Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள் - 61</b>
System File Checker என்றால் என்ன?
எமது கம்பியூட்டர் இருந்தாற்போல அல்லது நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் மின்தடையினால், அல்லது நாம் தவறாக கையாள்வதனால் ஏதாவது ஒழுங்கீனம் ஏற்பட்டு தாறுமாறாக் இயங்கினால் அல்லது ஏதாவது கோப்பை லோட் செய்யமுடியவில்லை அல்லது எதாவது ஒரு கோப்பு சேதமாகிவிட்டது என் பிழைச்செய்தி காட்டினால் முதலில் நாம் செய்யவேண்டிய வைத்தியம் இந்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கோப்புக்களை சீர்செய்வதுதான்.
இதைச்செய்வதற்கு நமக்கு உதவும் command line utility தான் இந்த System File Checker (Sfc) என்பது. சீர்செய்ய உதவும் ஓர் சிறிய கருவி.. இதை இயக்கியவுடன் Systemroot\system32\dllcache என்ற போல்டரில் உள்ள Protected Files களின் பிரதியுடன் ஒப்பிட்டு சேதமாகியுள்ள கோப்புக்களை சீர் செய்யும். சிலவேளைகளில் windows instalation cd ஐ கேட்கும். எனவே அதையும் கைவசம் வைத்திருக்கவும். இந்த SFC ஐ இயக்குவதற்கு;
கிளிக் Start--> Run--> sfc /scannow (type) அல்லது
கிளிக் Start --> Run --> cmd (type) --> ok --> sfc /scannow (type)
சீர்செய்து முடிந்தவுடன் தானாக மறைந்துவிடும். எந்த அறிவித்தலையும் காட்டாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
Sfc /scanboot என கட்டளை கொடுத்தால் ஒவ்வொருமுறையும் கம்பியூட்டர் boot பண்ணும்போது இவ்வேலை நடைபெறும்
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-62</b>
புறோகிறாமை இயக்க குறுக்குவழி
நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.
நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.
இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி அண்ணா...
அண்ணா எப்படி சேவிஸ்பாக் எக்ஸ்பி- 2 ஜ இடாமல்.. இயங்கு தளத்தை அப்டேற்பண்ணுவது.....? முடிந்தால் கூறுங்கள்...
[b][size=18]
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
Operating system பதிந்துள்ள 160Gb Hard disk driveஐ எப்படி இரண்டாக partion பண்ணுவது?
trial softwareஐ install பண்ணி, delete பண்ணிய பின்னர் அதன் fileகளை registryஇல் இருந்து நீக்குவது எப்படி? அதாவது அதை மீண்டும் எப்படி உபயோகிக்கலாம்?
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
எஸ்.பி 2 வை அகற்றிவிடுங்கள் ..நானும் அந்த அதை போட்டு பட்ட பாடு சொல்லேலாது.... பல பல பிரச்சனைகள்.... இப்ப புதிசா போட்ட இயங்குதளம் தானே அது இனும் அப்டேற்பண்ணலை அந்த கண்றாவி வந்திடும் என்று அதை இல்லாமல் தான் அப்டெற்பண்ணனும் யாரன் சொன்னால் தான் வழி.. எனக்கு வேறை தீர்வு தெரியாது இந்த முறையை தான் நான் செய்தேன்
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Thiyaham Wrote:sp2 install பண்ணிய பின்னர் என் கண்ணியில் பல நிகழ்வுகள் பிரச்சனை கொடுக்கிறது. கணணியை நிறுத்தும் போதும் பல பிரச்சனைகள். இதற்க்கு ஏதும் தீர்வு உண்டா?
என்க்கும் பிரச்சனை தான்.. நான் sp2 வை அகற்றிவிட்டேன்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி அண்ணா தகவலுக்கு ஆனால் நான் எங்கோ படித்தேன் அப்டேற் பண்ணும் போது எச்.பி 2 வை தவிர்த்து அப்டேற்பண்ண ஒரு வழி சில வாரங்களுக்கு முன்னர் ஆனால் அது எங்கு என்று தெரியாமல் தான் இப்போது முழிக்கிறேன்.....
[b][size=18]
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
sp2ஐ அகற்றிய பின்னும் ஏராளம் பிரச்சினைகள். இப்போ windows xp cdஐ போட்டு systemஐ repair செய்துள்ளேன். up dateஐ off பண்ணி வைத்துள்ளேன். norton security இருக்க பயமேன்..
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அதை அகற்றும் போது சொல்லும் சில மென்பொருட்கள் வேலை செய்வதில் பிரச்சனை ஏற்படும் என்று....இப்ப மேலே உள்ள மென்பொருளை இட்டிடுவிடு அப்டேற் பண்ணி பாக்கலையா...?
[b][size=18]
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
contral panal>system>automatic updatesக்கு போய் keep my computer upto date...என்றதிற்க்கு check mark போட்டால் கணணி updateஐ எடு எடு என்று தொல்லை தராது. sp2ஐ நீக்கிய பின்னரும் sp2க்காக update பண்ணப்பட்ட செயலிகள் பிரச்சனை இன்றி இயங்குகின்றன. உதாரணம் musicmatch 9.0
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-64</b>
Bootable CD - Windows 98 Start-up disk க்கு பதிலாக தயாரிப்பது எப்படி?
