Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
[quote=Chandravathanaa]ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும்;, போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன.

இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில்; குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம்
விலங்குகளிடமும் இருந்தது.

இதுதான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.
ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாது காப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்;புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றும் இந்த நிலை தொடர வேண்டிய அவசியமில்லை.
இதை வைத்து ஆண்கள் கெட்டிக்காரர்கள், ஆட்சி செய்யப் பிறந்தவர்கள்,
பெண்கள் அடக்கப் பட வேண்டியவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளவும் தேவையில்லை.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே.
அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள்.

இன்று மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு மிருகங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.

------------------------------------------------

ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும்.
அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். இது ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.

ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபாரஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும்.


இப்படிப் பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால்
அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு.

ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது.
ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற் படுகின்றன.

இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை..

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.

பெண்ணை மட்டும் வீட்டுக்குள் அடங்கு என்று சொல்ல
இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம்.
அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.

[quote=kuruvikal]இதைத்தான் நாம் இரத்தினச் சிருக்கமாய் சொன்னோம் சூழல் காரணிகளால் பெண்கள் அடங்கினார்களே தவிர அடக்கப்படவில்லை என்று....
இறுதியாக சுத்தி வளைத்து நீங்களும் எங்கள் புள்ளியைத்தான் தொட்டுள்ளீர்கள்...அது மட்டுமன்றி எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக எளிய நடையில் எழுத்யிருக்கிறீர்கள் நன்றி..!



குருவிகள்

காட்டு வாழ்க்கையை விட்டு
நாட்டில் வீடு கட்டி
பாது காப்பாக வாழும் நிலைக்கு என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் அடிப்படை ஆதிகாலப் பிரச்சனையைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இன்னும் ஏன் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டும்?

அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால்,
இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் என்று ஆண்கள் ஏன் கருத வேண்டும்?

வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைக்கிறார்கள்.

இதெல்லாம் பிழை. முந்தி நாம் வீட்டுக்குள் தங்க வேண்டியிருந்தது. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சிந்திக்கத் தொடங்கிய பெண்கள்தான் ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறார்கள்.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். இன்றைய பெண்களின் விழிப்பு நிலை இதற்குத் தடையாகி விட்டது. இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இன்று அடக்குமுறை என்பது ஏன் எதற்கு என்று தெரியாமலே வெறுமே ஆண்களின் சுயநல நோக்குக் கருதியே நடக்கிறது.

ஆணுக்குத்தான் எல்லாம் தெரியும்.
ஆண்தான் ஆட்சி செய்யத் தகுதியானவன்.....
போன்ற வாதங்கள் வீண் விவாதங்களே!
அன்று தம்மை விட பலமான விலங்குகளுக்குப் பயந்து சில நடைமுறைகள் இருந்தன. இன்றுதான் அவை இல்லையே1

பெண்கள் தமது வலிமையையும் திறமையையும் உணரும் பட்சத்தில் அவர்கள் மூளை காலப் போக்கில் அதற்கேற்ப இசைவாக்கம் பெறும்.

மற்றும் படி பெண்கள் அடக்கப் படவில்லை.
அடங்கினார்கள் என்பதெல்லாம் பொய்வாதம்.
அன்று தேவை கருதி வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள்.
காலப்போக்கில் ஆண்களால் அடக்கப் பட்டார்கள்.

அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்தார்கள்.
இன்று ஓரளவுக்காவது பெண்கள் விழித்துள்ளார்கள்.

ஆண்கள் ஒன்றும் தாங்களாக மாறி பெண்களுக்கு விடுதலையைக் கொடுக்க வில்லை. பெண்களின் கோசங்களும், எழுத்துக்களும்
சில உண்மைகளை ஆண்களுக்குப் புரிய வைத்தன. புரிந்தாலும் புரியாத மாதிரி அவர்கள் தொடர்ந்த போதுதான் பெண்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்கி தமக்கான விடுதலையை தாமே எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

ஆனாலும் முழுமையான விடுதலை என்பது இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. பெரும்பாலான ஆண்களும் சமூகமும் அதற்குத் தடையாகத்தான் இருக்கிறார்கள்.

[quote]ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.

