Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நவராத்திரி வாழ்த்துக்கள்...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/saraswathy.jpg' border='0' alt='user posted image'>

கள உறவுகள் அனைவருக்கும்
கல்வித்தாயாம் கலைவாணியின்
கருணை கிடைத்திட
நாவிருந்து நாவன்மை காத்து
சத்தியம் விளங்கிட...
அவள் நாமம் துதித்து
சகலகலாவல்லி மாலை பாடிப்
பயன்பெற்றிட வாழ்த்தி வணங்குகிறோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b><img src='http://kuruvikal.yarl.net/archives/saraswathy.jpg' border='0' alt='user posted image'>
குருவிகளின் வாழ்த்திற்கு நன்றிகள்.. யாவருக்கும் நம்ம வாழ்த்தும் உரித்தாகட்டும்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>

நவராத்திரிக்கும் வாழ்ததிறவையா..?? நாங்கள் தீபாவளிக்கு தை சித்திரை பொங்கலுக்கு தானே வாழ்த்திறனாங்கள்...! :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
வாழ்த்துக்கள் பரிமாறுதல் தவறில்லை... "காவ் எ நைஸ் வீக் எண்ட்" என்று வாரம் தோறும் வாழ்த்துறம்... "காவ் எ நைஸ் டே" என்று தினமும் வாழ்த்துறோம்... ஏன்... வாழ்த்துக்கள் பரிமாறப்படும் போது நாம் ஒரு சமூகத்தோடு வாழ்கின்றோம் என்ற மன நிறைவு ஏற்படும்...அது கவலைகள் மறந்து கணமேனும் இருக்க உதவிடும்... புதிய தெம்பு பிறப்பிக்கும்...!

இந்த வாழ்த்து அதுக்காக மட்டுமன்றி...இன்று ஆன்மீகம் என்பது கொச்சைக்குள்ளாகி வரும் நிலையில் அதை எமக்கு எமது ஆர்வம் கண்டு காட்டித்தந்தது போன்று நாமும் பாதை வகுத்து அதை எடுத்துச் சென்று அடுத்த சந்ததியில் ஆர்வம் உள்ளோரிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு உண்டு...அதை நிறைவு செய்ய சில அறிமுகப்படுத்தல்கள் அவசியம்...நாளை நவராத்திரி என்றால் என்ன என்று கேட்கும் நிலையே இன்று வளர்க்கப்பட்டு வருகிறது....!

ஏன் சிறுவர் தினம், பெண்கள் தினம் என்று எல்லாம் வைத்திருக்கிறார்கள்... ஒரு விழிப்புணர்வை கவனயீர்ப்பை சமூகத்தில் உண்டு பண்ணத்தான்...அது போலத்தான் இதுவும்...!

மற்றவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கோ வாழ்த்துவதால் நீங்களும் மற்றவர்களும் கணமேனும் மகிழ்ச்சி பெறுவீர்கள்....உணர்ந்து பாருங்கள் உணர்வீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:இன்று ஆன்மீகம் என்பது கொச்சைக்குள்ளாகி வரும் நிலையில்
ஆன்மீகம் என்ற பெயரில் வளர்க்கப்டும் மூட நம்பிக்கைகளே கொச்சைப் படுத்தப்படுகின்றன. அதிலுள்ள நல்ல வியங்கள் இன்று போற்றப்படுகின்றன குறிப்பாக நீங்கள் முன்னர் கூறிய யோகாசனம் தியானம் போன்றவை. இவை இந்தியாவில் பிறந்தாலும் இவற்றின் மகிமையை முழு உலகமுமே போற்றுகின்றது.
<b>
?
- . - .</b>
Reply
#5
கல்வியை தாயாக உருவகித்து வாழ்த்தி மகிழ்வதை மூடநம்பிக்கை என்று சொன்னால்... (நீங்கள் சொல்லவில்லை..சொல்ல வெளிக்கிட்டால்) காதலன் காதலி கணவன் மனைவி மாமா மாமி....இப்படி சமூக அமைப்பும் மூட நம்பிக்கைதான்...உயிரியல் விஞ்ஞானத்தின் பிரகாரம் ஆணும் பெண்ணும் அதன் சந்ததிகளும் என்பதே சரி.... விலங்குகளில் தாவரங்களில் உள்ளது போன்று....தயவுசெய்து மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்... மூடநம்பிக்கை என்று சொல்ல முதல் தயவுசெய்து ஆழமாக மனித சமூகம் அவனின் அறிவியற் திறன் பகுத்தாயும் ஆற்றல் மூளை வளர்ச்சி அதன் பயன்பாடு அதன் மூலம் எழுந்த பண்பாடுகள் நாகரீகங்கள் விழுமியங்கள் இவற்றிற்கும் மனிதனின் சமூக வாழ்வுக்கும் விருத்திக்குமான தொடர்புகள் அவசியங்கள் பற்றி ஆராயுங்கள்....!