மென்தட்டு விரைவில் பழுதடைந்து விடுகிறதென்பதால் Windows start-up disk ஐ பயன்படுத்தி Bootable CD ஐ தயாரித்து வைத்துக்கொள்வது தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இது தயாரிக்க Nero மென்பொருள் நிறுவப்பட்ட ஒரு கணணி, ஒரு Blank CD, மற்றும் ஒரு Windows 98 Start-up disk தேவைப்படும்.
உங்கள் கணணியில் உள்ள Nero புறோகிறாமை இயக்குங்கள். அப்போது வரும் window வில் Data என்பதை சுட்டவும். இன்னொரு உப மெனு விரியும் அதில் Bootable Data Disk என்பதை கிளிக்பண்ணவும். இப்போது start-up disk ஐயும் CD ஐ அதனதன் டிறைவினுள் செலுத்தவும். திரையில் தெரியும் Disk content என்னும் window வில் Location என்ற பெட்டியில் 31/2 Floppy A: வை கொண்டுவந்து நிறுத்தவும். இப்போது start-up disk இனுளிருக்கும் 24 கோப்புக்களும் வலது பக்கத்தில் தெரியும். அதன் நடுவே வலது கிளிக்பண்ணி Select all என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Add, Finish ஆகிய பட்டன்களை கிளிக்பண்ணவும். உடனே அந்த window மூடிவிடும். Disk content விண்டோவிற்கு அந்த 24 கோப்புக்களும் ஏற்றப்படும்: Next ஐ கிளிக்பண்ணவும். இன்னொரு window தெரியும் அதில் Bootable CD ஐ தயாரிக்கவேண்டிய மேலதிக தகவல்கள் எங்கிருந்து பெறுவது என கேட்கும். (Read Boot disk in drive.) அதன் கீழ் உள்ள பெட்டியில் A: டிறைவை தேர்ந்துவிடவும்; மீண்டும் Next ஐ கிளிக்பண்ணவும். அடுத்து வரும் window வில் write speed ஐ முழுத்திறனில் பாதியளவை set பண்ணிவிடவும்; இப்போ Burn பட்டனை கிளிக்பண்ணவும். ஓரிரு நிமிடங்களில் Bootable CD தயார்.
இந்த Bootable CD ஐ தேவையேற்படும்போது அதன் டிறைவினுள் இட்டு கம்பியூட்டரை அதிலிருந்து boot பண்ணவிடின் windows 98 start-up disk இலிருந்து boot பண்ணும்போது வரும் திரை இங்கும் தெரியவரும். Nero மென்பொருள்தான் வேண்டும் என்பதில்லை. இதையொத்த வேறு மென்பொருள்கள்லிலும் தயாரிக்கலாம். ஆனால் பட்டன்கள் கட்டளைகள் வித்தியாசமாக இருக்கலாம்
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
என்னிடம் Windows XP Professional with SP2 உள்ளது. இதை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்து கொள்வது?? எங்கேயாவது upload செய்யலாம் என்றால் அறியதரவும்...
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
Windows XP யையோ அல்லது sp2 யையோ நாம் விரும்பியபடி பகிர்ந்துகொள்ளமுடியாது முடியாது என்பது எனது அனுபவம். நண்பர்கள் சிலரும் அப்படி கூறியிருக்கின்றார்கள்.
எனது நண்பர் ஒருவர் தனக்கு பரிசாக கிடைத்த கம்பியூட்டரை update பண்ணவேண்டி இன்ர்நெட்டில் microsoft தளத்திலிருந்து SP2 டவுண்லோட் பண்ணி இண்டால் செய்யமுயற்சித்தபொழுது, உனது கம்பியூட்டரில் உள்ளது உறுதி செய்யப்படாத பிரதி update பண்ணமுடியாது என திரையில் செய்தி வந்த்து.
இன்னொரு நண்பர் SP2 ஐ டவுண்லோட்பண்ணி ஒரு CD யில் பதிந்து இன்னொரு நண்பருக்கு கொடுத்தார். அவராலும் வெற்றியடைய முடியவில்லை. நேரடியாக டவுண்லோட்பண்ணி இன்ஸ்டால் பண்ணலாமே தவிர save பண்ணி எடுத்துக்கொண்டுபோய் update பண்ணமுடியாதாம் என கூறினார்.
இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். சட்டரீதியாக நாம் பெற்றுக்கொண்டபிரதியைக்கூட இன்ஸ்டால் பண்ணி 30 நாட்களுக்குள் activate பண்ணிக்கொள்ளவேண்டும். தவறின் பின்பு நாம் update பண்ணிக்கொள்ளமுடியாது. Activate பண்ணிக்கொண்ட பிரதியைக்கூட அழித்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் கூட மீண்டும் Activate பண்ணிக்கொள்ளவேண்டும்.
