Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த முருகன் பெரியவன்?
#1
இது விடுகதையல்ல தயவு செய்து சிந்தித்து பதில் தாருங்கள்

நாரதரின் மாம்பழத்தைப் பெறுவதற்காக மயிலில் ஏறி உலகத்தை வலம் வந்த முருகன் பெரியவனா?
அல்லது சூரனைக் கொன்று வெற்றிவாகை சூடிய முருகன் பெரியவனா?
<b>
?
- . - .</b>
Reply
#2
இரண்டும் ஒரு முருகன் தானே...! :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
முதலாவது நம்ம மாதிரி வெட்டி முருகன்...!
இரண்டாவது வீர முருகன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:நாரதரின் மாம்பழத்தைப் பெறுவதற்காக மயிலில் ஏறி உலகத்தை வலம் வந்த முருகன் பெரியவனா?
அல்லது சூரனைக் கொன்று வெற்றிவாகை சூடிய முருகன் பெரியவனா?
ž¢Ä¡ «È¢Å¢Ä¡ «øÄது Å£Ãò¾¢Ä¡... ? ? ?
þருÅருõ ´ருÅ÷ ¾¡§É...?
Reply
#5
எனது கேள்வி வயதில் யார் பெரியவன் என்பது?
<b>
?
- . - .</b>
Reply
#6
வயதில் சின்னவனாக இருந்ததால் தானே அந்த பாலமுருகன் ஒரு மாம்பழத்துக்காக உலகத்தையே சுற்றினான். ஆனால் பெரியவனான பின்தானே சூரனை அழித்தான். ஆனால் இருவரும் ஒருவர்தானே. எனவே வயதுகூடியவன் என்றால் சூரனை அழித்தவன்தானே. :roll: Confusedhock:
----------
Reply
#7
மாப்பழ முருகன் தான் பெரிசு...! சூரனோட சண்டை போட சரவணப் பொய்கையில் தவிழ்ந்து கொண்டிருந்த முருகனை ஆறுமுகனாக்கி.. பாலனிடம் தாய் பார்வதியே அனைத்துச் சக்தியும் வாய்ந்த வீர வேல் கொடுத்து போருக்கு அனுப்பியதாகக் எங்கேயோ படித்த ஞாபகம்...!

பிள்ளையார் மாம்பழம் வாங்கினாப் பிறகு முருகன பழனியாண்டவர் ஆன போது வேலோடதானே நிணடவர்... அப்ப வேல் கிடைத்தாப் பிறகுதான் மாம்பழம் வாங்கப் போயிருக்க வேண்டும்... எனவே சூர சங்கார முருகன் தான் பாலன் மாம்பழ முருகனை விட....! இதற்கு மேல முருகனின் திருவிளையாடல் தெரிந்தவர்கள் தான் சொல்லோனும் விளக்கம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
சூரனை வென்றதற்குப் பரிசாகத்தானே தெய்வயானையை மணந்தவர்.. அதற்குப் பிறகு பழநிக்குப் போனவரென்றால்...? ஒரு மாங்கனிக்காக மனைவியையே துறக்கலாமென்கிறாரா முருகன்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#9
sOliyAn Wrote:சூரனை வென்றதற்குப் பரிசாகத்தானே தெய்வயானையை மணந்தவர்.. அதற்குப் பிறகு பழநிக்குப் போனவரென்றால்...? ஒரு மாங்கனிக்காக மனைவியையே துறக்கலாமென்கிறாரா முருகன்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பழநிமலையால எப்ப திரும்பினவர்... Idea :oops:

குருவிளின் விழக்கம் சரியாக இருக்குப் போல எண்டு நினைக்க நீங்கள் குளப்பிப் போட்டிங்கள்.

எனக்கு உந்த கேள்வி கேட்ட விதத்தை பாக்க, மாம்பழ முருகன் தான் வயதில் கூடிய முருகன் போல இருக்கு.... இல்லாட்டி இதை ஒரு பெரிய கேள்வியா கேக்க மாட்டார் தானே.
கேள்வி கேட்டவர் விளக்கம் கேக்காமல் 2 இல 1 குத்துங்கோ எண்டதால நான் "மாம்பழ முருகன்" தான் பெரியவன் எண்டதை தெரிவு செய்யிறேன். தயவு செய்து விளக்கம் ஒண்டும் கேட்டு போடாதைங்கோ. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#10
Quote:பிள்ளையார் மாம்பழம் வாங்கினாப் பிறகு முருகன பழனியாண்டவர் ஆன போது வேலோடதானே நிணடவர்...

அது எப்படி குருவிகளிற்கு தெரியும்...! படத்தில் பார்த்தீர்களா...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
Quote:சூரனை வென்றதற்குப் பரிசாகத்தானே தெய்வயானையை மணந்தவர்.. அதற்குப் பிறகு பழநிக்குப் போனவரென்றால்...?