பெண்ணை மட்டும் வீட்டுக்குள் அடங்கு என்று சொல்ல
இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம்.
அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
Nadpudan
Chandravathanaa
Reply
sOliyAn Wrote::wink: முன்பு மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனியாகவிடுவார்கள்.. சில இடங்களில் கரிக்கோடுமகூட போட்டிருப்பார்கள்.. தற்போது அவ்வாறு எதுவுமே இல்லை.. இதுதான் மனித இனத்துள் புதுப்புது நோய்கள் புகுந்து மனித ஆயுள் குறையக் காரணமோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:

சோழியான்

மாதவிலக்கு என்பது ஒரு நோயல்ல.

ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில்
விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்களிடம் முன்னர் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள்.
இங்கே இரும்பு ஒரு தற்காப்பு ஆயுதமாகவே இருந்தது.

சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் இன்று விலங்குகளே இல்லை.
ஆனாலும் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி முன்னோர்கள் மாதவிலக்கானவளிடம் இரும்பு கொடுத்தார்கள் என்பதற்காக தொடர்ந்தவர்களும் கொடுத்தார்கள்.

இதை மூடநம்பிக்கை சம்பிரதாயம்... போன்ற விடயங்களுக்குள் அடக்கலாம்.

மாதவிலக்கு ஒரு சாதாரண விடயம்.
கருத்தரிப்பதற்குத் தயாரான பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் சூல்முட்டைகள்தான் அவை.
இதன் போது பெண்ணுக்கு உடலில் சில உபாதைகள் தோன்றுகின்றன. சில ஹோர்மோன்களின் மாற்றங்களால் மனதிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இயல்பான இந்த மாற்றங்களை விட
மாதவிலக்கு என்பது ஒரு நோய் என்பது போல கையாளும் மனிதர்களால்தான் கூடுதலான உளவியல் பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.

இதன் தாக்கம் முழுக்க முழுக்கப் பெண்ணுக்கே. இவை பற்றி எழுதுவதாயின் வேறு ஒரு தலைப்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.


மாதவிலக்கு என்பது ஒரு நோயல்ல.
மாதவிலக்கான பெண் எல்லோருடனும் சேர்ந்திருக்கும் போது இவளை மோப்பம் பிடித்து வரும் விலங்களால் ஒட்டு மொத்த சமூகத்துக்கே வில்லங்கம் வந்து விடும் என்பதை கருத்தில் கொண்டு இவளைச் சற்றுத் தள்ளித் தனியாக இருக்க விட்டார்கள்.
ஆபத்து வந்தாலும் அவளோடு மட்டும் போய் விடட்டுமென்று.
இதுவே காலப்போக்கில் மாதவிலக்கு என்ற பெயர் கொண்டு விட்டது.
Nadpudan
Chandravathanaa
Reply
[quote=கணணிப்பித்தன்/Kanani]அட இவ்வளவு நடந்திருக்கு....பள்ளி அலுவல் காரணமாக வெளி ஊரில் நிற்கிறன் விரைவில் வாதாட வருகிறேன்....
கிரகிப்புத்தன்மையும், தர்க்க ரீதியான முடிவெடுத்தல், பொருட்களின் முப்பரிமாண மற்றும் உள்ளார்ந்த சிந்தனையும் அதனைக் கையாள்தலும் ஆண்களிற்குத்தான் அதிகம்...ச.வ


எத்தனையோ விடயங்கள் எழுதியுள்ளேன்.
எதற்கான ஆதாரத்தைக் கேட்கிறீர்கள்?
Nadpudan
Chandravathanaa
Reply
GMathivathanan Wrote:பெடியள்தான்.. கொஞ்சம்.. உரிமையிழந்து.. பறிகொடுத்தமாதிரி.. அங்கைபோறதொனியிலை.. கதைக்கினம்.

அப்படித்தான் தெரியும்.

ஊர் சுற்றி விட்டு வந்து
பெண்கள் சமைத்து வைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு
அதற்கு ஒரு சொட்டை இன்னொரு நொட்டை என்று சொல்லி அதிகாரம் பண்ணியே வாழ்ந்து பழகியவர்கள்.
திடீரென இந்த சுகம் எல்லாம் இல்லாமல் போனால் எதையோ இழந்த மாதிரித்தான் இருக்கும்.

காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும்.
அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.
Nadpudan
Chandravathanaa
Reply
சில உண்மைகளை வைத்து நல்ல கற்பனக் கதை எழுதி இருக்கின்றீர்கள்...இப்படி ஒரு வரலாறு விலங்கு இராச்சியத்தில் எங்கும் இடம் பெற்றதில்லை...மனிதப் பெண்கள் மட்டுமன்றி உயர் பிரைமேற் (primate) விலங்குகளிலும் இப்படியான மாதவிடாய் சக்கரங்கள் இடம் பெறுகின்றன...அங்கெல்லாம் ஆண் விலங்குகள் பெண்களை ஒடுக்கியா வீட்டுக்குள் அடக்கி அதன் பயனாக சமூகத்தில் அடக்கி ஒடுக்கி உள்ளன....??????????

நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட விளைகின்றீர்கள்....அது மட்டுமன்றி எப்படியாவது பெண்களின் இயற்கையான இயலாமைகளுக்கு ஆண்கள் மீது பழி சுமத்தவும் விளைகின்றீர்கள்.....ஒரு சமூகத்தில் வாழும் உயிரிகள் தமது பலம் பலவீனம் அறிந்துதான் வாழ்கின்றன என்பதை அவற்றின் நடத்தை கோலங்களை அவதானித்தால் புரியும்.....!

அது மட்டுமன்றி நீங்கள் எழுதியவற்றை நாம் ஏற்கனவே அலசி எப்படி மனித முயற்சிகள், மனித உரிமைகள் இன்று மனிதனை பாதுகாத்து நிற்கின்றன என்பது வரை வந்து விட்டோம்....ஆனால் தாங்களாக வீட்டுக்குள் ஒடுங்கிய பெண்கள் தான் இன்னும் தமக்கு அளிக்கப்பட உரிமைகளை இனங்காணாது பாதுகாப்பு நிறைந்த இன்றைய சமூகத்துக்கு தமது பங்களிப்பின்றி வாழ்ந்து வருதல் கண்டு எழுந்ததே பெண் விழிப்புணர்த்துக் கைங்கரியம்....ஆனால் அது இன்று யாரால் உருவாக்கப்படதோ அதே ஆண்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாறியுள்ளது...இது பெண்களின் யதார்தத்திற்கு புறம்பான சிந்தனையின்பால் எழுந்ததே அன்றி வேறல்ல...இதன் யதார்த்தம் காலப்போக்கில் பெண்களால் உணரப்படும் அல்லது உணர வைக்கபப்டும்...! :twisted: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இதன் தலைப்பை மாற்றி புலம்பெயர் பெண்கள் என்று இட்டுக்கொள்ளலாம்.

தாயகத்தில் எல்லாமே எதிர்மாறு.......
[b] ?
Reply
மாத விடாய் என்பது நோயல்ல என்பது உண்மை ஆனால் முட்டை (சூல்) வெளியெறுகின்றது என்பது முற்றிலும் பொய்....சூலிடப்பட்டு கிட்டத்தட்ட 14 நாட்களின் பின்னேதான் மாதவிடாய் ஆரம்பமாகிறது...இது ஓமோன்களின் சம நிலைக் குழப்பங்களாலும்...கருப்பை சுவரை நவீனப்படுத்தும் வகையில் அவற்றில் ஏற்படும் கலன் கலச் சிதைவுகளால் குருதிப்பெருக்குடன் ஏற்படுவதே ஆகும்....இது பெண்களுக்கு ஆபத்து இல்லை ஆயினும் குறித்த பெண் குருதி நோய் அல்லது பால்வினை நோய்த்தொற்றுள்ளவர் எனில் அதனால் சமூகத்தில் நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன....மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் அதிகம் மன விரக்தியடைதல் கோபம் அடைதல் எதற்கும் கடுப்பாதல் என்று தங்கள் நடத்தையையும் மாற்றிக் கொள்வர்....இதனாலேயே இவர்களைத் தனிமைப்படுத்தல் அவசியமானது...ஆனால் இன்று ஆண்களின் சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் இவற்றையெல்லாம் ஆண்கள் கண்டே கொள்வதில்லைப் போலும்....இது ஓமோன்களின் விளையாட்டு.....இறைவனின் நற்கொடை..... :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவி

இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லுங்கள்.

விலங்குகளிலும் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காக்க வேண்டி இந்த நடை முறைகள் இருந்தன.

நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆண் விலங்குகள் பெண்விலங்குகள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லையென்று.
இதே நீங்களோ அல்லது உங்கள் சகோரதர நண்பனான கணணிப் பித்தனோ எங்கோ ஒரு இடத்தில் விலங்குகளிலும் ஆண் விலங்குகள்தான் உசத்தி என்ற பொருள் படக் கூறியதை நான் மறக்கவில்லை.
அதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போடுமளவுக்கு எனக்கு இப்போ நேரமில்லை.

ஆண் குரங்குகள் எப்படிப் பெண் குரங்குகளை அடக்கி ஆள்கின்றன என்பதையும் அதிகாரம் செலுத்துகின்றன என்பதையும் சில வருடங்களுக்கு முன் நானே யேர்மனியத் தொலைக் காட்சியில் பார்த்தேன்.

குரங்குகளும் சீதனம் கொடுப்பதையும்
பெண்குரங்கு பெரிய தேங்காயை எடுத்து விட்டது என்பதற்காக ஆண் குரங்கு அதை விட்டுக் கலைத்து அடித்துப் பறிப்பதையும்
பெண் குரங்கு வீட்டுக்குள் இருக்கும் போது ஆண் குரங்கு வெளியே காவல் இருப்பதையும்.... என்று நிறைய விடயங்களை விளக்கத்தோடு காட்டினார்கள். பார்த்தேன்.

விலங்கிடமுள்ள குணங்களில் பல மனிதர்களிலும் தொடர்கிறது.
என்னதான் பகுத்தறிவு அது இது என்று சொன்னாலும் மனிதனால் சில விடயங்களிலிருந்து மீள முடியவில்லை.
அதில் ஒன்றுதான் கணனி யுகத்திலும் பெண்ணை தம்மிலும் கீழானவளாக நினைக்கும் பண்பிலிருந்து ஆணால் மீள முடியவில்லை.
Nadpudan
Chandravathanaa
Reply
மாற்றமுடியாமல்... தொடரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.

ஆண்கள் இன்றைக்கும் வேலையால் வீட்டுக்கு வந்ததும் ஓடிப் போய் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதற்கான காரணம் -

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள்.
மௌனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்கிறது.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்காவது வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யார் என்ன கதைத்தாலும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஆதாரம் -
Warum Maenner luegen, Frauen immer Schuhe kaufen..? (German Book)
Nadpudan
Chandravathanaa
Reply
[quote=Chandravathanaa]மாற்றமுடியாமல்... தொடரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.

ஆண்கள் இன்றைக்கும் வேலையால் வீட்டுக்கு வந்ததும் ஓடிப் போய் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதற்கான காரணம் -

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள்.
மௌனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்கிறது.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்காவது வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யார் என்ன கதைத்தாலும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஆதாரம் -
Warum Maenner luegen, Frauen immer Schuhe kaufen..?

தொலைக்காட்சியைப் பார்க்கும் போது
அதில் தோன்றும் ஒளி
முன்னர் நெருப்பு எரிவததைப் பார்த்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறதாம்.
Nadpudan
Chandravathanaa
Reply
விலங்குகளுக்குள் ஆண் பெண் என்பது இயல்பானது...அவற்றுக்குள் ஏற்றத்தாழ்வுகள் என்று மனிதனில் பெண் விடுதலை கோரும் பெண்கள் போல் பார்ப்பதில்லை....ஆனால் அநேக விலங்குகளில் ஆண் தலைமைத்துவம் தான் இயற்கையாக அளிக்கப்பட்டுள்ளது...அது மனிதனுக்கும் பொருந்தும்...அதை எவரும் மாற்ற முடியாது ஏனெனில் அது பெறப்பட்டதல்ல அருளப்பட்டது...நாம் பிறக்கும் போதே இயற்கையால் தரப்பட்டது....ஆனால் அது தரப்பட்டது ஆண்கள் பெண்கள் என ஏற்றதாழ்வுடன் கூடிய வேற்றுமைகள் வளர்க்கப்படவல்ல...சமூக வழி நடத்தல் பாதுகாப்பு என்பன கருதியே ஆகும்.... எனவே ஆண்கள் பெண்களை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவையில்லை....பெண்கள் தான் தாங்களே ஒதுங்கினர்....பின்னர் அவர்களை வெளியே கொணர்ந்ததும் ஆண்கள் தான்....!

சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதுகிறீர்கள்.....மிருகக் காட்சிச் சாலையில் உள்ள விலங்குகளை வைத்து நடத்தை பார்க்க முடியாது...காரணம் அவை அச் சூழலுக்கென பழக்கப்படவை....!

தொலைக்காட்சி பார்ப்பது ஆண்களை விட பெண்கள் தான்....ஆண்கள் வேலை விட்டு வந்து தொலைக்காட்சி பார்ப்பது ஜேர்மனிக்கு பொருந்தக் கூடும் அது எமது தமிழ் சமூகத்துக்கு தேவையில்லை......நாம் அப்படிக் காணவும் இல்லை....!

நாம் இங்கு பெண் விடுதலையின் பலாபலன்கள், நோக்கம் என்பதை தமிழ் சமூகத்தை மையமாக வைத்தே கொண்டு செல்கிறோம்...வெள்ளையர்களையும் அவர்களின் சமூகக் கட்டமைப்பையும் அடிப்படையாகக் கொண்டல்ல என்பதைக் கவனிக்கவும்.....!

உங்களுக்கு ஜேர்மனியில் அவர்களைப் போல் சுதந்திரம் வேண்டுமானால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்....அவற்றால் வரும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானால் சரி...எமக்கென்ன நட்டமா....ஆனால் பெண் விடுதலை என மேற்குல கீழ்மைகள் எமது சமூகத்துள் திணிக்கப்பட ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:....ஆனால் அநேக விலங்குகளில் ஆண் தலைமைத்துவம் தான் இயற்கையாக அளிக்கப்பட்டுள்ளது...அது மனிதனுக்கும் பொருந்தும்...அதை எவரும் மாற்ற முடியாது ஏனெனில் அது பெறப்பட்டதல்ல அருளப்பட்டது...நாம் பிறக்கும் போதே இயற்கையால் தரப்பட்டது....

குருவிகள்!

ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடுங்கள்.
(யாரோ சொல்லி வைத்ததுதான்.)

ஆண் தலைமைத்துவம் இயற்கையால் அருளப்பட்டதல்ல.
சூழ்நிலைக் காரணிகளால் ஏற்பட்டது.

தற்போது அந்தச் சூழ்நிலை முற்றிலும் மாறி விட்டது.
அதனால் ஆண் தலைமைத்துவம் என்பது அவசியமில்லை.
Nadpudan
Chandravathanaa
Reply
[quote=kuruvikal]
தொலைக்காட்சி பார்ப்பது ஆண்களை விட பெண்கள் தான்....ஆண்கள் வேலை விட்டு வந்து தொலைக்காட்சி பார்ப்பது ஜேர்மனிக்கு பொருந்தக் கூடும் அது எமது தமிழ் சமூகத்துக்கு தேவையில்லை......நாம் அப்படிக் காணவும் இல்லை....!
[/quote]


எனது கருத்தை சரியாக வாசித்துத்தான்
உங்களது இந்தக் கருத்தை முன் வைத்தீர்களா?

இங்கே கூடிய நேரம் தொலைக்காட்சி பார்ப்பது ஆண்களா..! பெண்களா..! என்ற கணக்கெடுப்பு எதுவும் நடக்கவில்லை.

ஆண்கள்தான் கூட என்று சொல்லவும் இல்லை.

<b>வேலையால் வந்ததும்..... </b>என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதை உள்வாங்கவில்லையா நீங்கள்..?


[quote=Chandravathanaa]மாற்றமுடியாமல்... தொடரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.

<b>ஆண்கள் இன்றைக்கும் வேலையால் வீட்டுக்கு வந்ததும் ஓடிப் போய் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதற்கான காரணம் </b>-

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள்.
மௌனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்கிறது.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்காவது வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யார் என்ன கதைத்தாலும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஆதாரம் -
Warum Maenner luegen, Frauen immer Schuhe kaufen..?
Nadpudan
Chandravathanaa
Reply
kuruvikal Wrote:சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதுகிறீர்கள்.....மிருகக் காட்சிச் சாலையில் உள்ள விலங்குகளை வைத்து நடத்தை பார்க்க முடியாது...காரணம் அவை அச் சூழலுக்கென பழக்கப்படவை....!

சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதிக் கொண்டிருப்பது நீங்கள்தான்.

அவை மிருகக்காட்சிசாலை விலங்குகளை வைத்து எடுக்கப் பட்ட <b>படமல்ல. </b>

காடுகள்.. மிருகங்கள் வாழும் இடங்கள்... என்று அலைந்து திரிந்து ஆய்வுகளோடு எடுக்கப் பட்ட
<b>உண்மை நிகழ்வுகள்</b>.
Nadpudan
Chandravathanaa
Reply
kuruvikal Wrote:உங்களுக்கு ஜேர்மனியில் அவர்களைப் போல் சுதந்திரம் வேண்டுமானால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்....அவற்றால் வரும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானால் சரி...எமக்கென்ன நட்டமா....ஆனால் பெண் விடுதலை என மேற்குல கீழ்மைகள் எமது சமூகத்துள் திணிக்கப்பட ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது...!

<b>யேர்மனியில் அவர்களைப் போலச் சுதந்திரம்... </b>
என்று உங்கள் இயலாமையை யேர்மனியர் மீதும் ஐரோப்பியர் மீதும் திணிக்கப் பார்ப்பதும் கூச்சலிடுவதும் உங்களுக்கு அழகாய் இருக்கலாம்.

நாம் வேண்டும் பெண் விடுதலை என்பது யாரையும் சார்ந்ததல்ல.
மனிதத்தின் மீதான சுதந்திரம்.
பெண்களின் சுயத்தைப் பறிக்க நினைக்கும்
சமுதாயத்தின் போலித் தடைகளைத் தகர்த்தெறியும் பிரயத்தனம்.......

இன்னும்
நான் ஆண் என்று திமிர் கொள்ளும்......
ஆண்தான் தலைமை என்று கூக்குரலிடும்...
உங்கள் போன்றோரால் இதை ஜீரணிக்க முடியாதுதான்.
Nadpudan
Chandravathanaa
Reply
kuruvikal Wrote:விலங்குகளுக்குள் ஆண் பெண் என்பது இயல்பானது...அவற்றுக்குள் ஏற்றத்தாழ்வுகள் என்று மனிதனில் பெண் விடுதலை கோரும் பெண்கள் போல் பார்ப்பதில்லை....ஆனால் அநேக விலங்குகளில் ஆண் தலைமைத்துவம் தான் இயற்கையாக அளிக்கப்பட்டுள்ளது...அது மனிதனுக்கும் பொருந்தும்...அதை எவரும் மாற்ற முடியாது ஏனெனில் அது பெறப்பட்டதல்ல அருளப்பட்டது...நாம் பிறக்கும் போதே இயற்கையால் தரப்பட்டது....ஆனால் அது தரப்பட்டது ஆண்கள் பெண்கள் என ஏற்றதாழ்வுடன் கூடிய வேற்றுமைகள் வளர்க்கப்படவல்ல...சமூக வழி நடத்தல் பாதுகாப்பு என்பன கருதியே ஆகும்.... எனவே ஆண்கள் பெண்களை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவையில்லை....பெண்கள் தான் தாங்களே ஒதுங்கினர்....பின்னர் அவர்களை வெளியே கொணர்ந்ததும் ஆண்கள் தான்....!

சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதுகிறீர்கள்.....மிருகக் காட்சிச் சாலையில் உள்ள விலங்குகளை வைத்து நடத்தை பார்க்க முடியாது...காரணம் அவை அச் சூழலுக்கென பழக்கப்படவை....!

<span style='font-size:23pt;line-height:100%'>தொலைக்காட்சி பார்ப்பது ஆண்களை விட பெண்கள் தான்....ஆண்கள் வேலை விட்டு வந்து தொலைக்காட்சி பார்ப்பது ஜேர்மனிக்கு பொருந்தக் கூடும் அது எமது தமிழ் சமூகத்துக்கு தேவையில்லை......நாம் அப்படிக் காணவும் இல்லை....!</span>
நாம் இங்கு பெண் விடுதலையின் பலாபலன்கள், நோக்கம் என்பதை தமிழ் சமூகத்தை மையமாக வைத்தே கொண்டு செல்கிறோம்...வெள்ளையர்களையும் அவர்களின் சமூகக் கட்டமைப்பையும் அடிப்படையாகக் கொண்டல்ல என்பதைக் கவனிக்கவும்.....!

