சமயங்கள் காட்டும் ஆன்மீக வழியை... விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத பலவற்றை... ஆன்மீகம் மெய்யியல் கொண்டு அற்புதமாக விளக்கி உள்ளது... அதற்குச் சான்று தியானமும் யோகாசனமும்....இவை விஞ்ஞானம் தோன்ற முன் வந்தவை...ஆனால் இன்று அதன் தன்மைகளை உடற்தொழிலியல் கொண்டு விளக்க வெளிக்கிட்டால் விஞ்ஞானமே வியந்துதான் நிற்கும்... விஞ்ஞானம் தெரியாத காலத்தில் கிரிகைகளுக்காக கட்டிய பிரமிட்டுகள் இன்று நவீன விஞ்ஞானத்தால் வியந்து பார்க்கப்படும் அம்சம் தான்... இப்படிப்பல....!
எதையும் முட்டாள் தனம் என்று எடுத்த எடுப்பில் ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் நவீன விஞ்ஞானம் கொண்டு விளங்கிப் பாருங்கள் பல அற்புதத்தன்மைகள் காண்பீர்கள்... இன்று அமெரிக்கா உருவாக்க மிணக்கடும் அன்ரி மிசைல்ஸ் சிஸ்டத்தை அன்றே இலக்கியங்களும் சமய யுத்தங்களும் விளக்கி உள்ளன... அதை விளங்கி விருத்தி செய்யாதது எங்கள் குறையே அன்றி சமயங்களினதோ அல்லது இலக்கியங்களினதோ அல்ல... அவை அவற்றின் காலத்தால் என்ன செய்ய முடிந்ததோ அதைச் செய்தே உள்ளனன... நாம் தாம் எம் காலத்துக்கென்று எதுவும் சாதிக்காமல்...மூதாதையோரை முட்டாள்கள் முட்டாள்கள் என்று கொண்டு நாம் முட்டாள்கள் ஆகிக் கொண்டிருக்கின்றோம்....!
மேற்குலகத்தினர் ஒரு ஓவியர் வரைந்த படத்தின் அடிப்படையில்தான் முதன் முதலில் கவச வாகனம் உருவாக்கினர்... நாம் ஓவியங்களைப் பார்த்து என்ன சொன்னோம்... வேலை மிணக்கட்டதுகள் விளையாடி இருக்குதுகள் என்று.... இப்படி நாம் பார்ப்பவற்றை ஆராய்வத்தில்லை...எடுத்த எடுப்பில் ஏதாவது சாட்டுச் சொல்லி எங்கள் இயலாமையை வெளிக்காட்டாது விடயங்கள் நிராகரித்து விட்டு மற்றவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருகின்றோம்...அதுதான் இன்றும் நீராவியில் புட்டுத்தான் அவிக்கின்றோமே தவிர அந்த வெப்ப சக்தியைக் கொண்டு இயந்திரங்கள் இயக்கவில்லை....!
அதையாராவது செய்து தந்தால் அனுபவித்துக் கொண்டு எங்கள வென்றவர்கள் யார் என்று வாய் வீரம் மட்டும் கதைத்துக் கொள்வோம்...!
அண்மையில் மேற்குலகில் பிறந்து வளரும் ஒரு தமிழ் குடும்பப் பையனை சந்திக்க கிடைத்தது அவனிடம் கேட்டடோம்..நீ எதிர்காலத்தில் என்னவாக வரப் போகிறாய் என்று... அவன் சொன்னான் டொக்டரா என்று... ஏன் என்று கேட்கச் சொன்னான் அப்பதான் நல்ல பொம்பிளை கிடைக்குமாம் கலியாணம் முடிக்க... இப்படித்தான் அன்று தொட்டு இன்று வரை தமிழர்கள் வளர்க்கப்படுகின்றனர்... கல்வி என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் கலியாணம் குடும்ப அந்தஸ்து என்பதற்காய் என்றுதான் காட்டப்படுகிறதே தவிர அறிவியல் தொழில்நுடப விருத்தியை ஏற்படுத்தும் தாகத்தை ஏற்படுத்துவதாக இன்றும் இல்லை... மேற்குலகிற்கு இடம்பெயர்ந்து வந்து பல மேற்குலக அநாகரிகங்களை பொறுக்கி எடுத்த போதிலும் இதை எம்மவர் இன்றும் கைவிடத் தயாராக இல்லை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதில் இருந்து எங்கள் சமூகத்தை நினைந்து வருந்தத்தான் முடிகிறதே தவிர... வேறெதைச் செய்ய முடியும் தற்போதைக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>