Quote:இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் எந்த அளவில் உங்கள் சிந்தனையை விருத்தி செய்துள்ளீர்கள்
என்பது தெளிவாகிறது..... நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக அதிகம்....
நாங்களும் தான்...ஆனால் எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ஊட்டிய அரசியல் சமூகவியல் உண்மைகள்...
சிலவற்றை தெளிவாகக் காண உதவியளிக்கின்றன...நீங்கள் மேற்குலகில் உங்கள் இடைக்காலக்
கல்வியை பெற்று இருக்கிறீர்கள் போல் தெரிகிறது ...அவர்கள் தான் உலகளாவிய பரந்த அறிவு
இல்லாமல் இருக்கின்றனர்.....அந்தச் சாயல் உங்களிலும் அடிக்கிறது....!
மீண்டும் மீண்டும் உங்களால் கருத்துக்களை கூர்ந்து காண முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.....
ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவிட்டோம் விஞ்ஞான ஆய்வுகளில் இன்னும்பலதை சாதிக்க வெண்டியுள்ளது
என்று...அதற்குள் முடிவைக் கொண்டுவா என்றால் என்னாவது....மன்னிக்கவும் இப்படியான்
சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு எம்மிடம் பதிலை எதிர்பார்க்காதீர்கள் பதில் இருந்தாலும்
அதை உங்களுக்கு விளங்கப்படுத்த புதிய கல்வியியல் முறையை கண்டுபிடித்துக் கொண்டுதான்
நாம் இங்கு வரவேண்டும்...!
எங்களால் மட்டுமல்ல எவராலும் உங்கள் போன்றவர்களுக்கு பதில் தர முடியாது.....காரணம்
உண்மையையே பொய் என்பவனுடன் களத்தில் சந்திக்க முடியாது வேண்டும் என்றால் ஆய்வு
சாலையில் அல்லது மருத்துவ மனையில் சந்திக்கலாம்...!
இளைஞரே...உங்களுக்கும் உயிரியல் உண்மைகளுக்கும் வெகு தூரம் போல் மட்டுமன்றி...நாங்கள் எங்கள்
பெருமைக்கு அங்கு குறிப்பிடவில்லை...நீங்கள் சொல்லகராதி தேடக் கூடாது என்ற நோக்கத்திலேயே
குறிப்பிட்டோம்....! அந்தச் சாதாராண உண்மையையே உங்களால் சரிவரா இனங்காண முடியாத போது
உங்களுக்கு எங்களின் பார்வை பழையதாகத்தான் தெரியும்...உங்களைப் போல..நாங்களும் இளைஞர்கள்
தான்..என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....
நண்பரே....உங்களுடன் கருத்தாடியது எமது தவறே....காரணம் உங்களிடம் அடிப்படையே இல்லை
என்பதுதான் உங்களின் பதில் தரும் செய்தி....!
Very sorry...! Bye...!
ஆழ்ந்த அனுதாபங்கள் குருவிகளே...
முரண்படுவது போன்று பாவனை செய்வீர்கள். பிறகு இதைத்தான் நானும் சொன்னேன் என்று
உடன்படுவதாய் உள்வருவீர்கள். பெண்நிலைவாதத்தின் அடிப்படையில் இருந்து விலகி நின்று
கருத்து முன்வைப்பீர்கள், பிறகு மற்றவரின் கருத்தில் அடிப்படையில்லை என்பீர்கள். உங்கள்
கருத்தோடு நீங்களே முரண்படுவீர்கள். முன்னொன்றும் பின் வேறொன்றும் சொல்வீர்கள், சுட்டிக்
காட்டினால் அடுத்தவரை கருத்தில் திசைமாற்றம் செய்து கருத்தாடுபவரை தனிப்படத் தாக்க
முனைவீர்கள். உங்கள் கருத்தில் நியாயம் இல்லை என்பதை உணர்ந்தவுடன், மற்றவரில் குற்றம்
சாட்டி நழுவாமல் நழுவிக் கொள்வீர்கள்.
கருத்தோடு கருத்தாட வாருங்கள். கருத்தாளரின் நிலை பார்த்து வாராதீர்கள். அரசியலும்,
சமூகவியலும் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, படித்ததிற்கொப்ப என்றும் ஒழுகும் கல்வியல்ல.
உயிரியலை வைத்து இங்கு சமத்துவமும் உரிமைகளும் பேசப்படுவதில்லை. ஆதிக்கம்
என்றால் என்ன, அடக்குமுறை என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன, விழிப்புணர்வு
என்றால் என்ன என்பதை உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்கள் தடம் மாறியிருக்காது.
எடுகோளிற்குக் கொள்கை தேவை, கொள்கைக்குக் கோட்பாடு தேவை, கோட்பாட்டிற்கு விதி தேவை,
விதியிற்கு திருத்தம் தேவை. ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதும் தெரியும், ஒன்று இன்னொன்றை
இழந்தால் மனிதனின் கருத்தியல் சித்தாந்தமே உடைந்துவிடும் என்பதும் தெரியும். உங்களிற்குப்
புரியாததை கருத்தாடலர்களிடம் விளக்கும் கேட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டுவது திறமை. அதைவிடுத்து
தெரிந்ததை அடுத்தவரிடம் விளக்கம் கேட்டு மட்டந்தட்ட எண்ணுவது உங்கள் இயலாமை.
இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒன்று. இப்படியும் வாழலாம் என்பது இன்னொன்று. எப்படியும்
வாழலாம் என்பது மற்றொன்று. இதில் இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் கொள்கையிருக்குத்
திருத்தமில்லை. எப்படியும் வாழலாம் என்பதில் எதுவும் இல்லை. இப்படியும் வாழலாம் என்பதில்
எல்லாம் இருக்கு.
ஒரு இடத்தில் நின்றுகொண்டு இதற்குப் பின்னால் ஒன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றுக்குள்
நின்று கொண்டு அதைவிடப் பெரிதொன்றுமில்லை என்பது அறியாமை. கிணற்றைத்தாண்டி வெளியில்
வர விருப்பமில்லை. தாண்டிச் சென்றால் தடக்கி விழுந்துவிடுவோம் என்கின்ற பயம்.
இது Readymade உலகம் என்பது உங்கள் கருத்தின் தொனிப்பு. எல்லாமே படைப்பு என்பதுதான் உங்கள்
வாதம். அப்படியிருக்க உருவாக்கமும் உருமாற்றமும் உணர்ந்த தொனிப்பை உங்கள் கருத்தில் எப்படி
எதிர்பார்ப்பேன். தவறுணர்ந்து விலகிச் செல்கிறேன்.
நன்றி