உங்களுக்கு ஜேர்மனியில் அவர்களைப் போல் சுதந்திரம் வேண்டுமானால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்....அவற்றால் வரும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானால் சரி...எமக்கென்ன நட்டமா....ஆனால் பெண் விடுதலை என மேற்குல கீழ்மைகள் எமது சமூகத்துள் திணிக்கப்பட ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


யார் யார் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை என சரியாக வாசியுங்கள்...அதாவது அதிக நேரம் செலவு செய்து தொலைக்காட்சி பார்ப்பது பெண்கள் தான்...அதைவிட தொலைக்காட்சியில் அதிகம் ஈடுபாடு காட்டுவதும் பெண்கள் தான்.....

அது போக வேலை விட்டு வந்து ஆண்கள் நெருப்புடன் காலம் கழித்தது ஐரோப்பிய (இடை வெப்ப,நனி குளிர்) காலநிலைக்கு பொருந்தலாம்...ஆனால் வெப்ப வலையத்தைச் சார்ந்த ஆண்கள் அப்படிச் செய்திருக்க என்ன நோக்கம் இருந்தது....தாம் கொண்டு வந்த உணவை சுடுவதாக இருந்தாலும் கூட்டமாகவே உணவைச் சுட்டு உண்டுள்ளனர்....எனவே உங்கள் வாதம் அங்கு அடிபட்டுப் போகிறது....!

ஆண் தலைமைத்துவம் என்பது எல்லா விலங்குகளிலும் இன்றும் உண்டு....மனிதனிலும் உண்டு அதற்காகத்தான் ஆண் பலசாலியாகவும் சிறந்த பார்வைப்புல விருத்தி உள்ளவனாகவும் படைக்கப்பட்டுள்ளான்....நீங்கள் ஏற்றால் என்ன ஏற்காவிட்டால் என்ன உயிரியல் உண்மைகளை உங்களுக்காக எவரும் மாற்ற முடியாது...மனித சமூகம் ஆண் தலைமைத்துவ சமூகம் தான்...அதை யாரும் அசைக்க முடியாது...அதற்காக ஆண் மேலாதிக்க சமூகம் எனக் கருதுவது முட்டாள் தனமானது...!

:evil: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஜேர்மனியில் அல்ல உலகில் எங்கும் ஆண் தலைமைத்துவம் தான் இன்றும் உள்ளது...என்றும் இருக்கும்....இரண்டாம் உலகமாக யுத்தத்தில் ஏற்பட்ட ஆண்களின் பேரழிவுதான் ஐரோப்பியப் பெண்கள் இப்படித்தறிகெட்டு சமூகக்கட்டமைப்பு குலைந்து குறிப்பாக நகரப்புறங்களில் வாழ வழி சமைத்தது...அதனால் ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்ணிலும் 5 பேர் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்...இந்த நிலையை ஏன் எமது சமூகத்துள் திணிக்க முயல்கிறீர்கள்.... எமது சமூகம் தனது கட்டுக் கோப்புடன் இருப்பது உங்களுக்கு பிடிக்குதில்லையே...அல்லது உங்கள் சேட்டைகளை அங்க காட்ட முடிவதில்லை என வருத்தமோ....!

நாம் மீண்டும் சொல்கிறோம் எனது சமூகத்துள் பெண் விடுதலை என்ற போர்வையில் அநாகரிகங்கள் புகுத்தப்படுவது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்...சமூகத்தலைவன் எனும் வகையில் ஆண்கள் அதை தங்கள் பலத்தை பிரயோகித்தும் தடுக்கலாம்...அதில் தவறில்லை...ஆசிரியர் மாணவனை திருத்துவது போல....இவர்கள் பெண் விடுதலை எனக் கேட்பது ஆசிரியர் தேவையில்லை அதிபர் தேவையில்லை பாடசாலை தேவையில்லை....சும்மா புத்தகத்தை தந்து விடுங்கள் நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்பது போல்தான் இருக்கிறது...இது சமுதாய நலனுக்கு உதவுமா..சும்மா வீண் வாதம் வேண்டம்...நடையைக் கட்டுங்கள்...!