அதற்கு பிறகா போனவர்... :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
தற்போதைய நிலைமையில ரொம்ப முக்கியமான கேள்வி.

ஏன்யா உந்தக் கதையளாலைதானே இவ்வளவு காலமும் கரையேறாமல் இருக்கிறியள். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி இருக்கப்போறியள்?

அடுத்த கேள்வியாய் பிள்ளையாரும் முருகனும் சண்டைபிடிச்ச மாம்பழம் எது? வெள்ளைக் கொழும்பா? கறுத்தக்கொழும்பா? அல்லது இரண்டும் இல்லை வேறொன்றா எண்டு கேட்டு கருத்துக்கணிப்பு எடுங்கோ.

பின்குறிப்பு: விடைகள் ஆதாரபூ÷வமானதாக - நேரடி சாட்சியங்கள், புகைப்படங்கள் போன்றனவற்றுடன் - இருக்கவேண்டும் என்று கொண்டிஷன் போடுங்கோ.
--
--
Reply
#13
Thusi Wrote:தற்போதைய நிலைமையில ரொம்ப முக்கியமான கேள்வி.

ஏன்யா உந்தக் கதையளாலைதானே இவ்வளவு காலமும் கரையேறாமல் இருக்கிறியள். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி இருக்கப்போறியள்?

அடுத்த கேள்வியாய் பிள்ளையாரும் முருகனும் சண்டைபிடிச்ச மாம்பழம் எது? வெள்ளைக் கொழும்பா? கறுத்தக்கொழும்பா? அல்லது இரண்டும் இல்லை வேறொன்றா எண்டு கேட்டு கருத்துக்கணிப்பு எடுங்கோ.

பின்குறிப்பு: விடைகள் ஆதாரபூ÷வமானதாக - நேரடி சாட்சியங்கள், புகைப்படங்கள் போன்றனவற்றுடன் - இருக்கவேண்டும் என்று கொண்டிஷன் போடுங்கோ.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#14
இந்த முட்டாள் தனமான கேள்விகளை விட்டு நிஜ உலகுக்கு வாருங்கள்.
Reply
#15
சமயங்கள் காட்டும் ஆன்மீக வழியை... விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத பலவற்றை... ஆன்மீகம் மெய்யியல் கொண்டு அற்புதமாக விளக்கி உள்ளது... அதற்குச் சான்று தியானமும் யோகாசனமும்....இவை விஞ்ஞானம் தோன்ற முன் வந்தவை...ஆனால் இன்று அதன் தன்மைகளை உடற்தொழிலியல் கொண்டு விளக்க வெளிக்கிட்டால் விஞ்ஞானமே வியந்துதான் நிற்கும்... விஞ்ஞானம் தெரியாத காலத்தில் கிரிகைகளுக்காக கட்டிய பிரமிட்டுகள் இன்று நவீன விஞ்ஞானத்தால் வியந்து பார்க்கப்படும் அம்சம் தான்... இப்படிப்பல....!

எதையும் முட்டாள் தனம் என்று எடுத்த எடுப்பில் ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் நவீன விஞ்ஞானம் கொண்டு விளங்கிப் பாருங்கள் பல அற்புதத்தன்மைகள் காண்பீர்கள்... இன்று அமெரிக்கா உருவாக்க மிணக்கடும் அன்ரி மிசைல்ஸ் சிஸ்டத்தை அன்றே இலக்கியங்களும் சமய யுத்தங்களும் விளக்கி உள்ளன... அதை விளங்கி விருத்தி செய்யாதது எங்கள் குறையே அன்றி சமயங்களினதோ அல்லது இலக்கியங்களினதோ அல்ல... அவை அவற்றின் காலத்தால் என்ன செய்ய முடிந்ததோ அதைச் செய்தே உள்ளனன... நாம் தாம் எம் காலத்துக்கென்று எதுவும் சாதிக்காமல்...மூதாதையோரை முட்டாள்கள் முட்டாள்கள் என்று கொண்டு நாம் முட்டாள்கள் ஆகிக் கொண்டிருக்கின்றோம்....!

மேற்குலகத்தினர் ஒரு ஓவியர் வரைந்த படத்தின் அடிப்படையில்தான் முதன் முதலில் கவச வாகனம் உருவாக்கினர்... நாம் ஓவியங்களைப் பார்த்து என்ன சொன்னோம்... வேலை மிணக்கட்டதுகள் விளையாடி இருக்குதுகள் என்று.... இப்படி நாம் பார்ப்பவற்றை ஆராய்வத்தில்லை...எடுத்த எடுப்பில் ஏதாவது சாட்டுச் சொல்லி எங்கள் இயலாமையை வெளிக்காட்டாது விடயங்கள் நிராகரித்து விட்டு மற்றவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருகின்றோம்...அதுதான் இன்றும் நீராவியில் புட்டுத்தான் அவிக்கின்றோமே தவிர அந்த வெப்ப சக்தியைக் கொண்டு இயந்திரங்கள் இயக்கவில்லை....!