சண்டரீதியற்ற பிரதியை வைத்திருக்கும் ஒருவர் Internet ல் Microsoft வெப்தளத்திற்கு ஏதாவதொரு காரணத்துக்காக சென்றால், சென்றபின் Is your copy legal? என்ற கேள்வியை தனது IE யில்Help மெனுவை கிளிக்பண்ணி பார்த்தால் காணக்கூடியதாகயிருக்கும். Activate பண்ணுவதென்பது பதிவு செய்தல் போன்றதொரு காரியம்தான்
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
<b>குறுக்குவழிகள்-65</b>
(A) <b>ஒரு கோப்பை அல்லது போல்டரை அழிக்க வேறு வழிகள்</b>
1) ஒரு போல்டரையும் அதனுள் கிடக்கும் கோப்புக்களையும் அழிக்கவேண்டின்:
Go to start/Run/CMD and type in: RD/S [Drive:] Path. (RD= remove directory, S= அதன் கீழ் உள்ள கோப்புக்களை குறிக்கும்)
2) ஒரு கோப்பை அழிக்க கஷ்டமாக இருப்பின், ஒரு போல்டரை உண்டாக்கி அதனுள் அந்த கோப்பை இழுத்து போட்டுவிட்டு அந்த போல்டரை அழித்துவிடவும்.
3) Notepad ஐ திறவுங்கள், வெற்றுப்பக்கத்தை கோப்பாக, அழிக்க வேண்டிய மற்ற File ன் பெயரில் இதையும் சேமியுங்கள். இப்போது Save as பெட்டியில் நீங்கள் அழிக்க வேண்டிய கோப்பை தோற்றம் பெறச்செய்யுங்கள். அதை வலது கிளிக்பண்ணி அழியுங்கள்.
[Open Notepad and save the (blank) document with the name of the undeletable file. Under save as, navigate to the file, delete}
4) எல்லா applications களையும் மூடிவிடவும். Command prompt ஐ திறக்கவும் (Start/Run/CMD) Path வழியே சென்று நீங்கள் அழிக்கவேண்டிய கோப்பு உள்ள போல்டரில் நிற்கவும். இப்போது Task Manager ஐ திறந்து Process Tab ஐ கிளிக்பண்ணி. Explorer.Exe ஐ தேர்ந்து கீழே உள்ள End Process பட்டனை கிளிக்பண்ணி explorer.exe ஐ நிறுத்தசவும். அடுத்து command prompt ல் Del *.doc என அதாவது Del கட்டளையையும் கோப்பின் பெயரையும் தட்டச்சு செய்யவும். Enter ஐ தட்டியவுடன் கோப்பு அழிக்கப்பட்டுவிடும்.
அடுத்து மீண்டும் Task Manager க்கு போய் Application Tab ஐ கிளிக்பண்ணி. New Task பட்டனை கிளிக்பண்ணி, பெட்டியினுள் explorer.exe என தட்டச்சு செய்து OK ஐ தட்டவும்.
(<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> <b>ஓரு Programme ஐ அழிக்க ஓர் அசாதாரண வழி</b>
நல்ல ஒரு programme எனில் அந்த புறோகிறாமிலேயே ஒரு uninstall பட்டன் இருக்கும். இரண்டாவதாக Control Panel லில் Add & Remove அப்லெட்டை (applet) கிளிக்பண்ணி அதில் புறோகிறாமை தேர்ந்து Remove பண்ணலாம். மூன்றாவதாக புறோகிறாமின் ஒவ்வொரு கோப்பாக தேடித்தேடி அழிக்கலாம். இது தவிர் இன்னொரு அசாதரண வழியுண்டு. இதை மிக கவனமாக செய்யவேண்டும்.
1. Registry Editor ஐ திறக்கவும் (Start->Run->Type regedit->OK)
2. HKEY-LOCAL-MACHINE இன் இடப்பக்கத்தில் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணவும்.
3. Expand Software, Expand Microsoft, Expand Windows, Expand Current Version, Expand Uninstall. (Expand என்பது அதன் வலது பக்க + அடையாளத்தை கிளிக்பண்ணி அதை விரிவாக்குவது)
4. இப்போது uninstall போல்டரின் கீழ் புறோகிறாம்களின் பட்டியல் தெரியும். Uninstall பண்ணவிரும்பும் புறோகிறாமை தேர்வுசெய்யவும்.
5. வலப்பக்கத்தில் "uninstall String" என்ற string value வை இரட்டை கிளிக்செய்யவும்.
6. இப்போது "Edit String" window வை, அதில் Value Data தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்
7. தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதை வலது கிளிக்செய்து copy பண்ணவும். Registry Editing ஜன்னலை மூடிவிடவும்.
8. Start->Run கிளிக்செய்து open என்ற பெட்டியில் வலது கிளிக்செய்து paste பண்ணவும்
9. OK யை கிளிக்செய்யவும். இப்போ uninstallation நடக்கும்.
10. நூறு வீதம் சரிவரும் என்று சொல்லமுடியாது. Registry ஐ கையாள்வதில் மிகுந்த அவதானம் வேண்டும்