முதலாவது செய்தியில் உங்கள் குரங்கு பற்றிய விபரணம் எங்கு எடுக்கப்பட்டது என்று எழுதியா இருக்கிறீர்கள்...அப்படி எழுதாமல் நாங்கள் என்ன மூக்குச் சாத்திரமா பார்க்க முடியும் எங்கு எடுத்ததென...ஏனெனில் பல விபரணங்கள் மிருகக் காட்சிச் சாலைகள் அல்லது சரணாலயங்களை வைத்தே எடுக்கப்படுகின்றன...நாமும் எடுத்துள்ளோம்...!

அத்துடன் ஆண் தலைமைத்துவம் குரங்குகளிலும் உண்டு அது இயற்கையானது....ஏன் பெரிய பெட்டைகள் சின்னப் பெட்டைகளிடம் கன்டொஸ் (சொக்கிலேட்) பறிப்பதில்லையோ...அப்போ அங்கு என்ன பொண்ணுக்குள்ளேயே பெண்ணாதிக்கமா...கடவுளே என்ன உதாரணங்கள்...என்ன வாதம்....உயிரியலே... விஞ்ஞானிகளே இங்கே இருக்கிறார்கள் நோபல் பரிசுக்குரியவர்கள் நீங்களேன் வீணாக நேரத்தை செலவு செய்கிறீர்கள்.....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சண்டைக்கு.. வக்காளத்துவாங்கி.. முடிக்கிறபிளான்போலை..தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:ஜேர்மனியில் அல்ல உலகில் எங்கும் ஆண் தலைமைத்துவம் தான் இன்றும் உள்ளது...என்றும் இருக்கும்....இரண்டாம் உலகமாக யுத்தத்தில் ஏற்பட்ட ஆண்களின் பேரழிவுதான் ஐரோப்பியப் பெண்கள் இப்படித்தறிகெட்டு சமூகக்கட்டமைப்பு குலைந்து குறிப்பாக நகரப்புறங்களில் வாழ வழி சமைத்தது...அதனால் ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்ணிலும் 5 பேர் உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்...இந்த நிலையை ஏன் எமது சமூகத்துள் திணிக்க முயல்கிறீர்கள்.... எமது சமூகம் தனது கட்டுக் கோப்புடன் இருப்பது உங்களுக்கு பிடிக்குதில்லையே...அல்லது உங்கள் சேட்டைகளை அங்க காட்ட முடிவதில்லை என வருத்தமோ....!
சண்டைக்கு.. வக்காளத்துவாங்கி.. முடிக்கிறபிளான்போலை..தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அட இவ்வளவு வேகமா? உங்களது வேகத்திற்கு என்னால் எழுத முடியவில்லை.
[quote=kuruvikal]
நாங்கள் பெண்விடுதலை என்று ஆண்கள் பரிகாசிக்கப்படுதல் தண்டிக்கப்படுதல் யதார்த்தத்திற்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் மீது திணித்தல்
இது ஆண்களின் அதீத கற்பனை. எங்கே தங்களது சொகுசு வாழ்க்கை பறி போய்விடுமோ என்கின்ற பயம்..
[quote=kuruvikal]ஆண்கள் மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படுதல் என்பனவற்றையே சுட்டிக் காட்டுகின்றோம்..கண்டிக்கின்றோம்....! [/quote]
[quote=kuruvikal]அத்துடன் பெண்விடுதலை என எமது சமூக பாரம்பரியங்கள் விழுமியங்கள் தேவைகளுக்கு அப்பால் சிதைக்கப்படுவதையும் கண்டிக்கின்றோம்....
சமூக பாராம்பரியங்களை பெண்கள்தான் கட்டிக் காக்க வேண்டுமா? இது என்ன ஆண்களின் எழுதாத சட்டமா? அதுசரி எவ்வகையான சமூகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்க வேண்டுமென்கிறீர்கள்.
சூழல் காரணிகள் என்று வரும்போது பொதுப்படையாகப் பெண்கள் பற்றியே பேசுகின்றோம். சூழல் பிரச்சினை அகன்ற பொழுது எமது சமுதாய நலனுக்ககாக எமது பெண்கள் அடக்கப்பட வேண்டுமென்கிறீர்கள். இதில் நீங்கள் வேறுபடுவதாக எனக்குத் தெரிகிறது.
[quote=kuruvikal]இதை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையையே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்ககூடும்...!
இருக்கும்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)