அத்தோடு மனதார ஒரு வாழ்த்தும் சொல்லுங்கள் அதுவும் ஆன்மீகத்தில் உண்டு....! அன்பைப் பகர்ந்துபார் நீயும் மகிழ்வுற்று மற்றவனும் மகிழ்வுறுவான்... அன்பு விஞ்ஞானத்தால் விளக்கமுடியா வடிவம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
குருவியரே
நீங்கள் எனது கருத்தைப் தப்பாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள்.
கல்வியைத் தாயாக என்ன தெய்வமாகக் கூட வணங்கலாம்.
ஆனால் அக் கல்வி கிடைக்கவேண்டும் என மூன்று நாட்கள் சரஸ்வதியைக் கும்பிடுவைத்தான் மூட நம்பிக்கை என்கிறேன்.
<b>
?
- . - .</b>
Reply
#7
நீங்கள் கருத்தே சொல்லவில்லையே பிறகெப்படி தவறாக விளங்கிக் கொள்வது...அதுதான் சொல்லி இருக்கிறோமே...இப்படி எல்லாம் சொல்லலாம் என்று...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கல்வி மூன்று இயல்களை அடிப்படையாகக் கொண்டது இயல் இசை நாடகம்...அதற்குத்தான் மூன்று தினங்கள்...இப்போ காதலர் தினம் போல...அவை ஒவ்வென்றிற்கும் ஒவ்வொரு தினம்...காதல் - அன்பின் அடிபடையானது எனின் தினமும் இருக்க வேண்டிய உள உணர்வு..அதையே ஒரு நாளிற்கு சுருக்கி இருக்கிறது நவீன உலகம்...வேண்டுமானால் ஒருதலைக் காதல் இருதலைக் காதல் எம் எஸ் என் காதல், எஸ் எம் எஸ் காதல், டேட்டிங் காதல் இப்படிப் பிரிச்சும் கொண்டாடலாம்...அது அறிவுபூர்வமானது இல்லையா...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

மனிதன் எங்கே போகிறான் விளங்க முடியாப் புதிர் என்கிறது விஞ்ஞானம் கூட.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:நீங்கள் கருத்தே சொல்லவில்லையே பிறகெப்படி தவறாக விளங்கிக் கொள்வது...
கருத்தைச் சொல்லாமல் சொன்னேன் என்று கூறியததற்கு நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

கல்வித் தினங்கள் என்று சொல்லி நவராத்திரியில் மூன்று நாட்கள் கல்வியைத் தா சரஸ்வதித் தாயே எனது கல்வியறிவைக் கூட்டு சரஸ்வதித் தாயே என்று கும்பிடுகிறோம். அதனால் எங்களிற்கு எந்தவித பிரியோசனமும் ஏற்படப்போவதில்லை.

