோதிடம் என்பது மூடத்தனம், அறிவியல் உங்கள் மூலதனம்.

மேலும் படிக்க தமிழ்நாதம்
Reply
#28
பில்கேட்ஸ்... தனது முயற்சியால் கண்டுபிடிச்சதிலும் பார்க்க களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் மிக மிக அதிகம்... உதாரணத்துக்கு சன்னின் யாவாவ உல்டா பண்ணி சி சாப் விட்டது வரை விண்டேஸ் 95 முதல் வின்டோஸ் சேவர் 2003 வரை களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் அதிகம்... அப்ப அவரை உதாரணமாக் காட்டினா... களவெடு அடுத்தவன்ரயைச் சுரண்டு... மற்றவன விழுத்து... நீ மட்டும் வாழு என்பது போல சமூகத்து அடையாளம் காட்டுறியள்...அதாலதான் பில்கேட்ஸ் பற்றிக் கேட்டம்...தெரிஞ்சோண்டுதான் பில்கேட்ஸ் பில்கேட்ஸ் என்று கத்துறியளோ என்று அறிய....! அதுவும் அரைகுறைதான்... நிறை குடம் தளம்பாதெண்டது எவ்வளவு பெரிய உண்மை...அவன் நாத்திகன் ஆகினும் சரி ஆத்திகன் ஆகினும் சரி...!

சோதிடம் புரட்டோ இல்லையோ என்று ஆராய வேண்டியது நம்பி ஏமாந்தவர்கள் தான்... நாம் அந்த நிலையைக் கடந்து அதிக காலம் ஆயிற்று... ஆனா மதங்கள் மனிதனில் மதத்தைத்தான் வளர்த்தன என்றால் அது சுத்தப் பொய்... மனிதன் மதத்தை அது சொல்லும் தத்துவங்களை தவறாக விளங்கிக் கொண்டு அல்லது சரியாக விளங்கிக் கொண்டு தவறாக வழிகாட்டி.... தனது தேவைக்கு ஏற்ற மாதிரி உல்டா பண்ணி... அதன் மூலம் குற்றங்களை வளர்த்தான்...அதுதான் உண்மை...!

அன்று லிங்கன் உருவாக்கிய ஜனநாயகம் வெளிப் பார்வைக்காவது மக்கள் மயமானதாகத் தெரிந்தது இன்று அந்த ஜனநாயகத்துக்குள் ஆயுத சனநாயம் எவ்வளவு அழகா குந்தி இருந்து செய்ய வேண்டிய மக்கள் விரோதத்தைச் செய்து...ஆனா போர்வை என்னவோ அழகா இருக்கு சனநாயகம் என்று...! இதை யார் செய்தது லிங்கனா...??! அது போலத்தான் மதத் தத்துவங்களை வரைந்த சமூகவியலாளர்கள் பரந்த சிந்தனையோடு படைத்தவற்றை குறிய கண்ணோடத்தில் கண்டு குறுகி நிற்கிறார்கள் மனிதர்கள்...அதற்காகத்தான் இடைக்கிடை அவர் வந்தார் இவர் வந்தார் என்று சொல்லி மதங்களின் அடிப்படைகளை விளக்கி மனிதருள் எழுந்த மாணிக்கங்கள் --- ஜீசஸ் விவேகானந்தர் போன்றவர்கள் --- மனித சமூகத்தை அதன் வளர்ச்சியின் பொருட்டு விலங்குகளில் இருந்து மாறுபட்டு ஒழுக்கம் நிறைந்து கட்டுக்கோப்போடு கூடிய வினைத்திறனை வெளிப்படுத்தி வாழ வழி சொன்னனர்...அதையும் மனிதன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை....அநியாயங்களுக்குக் குறைவில்லை....எங்கும்....! மதம் என்ன எது வந்தும் சரிவராது...மனிதனுக்குள் இன்னும் விலங்குக் குணம்தான் ஆட்சிசெய்யுது...அதுதான் மண்டையில போடுவன் எண்டு பயங்காட்டினா மட்டும் துப்பாக்கியைக் கண்டு ஓடும் சிங்கள் புலி போல ஓடுறான்..அதைக் காட்டினால்தான் நம்ம தமிழனே அடங்குவான்... மனிதன் மாதிரி நடக்க முயல்வான்...!

கரி போட்ட கட்டுரையின் கட்டுரையாளருடன் நாமும் ஒத்துப் போகிறோம்...தமிழனை வழிப்படுத்த மதமல்ல திருக்குறள் அல்ல எதுவுமே முடியாது காரணம் குறள் வந்து 2000 க்கும் மேல் ஆண்டுகள் கடந்துவிட்டது அதன் முதல் குறள், முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.. சொல்லும் அர்த்தம் புரியாமல்தான் இன்றும் குறள் படி மதம் வெறு அது மூடநம்பிக்கை என்கிறார்கள்....போதுமா....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழன் சிற்றின்பக் கடலில் மிதக்கிறான் என்றால் மேற்குலகம் அதே கடலில் மூழ்கிக்கிடக்கு...தமிழன் அந்த நிலையை அடையாது இருக்க உங்கள் கட்டுரைகள் உங்கள் அனைவரையும் வழிநடத்த கடவுள்தான் அருள் புரிய வேண்டும்...அதாவது உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் பிறக்க நல்ல சக்தி பிறப்பிக்கப்பட வேண்டும்....!

இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....! :wink:

நன்றி வணக்கம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
kuruvikal Wrote:பில்கேட்ஸ்... தனது முயற்சியால் கண்டுபிடிச்சதிலும் பார்க்க களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் மிக மிக அதிகம்... உதாரணத்துக்கு சன்னின் யாவாவ உல்டா பண்ணி சி சாப் விட்டது வரை விண்டேஸ் 95 முதல் வின்டோஸ் சேவர் 2003 வரை களவெடுத்து உல்டா பண்ணினதுகள் தான் அதிகம்... அப்ப அவரை உதாரணமாக் காட்டினா... களவெடு அடுத்தவன்ரயைச் சுரண்டு... மற்றவன விழுத்து... நீ மட்டும் வாழு என்பது போல சமூகத்து அடையாளம் காட்டுறியள்...அதாலதான் பில்கேட்ஸ் பற்றிக் கேட்டம்...தெரிஞ்சோண்டுதான் பில்கேட்ஸ் பில்கேட்ஸ் என்று கத்துறியளோ என்று அறிய....! அதுவும் அரைகுறைதான்... நிறை குடம் தளம்பாதெண்டது எவ்வளவு பெரிய உண்மை...அவன் நாத்திகன் ஆகினும் சரி ஆத்திகன் ஆகினும் சரி...!

சோதிடம் புரட்டோ இல்லையோ என்று ஆராய வேண்டியது நம்பி ஏமாந்தவர்கள் தான்... நாம் அந்த நிலையைக் கடந்து அதிக காலம் ஆயிற்று... ஆனா மதங்கள் மனிதனில் மதத்தைத்தான் வளர்த்தன என்றால் அது சுத்தப் பொய்... மனிதன் மதத்தை அது சொல்லும் தத்துவங்களை தவறாக விளங்கிக் கொண்டு அல்லது சரியாக விளங்கிக் கொண்டு தவறாக வழிகாட்டி.... தனது தேவைக்கு ஏற்ற மாதிரி உல்டா பண்ணி... அதன் மூலம் குற்றங்களை வளர்த்தான்...அதுதான் உண்மை...!

அன்று லிங்கன் உருவாக்கிய ஜனநாயகம் வெளிப் பார்வைக்காவது மக்கள் மயமானதாகத் தெரிந்தது இன்று அந்த ஜனநாயகத்துக்குள் ஆயுத சனநாயம் எவ்வளவு அழகா குந்தி இருந்து செய்ய வேண்டிய மக்கள் விரோதத்தைச் செய்து...ஆனா போர்வை என்னவோ அழகா இருக்கு சனநாயகம் என்று...! இதை யார் செய்தது லிங்கனா...??! அது போலத்தான் மதத் தத்துவங்களை வரைந்த சமூகவியலாளர்கள் பரந்த சிந்தனையோடு படைத்தவற்றை குறிய கண்ணோடத்தில் கண்டு குறுகி நிற்கிறார்கள் மனிதர்கள்...அதற்காகத்தான் இடைக்கிடை அவர் வந்தார் இவர் வந்தார் என்று சொல்லி மதங்களின் அடிப்படைகளை விளக்கி மனிதருள் எழுந்த மாணிக்கங்கள் --- ஜீசஸ் விவேகானந்தர் போன்றவர்கள் --- மனித சமூகத்தை அதன் வளர்ச்சியின் பொருட்டு விலங்குகளில் இருந்து மாறுபட்டு ஒழுக்கம் நிறைந்து கட்டுக்கோப்போடு கூடிய வினைத்திறனை வெளிப்படுத்தி வாழ வழி சொன்னனர்...அதையும் மனிதன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை....அநியாயங்களுக்குக் குறைவில்லை....எங்கும்....! மதம் என்ன எது வந்தும் சரிவராது...மனிதனுக்குள் இன்னும் விலங்குக் குணம்தான் ஆட்சிசெய்யுது...அதுதான் மண்டையில போடுவன் எண்டு பயங்காட்டினா மட்டும் துப்பாக்கியைக் கண்டு ஓடும் சிங்கள் புலி போல ஓடுறான்..அதைக் காட்டினால்தான் நம்ம தமிழனே அடங்குவான்... மனிதன் மாதிரி நடக்க முயல்வான்...!

கரி போட்ட கட்டுரையின் கட்டுரையாளருடன் நாமும் ஒத்துப் போகிறோம்...தமிழனை வழிப்படுத்த மதமல்ல திருக்குறள் அல்ல எதுவுமே முடியாது காரணம் குறள் வந்து 2000 க்கும் மேல் ஆண்டுகள் கடந்துவிட்டது அதன் முதல் குறள், முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.. சொல்லும் அர்த்தம் புரியாமல்தான் இன்றும் குறள் படி மதம் வெறு அது மூடநம்பிக்கை என்கிறார்கள்....போதுமா....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழன் சிற்றின்பக் கடலில் மிதக்கிறான் என்றால் மேற்குலகம் அதே கடலில் மூழ்கிக்கிடக்கு...தமிழன் அந்த நிலையை அடையாது இருக்க உங்கள் கட்டுரைகள் உங்கள் அனைவரையும் வழிநடத்த கடவுள்தான் அருள் புரிய வேண்டும்...அதாவது உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் பிறக்க நல்ல சக்தி பிறப்பிக்கப்பட வேண்டும்....!

இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....! :wink:

நன்றி வணக்கம்...!

---------------------------------------

கடவுள் வாழ்த்து குறள்கள்...

<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-1.gif' border='0' alt='user posted image'>

வான் சிறப்பு...

<img src='http://www.tamilcyber.com/resources/kural/1-2.gif' border='0' alt='user posted image'>

source - tamilcyber.com

( திருவள்ளுவர் கருதிய வானுலகம் பற்றிச் என்ன சொல்லீனமோ..??! வள்ளுவரே கவனமாயிரும்...உம்மையும் முட்டாள் எனுது ஒரு கூட்டம்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
சரி சரி எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்....! விவாதம் முடிஞ்சிது தானே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
Quote:இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....!
சரி சரி எனது நவராத்திரி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!! பிளீஸ் தொடர்ந்து எங்களுடன் கருத்துச் சண்டை பிடிக்க வாருங்கள்
<b>
?
- . - .</b>
Reply
#32
Sriramanan Wrote:
Quote:இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....!
சரி சரி எனது நவராத்திரி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!! பிளீஸ் தொடர்ந்து எங்களுடன் கருத்துச் சண்டை பிடிக்க வாருங்கள்
நவராத்திரி எப்பவோ முடிஞ்சு அடுத்த வருடத்துக்கு சொல்லுறியளோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#33
kavithan Wrote:

அப்ப நான் அடுத்த வருசம் சொல்லத் தேவையில்லை எண்டு சொல்லுறியள்
<b>
?
- . - .</b>
Reply
#34
வள்ளுவர் சொன்ன கடவுள் வாழ்த்தோட முடிப்பம்...அதுதான் அறம்...! வாழ்த்துச் சொன்ன தமிழினிக்கு நன்றிகள்....அவங்களுக்கு எது அறம் என்று தெரிஞ்சிருக்கு ஏன் மற்றாக்களுக்குப் புரியல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
Quote:வள்ளுவர் சொன்ன கடவுள் வாழ்த்தோட முடிப்பம்...அதுதான் அறம்...!
அது அறம் தான் .
வழிபாட்டுக்குள்ள(கடவுள் வாழ்த்து) போய் அதுக்குள்ள நெந்திக் கண்ணனையும், யானைத் தலையனையும் புகுத்தி விளக்கம் தேடினா அது ............ :roll: .................:roll: ................. :roll: நிச்சயமாக அறம்தான்.
<b>
?
- . - .</b>
Reply
#36
Quote:அதுவும் அரைகுறைதான்... நிறை குடம் தளம்பாதெண்டது எவ்வளவு பெரிய உண்மை...அவன் நாத்திகன் ஆகினும் சரி ஆத்திகன் ஆகினும் சரி...!
வெறும் குடமும் தளம்பாதுங்கோ
Reply
#37
hari Wrote:
Quote:அதுவும் அரைகுறைதான்... நிறை குடம் தளம்பாதெண்டது எவ்வளவு பெரிய உண்மை...அவன் நாத்திகன் ஆகினும் சரி ஆத்திகன் ஆகினும் சரி...!
வெறும் குடமும் தளம்பாதுங்கோ

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#38
குடத்துக்க கொஞ்சோண்டும்...தண்ணி இருந்தாத்தான் தளம்புறது என்று வரும்...வெறுக்குடத்துக்கு தளம்புறது என்றுறதில்ல... புரளுறது கவுழுறது எண்டுறது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
kuruvikal Wrote:குடத்துக்க கொஞ்சோண்டும்...தண்ணி இருந்தாத்தான் தளம்புறது என்று வரும்...வெறுக்குடத்துக்கு தளம்புறது என்றுறதில்ல... புரளுறது கவுழுறது எண்டுறது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#40
Sriramanan Wrote:
kavithan Wrote:
Sriramanan Wrote:
Quote:இதோட நாங்க முடிச்சுக்கிறம் நீங்க தொடருங்கோ....!
சரி சரி எனது நவராத்திரி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!! பிளீஸ் தொடர்ந்து எங்களுடன் கருத்துச் சண்டை பிடிக்க வாருங்கள்
நவராத்திரி எப்பவோ முடிஞ்சு அடுத்த வருடத்துக்கு சொல்லுறியளோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப நான் அடுத்த வருசம் சொல்லத் தேவையில்லை எண்டு சொல்லுறியள்

உங்களிட்டை எல்லாம் வாழ்த்து கேட்டா இருக்கிறதும் இல்லாமல் போனாலும் போகும்,,.... சரி இனி நீங்கள் ஒருக்காலுமே வாழ்த்த தேவை இல்லை
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)