அதையாராவது செய்து தந்தால் அனுபவித்துக் கொண்டு எங்கள வென்றவர்கள் யார் என்று வாய் வீரம் மட்டும் கதைத்துக் கொள்வோம்...!

அண்மையில் மேற்குலகில் பிறந்து வளரும் ஒரு தமிழ் குடும்பப் பையனை சந்திக்க கிடைத்தது அவனிடம் கேட்டடோம்..நீ எதிர்காலத்தில் என்னவாக வரப் போகிறாய் என்று... அவன் சொன்னான் டொக்டரா என்று... ஏன் என்று கேட்கச் சொன்னான் அப்பதான் நல்ல பொம்பிளை கிடைக்குமாம் கலியாணம் முடிக்க... இப்படித்தான் அன்று தொட்டு இன்று வரை தமிழர்கள் வளர்க்கப்படுகின்றனர்... கல்வி என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் கலியாணம் குடும்ப அந்தஸ்து என்பதற்காய் என்றுதான் காட்டப்படுகிறதே தவிர அறிவியல் தொழில்நுடப விருத்தியை ஏற்படுத்தும் தாகத்தை ஏற்படுத்துவதாக இன்றும் இல்லை... மேற்குலகிற்கு இடம்பெயர்ந்து வந்து பல மேற்குலக அநாகரிகங்களை பொறுக்கி எடுத்த போதிலும் இதை எம்மவர் இன்றும் கைவிடத் தயாராக இல்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதில் இருந்து எங்கள் சமூகத்தை நினைந்து வருந்தத்தான் முடிகிறதே தவிர... வேறெதைச் செய்ய முடியும் தற்போதைக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
Quote:தற்போதைய நிலைமையில ரொம்ப முக்கியமான கேள்வி.

ஏன்யா உந்தக் கதையளாலைதானே இவ்வளவு காலமும் கரையேறாமல் இருக்கிறியள். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி இருக்கப்போறியள்? .

துசி, இந்தக் கதைகள் மற்றும் சமய நம்பிக்கைகளினாலேயே நாங்கள் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்.

Quote:இந்த முட்டாள் தனமான கேள்விகளை விட்டு நிஜ உலகுக்கு வாருங்கள்.

தியாகம் இது முட்டாள் தனமான கேள்வியாக இருக்கலாம் அனால் நான் உண்மையான உலகில்த் தான் இருக்கிறேன்.
<b>
?
- . - .</b>
Reply
#17
குருவியரே நீங்கள் கூறியது சரிதான் அதேநேரத்தில் முருகனுக்கு மயில் வாகனமானது சூரனுடன் இடம்பெற்ற போரில்தான். சூரனின் உடல் அங்கம் ஒன்றை முருகன் வெட்டியெறிந்தபோது அதுவே மயிலாக மறியதாக சமயப் புத்தகத்தில் படித்த ஞாபகம். மாம்பழக் கதையில் வரும் சிறுவன் முருகன் அந்த மயில் வாகனத்திலேயே உலகை வலம் வருகிறான். ஆனால் இச் சிறுவன் முருகன் சூரனுடன் போர் புரிந்த இளைஞன் முருகனைவிட வயதில் மூத்தவன்.

சிறுவனாக உள்ளவனுக்கு இளைஞனாக உள்ளவனை விட வயது அதிகம்??!! இது தான் இந்து மதம்
<b>
?
- . - .</b>
Reply
#18
Quote:சமயங்கள் காட்டும் ஆன்மீக வழியை... விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத பலவற்றை... ஆன்மீகம் மெய்யியல் கொண்டு அற்புதமாக விளக்கி உள்ளது... அதற்குச் சான்று தியானமும் யோகாசனமும்....இவை விஞ்ஞானம் தோன்ற முன் வந்தவை...ஆனால் இன்று அதன் தன்மைகளை உடற்தொழிலியல் கொண்டு விளக்க வெளிக்கிட்டால் விஞ்ஞானமே வியந்துதான் நிற்கும்... விஞ்ஞானம் தெரியாத காலத்தில் கிரிகைகளுக்காக கட்டிய பிரமிட்டுகள் இன்று நவீன விஞ்ஞானத்தால் வியந்து பார்க்கப்படும் அம்சம் தான்... இப்படிப்பல....!