Quote:கல்வி மூன்று இயல்களை அடிப்படையாகக் கொண்டது இயல் இசை நாடகம்...அதற்குத்தான் மூன்று தினங்கள்...இப்போ காதலர் தினம் போல...அவை ஒவ்வென்றிற்கும் ஒவ்வொரு தினம்...காதல் - அன்பின் அடிபடையானது எனின் தினமும் இருக்க வேண்டிய உள உணர்வு..அதையே ஒரு நாளிற்கு சுருக்கி இருக்கிறது நவீன உலகம்...வேண்டுமானால் ஒருதலைக் காதல் இருதலைக் காதல் எம் எஸ் என் காதல், எஸ் எம் எஸ் காதல், டேட்டிங் காதல் இப்படிப் பிரிச்சும் கொண்டாடலாம்...அது அறிவுபூர்வமானது இல்லையா...????!

நாங்கள் யாரும் காதலர் தினத்தில் எனக்கு காதல் தா தெய்வமே காதல் தா என்று வேண்டுவதில்லை! ஆனால் நவராத்திரியில் நாம் என்ன செய்திறோம் முதல் மூன்று நாளும் எனக்கு வீரத்தைத் தா துர்க்கையே, அடுத்த மூன்று நாளும் எனக்கு செல்வத்தைத் தா இலச்சுமியே அடுத்த மூன்று நாளும் எனக்கு கல்வியைத் தா சரசுவதியே என்று பிரார்த்திக்கின்றோம். இந்த பிரார்த்தனையைத் தான் மூட நம்பிக்கை என்கிறோம்.

ஆனால் விசய தசமி அன்று ஒரு மழைலைக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கு முயற்சிக்கிறீர்களே அதை நாங்கள் வரவேற்கிறோம். அதை வருசத்தில் ஒரு நாள் என்ன மாத்தில் ஒரு நாள் என்று மாத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்
<b>
?
- . - .</b>
Reply
#9
மன்னிப்பெல்லாம் வேண்டாம்...தவறுகள் மனிதனிற்குப் பொது...தவறை விட்டுவிட்டு மறைப்பதுதான் உண்மையில் தவறு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

காதலர் தினத்தில் பச்சை உடுப்பு உடுத்தி ரோஜாப் பூச்செண்டோடு பெட்டைகளும் பொடியளும் கெஞ்சிறத நாங்களும் கண்டுதான் வந்திருக்கிறம்...கனகாலம் இல்ல நேற்று... அங்க ஏதோ முயற்சி நடக்குது..சிலது வெல்லுது பலது தோற்குது....சிலது பம்பலோட போகுது...!

அதுபோலத்தான் நவராத்திரி என்பது முயற்சிகளை மேற்கொள்ள விழிப்புணர்வை உண்டு பண்ண கொண்டாடப்படுகிறது... படத்தை வைச்சு பொங்களோட படையல் செய்து கடலையும் அவலும் சாப்பிடுவதற்கல்ல இவை.... வீரம் செல்வம் கல்வி இவை மூன்றும் வாழ்வுக்கு அடிப்படை அவற்றை சரிவர விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அவற்றின் தேவையை விளக்கி அவர்கள் தங்கள் வாழ்வில் இவற்றைத் தேடத் தூண்டுதலே இதன் நோக்கம்....!

இப்ப காதலர் தினத்தில வீட்டுக்க இருந்தா லவ்ஸ் வருமோ..... பூச்செண்டுதான் வருமோ...சொல்லுங்கோ.....முயற்சி செய்யத் தூண்டுது..பிறகு அதுவே தெம்பாக தினமும் காதலர் தினம் தான்..படிப்புப் பாழ் சிலதுக்கு வாழ்கையும் பாழாகும் அது வேற கதை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இப்ப விளங்க வேணும் விளங்காட்டி கஸ்டம்தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
Quote:மன்னிப்பெல்லாம் வேண்டாம்...தவறுகள் மனிதனிற்குப் பொது...தவறை விட்டுவிட்டு மறைப்பதுதான் உண்மையில் தவறு...!
நான் எனது தவறை மறைக்கவில்லைத் தானே?
* * * * * * * * * * * * * * * * * *
என்னைக் காதலி என்று ஒரு பெண்ணிடம் கெஞ்சினால் சிலவேளைகளில் அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாள். (அவள் ஏற்றுக் கொள்வாள் என்றால் கெஞ்சுவது தவறில்லையே...)
ஆனால் கல்வியைத் தா எண்டு சரசுவதியை வேண்டுகிறோம். சரசுவதி உதவி செய்வாள் எண்டு நினைச்சுக் கொண்டு ஊக்கம் எடுக்காமல் இருந்தா எங்கள் கதி அதோ கதிதான்.
<b>
?
- . - .</b>
Reply
#11
முயற்சி செய்யாமல் இருந்திடாதே என்பதற்காகத்தான் இவ்விழாக்கள்...தவறாக புரிந்து கொள்ள முனையாவிட்டால் சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரஸ்வதியென்ன... ஒரு மனிதனில் வாழ்வில் வீரம் செல்வம் கல்வி மூன்றும் இல்லையோ பல காதலிகள் காதலைக் கூடத் தரத் தாயாரில்லை....அதேபோல் மறுதலையும் சில சந்தர்ப்பங்களில் உண்மை... ஆனால் கெஞ்சிப் பெறுவது காதலாக இருக்கமுடியாது.... உண்மைக்காதல் அன்பின் அடிப்படையில் எழுவது...அன்பு கெஞ்சிப் பெறுவதல்ல...இயல்பாக எழுவது.... குறிப்பிட்ட நபரில் விசேடித்து எழுந்தால் அங்கு காதல் மலரலாம்... கெஞ்சிப் பெற்றால்....அது காதற் பிச்சை....விலங்கிலும் கேட்டு நிலை என்றே நாம் கருதுகின்றோம்... விலங்கு கூட கெஞ்சுவதில்லை...தன் இணை சேர...அது இயற்கை.....அதற்காக பாடம் படிக்கத் தேவையில்லை....! Idea :wink:

எது எப்படியோ கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றின் தேவைகளையும் அவசியத்தையும் விளக்கும் நவராத்திரி நாளில் நாம் அவ்விலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சிக்க உறுதிபூணுவோமாக....அதுவே மனிதன் மனிதனாக வாழத் தேவை.....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
Quote:அதுபோலத்தான் நவராத்திரி என்பது முயற்சிகளை மேற்கொள்ள விழிப்புணர்வை உண்டு பண்ண கொண்டாடப்படுகிறது... படத்தை வைச்சு பொங்களோட படையல் செய்து கடலையும் அவலும் சாப்பிடுவதற்கல்ல இவை.... வீரம் செல்வம் கல்வி இவை மூன்றும் வாழ்வுக்கு அடிப்படை அவற்றை சரிவர விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அவற்றின் தேவையை விளக்கி அவர்கள் தங்கள் வாழ்வில் இவற்றைத் தேடத் தூண்டுதலே இதன் நோக்கம்....!

நவராத்திரியில் அதையா செய்கிறோம்? இல்லையே விதரம் இருந்து கல்வி தா செல்வம் தா வீரம் தா இப்படியல்லவே வேண்டுகிறோம். இதைத்தானே நான் பிழையானது எனச் சொல்லுகிறேன் (விதரமிருப்பதையல்ல)

Quote:இப்ப காதலர் தினத்தில வீட்டுக்க இருந்தா லவ்ஸ் வருமோ..... பூச்செண்டுதான் வருமோ...சொல்லுங்கோ.....முயற்சி செய்யத் தூண்டுது..பிறகு அதுவே தெம்பாக தினமும் காதலர் தினம் தான்..படிப்புப் பாழ் சிலதுக்கு வாழ்கையும் பாழாகும் அது வேற கதை....!
இதிலை நீங்கள் லவ்ஸ் எண்டு சொன்னது காதலை என்றால் நீங்கள் சொன்னது தவறு ஏனென்டா காதலர் தினத்தை கொண்டாடாத ஒருதலைக் காதலரையும் பார்த்திருக்கிறேன் இருதலைக் காதலரையும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களின் காதலில் மாற்றம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
அதேவேளை நீஙகள் லவ்ஸ் எண்டு சொன்னது காதலியை என்றால் no comments.
<b>
?
- . - .</b>
Reply
#13
நவராத்திரி வாழ்த்துக்கள் ..ம்ம்.கொஞ்சம் பிசி..அது தான் இப்ப சொல்லுறன் வாழ்த்து.