குருவியரே...! தியானமும் யோகசனமும் ஒருவகை மருத்துவமேயன்றி இவை சமயம் சார்ந்தவையல்ல. இவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இவைகளைச் சமயம் சார்ந்ததாக காட்டப்பட்டுள்ளது.
<b>
?
- . - .</b>
Reply
#19
kuruvikal Wrote:எதையும் முட்டாள் தனம் என்று எடுத்த எடுப்பில் ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் நவீன விஞ்ஞானம் கொண்டு விளங்கிப் பாருங்கள் பல அற்புதத்தன்மைகள் காண்பீர்கள்... இன்று அமெரிக்கா உருவாக்க மிணக்கடும் அன்ரி மிசைல்ஸ் சிஸ்டத்தை அன்றே இலக்கியங்களும் சமய யுத்தங்களும் விளக்கி உள்ளன... அதை விளங்கி விருத்தி செய்யாதது எங்கள் குறையே அன்றி சமயங்களினதோ அல்லது இலக்கியங்களினதோ அல்ல... அவை அவற்றின் காலத்தால் என்ன செய்ய முடிந்ததோ அதைச் செய்தே உள்ளனன... நாம் தாம் எம் காலத்துக்கென்று எதுவும் சாதிக்காமல்...மூதாதையோரை முட்டாள்கள் முட்டாள்கள் என்று கொண்டு நாம் முட்டாள்கள் ஆகிக் கொண்டிருக்கின்றோம்....!

மேற்குலகத்தினர் ஒரு ஓவியர் வரைந்த படத்தின் அடிப்படையில்தான் முதன் முதலில் கவச வாகனம் உருவாக்கினர்... நாம் ஓவியங்களைப் பார்த்து என்ன சொன்னோம்... வேலை மிணக்கட்டதுகள் விளையாடி இருக்குதுகள் என்று.... இப்படி நாம் பார்ப்பவற்றை ஆராய்வத்தில்லை...எடுத்த எடுப்பில் ஏதாவது சாட்டுச் சொல்லி எங்கள் இயலாமையை வெளிக்காட்டாது விடயங்கள் நிராகரித்து விட்டு மற்றவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருகின்றோம்...அதுதான் இன்றும் நீராவியில் புட்டுத்தான் அவிக்கின்றோமே தவிர அந்த வெப்ப சக்தியைக் கொண்டு இயந்திரங்கள் இயக்கவில்லை....!

அதையாராவது செய்து தந்தால் அனுபவித்துக் கொண்டு எங்கள வென்றவர்கள் யார் என்று வாய் வீரம் மட்டும் கதைத்துக் கொள்வோம்...!

இதில் இருந்து எங்கள் சமூகத்தை நினைந்து வருந்தத்தான் முடிகிறதே தவிர... வேறெதைச் செய்ய முடியும் தற்போதைக்கு...! :wink:

:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
மிகவும் சரியா சொல்லீட்டுது குருவியள் இனி என்ன பெழுது போகாட்டி நல்ல கவிதை கட்டுரைகள எழுதுங்கோ......
பி.கு:- சமய சம்பந்தமான கேள்விகளை பெழுது போக்கம்சமாக பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இதில் எந்த தவறான அர்தமும் இல்லை ஆனால் சிற் சில் சந்தர்ப்பங்களில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இது வழியமைக்கலாம்

-நேசமுடன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
எதையும் கண்டுபயந்து ஓடக்கூடாது... நின்று நிதானித்து சிந்தித்து முடிவெடுப்பவன் தான் மனிதன்... அதற்குத்தான் பகுத்தறிவு தரப்பட்டுள்ளது...! குருவிகள் எதையும் கண்டு பயந்து ஒழிக்கும் அளவில் இல்லை... எம்மால் விளங்கக் கூடிய மட்டில் விளங்கிக் கொள்ளவும்... அதை யார் செய்தாலும் நியாயத்தன்மை இருப்பின் எடுத்துக் கொள்ளவும் தான் கருத்தாட வருகின்றோம்...!
பொழுதுபோக்கோடு தர்கித்தலின் வாயிலான நியாயங்களைத் தேடவுமே முயல்கிறோம்....! அது தவறல்ல என்றே நாம் கருதுகின்றோம்...!

தெளிவு பிறந்தால் குழப்பம் வராது...அதைத்தான் நாம் தேடுகின்றோம்....!

இதோ இதில் ஒரு கட்டுரை உண்டு அது இந்து மதத்துள் நவீன விஞ்ஞானம் என்பது பற்றி அழகாகச் சொல்கிறது.... வாசித்துப் பாருங்கள்... கொஞ்சம் என்றாலும் தெளிவு வரலாம்....!

http://kuruvikal.yarl.net/archives/002192.html#more
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)