மனரீதியாக ஒரு நம்பிக்கை தான் கடவுளை வணங்கிறது... அதுக்காக உங்களை யார் போய் கடவுளே அது தா இது தா எண்டு கேக்க சொன்னது...
[b][size=18]
Reply
#14
இந்த சரஸ்வதி பூசையை செய்யாமல் உலகில் எத்தனை கல்விமான்கள் உருமாகியுள்ளனர். அது எப்படி சாத்தியம்? மகாலட்சுமியை வணங்கிதான் பீல்கேட் உலக பணக்காரன் ஆனான? இந்த மூட நம்பிக்கைதான் தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு. இந்த பலவீனத்தை பயன்படுத்திதான் மூலைமுடுக்கு எல்லாம் கள்ளச்சாமிகள் உருவெடுக்கின்றனர்.

மனிதத்தை நேசியுங்கள். குடும்பம் ஒரு கோயில் என நினையுங்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவுங்கள். ஊருக்கு நல்லது செய்யுங்கள். நாட்டுக்கு தொண்டு செய்யுங்கள். தாய் தந்தையரைப் பேணுங்கள். நூல்களைப் படித்து அறிவை விருத்தி செய்யுங்கள். திருக்குறளை நாள்தோறும் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
Reply
#15
பில் கேட்சும் சரி எந்த மனிதனுக்கும் சரி வாழ்வின் அடிப்படைகளான வீரம் செல்வம் கல்வி இவற்றை அடைவதற்கான உழைப்புக்கான முயற்சியை ஊக்குவிக்க ஒரு காரணி தேவை... எமது கீழத்தேசய சமூகவியல் அதை இப்படியும் சொல்கிறது... அவர்களின் மேலைத்தேய சமூகம் துப்பாக்கி சட்டம் கொண்டு சொல்கிறது அவ்வளவும் தான்....நாம் அவர்களை விட பலமாக சமூகத்தால் நல்வழி நோக்கி வழிநடத்தப்படுகின்றோம்...ஆனால் அதை விளங்கிக் கொள்ளாது முழிக்கின்றோம்...அவர்களோ தங்களை நல்வழிப்படுத்த குறைவான அமசங்களே இருக்கின்றன என்று கவலையோடு முயற்சி செய்து முன்னேறுகிறார்கள்....அவர்கள் வேறு வகையில் வழிநடத்தப்படுகின்றனர்...ஆனால் அடையும் இலக்கு ஒன்றுதான்...ஆனால் இலக்கு அடையப்படும் போது மனிதன்... மனிதாபிமானம் நிறைந்தவனாக இருக்க, மனிதனாக இருக்க, கருணை உள்ளவனாக இருக்க, சமூகத்தை நேசிப்பவனாக இருக்க,மனப்பக்குவத்திற்கு... திருப்திக்கு என்று எங்களுக்கு அதிகம் வழிகாட்டப்படுகிறது...அங்கு அது குறைவு...அதனால்தான் அங்கு பல சமூகப் பிரச்சனைகள்.... பப்பும் கிளப்பும் குடியும் கூத்தும்....இன்னும் என்னென்னவோ எல்லாம் தேவைப்படுகிறது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
இந்த குதக்கத்திற்கு குதக்கமா பதில் எழுத விருப்பம்... நேரம் ஒத்துழைக்க மாட்டேன்குது.... வேறை ஒரு நாள் எழுதிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

-சபேஷ்-
Reply
#17
Quote:இந்த சரஸ்வதி பூசையை செய்யாமல் உலகில் எத்தனை கல்விமான்கள் உருமாகியுள்ளனர். அது எப்படி சாத்தியம்? மகாலட்சுமியை வணங்கிதான் பீல்கேட் உலக பணக்காரன் ஆனான?

நல்ல கேள்வி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
நன்றி தமிழினி அக்கா. எப்படி எத்தனையோ கேள்விகள் கேட்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை நித்திரை போல் நடிப்பவர்களை இந்த கேள்விகளால் எழுப்ப முடியாது
Reply
#19
Quote:அங்கு பல சமூகப் பிரச்சனைகள்....
அங்கு பல சமூகப் பிரச்சினைகளா? இவை எங்கள் சாதிப் பிரச்சினைவிடப் பெரிய பிரச்சினையா?
Quote:பப்பும் கிளப்பும் குடியும் கூத்தும்....இன்னும் என்னென்னவோ எல்லாம் தேவைப்படுகிறது....!
என்ன எங்கள் நாட்டில் மாத்திரம் குடி கூத்தெல்லாம் இல்லையோ?
<b>
?
- . - .</b>
Reply
#20
உலகிலையே அதிகம் அற்ககோலில் புகைப்பிடித்தலில் ஆட்டம் பாட்டம் என்றும் பப்பும் கிளப்பும் கசினோவும் என்று அலைப்பவர்கள் மேற்குலகத்தினர்தான்... காரணம் மன அழுத்ததில் இருந்து விடுபடுவதற்காகவாம்....எங்களுக்கு... ஆலயங்களை ஆகமநெறியின் கீழ் தலம் தீர்த்தம் விருட்சம் என்று நிறுவி ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தி மன ஒருமைப்பாட்டுக்கு விக்கிரகங்களை வைத்து வழிபாடு செய்யச் சொல்லி சாதாரணமான மக்களையும் தியானத்தின் பால் இட்டுச் சென்று மன அமைதி பெற மகிழ்ச்சி பெற வழி செய்யப்பட்டுள்ளது...அது போதும்...! அதை உணராத... மூடநம்பிக்கை என்று கூறுவோரும் அவற்றில் நம்பிக்கை அற்றோரும் பலவீனக்காரர்களும் மதுவுக்கு எங்கும் அடிமையாகித்தான் உள்ளனர்...ஆனால் மேற்கில் போல் இல்லை...!

மேற்கிலும் தான் சமூகப்பிரிவினைகள் இருக்கு.. கீழ்மட்ட மக்கள் நடுத்தரமட்ட மக்கள் மேல்மட்ட மக்கள் என்று அங்கும் தெளிவான பிரிவினை இருக்கு... மேற்குலகம் ஒன்றும் புனித தேசம் அல்ல...அங்கு எங்கள விடச் சூத்தைகள் அதிகம்....!

நித்திரை கொள்பவனையும் எழுப்பலாம் கொள்வதாக நடிப்பவனையும் ஒரு நிலையில் அறிந்து கொள்ளலாம்... ஆனால் சரியான விளக்கம் தேடாமல் மூடநம்பிக்கைப் பட்டம் சுமத்துபவர்களை விழிக்கப்பண்ணுவதுதான் கஸ்டம்....!

ஒருவேளை நவராத்திரி பற்றி அறிந்திருந்திருதால் பில் கேட்ஸ் எதிர்பார்த்ததை விட விரைவாக பணக்காரர் ஆகி இருக்கலாம்... ஆனால் செல்வத்தின் கல்வியின் வீரத்தின் மகிமை அறிந்திருந்தும் எம்மால் சரியான முயற்சி எடுத்து பில் கேட்ஸ் மாதிரி ஆக முடியவில்லையே அதற்கான முயற்சி எம்மிடம் இல்லையே என்று வருத்தப்படாதவர்களுக்கு நவராத்திரி என்ன எதுவும் உறைக்காது...இப்படியே பில் கேட்ஸை உதாரணம் காட்டியபடி வாழ வேண்டியதுதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)